
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற அலுவலகம் நேற்று மர்ம நபர்களால் தாக்கப் பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஊர்வசி செல்வராஜ். இவருடைய அலுவலகம், கால்நடை மருத்துவமனை அருகே இயங்கி வருகிறது. அலுவலக உதவியாளராக ராமச்சந்திரன் இருந்து வருகிறார். நேற்று அலுவலகத்தை பூட்டிச்சென்றார்.
இன்று காலை வழக்கம் போல திறக்கச் சென்றார், அப்போது அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள், மின் விளக்குகள் உள்ளிட்டவை உடைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக