Dr.ஜாகிர் நாயக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Dr.ஜாகிர் நாயக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 ஆகஸ்ட், 2009

ஜாஹிர் நாயக் கேள்வி-பதில்


துபை:டாக்டர் ஜாஹிர் நாயக் கேள்வி-பதில் நிகழ்ச்சியின் போது இஸ்லாத்தை தனது வாழ்க்கைநெறியாக ஏற்ற ஐரோப்பிய பெண்மணி பிரபல இஸ்லாமிய அறிஞரும் உலகளாவிய அளவில் இஸ்லாத்திற்கும் பிறமதங்களுக்கிடையேயான விவாதங்களை வெற்றிகரமாக நடத்தி வரும்இந்தியாவின் மும்பை நகரத்தைச்சார்ந்த டாக்டர் ஜாஹிர் நாயக் அவர்கள்துபை அரசு சார்பில் வருடந்தோறும் ரமலான் மாதத்தில் நடத்தி வரும் புனிதகுர்ஆன் விருது நிகழ்ச்சியோடு சம்பந்தப்பட்ட சிறப்புரை நிகழ்ச்சியில்பங்கேற்று கடந்த ஆகஸ்ட் 27,28 தினங்களில் உரை நிகழ்த்தினார்

இவ்வுரை நிகழ்ச்சிகள் துபை ஏர்போர்ட் எக்ஸ்போ என்ற பிரமாண்ட அரங்கில்நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சுமார் 22 ஆயிரம் பேர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.இந்நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது பல்வேறுசமயங்களைச்சார்ந்தோறும் கலந்துக்கொண்டனர்.முதல் நிகழ்ச்சியில் "அழைப்பு பணியா அல்லது அழிவா”(“Dawaah or Destruction”) என்ற தலைப்பில் தாஃவாவின் முக்கியத்துவம் குறித்துகுர்ஆன்,சுன்னா ஆதாரங்களுடன் உதாரணங்களையும் கூறி சிறப்பானதொருஉரையை நிகழ்த்தினார்.இந்நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில்கலந்துக்கொண்டு ஐரோப்பாவைச்சார்ந்த பெண்மணி ஒருவர் இஸ்லாம் குறித்துதர்க்கரீதியான(Logic) கேள்வியொன்றை எழுப்பினார்.அவருடைய கேள்விக்குஅறிவுப்பூர்வமான பதிலை டாக்டர்.ஜாஹிர் நாயக் அவர்கள் கூறியதைக்கேட்டுதிருப்தியடைந்த அப்பெண்மணி சத்தியம் இதுதான் என்று தெளிவானதும்ஷஹாதா கலிமா சொல்லி இஸ்லாத்தை ஒப்புக்கொண்டார்.(அல்லாஹ் இஸ்லாமிய மார்க்கத்தில் அவருடைய பாதங்களை உறுதிப்படுத்துவானாக).

டாக்டர் ஜாஹிர் நாயக்கின் நிகழ்ச்சியின் காரணமாக துபாய் ஏர்போர்ட்டெர்மினல் 3க்கு செல்லும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்காணப்பட்டது.

வெள்ளி, 17 ஜூலை, 2009

சிங்கப்பூரில் டாக்டர் ஜாகிர் நாயக்!


சிங்கப்பூரில் வரும் 18ம் தேதி இரவு 8 மணி அளவில் இன்ஷா அல்லாஹ்,மனித குலத்துக்கு இஸ்லாம் தீர்வாகுமா? எனும் தலைப்பில் டாக்டர் ஜாகிர் நாயக் உரையாற்ற உள்ளார்.

இடம்:SUNTEC EXHIBITION,HALL 404,LEVEL 4.

மேலும் அதிக விவரங்களுக்கு :

WWW.DARUL-ARQAM.ORG.SG
EDDSTAFF@DARUL-ARQAM.ORG.SG
PHONE:6348 8344(PRESS 2 )

அனுமதி இலவசம்,

நீங்களும் செல்லுங்கள்,முஸ்லிம் அல்லாத நண்பர்களையும் அழைத்துச் செல்லுங்கள்!!

சனி, 11 ஜூலை, 2009

த‌மிழில் டாக்ட‌ர் ஜாஹிர் நாய‌க்கின் உரைக‌ள்


பிர‌ப‌ல‌ இஸ்லாமிய‌ சொற்பொழிவாள‌ர் டாக்ட‌ர் ஜாஹிர் நாய‌க்கின் ஆங்கில‌ உரைக‌ளை த‌மிழில் விசிடியாக‌ கொண்டு வ‌ரும் ப‌ணியினை காய‌ல்ப‌ட்ட‌ண‌ம் இத்திஹாதுல் இஹ்வானில் முஸ்லிமின் ( ஐஐஎம் ) எனும் அமைப்பு மேற்கொண்டு வ‌ருகிற‌து.

இத்த‌க‌வ‌லை வ‌ளைகுடாவில் சுற்றுப்ப‌ய‌ண‌ம் மேற்கொண்டு வ‌ரும் முஹ‌ம்ம‌து த‌ம்பி தெரிவித்தார்

இதுவ‌ரை தீவிர‌வாத‌ம் முஸ்லிம்க‌ளின் த‌னி உடைமையா ? ம‌ற்றும் இந்து ச‌ம‌ய‌ப் பிர‌முக‌ர் ர‌விச‌ங்க‌ருட‌ன் டாக்ட‌ர் ஜாஹிர் நாய‌க் நிக‌ழ்த்திய‌ உரை ஆகிய‌ இரண்டு நிக‌ழ்வுக‌ள் த‌மிழில் வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

ஒரு விசிடியினை த‌மிழாக்க‌ம் செய்திட‌ சுமார் இர‌ண்டு இல‌ட்ச‌ம் ரூபாய் செல‌வு ஆவ‌தாக‌
முஹ‌ம்ம‌து த‌ம்பி தெரிவித்தார்.

இத்திஹாதுல் இஹ்வானில் முஸ்லிமின் அமைப்பின் த‌லைவ‌ராக‌ அபுல் ஹ‌ச‌ன் க‌லாமி ஹாஜியாரும், செய‌லாள‌ராக‌ ந‌வாஸ் உள்ளிட்ட‌ 12 பேர் கொண்ட‌ க‌மிட்டி உறுப்பின‌ர்க‌ள் இருந்து வ‌ருகின்ற‌ன‌ர்.

இத‌ன் சார்பில் ஆயிஷா சித்திக்கா பெண்க‌ள் அர‌பிக்க‌ல்லூரி ம‌ற்றும் பைத்துல்மால் உள்ளிட்ட‌வை ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌.

விசிடி த‌யாரிப்பில் உத‌விட‌ விரும்புவோர் அமீர‌க‌த்தில் தொட‌ர்பு கொள்ள‌
ஜ‌லாலுதீன் 050 614 2633

இந்தியாவில்

இத்திஹாதுல் இஹ்வானில் முஸ்லிமின் ( ஐஐஎம் )
141 கே.டி.எம். தெரு
காய‌ல்ப‌ட்ட‌ண‌ம் 628 204
தூத்துக்குடி மாவ‌ட்ட‌ம்
94 871 24246

Pls click below link and watch Translated Dr.Zakir Spean in Tamil

http://www.readislam.net/videoislam-zakirnaik.htm

Is terrorism a Muslims monopoly? by Dr.Zakir Naik in Tamil (தமிழில்)

Dr.Zakir Naik's dialogue with Sri Sri Ravi Sankar in Tamil (தமிழில்)

http://www.readislam.net/videoislam-zakirnaik.htm

முதுவை ஹிதாயத்

ஞாயிறு, 3 மே, 2009

(நிராகரிப்பவர்களின்) இதயங்களை முத்திரை வைத்துவிட்டேன் என்கிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் - (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு) எப்படி குற்

கேள்வி எண்: 11
இறைவன் (நிராகரிப்பவர்களின்) இதயங்களை முத்திரை வைத்துவிட்டேன் என்கிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் - (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு) எப்படி குற்றவாளிகள் ஆவார்கள்?.

பதில்:
இறை மறுப்புக் கொள்கையை தொடர்ந்து கடைபிடித்து வரும் இறை நிராகரிப்பாளர்களின் உள்ளத்தை அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்:

அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் ஆறாவது மற்றும் ஏழாவது வசனங்களில் அல்லாஹ் கீழ்க்கண்டவாறு கூறுகின்றான்:

'நிச்சயமாக (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.'

'அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்களின் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்து விட்டான். இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது. மேலும் அவர்களுக்கு கடுமையான தண்டணையும் உண்டு.'. (அல் குர்ஆன் 2: 6-7)

மேற்படி வசனம் உண்மையை மறுக்கக் கூடிய பொதுவான நிராகரிப்பவர்களை பற்றி கூறவில்லை. இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபி வார்த்தைகளான 'அல்லதீன கஃபரூ' என்பதன் பொருள் என்னவெனில் தொடர்ந்து உண்மையை நிராகரிக்கக் கூடியவர்கள் என்பதாகும். இவ்வாறு தொடர்ந்து உண்மையை நிராகரிக்கக் கூடியவர்களான இவர்களுக்கு நீங்கள் எச்சரிக்கை செய்தாலும் சரி, எச்சரிக்கை செய்யாவிட்டாலும் சரியே. அவர்கள் உண்மையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு தொடர்ந்து உண்மையை நிராகரிக்கக் கூடியவர்களின் உள்ளங்களிலும், செவிப் புலனிலும் முத்திரை வைத்து விட்டதாகவும், அவர்களின் பார்வைகளில் திரையிட்டுவிட்டதாகவும் அல்லாஹ் கூறுகின்றான். அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் முத்திரையிட்டு விட்டதால் அவர்கள் உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்பதல்ல இதன் பொருள். தொடர்ந்து உண்மையை நிராகரிக்கக் கூடியவர்கள், உண்மையை ஏற்றுக் கொள்ள மறுத்ததால் அவர்களை பார்த்து அல்லாஹ் மேற்கண்டவாறு கூறுகின்றான். எனவே மேற்படி உண்மையை நிராகரிப்பவர்கள் தொடர்ந்து உண்மையை நிராகரிப்பதற்கு அல்லாஹ் பொறுப்பாளி அல்ல. மாறாக உண்மை என்னவென்று அறிந்திருந்தும் - மேற்படி உண்மையை தொடந்து நிராகரித்து வருகின்ற நிராகரிப்பவர்கள்தான் இதற்கு பொறுப்பாவார்கள்.

2. உதாரணத்திற்கு வகுப்பாசிரியர், மாணவன் தேறமாட்டான் என்று கணிப்பது.

உதாரணத்திற்கு பள்ளிக் கூடத்தின் அனுபவமிக்க வகுப்பாசிரியர் ஒருவர், வகுப்பில் கவனம் செலுத்தாத - அதிகமாக தொந்தரவு செய்கிற - தனது வீட்டுப்பாடங்களை செய்து வரத் தவறுகிற மாணவன் ஒருவனை - அவன் இறுதித் தேர்வில் தேற மாட்டான் என்று கணிக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். மாணவனும் இறுதித்தேர்வை எழுதி மேற்படித் தேர்வில் வெற்றியடையவில்லை என்றும் வைத்துக் கொள்ளுங்கள். மாணவன் இறுதித் தேர்வில் தோல்வியுற்றதற்கு யாரை குற்றம் சொல்வீர்கள்?. மாணவனையா? . ஆசிரியரையா?. மாணவன் இறுதித் தேர்வில் வெற்றி பெறமாட்டான் என்ற கணித்த காரணத்திற்காக ஆசிரியரை யாரும் குற்றம் சொல்ல மாட்டார்கள். மாறாக படிப்பில் சரியாக கவனம் செலுத்தாத மாணவன்தான் தனது தோல்விக்கு பொறுப்பாவான்.

அதுபோலவே உண்மையை தொடர்ந்து நிராகரித்து வரும் மனிதர்களை பற்றி அல்லாஹ் அறிவான். இவ்வாறு உண்மையைத் தொடர்ந்து நிராகரித்து வருபவர்கள்தான் தங்களது செயலுக்குப் பொறுப்பேத் தவிர, அல்லாஹ் அல்ல.
-டாக்டர்.ஜாகிர் நாய்க்

தகவல் : அரம்பன்னை வாசிகள் குரூப்

இறைவன் மன்னிப்பாளனா?. இல்லை பழிவாங்குபவனா?.

கேள்வி ?

குர்ஆனின் ஏராளமான இடங்களில் அல்லாஹ் மிக்க கருணையாளன். மிக்க மன்னிப்பவன் என்று குறிப்பிடுகிறது. ஆனால் அதே நேரத்தில் கடுமையான தண்டனைகள் உண்டும் என்றும் குறிப்பிடுகின்றது. ஆகவே இறைவன் மன்னிப்பாளனா?. இல்லை பழிவாங்குபவனா?.

பதில்:
1. அல்லாஹ் அளவிலா கருணையாளன்..!

அல்லாஹ் அளவிலா கருணையாளன் - என்று அருள்மறை குர்ஆன் பலமுறை கூறுகிறது. அருள்மறை குர்ஆனின் 114 அத்தியாயங்களில் ஒரேயொரு அத்தியாயம் (அத்தியாயம் 9 ஸுரத்துத் தௌபா)வைத் தவிர, மற்ற அனைத்து அத்தியாயங்களும் 'பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரஹீம்' - என்கிற அழகிய வாக்கியத்தோடு ஆரம்பமாகின்றன. 'பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரஹீம்' - என்கிற அரபிப் பதத்தின் பொருள் - அளவிலா கருணையும், இணையிலா கிருபையுமுடைய அல்லாஹ்வின் திருப்பெயரால் - என்பதாகும்.

2. அல்லாஹ் மன்னிப்பாளன்.

அருள்மறை குர்ஆனின் உள்ள ஏராளமான வசனங்கள் அல்லாஹ் மன்னிப்பாளன் என்று கூறுகின்றது. குறிப்பாக அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துன்னிஸாவின் 25வது வசனமும், ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 74வது வசனமும் கீழ் கண்டவாறு கூறுகின்றன.

..இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்..( 4:25).

..அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், பெரும் கருணையாளனாகவும் இருக்கின்றான்..( 5:74).

3. அல்லாஹ் தண்டனை பெறத் தகுதியானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குகிறான்.

அல்லாஹ் கருணையாளனாகவும், மன்னிப்போனாகவும் இருந்தாலும் - தண்டனை பெறத் தகுதியானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதில் விதிவிலக்கில்லாமல் தண்டனை வழங்குகிறான். அருள்மறை குர்ஆனின் வசனங்கள் பலவற்றில் இறை விசுவாசம் கொள்ளாதவர்களுக்கும், இறை உண்மையை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கும் கடுமையான தண்டனை உண்டு என்று குறிப்பிடுகிறது. அல்லாஹ்வின் கட்டளையை ஏற்க மறுத்தவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு என அருள்மறை குர்ஆன் குறிப்பிடுகிறது. அருள்மறை குர்ஆனின் பல வசனங்கள் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்க மறுத்தவர்களுக்கு நரகத்தில் வழங்கப்படும் கடுமையான தண்டனைகளின் வகைகள் என்ன?. அவைகள் எவ்வாறு வழங்கப்படும் என்றும் குறிப்பிடுகின்றது.

'யார் நம் வேத வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்: அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையை அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.' ( 4:56)

4. அல்லாஹ் நீதியாளன்.

அல்லாஹ் மன்னிப்பாளனா?. இல்லை பழிவாங்குபவனா?. என்பதே இங்கு கேட்கப்பட்ட கேள்வி. இங்கு ஒரு முக்கியமான கருத்தை நாம் கவனிக்க வேண்டும். அல்லாஹ் மன்னிப்பவன். மிக்க கருணையாளன். அதே நேரத்தில் அல்லாஹ் நீதி பரிபாலிப்பவனும் ஆவான். எனவே நீதி பரிபாலிக்கப்பட வெண்டுமெனில், நிராகரிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கியேத் தீர வேண்டும்.

அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துன்னிஷாவின் 40வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.

'நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஒரு அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்;...' (4:40)

மேலும் அருள்மறை குர்ஆனின் 21வது அத்தியாயம் ஸுரத்துல் அன்பியாவின் 47வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது.

'இன்னும் கியாம நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது: மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறு கணக்கெடுக்க நாமே போதும்.' ( 21:47)

5. தேர்வில் காப்பி அடிக்கும் மாணவனை - மன்னிக்கக்கூடிய ஆசிரியர் ஓர் உதாரணம்:

ஆசிரியர் ஒருவர் தேர்வு நடந்து கொண்டிருக்கும் பொழுது மாணவன் ஒருவன் காப்பி அடிப்பதை கையும் களவுமாக பிடித்து விடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆசிரியர் கருணை உள்ளம் கொண்டவர். மன்னிக்கும் மனோ பக்குவமும் உள்ளவர். எனவே தொடர்ந்து காப்பி அடிக்க மாணவனை அனுமதித்து விடுகிறார் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். இரவு முழுவதும் கண் விழித்து படித்து விட்டு வந்து தேர்வு எழுதும் மற்ற மாணவர்கள் ஆசிரியரை கருணை உள்ளம் கொண்டவர் என்றும், மன்னிக்கும் மனோ பக்குவம் உள்ளவர் என்றும் ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், மாணவர்கள் - ஆசிரியரை அநியாயக்காரர் என்று அழைப்பார்கள். ஆசிரியரின் கருணையுள்ளம் மேலும் பல மாணவர்களை தேர்வில் காப்பி அடிக்கத் தூண்டும். இதுபோல எல்லா ஆசிரியர்களும் கருணையுள்ளம் கொண்டு மாணவர்களை தேர்வில் காப்பி அடிக்க அனுமதித்தால், எல்லா மாணவர்களிடமும் தேர்வுக்காக படித்து எழுதும் பழக்கம் மாறி, காப்பி அடிக்கும் பழக்கம் உருவாகும். காப்பி அடித்ததால் எல்லா மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவார்கள். தேரிவியலில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறும் மாணவர்கள், நடைமுறை வாழக்கையில் தோல்வியைத்தான் சந்திப்பார்கள். மாணவர்களுக்காக தேர்வு நடத்துவதின் முழு நோக்கமும் தோல்வியைத் தழுவும் என்பது நிச்சயம்.

6. மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கை, மறுமை வாழ்க்கைக்கான தேர்வு.

நம்முடைய இவ்வுலக வாழ்க்கையானது மறுமை வாழ்க்கைக்கு உரிய தேர்வுதான். அருள்மறை குர்ஆனின் 67வது அத்தியாயம் ஸுரத்துல் முல்க் - ன் 2வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது.

'உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்: மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்: மிக மன்னிப்பவன்.'( 67:2)

7. அல்லாஹ் எல்லா மனிதர்களையும் தண்டனை அளிக்காமல், மன்னித்து விடுவதாக இருந்தால் யார்தான் அல்லாஹ்வுக்கு அடிபணிவார்?.

அல்லாஹ் எந்த மனிதருக்கும் தண்டனை அளிப்பதில்லை. எல்லா மனிதர்களுக்கம் மன்னிப்பளித்து விட்டு விடுவான் என்கிற நிலை இருக்கும் எனில் - மனிதர்கள் ஏன் அல்லாஹ்வுக்கு அடி பணிந்து நடக்க வேண்டும்?. யாரும் நரகத்துக்கு போகமாட்டார்கள் என்பதை நானும் ஆதரிக்கிறேன். ஆனால் மனிதர்கள் வாழும் இந்த உலகம் அல்லவா நரகமாகப் மாறி விடும். எல்லா மனிதர்களும் பாரபட்சமின்றி சொர்க்கத்திற்குத்தான் செல்வார்கள் எனில் - மனிதன் இவ்வுலகில் படைக்கப் பட்டதின் நோக்கம்தான் என்ன?. எனவே இவ்வுலக வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைக்கு உண்டான ஒரு தேர்வேயன்றி - வேறில்லை.

8. அல்லாஹ் - தன் கட்டளைகளுக்குக் கீழ் படிகிறவர்களுக்கு மாத்திரம்தான் மன்னிப்பு வழங்குவான்.

அல்லாஹ் - தன் கட்டளைககளுக்குக் கீழ் படிகிறவர்களுக்கு மாத்திரம்தான் மன்னிப்பு வழங்குவான். அருள்மறை குர்ஆனின் 39வது அத்தியாயம் ஸுரத்துஜ் ஜுமரின் 53 முதல் 55வது வசனங்கள் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:

'என் அடியார்களே!. (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்: மிக்க கருணையுடையவன்' (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.' ( 39:53)

ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்: (வேதனை வந்து விட்;டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். (39:54)

நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும்முன்னரே, உங்கள் இறவைனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றை பின்பற்றுங்கள். ( 39:55)

நான்கு வகையான செயல்கள் மூலம் நிங்கள் செய்கிற தவறுகளிலிருந்து திருந்திக் கொள்ள முடியும். அவையாவன:

1. முதலில் நீங்கள் செய்யும் தவறான செயல்கள் சரியானது இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
2. இரண்டாவதாக செய்யும் தவறுகளை உடனடியாக நிறுத்துங்கள்.
3. மூன்றவதாக நீங்கள் செய்த தவறுகளை இனி ஒருபோதும் செய்யாதீர்கள்.
4. கடைசியாக நீங்கள் செய்த தவறுகளால் எவரேனும் பாதிக்கப் பட்டிருந்தால், பாதிக்கப் பட்டதற்கான பரிகாரம் தேடுங்கள்.

-டாக்டர் ஜாக்கிர் நாய்க்.

தகவல் : அரம்பன்னை வாசிகள் குரூப்

வியாழன், 2 ஏப்ரல், 2009

குர்ஆனின் வசனம், பூமி உருண்டையானது என்று நிரூபிக்கப்பட்ட நவீன அறிவியல் உண்மைக்கு முரணாக அமைந்துள்ளது இல்லையா?.


கேள்வி :
'பூமியை உங்களுக்கு ஒரு விரிப்பாக ஆக்கித் தந்திருக்கிறேன்' என்கிறது குர்ஆனின் வசனம். இந்த வசனம் பூமி தட்டையானது என்பதற்கு சான்றாக இருக்கிறது... மேற்படி குர்ஆனின் வசனம், பூமி உருண்டையானது என்று நிரூபிக்கப்பட்ட நவீன அறிவியல் உண்மைக்கு முரணாக அமைந்துள்ளது இல்லையா?.

பதில்:

1. பூமி ஓர் விரிப்பாக படைக்கப்பட்டிருக்கிறது.

மேற்படி கேள்வி அருள்மறை குர்ஆனின் 71வது அத்தியாயம் ஸுரத்துன் நூஹ்வின் 19வது வசனத்தை அடிப்பைடயாக கொண்டது. மேற்படி அருள்மறை வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது:


'அன்றியும்இ அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.'
மேற்படி வசனம் அத்தோடு முடிந்து விடவவில்லை. அதனை அடுத்த வசனத்தில் முந்தைய வசனத்திற்கான காரணத்தையும் சொல்கிறது.

'அதில் நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதைகளையும் அமைத்தான்'.(அல்குர்ஆன் 71:20)

மேற்படி வசனத்தில் உள்ள செய்தியை மற்றொரு வசனத்தின் மூலமாகவும் அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது. குர்ஆனின் 20வது அத்தியாயம் ஸுரத்துத் தாஹாவின் 53வது வசனம் கீழக்கண்டவாறு குறிப்பிடுகிறது.

'(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான். இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்.....'(அல்குர்ஆன் 20:23)

பூமியின் மேல் பகுதி முப்பது மைல்களுக்கும் குறைவான தடிமனைக் கொண்டது. மூவாயிரத்து எழுநூற்றம்பைது மைல்கள் 'ஆரம'; (பூமியின் மையப் பகுதிக்கும் மேல் பறப்புக்கும் உள்ள தூரம் - Radius) கொண்ட பூமியின் அடிப்பகுதியோட ஒப்பிடும்போது - முப்பது மைல் தடிமன் என்பது மிகவும் மெல்லியதுதான். பூமியின் அடிப்பகுதியானது வெப்பமான -திரவநிலையில் உள்ளது. பூமியில் மேல் பகுதியில் வாழக்கூடிய எந்தவிதமான உயிரினமும் - பூமியின் அடிப்பகுதியில் வாழ முடியாத அளவுக்கு வெப்ப நிலை அதிகமாக இருக்கும். ஆனால் பூமியின் மேல் பகுதி உயிரினங்கள் வாழக்கூடிய நல்ல கெட்டியான நிலையில் இருக்கிறது. பூமியை விரிப்பாக்கி அதில் நாம் பயணம் செய்யக் கூடிய அளவுக்கு பாதைகளை அமைத்து தந்திருக்கிறோம் என்று அருள்மறை குர்ஆன் சரியாகத்தான் சொல்கிறது.

2. விரிப்புகளை சமமான தரை மாத்திரம் இல்லாமல் - மற்ற இடங்களிலும் பரப்பலாம்.

பூமி தட்டையானது என்று சொல்லும் அருள்மறை குர்ஆனின் வசனம் ஒன்று கூட கிடையாது. அருள்மறை குர்ஆனின் வசனம் - பூமியின் மேற்பகுதியை ஒரு விரிப்புடன் ஒப்பிடுகிறது. சில பேர் விரிப்புக்கள் சமமான தரையில் மாத்திரம்தான் விரிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். விரிப்புக்களை பெரிய பூமி போன்ற கோளத்தின் மீதும் விரிக்கலாம் அல்லது பரப்பலாம். ஒரு பெரிய பூமி உருண்டையின் மாதிரி ஒன்றை எடுத்து - ஒரு விரிப்பை அதன் மீது பரப்பிப் பார்த்தால் - மேற்படி கருத்து உண்மை என்பதை அறிந்து கொள்ளலாம்.

பொதுவாக விரிப்புகள் - நடந்து செல்வதற்கு வசதியாகத்தான் விரிக்கப்படுகின்றன. அருள்மறை குர்ஆன் ஒரு விரிப்பை பூமியின் மேல் பகுதிக்கு உதாரணமாக காட்டுகிறது... பூமியின் மேல் பகுதியில் உள்ள விரிப்புப் போன்ற பகுதி இல்லை எனில் பூமியின் அடிப்பகுதியில் உள்ள வெப்பத்தின் காரணமாக பூமியின் மேல் பகுதியில் உள்ள எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாமல் போயிருக்கும். இவ்வாறு அருள்மறை குர்ஆனின் மேற்படி கூற்று அறிவு ரீதியானதோடு, அருள்மறை குர்ஆன் இவ்வுலகிற்கு வந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு புவியியல் வல்லுனர்களால் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையைப் பற்றியும் குறிப்பிடுகிறது குர்ஆனின் மேற்படி வசனம்.

3. பூமி விரிக்கப்பட்டிருக்கிறது:

அதேபோன்று அருள்மறை குர்ஆனின் பல வசனங்கள் பூமி விரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி குறிப்பிடுகின்றன.

'இன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம்: எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாம் மேம்பாடுடையோம்.' என்று அருள்மறை குர்ஆனின் 51வது அத்தியாயம் ஸுரத்துத் தாரியாத்தின் 48வது வசனம் குறிப்பிடுகின்றது.

அதுபோன்று அருள்மறை குர்ஆனின் 78வது அத்தியாயம் ஸுரத்துந் நபாவின் 6 மற்றும் 7வது வசனம் கீழக்கண்டவாறு குறிப்பிடுகின்றது:

'நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?. இன்னும் மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?'. பூமி தட்டையானது என்று நாம் சிறிதேனும் பொருள் கொள்ளும் வகையில் அருள்மறை குர்ஆனின் எந்த வசனமும் குறிப்பிடவில்லை. அருள்மறை குறிப்பிடுவதெல்லாம் பூமி விசாலமானது என்றுதான். அருள்மறை குர்ஆன் பூமி விசாலமானது என்று குறிப்பிடக் காரணம் என்ன? என்று அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் 29 ஸுரத்துல் அன்கபூத்தின் 56வது வசனம் நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கின்றது.

'ஈமான் கொண்ட என் அடியார்களே!. நிச்சயமாக என் பூமி விசாலமானது: ஆகையால் நீங்கள் என்னையே வணங்குங்கள்...'

சுற்றுப்புற - சூழலின் காரணமாகத்தான் என்னால் நல்லது செய்ய முடியவில்லை, நான் குற்றங்களையேச் செய்து வந்தேன் என்று மேற்படி வசனத்தை தெரிந்த எவரும் மன்னித்துக் கொள்ளச் சொல்ல முடியாது.

4. பூமி ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவிலானது:

அருள்மறை குர்ஆனின் 79வது அத்தியாயம் ஸுரத்துந் நாஜியாத்தின் 30வது வசனம் கீழ்கண்டவாறு கூறுகின்றது.

'இதன் பின்னர் அவனே பூமியை விரித்தான

மேற்படி வசனத்தில் 'தஹாஹா' என்னும் அரபி வார்த்தை பயன் படுத்தப்பட்டுள்ளது. 'தஹாஹா' என்னும் அரபி வார்த்தைக்கு முட்டை வடிவம் என்றும் விரித்தல் என்றும் இரண்டு அர்த்தங்கள் உண்டு. 'தஹாஹா' என்னும் அரபி வார்த்தை 'துஹ்யா' என்னும் அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. மேற்படி 'துஹ்யா' என்னும் அரபி வார்த்தைக்கு ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவிலிருக்கும் நெருப்புக் கோழியின் முட்டை என்று பொருள். பூமியும் ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவில்தான் உள்ளது.

இவ்வாறு பூமி ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவில் உள்ளது என்கிற நவீன அறிவியல் உண்மையும், அருள்மறை குர்ஆன் கூறும் வசனங்களும் ஒத்தக் கருத்தை உடையதுதான்.
-டாக்டர் ஜாகிர் நாய்க்

தகவல் : ஆரம்பன்னை வாசிகள் குரூப்.
நன்றி : Z.M. அப்துல் காதர். அபுதாபி.

இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டுவதாக இல்லையா?

கேள்வி
காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள். அவர்களை கொலை செய்யுங்கள் என்று சொன்னதின் மூலம் - இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டுவதாக இல்லையா?
பதில்:

இஸ்லாம் வன்முறையை தூண்டக் கூடிய மார்க்கம் என்னும் கட்டுக் கதையை நிலைநிறுத்த வேண்டி - அருள்மறை குர்ஆனில் ஒருசில தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களை தவறுதலாக புரிந்து கொண்டு - இஸ்லாமியர்களுக்கு - இஸ்லாம் அல்லாதவர்களை கொல்லச்சொல்லி வற்புறுத்துவதாக சொல்கிறார்கள்.

1. அருள்மறை குர்ஆனின் வசனம்:

இஸ்லாத்தை விமரிசிப்பவர்கள் அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தௌபாவின் 05வது வசனத்தின் ஒரு பகுதியை மாத்திரம் எடுத்துக் கொண்டு இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் என்பதற்கு ஆதாரமாக காட்டப்படுகிறார்கள்


'முஷ்ரிக்குகளை (இறைவனுக்கு இணைவைப்பவர்களையும், இறை மறுப்பாளர்களையும்) கண்ட இடங்களில் வெட்டுங்கள்' என்கிற வசனம்தான் அது.


2. மேற்படி வசனம் போர்ச் சூழலில் சொல்லப்படுகிற வசனம்:

இஸ்லாத்தை விமரிசிப்பவர்கள் - மேற்படி வசனம் எந்த சூழலில் சொல்லப்பட்டது என்பதை வசதியாக மறந்து விட்டு - விமரிசனம் செய்கிறார்கள். மேற்படி வசனம் எதனால் - எந்த சூழ்நிலையில் சொல்லப்படுகின்றது என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமெனில,; - மேற்படி அத்தியாயத்தின் முதலாம் வசனத்திலிருந்து படிக்க வேண்டும். மேற்படி வசனம் மக்காவில் உள்ள இஸ்லாமியர்களுக்கும் - இறைவனுக்கு இணைவைப்பவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தம் பற்றி தெரிவிக்கின்றது. மேற்படி ஒப்பந்தம் மக்காவில் உள்ள இணை வைப்பவர்களால் மீறப்பட்டது. எனவே மீறப்பட்ட ஒப்பந்தத்தை சரி செய்ய வேண்டி இணைவப்பவர்களுக்கு நான்கு மாத காலம் அவகாசம் அளிக்கப் பட்டது. இல்லையெனில் அவர்கள் மீது போர் தொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தௌபாவின் 05வது வசனம் கீழ்க்கணடவாறு கூறுகின்றது:

'போர் விலக்கப்பட்ட சங்கைமிக்க மாதங்கள் (நான்கு மாதங்கள்) கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளை கண்ட இடங்களில் வெட்டுங்கள். அவர்களை பிடியுங்கள். அவர்களை முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களை குறிவைத்து உட்கார்ந்திருங்கள். ஆனால் அவர்கள் (மனந்திருந்தி, தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைபிடித்து, (ஏழை வரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டு விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடைய வனாகவும் இருக்கின்றான்.' (அல் குர்ஆன் 9: 5)

மேற்படி வசனம் ஒரு போர்ச் சூழலில் சொல்லப்படுகின்றது.

3. அமெரிக்க - வியட்நாம் போர் - ஓர் உதாரணம்:

அமெரிக்காவிற்கும் வியட்நாமிற்கும் இடையே போர் நடந்த செய்தி நாம் அனவைரும் அறிந்த ஒன்று. அவ்வாறு போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, அமெரிக்க ஜனாதிபதியோ அல்லது அமெரிக்க ராணுவத் தளபதியோ, அமெரிக்க வீரர்களிடம் - 'எங்கெல்லாம் நீங்கள் வியட்நாம் காரர்களை காண்கிறீர்களோ - அவர்களை கொல்லுங்கள்' என்று உத்தரவிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். மேற்படி போர்ச் சூழலைப் பற்றி குறிப்பிடாமல் - தனியே 'எங்கெல்லாம் நீங்கள் வியட்நாம் காரர்களை காண்கிறீர்களோ - அவர்களை கொல்லுங்கள்' என்று சொன்னதாக சொன்னால் - நாம் அமெரிக்க ஜனாதிபதியையோ அல்லது அமெரிக்க ராணுவத் தளபதியையோ மிகப்பெரிய கொலையாளி என்றுதான் எண்ணத் தோன்றும். மாறாக அமெரிக்காவிற்கும் - வியட்நாமிற்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்த பொழுது அமெரிக்க ஜனாதிபதி மேற்கண்டவாறு சொன்னார் என்று குறிப்யிட்டால் அது அறிவு பூர்வமாகத் தோன்றும். அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு தைரிய மூட்டுவதற்காக அவ்வாறு சொன்னார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

4. அருள்மறை குர்ஆனின் மேற்படி வசனம் இஸ்லாமிய போர் வீரர்களுக்கு தைரிய மூட்டுவதற்காக சொல்லப்பட்டதே.!


அதுபோலவே அருள்மறை குர்ஆன் அத்தியாயம் ஒன்பது ஸுரத்துத் தௌபாவின் ஐந்தாவது வசனம் இஸ்லாமிய போர் வீரர்களுக்கு தைரிய மூட்டுவதற்காக சொல்லப்பட்டது. போர் நடக்கும் பொழுது எதிரிகளை கண்டு பயந்து விடாதீர்கள். அவர்களை வெட்டி வீழ்த்துங்கள் என்ற இஸ்லாமிய போர் வீரர்களுக்கு தைரியமூட்டுகிறது, அருள்மறை குர்ஆனின் மேற்படி வசனம்.

5. அருண் சூரி ஐந்தாவது வசனத்திலிருந்து 7வது வசனத்திற்கு தாவி விடுகிறார்:

இஸ்லாத்தைப் பற்றி விமரிசிப்பதையே வழக்கமாகக் கொண்டவர் இந்தியாவின் பிரபல பத்திரிக்கையாளர் அருண் சூரி. அவர் எழுதியுள்ள ' ஃபத்வாக்களின் உலகம்' என்கிற புத்தகத்தின் 572 வது பக்கத்தில் அருள்மறையின் மேற்படி வசனத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஐந்தாவது வசனத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர் உடனடியாக ஏழாவது வசனத்திற்கு தாவி விடுகிறார். இதன் மூலம் அருண் சூரி ஐந்துக்கும் ஏழுக்கும் இடையில் உள்ள 6வது வசனத்தை விட்டுவிட்டார் என்பது அறிவுள்ள எந்த மனிதரும் புரிந்து கொள்ளலாம்.

6. அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தவ்பாவின் 6வது வசனம் மேற்படி கட்டுக்கதை உண்மையல்ல என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தவ்பாவின் ஆறாவது வசனம் இஸ்லாம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் இல்லை என்பதை தெளிவாக உணர்த்துகிறது. அருள்மறை வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது...

'(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக!. அதன்பின் அவரை பாதுகாப்பு கிடைக்கும் வேறு இடத்திற்கு ( பத்திரமாக) அனுப்பபுவீராக. ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.'(அல் குர்ஆன் 9:6)

அருள்மறை குர்ஆன் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது இறைவனுக்கு இணைவைப்பவர்கள் உங்களிடம் புகலிடம் தேடுவார்கள் எனில், அவர்களுக்கு அபயமளியுங்கள் என்று சொல்வதோடு நின்று விடாமல், அவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு சென்றடையும் வரை அவருக்கு பாதுகாப்பளியுங்கள் என்றும் வலியுறுத்துகிறது. இன்றைய நவநாகரீக உலகத்தில் அமைதியை விரும்பும் ஒரு ராணுவத் தளபதியாக இருந்தால் - போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, எதிரி ராணுவ வீரர்களை மன்னித்து விட்டுவிடலாம். ஆனால் எந்த ராணுவ தளபதி எதிரி ராணுவ வீரர்களை, அவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்தைச் சென்றடையும்வரை அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்?.

இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் இல்லை. அமைதியையும் - சமாதானத்தையும் விரும்பக்கூடிய மார்க்கம் என்பதை மேற்கூறிய குர்ஆனிய வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

-டாக்டர் ஜாக்கிர் நாய்க்

தகவல் : ஆரம்பன்னை வாசிகள் குரூப்.

நன்றி : Z.M. அப்துல் காதர். அபுதாபி.

வெள்ளி, 27 மார்ச், 2009

100 MOST POWERFUL INDIANS IN 2009






“As-Salaamu Alaikum” (May Peace Be On You).

The Sunday EXPRESS (of the Indian Express), dated 22nd February 2009, published the list of the “100 MOST POWERFUL INDIANS IN 2009” amongst the Billion Plus population, wherein:-

1. Dr. ZAKIR NAIK is ranked No. 82.


2. From amongst the few Muslims in this list of 100, Dr. ZAKIR NAIK is the ONLY MUSLIM ISLAMIC PREACHER / SCHOLAR / ORATOR. The others being Film Personalities, Politicians or Businessmen.

3. In the “Top 10 Spiritual Gurus” Special List, Dr. ZAKIR NAIK is ranked No. 3. He is the ONLY MUSLIM in this Spiritual Gurus List.

Enclosed alongwith is the “Indian Express 100” for your reference.

Dr. Zakir Naik says

“All Praises are due to Allah (swt) and the great efforts and sacrifices of our last and final messenger Prophet Muhammad (pbuh) and the eloquent Message of Islam for the entire humanity. I am merely a humble servant of Allah striving in His Way, by His Grace, for His Deen as per His Guidance. I pray Allah (swt) continues to guide and help me and the whole Muslim Ummah in overcoming our limitations and increase the “IMAN” and “STRIVING” in us for Islam and its proper understanding the world over”.

Yours in the service of Islam and Humanity,

பன்றி இறைச்சியை இஸ்லாம் தடை செய்திருப்பது ஏன்?


இந்த பண்றியின் மாமிசத்தை இஸ்லாம் தடை செய்தது ஏன்? என்பது குறித்து சகோதரர் ஜாகிர் நாயக் கொடுத்த விளக்கத்தை இங்கே தருகின்றோம் -ஏகத்துவம்)

இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?

பதில்: இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடை செய்திருப்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்தத் தடை ஏன்? என்பது பற்றிய விபரத்தை கீழ்க்காணும் விளக்கங்கள் மூலம் தெளிவாக அறியலாம்.

பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது பற்றி குர்ஆனின் தெளிவாக்கம்:

பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருப்பது பற்றி அருள்மறை குர்ஆனில் குறைந்தது நான்கு அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'தானாகவே செத்ததும் இரத்தமும் பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் - 02 வசனம் 173

மேற்படி கருத்துக்களை அருள்மறையின் அத்தியாயம் ஐந்தின் மூன்றாவது வசனத்திலும் அத்தியாயம் ஆறு - 145வது வசனத்திலும் - அத்தியாயம் பதினாறு - 115வது வசனத்திலும் காணலாம். அருள்மறையின் மேற்படி வசனங்கள் - இஸ்லாத்தில் பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன.

பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளும் குறிப்பிடுகின்றது.

கிறஸ்தவர்களின் வேத புத்தகமான பைபிள் குறிப்பிடும் தடைகளைப் பற்றி கிறிஸ்தவர்களுக்கு எடுத்துச் சொன்னால் அவர்களும் அறிந்து கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளிளும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பைபிளின் அத்தியாயம் 11 - லேவியராகமம் வசனம் 7 முதல் 8 வரையிலும் பைபிளின் அத்தியாயம் 14 - உபாகமம் வசனம் 8 ம் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி அறிவிக்கின்றன.

மேலும் பைபிளின் அத்தியாயம் 65 - ஏசாயா 2 முதல் 5 வரையுள்ள வசனங்களில் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

பன்றி இறைச்சி உண்பதால் - மனிதனுக்கு ஏராளமான நோய்கள் உண்டாகின்றன.

எந்த விஷயத்தையும் முஸ்லிம் அல்லாதவர்களும் கடவுளே இல்லை என்று மறுப்பவர்களும் காரணத்துடனும் தர்க்க ரீதியாகவும் அறிவியல் உண்மையுடனும் சொன்னால்தான் ஏற்றுக் கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு எழுபது விதமான நோய்கள் உண்டாகிறது. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் வட்டப்புழு (RoundWorm) ஊசிப்புழு (PinWorm) கொக்கிப்புழு (HookWorm) போன்ற குடற்புழுக்கள் உண்டாகின்றன. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் நாடாப்புழு உருவாகிறது. இந்த நீளமான நாடாப்புழு மனித குடலின் அடிப்பகுதியில் சென்று தங்கிவிடுகிறது. ஆது இடும் முட்டை இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பரவுகிறது. இந்த முட்டை மனித மூளையச் சென்றடைந்தால் மனிதன் தன் நினைவாற்றலை இழப்பான். இந்த முட்டை மனித இதயத்தைச் சென்றடைந்தால் மனிதனுக்கு மாரடைப்பு உண்டாகிறது. இந்த முட்டை மனிதனின் கண்களைச் சென்றடைந்தால் மனிதன் கண்பார்வையை இழக்கிறான். இந்த முட்டை மனிதனின் ஈரலைச் சென்றடைந்தால் மனிதனின் ஈரல் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு பன்றி இறைச்சி உண்பதால் மனித வயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின் முட்டைகள் மனித உருப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை உள்ளவை.

பன்றி இறைச்சியில் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்ற பெயரையுடைய மற்றொரு ஆபத்தான குடற்புழு உள்ளது. பன்றி ,றைச்சியை நன்றாக வேக வைத்துவிட்டால் ,து போன்ற புழுக்கள் மரணித்து விடுகின்றன என்பது ஒரு பொதுவான அதே சமயம் தவறான கருத்து மக்களிடையே இருக்கிறது. இது பற்றிய ஆய்வு ஒன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டபோது - இருபத்து நான்கு பேர் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்று குடற்புழு நோயால் தாக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் இருபத்தி இரண்டு பேர் பன்றி இறைச்சியை நன்றாக வேகவைத்து சாப்பிட்டவர்கள் என்று கண்டறியப்பட்டது. சாதாரணமான வெப்பத்தில் சமைக்கப்படும் பன்றி இறைச்சியில் - குடற்புழு உண்டு என மேற்படி ஆய்விலிருந்து நாம் அறியும் செய்தி

பன்றி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம்.

பன்றி இறைச்சியில் மாமிச சத்தைவிட கொழுப்புச் சத்தே அதிகம். பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் கொழுப்புச் சத்து மனித இரத்த நாளங்களை அடைத்து விடுவதால் - மனிதனுக்கு இரத்த அழுத்த நோயும் - மாரடைப்பும் உண்டாகின்றது. எனவே அமெரிக்கர்களில் ஐம்பது சதவீதம் பேர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் கேடுகெட்ட மிருகம் பன்றி.

பூமியல் உள்ள விலங்கினங்களில் எல்லாம் கேடுகெட்ட விலங்கினம் பன்றி. பன்றி சேற்றிலும் சகதியிலும் மலத்திலும் வாழக்கூடிய விலங்கினம். கடவுளின் படைப்பில் ஒரு சிறந்த சுத்திகரிக்கும் மிருகம் பன்றி. நவீன கழிப்பறை வசதி இல்லாத கிராமப்புறங்களில் மனிதர்கள் - காடுகளிலும் - வெட்டவெளியிலும்தான் மலஜலம் கழிப்பார்கள். இந்த மலத்தை சுத்தம் செய்வது பன்றிதான்.

ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் பன்றிகள் மிக சுத்தமான சூழ்நிலையில் வளர்க்கப்படுகின்றன என சிலர் வாதிட முற்படலாம். எந்த மாதிரி சுத்தமான சூழ்நிலையிலும் பன்றிகள் ஒன்றாகத்தான் அடைத்து வைக்கப்படுகின்றன. எத்தனைதான் சுத்தமான சூழ்நிலையில் நீங்கள் பன்றிகளை வைத்திருந்தாலும் - பன்றி இயற்கையாகவே கேடு கெட்டவை. தன்னுடைய மலத்தையும் - பிறருடைய மலத்தையும் சுவைத்துத் தின்னும் மிருகம் பன்றி.

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றி.

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றிதான். தனது நண்பர்களை அழைத்து வந்து தனது துணையுடன் நண்பர்களை உடலுறவு கொள்ளச் செய்யும் மிருகம் பன்றி. அமெரிக்காவில் பெரும்பான்மையினர் பன்றி இறைச்சி உண்ணக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இரவு நேர பார்ட்டிகள் முடிந்த பிறகு தங்களுக்குள் 'மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு' (அதாவது எனது மனைவியுடன் நீ உனது மனைவியுடன் நான் என) கொண்டவர்களாக இருக்கிறார்கள். பன்றி இறைச்சி தின்பவன் பன்றியைப் போலத்தான் செயல்படுவான். இந்தியர்களான நாம் அமெரிக்கர்களை மிகவும் முன்னேறியவர்கள் எனவும் - மிகவும் பண்பாடு உடையவர்கள் எனவும் தலைக்கு மேல் வைத்து கொண்டாடுகிறோம். அவர்கள் என்ன செய்தாலும் அதனை நாமும் அப்படியே பின்பற்றுகிறோம். சமீபத்தில் மும்பையிலிருந்து பிரசுரமாகும் 'ஐலேண்ட்' என்னும் மாதப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரை 'மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு' மும்பை வட்டாரத்தில் சர்வ சாதாரணம் என்று குறிப்பிடுகிறது.

தகவல் : http://egathuvam.blogspot.com/

திங்கள், 2 மார்ச், 2009

Dr.ஜாகிர் நாயக்

வாழும் கலை" நிறுவனர் திருமிகு ரவிசங்கர் அவர்களுடன் Dr.ஜாகிர் நாயக் அவர்கள் "இந்து மதம் மற்றும் இஸ்லாமிய புனித வேதங்களின் அடிப்படையில் கடவுள் கோட்பாடு" என்ற தலைப்பில் இறைவனை அறிவதற்காக மதங்களிடையே நடைபெற்ற அறிவார்ந்த உரையாடல் , தற்பொழுது இணையதளத்தில் முதல் முறையாக தமிழில்

http://www.tamilmuslimtube.magnify.net/pages/zakinaik

LinkWithin

Blog Widget by LinkWithin