செவ்வாய், 31 மே, 2011

ஸ்ரீவைகுண்டம் ஆற்றுப்பாலத்தில் நெரிசலில் தவித்த வாகனங்கள்

ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தாமிரபரணி குறுகிய ஆற்றுப் பாலத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் எதிர் எதிரே நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டு அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் ஒரு பஸ் செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் பாலத்தின் மறுபுறம் காத்திருக்க வேண்டும்.

இப்போதைய போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ற வகையில் பாலம் இல்லாததால் புதிய ஆற்றுப்பாலம் கட்ட 2008 செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

2010 ஜூலை மாதமே முடிக்கப்படவேண்டிய பாலப்பணிகள் பல்வேறு காரணங்களால் முடிக்கப்படவில்லை.இதனால் ஸ்ரீவைகுண்டம் பழைய பாலத்தில் போக்குவரத்து நெரிசல் தினமும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் திங்கள்கிழமை பகல் 12.30 மணியளவில் தனியார் பேருந்தும், அரசுப் பேருந்தும் பாலத்தின் மையப் பகுதியில் எதிர் எதிரே நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல வாகனங்கள் முன்னும் பின்னும் அணிவகுத்து நின்றன .

அரைமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் நீடித்தது. தொடர் கதையாகவே இருந்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய பாலம் கட்டும் பணியை விரைவுபடுத்தி அப்பாலத்தில் வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தகவல்: தினமணி

ஸ்ரீவை, அணையில் தேங்கி நிற்கும் அமலைச்செடிகள்


புதிதாக பதவி ஏற்றுள்ள அரசு ஸ்ரீவைகுண்டம் அணையில் தேங்கியுள்ள அமலைச் செடிகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாமிரபரணி ஆறு கிட்டத்தட்ட பாபநாசத்தில் இருந்து புன்னக்காயல் வரை 75 கிலோ மீட்டர் தூரம் தினசரி குடிதண்ணீர், விவசாயம், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொடுத்து வருகிறது.

கோடைகாலமாக இருப்பதால் ஸ்ரீவைகுண்டம் அணையில் 40 அடிக்கு கீழ் தண்ணீர் இறங்கி கொண்டு வருகிறது. இதனால் தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பாபநாசத்திலிருந்து புன்னக்காயல் வரை அமலைச் செடிகள், வேலிக்காத்தான் செடிகள் ஆறுகள், குளங்கள், மடைகள், சிற்றாறுகள் என அனைத்திலும் தண்ணீர் தெரியாதவாறு ஆக்கிரமித்து வளர்ந்துள்ளது.

ஒரு அமலைச்செடி நாள் ஒன்றுக்கு அரைலிட்டர் தண்ணீரை உறிஞ்சுவதாக தெரிகிறது. மேலும் அமலையின் வேர்கள் அழுகி தண்ணீரை அசுத்தமும் செய்து வருகிறது. அடர்த்தியாக அமலைகள் இருப்பதால் பாம்புகள், அட்டைகள், கண்ணுக்கு தெரியாத புழுக்கள் எல்லாம் தண்ணீரை அசுத்தப்படுத்தி வருகிறது. பெருநகரங்களில் உள்ள கழிவுகள் எல்லாம் சேர்ந்து தாமிரபரணி ஆற்றை பாழ்படுத்தி வருகிறது.

ஸ்ரீவைகுண்டத்தில் மக்கள் பயன்படுத்தி வரும் குடிதண்ணீர் பாதுகாக்கப்படாத ஆற்றிலிருந்து நேரடியாக மக்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. முதல்நாள் பிடித்த குடிதண்ணீர் குடத்தில் மறுநாள் பார்த்தால் குடத்தின் உள்ளே பசை போல் கழிவுகள் ஒட்டுகிறது. மறுநாள் குடங்களை நன்றாக கழுவிய பின்னர் தான் தண்ணீர் பிடிக்க முடிகிறது. சுகாதாரமான தண்ணீர் கிடைக்காததால் பொதுமக்களுக்கு தோல் நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகிறது.

ஸ்ரீவைகுண்டம் அணையில் உள்ள தண்ணீரை சுத்தப்படுத்தி, ஆழப்படுத்தி, அமலைச் செடியை அப்புறப்படுத்த வேண்டுமென பொதுப்பணித்துறையிடம் கடந்தாண்டு டிசம்பரில் மனு கொடுக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமலைச் செடிகளை அப்புறப்படுத்த திட்டமில்லை என்றும், அணையை ஆழப்படுத்த வனத்துறையின் அனுமதி வேண்டும் என்றும் தெரிவித்துவிட்டனர்.

ஸ்ரீவைகுண்டம் அணையை ஆழப்படுத்த அரசுத்துறையான வனத்துறை பொதுப்பணித்துறைக்கு எப்போது அனுமதி அளிக்கும் என்பது நீண்ட நாள் கேள்வியாக உள்ளது.

ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாருவது சம்பந்தமாக பொதுப்பணித்துறையும், வனத்துறையும் இணைந்து அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்து தூர்வாருவதற்கு வழிவகை செய்ய தமிழகத்தில் புதிதாக பதவி ஏற்றுள்ள அரசு செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவியை பெற்றுள்ள சண்முகநாதன் இதனை உடனே நிறைவேற்றுவார் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய சிபிஎம்., செயலாளர் கந்தசாமி கலெக்டருக்கு கோரிக்கை மனு ஒன்றினையும் அனுப்பி உள்ளார்.

தகவல் : தினமலர்

வியாழன், 5 மே, 2011

ஒசாமா பின்லேடன் கொல்லப்படும் நேரடி வீடியோ காட்சி என்ற பெயரில் வைரஸ் ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.

Osama bin Laden Killed (LIVE VIDEO)  என்ற பெயரில் புதிதாக ஒரு வைரஸ்
இணையதளத்தில் வேகமாக உலாவருகிறது இதைப்பற்றிய ஒரு
எச்சரிக்கை ரிப்போர்ட்.
பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல்களில் இன்று
அதிகமாக உலாவரும் சேதி என்னவென்றால் ஒசாமா பின்லேடன்
கொல்லப்பட்ட நேரடிக்காட்சிகளைக் கொண்ட வீடியோவைப்பார்க்க
இங்கே சொடுக்குங்குள். இதில் பலதரப்பட்ட மக்கள் எப்படி என்று
தெரிந்து கொள்ளும் ஆவலில் சொடுக்கியவுடன் அவர்கள் கணினியை
வைரஸ் பதம் பார்த்துவிடுகிறது இதற்கான முன்னெச்சரிக்கை
நடவடிக்கை என்னவென்று பார்க்கலாம்.
படம் 1
உங்களுக்கு இமெயில் அல்லது பேஸ்புக் அல்லது டிவிட்டர் போன்ற
சோசியல் தளங்களில் இருந்து படம் 1-ல் மேலே காட்டியபடி ஒரு
வீடியோ காட்டப்படும் அதில் ஒசாமா பின்லேடன் கொல்லப்படும்
நேரடி வீடியோ காட்சியை யூடியுப் ஒளிபரப்ப அனுமதி கொடுக்காத
காரணத்தால் இங்கு கொடுக்கப்படிருக்கும் முகவரியை சொடுக்கி
அந்த வீடியோவை பாருங்கள் என்று இருக்கும் உடன் கொடுக்கப்
பட்டிருக்கும் இணையதள முகவரியை எக்காரணம் கொண்டும்
சொடுக்க வேண்டாம். நாம் எதையும் தரவிரக்காமல் எப்படி நம்
கணினியை வைரஸ் தாக்கும் என்றெல்லாம் அறிவுப்பூர்வமாக
யோசிப்பதற்குள் உங்கள் கணினி வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும்.
அதாவது நாம் உலாவியில் பார்க்கும் இணையதளங்கள் கணினியில்
தற்காலிகமாக (Temporary) ஆக சேமிக்கப்பட்டு தான் நமக்கு காட்டப்படும்
இந்த வைரஸ் தன் பணியை உலாவி Temporary ஆக சேமிக்கப்பட்டுள்ள
இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. கூகிஸ் மூலம் நண்பர்களின்
இமெயில் முகவரியை எடுத்து அவர்களுக்கும் அனுப்பிவிடுகிறது.
முன்னனி ஆண்டிவைரஸ் நிறுவனங்கள் கூட விழிபிதுங்கி இருக்கிறது.
இதுபோல் ஒசாமா பெயரில் வரும் எந்த இணைப்பையும் (Link)
சொடுக்காமல் இருப்பது தான் பிரச்சினை வராமல் தடுக்க ஒரே வழி.
உங்கள் நண்பர்களுக்கும் இந்தப்பதிவை கொண்டு செல்லுங்கள்.
தகவல் உதவி : விண்மணி  

LinkWithin

Blog Widget by LinkWithin