சிந்தனை செய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிந்தனை செய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 மார்ச், 2011

ஆண்களின் உலகம்!

அண்மை காலமாக ஆண்களின் உலகம் மீதான அன்பும், மதிப்பும் கூடிக்கொண்டே இருக்கிறது. 30 வயதில் ஒரு தியாகியைப் போல குடும்பப் பொறுப்புகள் சுமந்து திரிபவர்களின் முகங்களும், தன்னிடம் இருக்கும் கடைசி சில்லறைக் காசு வரை உடனிருக்கும் நண்பர்களுக்காய் செலவிடும் மனங்களும், ஜவ்வாது மலையின் பழங்குடி சிறுமி படிக்கவியலாமல் போனதற்காய் தி.நகர் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் கண்ணீர் விட்ட தோழனுமாய்... அன்பு நிறைந்த ஆண்கள் நிறையப்பேரை சமீபமாய் காண்கிறேன்!

எழுத்தில், திரையில், பொதுவில்... ஆண்கள் என்றால் பொறுப்பற்ற பொறுக்கிகள் என்ற சித்திரம் பின்னப்பட்டிருக்கிறது. இது முழு பொய் இல்லை, முழு உண்மையும் இல்லை. முப்பதைக் கடந்த வயதில்... தங்கையின் திருமணம், அக்காவின் பேறுகாலம் என நில்லாமல் ஓடிக்கொண்டிருப்பவர்கள் அநேகம் பேர். இ.எம்.ஐ.யில் பணம் செலுத்தி தங்கச்சி மாப்பிள்ளைக்கு ஸ்பெலண்டர் பிளஸ் வாங்கிக் கொடுத்துவிட்டு 27பி-க்கு காத்துக்கிடக்கும் இளைஞர்கள் எத்தனையே பேர்!



படித்தவர்கள்தான் என்றாலும் எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துவிடுவது இல்லை. முதல் தலைமுறை கல்விபெற்ற நடுத்தர வர்க்க இளைஞர்கள் நகரங்களில் தடுமாறித்தான் போகின்றனர். 21 வயதில் யு.ஜி. டிகிரி முடித்து வேலைதேடி வரும் அவர்கள், டெலி மார்க்கெட்டிங், சேல்ஸ் ரெப், பி.பி.ஓ., என மெதுவாய் மேலே ஏறி ஒரு நிலையை எட்டுவதற்குள் முன் நெற்றியில் முடி கொட்டிவிடுகிறது. இளமையின் எந்த சுகங்களையும் அனுபவித்திடாத முதல் தலைமுறை இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகம்!


‘‘காலேஜ் முடிச்சதும் கஷ்டமோ, நஷ்டமோ... எல்லா பசங்களையும் போல ரெண்டு வருஷம் ஜாலியா ஊரைச் சுத்தியிருக்கனுன்டா... அந்ததந்த வயசுல அப்படியப்படி இருந்திரனும். குடும்ப நிலைமைன்னு வேலைக்கு வந்தோம். எட்டு வருஷமாச்சு... நிமிர்ந்துப் பார்த்தா சுத்தியிருக்குறப் பசங்கல்லாம் ‘அண்ணா’ன்னு கூப்பிடுறான். நமக்கே கொஞ்சம் ஜெர்க் ஆகுது. என்னைக்காச்சும் ஒரு பொண்ணு ‘அண்ணா’ன்னோ, ‘அங்கிள்’னோ கூப்பிட்டுருமோன்னுதான் பயமா இருக்கு.’’ என சிரிப்பவனின் பெயர் பிரவீன். தி.நகர் ‘முருகன் இட்லி கடை’ வாசலிலோ, சரவண பவன் வாசலிலோ பார்த்திருக்கக்கூடும். தடித்தடியாய் டிக்ஸ்னரி விற்றுகொண்டிருப்பான்.


இப்போது டி.என்.பி.எஸ்.ஸி. குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வு நடக்கவிருப்பதால் 4000 கேள்வி, பதில்களை ஆடியோ வடிவில் ஒலிப்பதிவு செய்து அதை சி.டி.யில் போட்டு 50 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருக்கிறான். ‘‘ப்ளூடூத் வழியா செல்போன்ல ஏத்திக்கிட்டா ஃப்ரீயா இருக்கும்போது எல்லாம் கேட்டுக்கிட்டே இருக்கலாம் சார். நீங்க படிக்கவே வேண்டியது இல்லை, ஜஸ்ட் கேட்டா போதும்!’’ தெருவோரம் நின்று இப்படி கூவி விற்பதில் அவனுக்கு எந்த வெட்கமும் இல்லை. கேட்டால், ‘‘இருந்துச்சு. இப்போ இல்லை’’ என்பான். மாதம் பிறந்தால் கட்ட வேண்டிய இ.எம்.ஐ. மூன்று இருக்கிறது பிரவீனுக்கு.


இப்படிப்பட்ட பெரும்பாலானோருக்குப் பின்னால் ஒரு காதல் தோல்வி கதை இருக்கும். அதற்குக் காரணம் குடும்பமாய் இருக்கும். ‘குடும்பம் எதிர்த்ததால் காதல் தோல்வி’ என்பதல்ல... குடும்பத்தின் நிலையறிந்து அவர்களே தான் மனம் விரும்பியப் பெண்ணிடம் காதலைச் சொல்வது இல்லை. இந்தக் காரணத்தையும் ஆண்கள் வெளிப்படையாய் சொல்வதில்லை. காரணம், ‘ஆண்’ என்ற கெத்து அவர்களைத் தடுக்கிறது. இணை, இணையாய் சுற்றுபவர்களைக் காட்டிலும், இப்படி மனதுக்குள் கருகிப்போனக் காதல்களோடு, வேலை முடிந்த பின்னிரவில் முகமறியா பெண்களுடன் காதலும், காமமுமாய் பேசித் திரியும் ஆண்கள்தான் எத்தனை, எத்தனை பேர்?! 30 வயதில்தான் இத்தகைய நிலை என்றில்லை. 24, 25 வயதில் லட்சியங்கள், ஆசைகள் ஒதுக்கிவைத்து, சொந்த சுமைகளை இறக்கி வைப்பதற்காய் உழைப்பவர்கள் பலபேர். நிமிர்ந்து பார்க்கும் நேரத்தில், ஒரு பறவையைப் போல இளமை அவர்களை கடந்துவிட்டிருக்கிறது!


ஆண்கள் குடும்பத்தைப் பற்றி நினைப்பது இல்லை எனவும், எப்போதும் நண்பர்களுடனேயே சுற்றுகிறார்கள் எனவும் ஒரு குற்றச்சாட்டு பன்னெடுங்காலமாய் உண்டு. நண்பர்களுடன் சுற்றுகிறார்கள்தான். ஏனெனில், ஆண்களின் நட்பு வட்டம் பெரும்பாலும் வெளிப்படைத்தன்மையும், நேர்மையும் கொண்டது. அதிகப்பட்சம் இரண்டாவது பியரில் ‘ஒரு மேட்டர் மச்சான்’ என சொல்லத் துவங்கிவிடுவார்கள். நட்பு என்றால் நட்பு, பகை என்றால் பகை. இரண்டிலும் 100 விழுக்காடு நேர்மையே ஆண்கள் உலகின் அடிப்படை. உண்மையில் ஆண்களுக்கான பெரிய ஆசுவாசம் ஆண்களேதான். சினிமாவில் சித்தரிப்பதுப் போல, பெண்கள் அல்ல! ஆனால் குடும்பம் என்பது வேறு. அங்கு ஆண் பொறுப்புள்ள நபராக இருக்கவோ, நடிக்கவோ வேண்டியிருக்கிறது. தினம், தினம் குடும்பம் உற்பத்தி செய்யும் பொருளாதார மற்றும் மன அழுத்தங்களை ஆண்கள் நண்பர்களிடமே பகிர்ந்துகொள்கின்றனர்.


மேன்ஷன் போன்ற இடங்களில் ஆண்களின் உலகத்தை மேலும் நெருக்கமாக அறியலாம். ஏதேதோ திசையில் இருந்து ஓர் அறையில் அறிமுகமின்றி வந்து தங்கும் இளைஞர்களுக்கு இடையேயான நட்பின் அடர்த்தி கூடக், குறைய இருக்கலாம். ஆனால் யார் ஒருவரும் மற்றவர்களை சாப்பிடாமல் தூங்க விடுவது இல்லை. மாசக் கடைசியில் கூட, ‘‘உனக்கு இதே வேலையாப் போச்சுடா’’ எனத் திட்டிக்கொண்டேயாவது ஒரு முட்டை பரோட்டா பார்சல் வாங்குவந்துவிடுவார்கள். இப்போது நிறைய ஐ.டி. இளைஞர்கள் இரவையும், பகலையும் கடந்து வேலைப் பார்க்கின்றனர். அதிக சம்பளம், அதை அவர்கள் செலவழிக்கும் விதத்தால் வீட்டு வாடகை உயர்வு.. போன்ற பிரச்னைகள் எல்லாம் ஒரு பக்கம். ஆனால் அவர்களை வீடும், உறவும் உண்மையில் பணம் காய்க்கும் எந்திரமாக அல்லவா பார்க்கின்றன? எல்லோருக்கும் இதைப் பொருத்த முடியாது எனினும் நிறைய உதாரணங்களை சொல்ல முடியும். ஐ.டி. இளைஞர்களின் புதிய வாழ்க்கை முறை வீட்டுக்கும், உறவுகளுக்கும் கலாசார ரீதியாய் ஏற்றுக்கொள்ள முடியாததாய் இருந்தாலும் அவர்கள் ஈட்டும் அதிகப்பணமே அதற்கான அங்கீரமாய் மாறுகிறது.


ஆனால், ஐ.டி. வேலை எல்லோருக்கும் கிடைப்பது இல்லையே?! தமிழ்நாடு முழுவதும் இருக்கும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்களாக பணிபுரியும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கை யாராலும் இன்னும் உரக்கப் பேசப்படவில்லை. அவர்கள் என்ன சரக்கு விற்கவா கல்லூரிப் படித்துவிட்டு வந்தார்கள்? ‘இதுவும் ஒரு வேலையே’ என அவர்கள் ஏற்றுக்கொண்டாலும், பொதுச்சூழல் அவ்வாறு இல்லை. திருமணத்துக்குப் பெண் அமைவது முதல் மணமான வாழ்வின் தினவாழ்க்கை வரை எல்லாமே சங்கடங்களால் நிறைந்தது. ‘‘உன் வீட்டுக்காரர் எங்க வேலைப் பார்க்குறார்?’’ எனக் கேட்டால் அவர்களின் மனைவிமார்கள் என்ன பதில் சொல்வார்கள்? நிச்சயம் அவர்கள் ஏதேனும் ஒரு பொய் சொல்லவும், அது அம்பலப்படும்போது சங்கடமாய் தலையசைக்கவும் இந்நேரம் பழகியிருப்பார்கள்.


கிருஷ்ணகுமார் என்ற நண்பருக்கு 35-ஐ தாண்டிய வயது இருக்கும். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் இருந்து தினமும் சென்னை வடபழனிக்கு வேலைக்கு வருகிறார். வீட்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு சைக்கிள், அங்கிருந்து கிண்டி வரை மின்சார ரயில், கிண்டி டூ வடபழனி நகரப் பேருந்து்... மாலை வீடு திரும்புகையில் இதே சுற்று பஸ்-டிரெயின்-சைக்கிள் என்பதாய் முடியும். காலை ஆறு மணிக்கு கிளம்பினால் வீடு திரும்ப எட்டு, ஒன்பது ஆகும். ஓர் உழைக்கும் எந்திரமாய் மாறிப்போயிருந்தார். அலுவலகம் பக்கம் இருக்கும் டீ கடையில் இஞ்சி போட்ட ஸ்பெஷல் டீதான் குடிக்கும்படியாய் இருக்கும். சாதா டீ வாயில் வைக்க முடியாது. ஆனால் சாதா டீயை விட ஸ்பெஷல் டீ 2 ரூபாய் அதிகம். கிருஷ்ணகுமார் ஒருநாளும் ஸ்பெஷல் டீ குடித்தவர் இல்லை.


டிராஃபிக் அதிகமாகி இருந்த நாள் ஒன்றில் என் வண்டியில் கிண்டி வரை வந்தார். தனக்கு ஒரே ஒரு தங்கை எனவும் அவளை திருமணம் செய்துகொடுத்த இடத்தில் கடுமையான பிரச்னை எனவும் சொன்னார். நான் அதிகம் கேட்கவில்லை. ‘‘ரொம்ப பிரச்னையாயிடுச்சு சார். வேற வழியில்லாம டைவர்ஸ் வாங்கினோம். ரெண்டு மூணு வருஷம் கஷ்டப்பட்டு இப்போதான் இன்னொரு பையனைப் பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சேன்!’’ என்றவரிடம் பெரிய ஆசுவாசம் தெரிந்தது. இந்த வயதில்தான் அவர் குடும்ப பொறுப்புகளில் இருந்து விடுதலை ஆகியிருக்கிறார். ‘‘நீங்க எதுவாச்சும் ஆகனும்னு ஆசைப்பட்டீங்களா?’’ என்றேன். சிரித்தார். ‘‘ஆசைக்கு என்ன சார், இப்போ கூட பட்டுக்க வேண்டியதான். ஆசைதானே?!’’



உண்மையில் வரதட்சணை, வீண் ஆடம்பரம், நகைகளை வாங்கிச் சேர்ப்பது போன்றவை ஆண்களை நசுக்கிப் பிழிகிறது. அதற்கேற்ற வகையில் சம்பாதிக்க முடியாமல் போனால், வாழவே தகுதியில்லையோ என அவர்களைக் குற்றவுணர்வு அடைய வைக்கும் அளவில்தான் இருக்கிறது சூழல். நமது மோசமான குடும்ப அமைப்பு உறவுகளாலும், அதைவிட அதிகமாய் பணத்தாலும் பின்னப்பட்டிருக்கிறது. அந்த பாரத்தை ஆண்கள் விருப்பப்பட்டு அல்ல, வருத்தப்பட்டே சுமக்கின்றனர். நல்ல வேலை, கை நிறைய சம்பளம், ஊர் மெச்சும் வாழ்வு.. இவை எல்லாம் தர முடியாத ஆண் தரக்குறைவானவன் என பொதுப்புத்தி நினைப்பது மட்டுமல்ல, அதுதான் குடும்ப உறுப்பினர்களின் எண்ணமும் கூட. கிடைக்கும் வேலையை சரியாக செய்து, வரும் வருமானத்தில் திருப்தியுடன் வாழ்வதை யாரும் விரும்புவதும் இல்லை, பரிந்துரைப்பதும் இல்லை.

ஆண் துயரத்தின் அதிகப்பட்ச வெளிப்பாடாய் வெளிநாட்டில் பணிபுரிபவர்களைக் குறிப்பிடலாம். ஊரில் நிலத்தை, நகைகளை அடகுவைத்து ஏஜெண்டிடம் பணம் கட்டி சிங்கப்பூரிலும், வளைகுடா நாடுகளிடமும் ஆண்டாண்டு காலமாய் வேலைப் பார்ப்பவர்கள் லட்சங்களைத் தாண்டுவார்கள். முதல் இரண்டு வருடம் பணிபுரிந்து, வெளிநாடு செல்வதற்கு வாங்கிய கடனை அடைப்பார்கள். ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு வந்து கோடாலி தைலமும், செண்ட் பாட்டிலும் பரிசளித்துவிட்டு மறுபடியும் பிளைட் பிடித்தால், அடுத்த இரண்டு வருட வருமானம் வீடு கட்டவே போதாது. அப்புறம் தம்பியின் படிப்பு, தங்கையின் திருமணம் என முடித்து நிமிரும்போது அப்போதுதான் உள்ளூரில் நல்ல விலைக்கு நிலம் விலைக்கு வரும். கடன் வாங்கி அதை வாங்கிவிட்டு கடல் கடந்தால், அதற்கோர் இரண்டு வருடம். இரு மாத விடுமுறையில் ஊருக்கு வந்து திருமணம் முடித்து தாம்பத்தியம் நடத்தி வெளிநாடுப் போனால், சொந்த ஊரில் காலடி எடுத்து வைக்கையில் முகத்தோல் தடித்து, கன்னக்கதுப்புகளில் முதிர்ச்சி படிந்திருக்கும். வயதின் முதுமையுடன் பெற்றோரும், கையில் குழந்தையுடன் மனைவியும்... மிச்ச வாழ்க்கை அவ்வாறாக கழியும்.


இவை எவற்றையும் பாரமாகவும், துக்கமாகவும் எந்த ஆணும் நினைப்பது இல்லை. வாழ்வின் ஒரு பகுதியாகவே இவையும் கடந்து செல்கின்றன. ஆனால் இவை எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி, ஆணை விமர்சிக்கவும், ஒதுக்கித் தள்ளவுமான கருவியாக எல்லோரும் கைகொள்வது அவனது ஒழுக்கத்தை. குறிப்பாக ‘சாராயம் குடிக்கின்றனர், சிகரெட் பிடிக்கின்றனர்’ என்பது. உண்மையில் இவை உடல்நலம் கெடுக்கும் தவறான பழக்கங்களே. ஆனால் சமூகத்தில் ஓர் ஆணின் நல்மதிப்பை அளவிட இவற்றை அளவுகோல்களாக கருத முடியாது. காஞ்சிபுரத்தில் இறைவன் சந்நிதியில் பெண்களுடன் சல்லாபம் நடத்திய தேவநாதனுக்கு சாராயம், சிகரெட் எந்தப் பழக்கமும் இல்லை. ஊரே சிரிக்கும் நித்தியானந்தாவுக்கு டீ குடிக்கும் பழக்கம் கூட இல்லையாம். இந்த ஆண்களின் சமூக மதிப்பை எப்படி வரையறுப்பது? 1,500 கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த ‘சத்யம்’ முதலாளி ராமலிங்க ராஜுவுக்கு சாராயம், சிகரெட், பெண் சகவாசம் எதுவும் இல்லை எனில், நல்லவர் என அவரை ஏற்றுக்கொள்ள முடியுமா?


ஆண்களை Victim-களாக சித்தரித்து அவர்களின் ஆதிக்கத்தன்மையை நியாயப்படுத்துவது அல்ல இக்கட்டுரையின் நோக்கம். மேற்சொன்ன ஆண் துயரங்கள் போன்றவை இன்னும் அதிக விழுக்காட்டில் பெண்களுக்கும் உண்டு. ஆணின் உலகை இன்னும் கொஞ்சம் நெருக்கமாய் புரிந்துகொள்வோம் என்பதே இந்த குரலின் அடிநாதம்!

- பாரதி தம்பி


(இது 23.02.2011 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளியான கட்டுரை. படிக்காதவர்கள் படிக்கவும், ஓர் உரையாடலுக்காகவும் இங்கே...)

இந்த கட்டுரை திரு. பாரதி தம்பி என்ற நண்பரின் facebook ல் இருத்து எடுக்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

வியாழன், 3 மார்ச், 2011

அன்பு சகோதரர்களின் கவனத்திற்கு


சில தினங்களாக நமது சகோதரிகளின் செல்லிற்கு ஒரு பெண் போன் செய்து நமது பெண்களின் பெயரை சரியாக சொல்லி அவர்களின் கணவரின் பெயரையும் சொல்லி துபாயில் உங்கள் கணவர் இருக்கும் ஃபிளாட்டின் அருகில் நாங்கள் தங்கி உள்ளோம், தற்பொழுது வெகேசனில் வந்துள்ளோம் உங்கள் கணவர்தான் இந்த நம்பர் கொடுத்து பேச சொன்னார். நல்லா இருக்கீங்களா, பிள்ளைகள் நல்லா இருக்கா என்றெல்லாம் விசாரித்து அடுத்த வாரம் திரும்ப துபாய் செல்கிறோம் போகும் முன் வந்து பார்த்து விட்டு செல்கிறோம் என்று சொல்கிறார்கள், சம்பந்தப்பட்ட சகோதரிகள் தங்கள் கணவருக்கு போன் செய்து விபரம் கேட்கும் பொழுது அது பொய்யான தகவல் என்று தெரிகிறது.

இவர்களின் நோக்கம் என்ன?உறவினர்கள் யாரும் கேலி செய்கிறார்களா என்று விசாரிக்கும் பொழுது அதுவும் இல்லை!அவர்களுக்கு நமது சகோதரிகளின் போன் நம்பர் எப்படி கிடைக்கிறது, எப்படி நம்மை பற்றிய தகவல்கள் அவர்களுக்கு கிடைக்கின்றன? மிக உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் இது.

வெளிநாடுகளில் உள்ள சகோதர்கள் அனைவரும் உடனடியாக தம் தம் மனைவியருக்கும், குடும்பத்தாருக்கும் இத்தகவலை தெரிவித்து இது போல் யாரும் போன் செய்து பேசினால் வேறு எந்த தகவலும் கொடுக்கவேண்டாம் என எச்சரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

20.02.11 அன்று இரவு 09.30 மணிக்கு எனது மனைவிடம் இருந்து call me என்று ஒரு SMS வந்தது உடனடியாக நான் அவருக்கு போன் செய்யும் பொழுது லயன் பிசியாக இருந்தது, 5 நிமிடம் கழித்து மீண்டும் அழைத்தேன்.மனைவியின் குரலில் ஒரு பதஷ்டம் என்ன என்று கேட்கும் பொழுது உங்களுக்கு SMS செய்த மறு நொடி ஒரு போன் வந்தது நீங்கள் தான் என்று நினைத்து நலம் விசாரித்தேன் அதற்கு அவன் சொல்லு சொல்லு என்று சொன்னான், மறுபுறம் குரலில் வித்தியாசம் இருந்ததால் உடனே கட் செய்து விட்டேன் திரும்பவும் அவன் நம்பரில் இருந்து உங்கள் பெயர் மட்டும் போட்டு SMS வந்தது மீண்டும் அவன் போன் செய்தான், நீங்கள்தான் என்று நினைத்து மறுபடியும் எடுத்தேன், யார் பேசுவது? இது எந்த ஊர்? என்று கேட்கிறான், நான் பயந்து வைத்துவிட்டேன் என்று சொன்னார்கள்.


நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது மீண்டும் அந்த நம்பர் வருவதாக சொன்னார்கள் நம்பர் என்ன வென்று கேட்டு வாங்கிக்கொண்டு நான் அவனுக்கு போன் செய்தேன்,உறக்கத்தில் இருந்து எடுப்பவனைப் போல் எடுத்து ஹலோ என்று சொன்னான், யார் நீ? உனக்கு எந்த நம்பர் வேண்டும் ஏன் இதற்கு SMS செய்தாய் எப்படி உனக்கு இத நம்பர் கிடைத்தது என்று கேட்டவுடன் இணைப்பை துண்டித்துவிட்டான்.

ஆகையால் நண்பர்களே, நம்மை நோக்கி எதுவோ? யாரோ? குறி வைக்கிறார்கள் அதில் நமது குடும்பத்தார்கள் சிக்கி விடாமல் இருக்க அனாமத்தான கால்கள் எதுவும் வந்தால் அதற்கு பதில் கொடுக்க வேண்டாம் என்று தங்கள் மனைவிமார்களிடமும் குடும்பத்தார்களிடமும் எச்சரிக்கை செய்யவும் .

தகவலுக்கு நன்றி : அதிரை அமீன்.

திங்கள், 28 பிப்ரவரி, 2011

சீரழிக்கும் செல்போன்-இன்டர்நெட்; சிந்திப்பீர் பெற்றோர்களே!

ஆக்கம் : டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்டி, ஐ.பீ.எஸ்(ஓ)

இரண்டாம் உலகப்போருக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்றை உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கிறேன். இங்கிலாந்து பிரதமராக ஆகுவதிற்கு முன்பாக வின்ஸ்டன் சர்ச்சில் சாதாரண பிரிட்டிஸ் டூரிஸ்ட்டாக சென்னை வந்திருந்திருந்து அண்ணா சாலையில் முன்பு இருந்த அரசு வளாக(கவர்மெண்ட் எட்டேட்ஸ்) அட்மிராலிட்டி கட்டிடத்தில் ஒரு அறையில் தங்கிருந்தாராம். அவருக்கு அடுத்த அறையில் பிரிட்டிஸ் இந்தியாவின் மிலிட்ரி கர்னல் ஒருவர் தங்கி இருந்தாராம். அப்போது கர்னல் போனில் லண்டனுக்கு சப்தம் போட்டு பேசினாராம்.

அவர் பேசிய சப்தம் கேட்டு வின்ஸ்டன் சர்ச்சில் அவருடைய அறையினை விட்டு வெளியே வந்து அங்கிருந்த காவலாளியைக் கூப்பிட்டு அந்த அறையில் தங்கிருந்தவர் யார் எனத் தெரிந்து கொண்டு காவலாளியிடம், ‘நீங்கள் போய் உங்கள் கர்னலிடம சொல்லுங்கள் அவருடன் பேசுகிறவர் லண்டனில் இருக்கிறார். அது தெரியாது கர்னல் நேராக இருப்பது போன்று சப்தம் போடுகிறார் என்று சொன்னாராம். இதனை ஏன் குறிப்பிடுகிறேனென்றால், முன்பு இருந்த தொலைபேசி அடுத்தவர்க்கு தொல்லை பேசியாக இருந்ததாம்.

ஆனால் இன்றைய நவீன விஞ்ஞான உலகத்தில் தொலை பேசிக்கே வேலையில்லாது கைபேசி வந்து விட்டது. ஆனால் அதே தொலைபேசி இளசுகளை சீரழிக்கும் கைபேசியாக மாறிவிட்டது தான் இன்றைய சமுதாயத்திற்கு பெரிய தலைவலியாக மாறி உள்ளது.

செல்போன் வந்தபிறகு வயர் இணைப்பிற்கு முக்கியத்துவம் இல்லாத நிலமை வந்துவிட்டது. சாதாரண கூலி முதல் கோமான் வரை சட்டைப் பையில் கொண்டு செல்லும் அத்தியாசிய பொருளாக மாறிவிட்டது ஆச்சரிமில்லைதான். செல்போனின் முக்கிய செயல்பாடுகளை தெரியாதவர்கள் இல்லை யென்றே சொல்லலாம். இருந்தாலும் சில முக்கிய செயல்பாடுகளை இங்கே சொல்லலாம் என நினைக்கின்றேன்:

1) அட்ரஸ் கையெடு 2) அழைப்பவர் பட்டியல் 3) வீடியோ பங்கிடுதல் 4) படம் எடுத்தல் 5) கான்ப்ரன்ஸ் நடத்துதல் 6) மெஸேஜ் அனுப்புதல் 7) எல்லோ பேஜ் என்ற வர்த்தக விளம்பரம் 8) டி.வி 9) இசை 10) செய்தி ஒளிபரப்பு 11) மொபைல் பேங்கிங்க் 12) தட்ப வெப்ப நிலையறிதல் 13) இன்டர்நெட் 14) நோட் புத்தகம் 15) உலக மணி 16) உலக நாணயம் 17) உலக தேதி 19) எழுப்பும் மணி 20) கால்க்குலேட்டர் 21) புளு டூத் 22) இடங்களை எழிதாக கண்டு பிடிக்கும் ஜி.பி.எஸ், ஜி.பி.ஆர்.எஸ்

மேற்கூறிய உபயோகங்கள் சிலவகை தான். இன்னும் அதன் பயன்பாடுகள் உலகம் விசாலமானது என்பதினை மாற்றி உலகம் கைக்குள் அடங்கிருக்கிறது என்று சொல்லுமளவிற்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

1964 ஆம் ஆண்டு மன்னார் வளைகுடாவில் புயல் ஏற்பட்டு பாம்பன் பாலத்தில் சென்ற ராமேஸ்வரம் ரயில் அடித்துச் செல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். தனுஷ்கோடி தீவு முற்றிலுமாக ராமேஸ்வரத்துடனான தொடர்பு துண்டிக்கபட்டது. அப்போது அந்த தீவில் இருந்த பெரும்பாலோர் இறந்து விட்டனர். அந்த சம்பவத்தினை அந்த தீவிலிருந்த டெலக்கிராப் ஆப்பரேட்டர் மோர்ஸ் தொடர்பு மூலம் சென்னைக்கு தகவல் அனுப்பினார். அதனை வைத்துதான் உடனே மீட்பு நடவடிக்கை எடுக்கவும் முடிந்தது. அந்த சம்பவம் நான் பி.யு.சி மாணவனாக இருந்தபோது நடந்தது. ஆனால் தொலை தொடர்பில் ஏற்பட்ட சேட்லைட் வளர்ச்சி அபாரமானது என்பதினை இரண்டு சம்பவங்கள் மூலம் விளக்கலாம் என நினைக்கின்றேன். ஒன்று சிலி நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் 2000 அடிக்குக் கீழே வேலை பார்த்துக் கொண்டிருந்த 33 தொழிலாளர்கள் விபத்து ஏற்பட்டு சிக்கிக் கொண்டார்கள். அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதினை ஒரு துளைபோட்டு அதில் ஒரு செல்போன் செலுத்தி தெரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அவர்கள் உயிருடன் இரண்டு மாதங்களுக்கு பிறகு மீட்கும் வரை வீடியோ கான்ப்ரன்ஸிலும் தங்கள் குடும்பத்தாருடன் பேசி மகிழ்ந்தது அனைவரும் பார்த்திருப்பார்கள்.

2) அதே போன்று விண்வெளியில் பயணம் செய்த கல்பணா சவ்லா போன்ற வீரர்கள் தங்கள் சாதனை முடிந்து வாயு மண்டலத்தினை தொடும் வரை தரைக்கட்டுப்பாட்டுடன் பேசிக் கொண்டு வந்தது அனைவரும பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதன் பின்பு தான் அவர்கள் விபத்தில் மரித்தார்கள்.

ஆகவே தொலை தொடர்பு வளர்ச்சி பரிணாமமானது என்பதினை எல்லோரும் அறிவர்.
இந்திய நாடு பொருளாதாரத்தில் 8.9 சதவீத வளர்ச்சியடைந்து வளரும் நாடு என்ற நிலையிலிருந்து அமெரிக்கா ஜனாதிபதி பாரக் ஒபாமா சமீபத்தில் இந்திய நாட்டுக்கு வருகை தந்தபோது சொல்லியது போல வளர்ந்த நாடாக திகழ்கிறது. முன்பெல்லாம் கம்பஞ் சோறும், கேப்பைக்களியும், குருனைக் கஞ்சியுடனும் பச்சை மிளகாய், வெங்காயத்தினை கடித்துக் கொண்டு சாப்பிட்ட காலம் போய் இன்று வயிறார சத்துள்ள உணவு சாப்பிடும் தரத்திற்கு உயர்ந்துள்ளோம். கரடுகளிலும், முள் செடிகளிலும் வெறுங்காலுடன் பள்ளிக்குச் சென்ற நாம் இன்று விதவிதமாக செருப்புகள்,ஸ_க்கள் அனுந்து அரசே இலவசமாக சைக்கிளில் பள்ளிக்கு சென்று இலவசமாக பள்ளிப் படிப்பினை முடிக்க உதவும் காலமாக இருக்கிறது. உலகில் செல்வத்தில் மிளிரும் நாடாக இந்தியா மாறி வருகிறது என்றால் மறுக்க முடியாது.

பணம் எங்கே இருக்கின்றதோ அங்கே மகழ்ச்சி தாண்டவமாடும். ஆனால் அந்த மகிழ்ச்சியே குடும்பத்தின் எதிரியாகிவிடும் என்பது கிராமத்துப் பழமொழி. தங்கள் ஆண், பெண் குழந்தைகள் சிரமம் பாராது வளர பெற்றோர் வெயில், மழையென்று யோசிக்காது உழைக்கின்றனர். பிள்ளைகள் படிப்பிற்காக கம்ப்யூட்டர், செல்போன,; மோட்டார் சைக்கிள்,ஸ்கூட்டர் என்று வாங்கிக் கொடுக்கின்றனர். சிலர் தன் செல்ல சிறு பிள்ளைகளுக்கும் செல்போன் விளையாட்டு பொம்மை போல வாங்கிக் கொடுக்கின்றனர். வீட்டிலே இன்டர்நெட் வசதியும் செய்து கொடுக்கின்றனர். அதன் விளைவு தான் வில்லங்கம் வீட்டிற்கே வந்த கதையாகிறது. எட்டு வயது முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமியர் கம்ப்யூட்டரில் ஆர்குட், டிவிட்டர், பேஸ்புக் என்ற வலை தளங்களுக்கு தங்கு தடையின்றி சென்று பல்வேறு பால் வித்தியாமில்லாத புது நண்பர்களை உருவாக்கிக் கொள்கின்றனர். அந்த இன்டர்நெட்டில் ஆபாச இணைய தளம், ‘பாப் அப்’ தெரியும் படி செய்து இள மனதினை கெடுக்கிறார்கள். அது போன்று செல்போனில் காதல் பேச்சுகள், தனிமையில் முத்தமிடுதல், ஏன் பாலியல் தொடர்புகளைக் கூட கம்ப்யூட்டரிலும், செல்போனிலும் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். பெற்றோரும், அரசும் தரமான பள்ளி, கல்லூரி படிப்பினை மாணவர்களுக்கு கொடுக்க ஆசைப்படுகின்றது. ஆனால் மாணவர்களில் சிலர் படுகுழி என்று தெரிந்தும் அதில் விழும் செய்திகளை நாம் படிக்கின்றோம்.

அன்றாட வாழ்க்கையிலும் கேள்விப்படுகிறோம். பல்வேறு செய்திகள் இருந்தாலும் இரண்டு உதாரணங்களை மட்டும் சொல்லாம் என நினைக்கின்றேன். கோவை மாவட்டத்தில் ஒன்பதாவது படிக்கும் மூன்று மாணவிகள் பள்ளியிலிருந்து ஒரு வருடத்திற்கு முன்பு காணவில்லை. அவர்கள் காணாதது சம்பந்தமாக காவல் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சமீபத்தில் அந்த மூன்று மாணவிகளும் பெங்களூரில் இருப்பதாக அறிந்து அவர்களை சென்று பார்க்கும் போது அவர்கள் மூவரில் ஒருவர் திருமணமாகி ஆறு மாத குழந்தையுடன் இருப்பதும், மற்றும் இருவர் இரண்டு இடங்களில் வீட்டு வேலை செய்வதாகவும் தெரிந்தது. தன் தோழியின் காதலுக்காக மற்ற இரண்டு மாணவிகளும் தங்கள் படிப்பினை பாழடித்து, பாலுட்டி தாளாட்டிய பெற்றோரை மறந்து வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்றால் எந்தளவிற்கு காதல் கண்ணை மறைத்துவிட்டது என்பதினைப் பாருங்களேன்.

2) தஞ்சாவூர் மாவட்டத்தினைச் சார்ந்த இரண்டு மாணவர்களில் ஒரு மாணவர் கஸ்தூரி என்ற பள்ளி மாணவியினை ஒரு தலை பட்சமாக காதலித்தாராம். அவருக்கு அவருடைய நண்பர் உதவி செய்தாராம். ஆனால் அந்த பள்ளி மாணவி அதனை வெறுத்தாராம். அவர்களின் முறையில்லா செயலினை ஊர் பெரியவர் சுவாமிநாதன் தட்டிக் கேட்டாராம.;. அந்த பள்ளி மாணவியினையும,; அந்த ஊர் பெரியவரையும் பலி வாங்க அந்த இரண்டு மாணவர்களும் இரண்டு செல்போன் சார்ஜர்கள் வாங்கி அதில் டெட்டனேட்டர்களைப் பொறுத்தி மாணவி மற்றும் ஊர் பெரியவர் வீடுகளின் முன்பாக இரவு வீசி விட்டார்களாம். காலையில் அதனை அறியாத அந்த மாணவியும,; அந்த ஊர் பெரியவரும் அவர்கள் வீட்டு முன்பு கிடந்த சார்ஜரை எடுத்து செல்போனில் கனெக்ஷன் கொடுத்து பிளக்கில் மாட்டும்போது அவைகள் வெடித்து அவர்கள் இருவருக்கும் முகத்தில் காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதாக சமீபத்திய பத்திரிக்கை செய்தியாகும்.

இளசுகளை கெடுப்பதில் மூல காரணமாக உள்ளது. டி.வி. அடுத்தது சினிமா. டி.வி.யில் ஜாக்பாட்டில் ஜட்ஜாக வரும் நடிகை முதுகு தெரியும் அளவிற்கு உடை அணிந்து வருவதும், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜாக வரும் நடிகைகள் பாத்ரூம் உடையோ என்று எண்ணும் அளவிற்கு அரைகுரை ஆடை உடுத்தி வருவதும், பள்ளிப்பருவத்திலேயே காதல் செய்வது போன்ற சினிமா பார்ப்பதும், ‘கல்யாணமே கட்டிக்கில்லாமல் ஓடிப்போகலாமா’ என்பது போன்ற சினிமா பாட்டுக்களை கேட்பதும் இளசுகளின் பாலியல் உணர்வுகளை தூண்டும் நிகழ்ச்சியாக உள்ளது. என்றால் யாரும் மறுக்க முடியாது. அதுவும் வசதியுள்ள பிள்ளைகள் உண்ணும் சத்துள்ள உணவு அவர்களின் உடலில் ஒரு விதமான ரசாயண கலவை ஏற்பட்டு கிளர்ச்சியினைத் தூண்ட மூல காரணமாகவும் உள்ளது. அதுவே அவர்கள் பெற்றோர்களே இல்லாமல் தங்களுடைய வாழ்க்கையினை தேர்ந்தெடுத்து தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்கின்றனர்.

கிராமத்தில் ஒரு பழமொழி, ‘முல்லைச் செடிக்கு கள்ளிச் செடி’ என்று தெரிவதில்லை என்று. முல்லைச் செடி போன்ற இளம் வயதினர் அறியாத பருவத்திலே தங்கள் கள்ளிச் செடி என்ற காதல் மேல் நாட்டம் கொள்கின்றனர். அதற்கு உதவியாக செல்போனும், இன்டர்நெட்டும் இருக்கிறது.

ஆனால் அவைகளின் வாசனை இல்லாத மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் சாதனை படைக்கிறார்கள் என்று சில உதாரணங்களை கூற ஆசைப்படுகிறேன்:

1) சென்ற பிளஸ் 2 பரீட்சையில் முதல் ரேங்க் மற்றும் இரண்டாம் ரேங்க் வாங்கிய தூத்துக்குடியினைச் சார்ந்த பாண்டியன், நாமக்கல்லைச் சார்ந்த சந்தியா, ராஜபாளையத்தினைச் சார்ந்த பிரக்ஷனா ஆகியோர் டி.வி பார்ப்பதில்லையாம்.

2) பேசுபவர்களின் உதடு அசைவினை வைத்து புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட திருவல்லிக்கேனியினைச் சார்நத கார் டிரைவர் மகள் பாத்திமா பிளஸ் 2 தேர்வில் காது கேளாதவர் பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். அவர் டி.வி. பார்ப்பதில்லை.

3) கன்னியாகுமரி மாவட்டம் ரவிபுதூர்கடையினைச் சார்ந்த சென்னை எஸ்.எஸ்.என் இன்ஜினீரியங் கல்லூரி மாணவி மாஷா மலைக்க வைக்குமளவிற்கு சாதனை படைத்து எட்டு புதிய கண்டுபிடிப்பிற்கு மூலகர்த்தாவாகி ஜனாதிபதியிடம் சான்றிதழ் வாங்கியுள்ளார.; அவர் டி.வி. பார்ப்பதில்லையாம்.

செல்போன்கள் திருமணமாகாத சிறுவர், சிறுமிகளின் மனதினைக் கொடுக்கும் சாதனமாக இருக்கிறது என்று அறிந்து உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள லாங் என்ற கிராமத்தில் ஊர் பஞ்சாயத்துக் கூடி திருமணமாகாத இளம் பெண்கள் செல்போன் உபயோகிக்க தடை விதித்திருக்கிறது என்றால் பாருங்களேன் எந்தளவிற்கு அந்த கிராமத்தில் செல்போன்கள் வளரும் பெண்களின் வாழ்க்கையினை சீரழித்திருக்குமென்று.

செல்போன், இன்டர்நெட் துஷ் பிரயோகங்களை தடுக்க சில யோசனைகள்:

1) பள்ளி மாணவ, மாணவியருக்கு கண்டிப்பாக செல்போன் வழங்கக் கூடாது. அப்படி வழங்குவுதாக இருந்தால் அவசர அழைப்புகளுக்கு மட்டுமே அதனை உபயோகிக்கும் அளவிற்கு சேவை வாங்க வேண்டும்.

2) கல்லூரி மாணவியர், மாணவர்களுக்கு போஸ்ட் பெய்டு செல்போன் சேவை வழங்கலாம். அவைகளின் கால் சார்ஜ், எஸ்.எம்.எஸ் சார்ஜ் அட்டவணை பில்லுடன் சேர்ந்து வருமாறு செய்து பெற்றோர் அதனை கண்காணிக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்த அண்ணா யுனிவர்சிட்டி துணை வேந்தர் விஸ்வநாதன் அவர்கள் யுனிவர்சிட்டி வளாகத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதித்திருந்தார். முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட பின்பு அதன் முக்கியத்துவம் அறிந்து அவருடைய உத்திரவினை பின் பற்றி பல கல்லூரிகள் தடையும் விதித்தன. ஆகவே பெற்றோர்கள் பிள்ளைகள் செல்போன் பேச்சுக்களை கண்காணிப்பதினை முதலில் எதிர்க்கத்தான் செய்வார்கள். அதற்காக பிள்ளைகளை படுகுழுpயில் விழ அனுமதிக்கலாமா? பெற்றோர்கள் மனந்தளராது. எது தன் பிள்ளைக்கு உகந்தது என்பதினை அவர்கள் தீர்மானிக்க வேண்டும்.

3) இன்டர்நெட்டில் என்ன செய்திகளை பிள்ளைகள் பரிமாறிக் கொள்கிறார்கள் என்பதினை படித்த பெற்றோர் கம்ப்யூட்டரினை டவுண்லோடு செய்தால் கண்டு பிடிக்கலாம். இன்னும் பெற்றோருக்கு தெரியாமல் வரும் மெயில்களை பிள்ளைகள் நீக்கினால் அப்படி நீக்கப்பட்ட பகுதி டிரேஸ் பகுதியில் இருக்கும். அதனை இயக்கி தெரிந்து கொள்ளலாம்.

4) தங்கள் மகன், மகள்களை படிப்பதிற்காக விடுதியில் விடும்போது அவர்களை தண்ணீர் தெளித்து விடாது அவர்கள் இருக்கும் விடுதிகளுக்கு சென்று அவர்களின் மேற்பார்வையாளர்களிடம் பிள்ளைகள் நடத்தையினை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

5) செல்போனில் வரும் தெரியாத மிஸ்டு கால்களுக்கு நிச்சயமாக பதில் சொல்லக்கூடாது. அதுவும் பெண்கள் கண்டிப்பாக பதில் சொல்லக்கூடாது.

6) ஆண் துணை இல்லாத பெண்களுக்கு எமன்போல சிலர் வந்து அவர்களிடம் பழக்கத்தினை ஏற்படுத்தி அவர்கள் உயிருக்கும், கற்புக்கும் உலை வைப்பார்கள். உதாரணத்திற்கு ஆள் துணையில்லாத இராமநாதபுரம் கேனிக்ரையினைச்சார்ந்த மலேசியாவிலிருந்து வந்த ஆதிலா பேகம் என்ற பெண் ஒருத்தி சமையல் கேஸ் சிலிண்டர் வாங்குவதிற்காக ஒரு ஆணுடைய துணையினை நாடி அதுவே எமனாக முடிந்து அந்த நபர் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து அவளையும, அவளுடைய அழகான ஆண் ஒன்று பெண்னொன்று குழநதைகளைக் கடத்தி வாடிப்பட்டி அருகே கொலையும் செய்து விட்ட நவம்பர் மாதச் செய்தி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

7) திருமணத்திற்கு நிச்சயம் வைத்து பின் திருமணம் நடக்க சில நாட்கள் இருக்கும் போது ஆணும் பெண்ணும் தங்களுடைய செல்போனிலோ அல்லது இண்டர்நெட்டிலோ தனிமையினை படமாகவோ அல்லது வீடியோவாகவோ எடுக்க அனுமதிக்கக் கூடாது. அது போன்று ஒரு நிகழ்ச்சியில் மணப்பெண் தன்னுடைய் நிர்வானமான படத்தினை நிச்சயிக்கப் பட்ட மாப்பிள்ளை தானே என்று அனுப்பிய போட்டோ பிற்காலத்தில் திருமணம் பாதியில் முறிந்து விட்டபோது அந்த போட்டோவை வைத்தே மாப்பிள்ளை வீட்டார் அந்தப் பெண்ணை கேவலமாக பேசியதும் சமீபத்திய செய்தியாக வந்தது. ஆகவே ஆணும் பெண்ணும் காதல் கத்தரிக்காய் என்று வேற்று ஆணுடன் சுற்றும் போது சேர்ந்து நெருக்கமாக இருக்கும் போட்டோ, வீடியோ எடுக்க அனுமதிக்கக் கூடாது.

பெண்களுக்கு எதிரான சதி என்ற உடன்கட்டை ஏறுதல், பெண் சிசுவினைக் கொல்லுதல், வரதட்சணை கொடுமை, பெண்கள் வன்கொடுமை போன்றவைகளை ஒழிக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆகவே அந்த பெண்கள் விஞ்ஞான வளர்ச்சிக்கு சாதனங்களான செல்போன், இன்டர்நெட் போன்ற வைகளால் சீரழிவதினை பெற்றோரும், உற்றாரும், உடன் பிறந்தோரும் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

பெற்றோர்களை பேணுவோம்!

ஆக்கம்: மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி)

உங்களி்ன் இந்த அபரிதமான வளர்ச்சிக்கு யார் காரணம்? என்ற கேள்விக்கு எனது தாயும், தந்தையும் தான் என லட்சக்கணக்கானோர் கூடியிருந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நன்றிப் பெருக்குடன் உரத்தக்கூறியது வேறு யாருமல்ல, இரட்டை ஆஸ்கர் விருது நாயகன் நமது ஏஆர் ரஹ்மான் தான்!.

தனது பெற்றோர்களின் மீது வைத்திருந்த மதிப்பு, மரியாதையினால் தான் இறைவன் இந்த உயர்வை ஏஆர் ரஹ்மானுக்கு வழங்கினான். அதனால் தான் தமது பேச்சின் முடிவில் எல்லாப் புகழும் இறைவனுக்கே! எனக்கூறி நிறைவு செய்தார்.

பெற்றோர்களின் மனம் குளிரும்படியாக நடந்து கொள்ளும் எந்தப் பிள்ளைகளும் இறைவனால் கைவிடப்பட மாட்டார்கள் என்பதற்கு எவ்வளவோ உதாரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். அதில் ஒரு உதாரணம் தான் ஏஆர் ரஹ்மான்!.
உங்களை பெற்ற தாய், தந்தையரை பார்த்து சீய்... என்ற வார்த்தையை கூட பயன்படுத்தாதீர்கள் என இறைவன் அல் குர்ஆன் மூலம் மனித சமுதாயத்தை எச்சரிக்கிறார்கள். மாறாக பெற்றோர்களிடம் பேசும் போது கண்ணியமாக பேசுங்கள் என்றும் இறைவனே சொல்லித் தருகிறான்.

வயதான தாய், தந்தையரோ அல்லது இருவரில் ஒருவரையோ அடைந்து அவர் (பெற்றோர்)களின் கோபத்திற்குள்ளாகி எவன் சொர்க்கம் நுழையவில்லையோ? அவனும் நாசமடைவானாக என்று வானவர் கோமான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் என்னிடம் கூறியபோது ஆமீன்! அப்படியே நடக்கட்டும் என நானும் பிரார்த்தனை செய்தேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பரில் இருந்து கொண்டு தமது கைகளை உயர்த்தி மூன்று முறை ஆமீன் கூறிய நிகழ்வில் ஒன்றாய் பெற்றோர்களை கண்ணியம் செய்வதை பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்
.
மரணத்திற்குப் பிறகு நீ எங்கே செல்ல ஆசைப்படுகிறாய்? என யாரிடத்தில் கேட்டாலும் நல்லவர், தீயவர் என்ற பாகுபாடில்லாமல் சொல்லக்கூடிய ஒரே பதில் சொர்க்கம் என்பது தான்! காரணம் அங்கு தான் எவ்வித வேதனையில்லாமல் சுக போகமாக வாழ்வதற்குரிய சூழ்நிலை உள்ளதாக இறைவனும் இறைத்தூதரும் அறிவித்துள்ளார்கள்.

இப்படி ஆசைபடுவதில் தவறில்லை! அதே நேரத்தில் நாம் அதற்கு தகுதியானவர்களா? என்று சிந்திக்க வேண்டுமா? இல்லையா?

ஒருவர் சொர்க்கம் செல்ல வேண்டுமென நினைத்தால் அதற்குரிய அடிப்படை தகுதியே பெற்றோரிகளின் மனம் குளிரும் படியாக வாழ்ந்திருக்க வேண்டும். பெற்றோர்களின் உயர்வைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "பிள்ளைகளாய் இருப்போரே, தாயின் காலடியில் தான் உங்களுக்கான சொர்க்கம் உள்ளது" எனக் கூறுகிறார்கள்.

அதாவது தாயின் காலடி என்பது தாயின் மன திருப்தியை குறிக்கிறது என்பதாக அறிஞர்கள் கருத்துரைக்கிறார்கள். நாம் சொர்க்கம் செல்வதற்கு காரணமாய் இருக்கும் பெற்றோர்களையே முதியோர் இல்லம் என்ற நரகத்தில் தள்ளி விடுவது எவ்வளவு பெரிய அபத்தம்!
முன்பொரு காலத்தில் மூலை முடுக்கெல்லாம் பெட்டி கடைகள் தானிருக்கும்.

இன்றோ ஊர்தோறும் முதியோர் இல்லங்கள் உருவாகி வருகின்றன. இதெல்லாம் அதிகப்படியான மனிதர்கள் சொர்க்கத்தை விட்டு விட்டு நரகத்தை நோக்கிய தங்களது பயணத்தை தொடர்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

இன்று பிள்ளைகளாய் இருப்பவர்கள் தான் நாளை பெற்றோர்களாய் மாறுகிறோம்! "முன் செய்யின் பின் விளையும்" என்ற பழமொழியை மனதில் இருத்தி வாழ வேண்டும். இன்று நமது பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தால், நாளை நமது பிள்ளைகள் நம்மை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவர். முதியோர் இல்லங்கள் மூடப்படாமல் நீடித்து இருப்பதற்குரிய காரணம் புரிகிறதா?

பெற்றோர்களுக்கு பிள்ளைகள் எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டுமென்பதை இதோ, இறைவனே கூறுகிறான்: "எங்கள் இறைவா, நாங்கள் சிறு பிள்ளைகளாய் இருந்த போது எங்களின் பெற்றோர்கள் எப்படி எங்கள் மீது இரக்கம் காட்டினார்களோ, அதேபோல் எங்கள் பெற்றோர்களின் மீதும் நீ இரக்கம் காட்டுவாயாக" என்ற இந்த பிரார்த்தனையை தொடர்ந்து செய்து வர வேண்டுமென்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இரக்கம் எனற் வார்த்தைக்கே அர்த்தம் தெரியாதவர்களாய் நாமிருக்கும் போது பெற்றோர்களின் பெருமையை எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியம்?
நாம் குழந்தை பருவத்தில் இருக்கும் போது பாலூட்டிய தாய் தனக்கு பிடித்த உணவு தன் பிள்ளைக்கு ஒத்துக் கொள்ளுமா? என யோசித்து பிள்ளைக்கு ஆகாது என தெரிந்ததும் ஆசைபட்ட உணவுகளை உண்ண மறுத்துவிடுகிறாள்.

கருவை வயிற்றில் சுமப்பதற்கு முன்பு வரை மிகவும் விரும்பி உண்ட உணவையெல்லாம் கருவை சுமந்ததற்குப் பின் விஷமாக்கி கொண்டது யாருக்காக? எதற்காக?
எல்லாம் பிள்ளைகளாய் இருந்த நமக்காகத்தானே, நமது ஆரோக்கியத்திற்காகத் தானே, அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பெற்றெடுத்த அன்னையவளை வயதான காலத்தில் அரவணைத்துக் கொள்ளாமல் முதியோர் இல்லங்களிலும், அனாதை விடுதிகளிலும் அடைக்கலம் தேடிக்கொள்ள வைப்பது எவ்வளவு பெரிய கொடுமை!

ஒரு முறை மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்து கொண்டிருந்த வயதான மூதாட்டி ஒருவரை சந்தித்தேன். அவர் என்னிடம் யாசகம் கேட்ட போது நடந்த சந்திப்பு தான் அது! அவர் எதிர்பார்த்ததை நான் கொடுத்துவிட்டு, ஏம்மா இந்த வயதான காலத்தில் இப்படி திரிகிறீர்களே, உங்களுக்கு குடும்பம், பிள்ளைகள் இல்லையா? என பரிவோடு கேட்டதும் தான் தாமதம் பொலபொலவென வடிந்த கண்ணீர் துளிகளை துடைத்து கொண்டே கூறினார், தம்பி, எனக்கு நான்கு ஆண், இரண்டு பெண் என ஆறு குழந்தைகள் இருக்கிறார்கள்.

என் பிள்ளைகள் சிறுவர்களாயிருக்கும் போதே எனது குடிகார கணவனின் இம்சை தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் பிள்ளைகளுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு நானும் விஷம் சாப்பிட்டு செத்துவிடலாம் என முடிவு செய்து கணவன் வீடு வராத ஒரு இரவில் திட்டமிட்டபடி விஷத்தை சாதத்தில் கலந்து பிள்ளைகளுக்கு ஊட்ட முயன்ற போது அவர்களின் பிஞ்சு முகத்தை பார்த்ததும் கைகள் நடுங்கி விஷ சாதத்தை தூக்கியெறிந்து விட்டு என் பிள்ளைகளை கட்டிப்பிடித்து கதறினேன்.

ஒவ்வொரு பத்து மாதமும் என் பிள்ளைகளை சுமந்த கஷ்டம் எனக்குத் தானே, தெரியும்! குடிகார கணவனால், கைவிடப்பட்ட நான் வைராக்கியமாய் வீடு வீடாக போய் பத்து பாத்திரம் கழுவி கொடுத்து அதன் மூலம் வரும் சொற்ப வருவாயில் என் ஆறு பிள்ளைகளையும் வளர்த்தேன்.

ஒரு கட்டத்தில் இட்லி, வடை செய்து தெரு தெருவாய் கூவி கூவி விற்றும் என் பிள்ளைகளை வளர்த்தேன். என் மூத்த மகன் கல்லூரி படிப்பை முடிக்கும் வரைக்கும் எனது இட்லி, வடை வியாபாரம் தொடர்ந்தது.

படிப்பில் என் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள். அதனால் கவர்மென்ட் ஸ்காலர்ஷிப் மூலமே மேற்படிப்பும் என் பிள்ளைகளுக்கு இலவசமாக கிடைத்தது. பிறகு எல்லாரும் படித்து முடித்து வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் அவரவர்களுக்குரிய துணையை தேடி திருமணமும் முடித்துக் கொடுத்து அவரவர் தனி குடித்தனம் போய்விட்டனர்.

நான் மட்டும் என் மூத்த மகன் வீட்டிலேயே இருந்து கொண்டேன். என் மகன் செய்யும் ஊதாரித்தனமான செலவுகளை சுட்டிக்காட்டி அவ்வவ்போது பழசை நினைவு படுத்தி புத்திமதி கூறுவேன். இது பிடிக்காத அவன் என்னை வீட்டை விட்டு துரத்திவிட்டேன். பிறகு வாரம் ஒரு வீடு என மற்ற பிள்ளைகளை தேடி போக ஆரம்பித்தேன்.

எனது கடைசி காலத்தில் என்னை சோற்றுக்கு வழியில்லாத பிச்சைக்காரியை போலத்தான் நினைத்தார்களே தவிர பெற்றெடுத்தவள் என்றோ அல்லது நமக்கு மறுபிறவி கொடுத்தவள் என்றோ நினைக்கவில்லை. (சாதத்தில் விஷம் கலந்து கொல்ல முயற்சித்தது என் பிள்ளைகளுக்கு தெரியாது) பெற்ற பிள்ளைகளோ என்னை பிச்சைக்காரியை போல் பார்க்கும் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாமல் தான் முகம் தெரியாத ஊரில் இன்று உண்மையான பிச்சைக்காரியாக உன் முன் நிற்கிறேன் என அந்த மூதாட்டி கூறிய போது உழைத்து தேய்ந்து போயிருந்த அவரது கைகளை பார்த்ததும் எனக்குள் பீறிட்டு கிளம்பிய அழுகையை அடக்க முடியாமலும், அந்தம்மாவுக்கு ஆறுதல் சொல்ல முடியாமலும், அநியாயமாக இந்தம்மா பெற்று ஆறு பிள்ளைகளும் நரகத்திற்குரியவர்களாகி விடுவார்களோ என்ற கவலையாலும், நன்றி மறந்த அந்த பிள்ளைகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோபத்துடனுமே அந்தம்மாவை விட்டு விலகினேன்.

பெற்றோர்களுக்கெதிரான சமூக கொடுமைகள் தலைவிரித்தாடுவதற்கு நன்றி கொன்றல் ஒன்றே தான் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. பிள்ளைகளாய் இருப்போரே! நாளை நமக்கும் அந்த நிலை வருவதற்கு முன் நமது பெற்றோர்களை பேணுவோம். அவர்களது மன திருப்தியை பெற்றுக் கொள்வோம்!

எனக்குள் பீறிட்டு கிளம்பிய அழுகையை அடக்க முடியாமலும், அந்தம்மாவுக்கு ஆறுதல் சொல்ல முடியாமலும், அநியாயமாக இந்தம்மா பெற்று ஆறு பிள்ளைகளும் நரகத்திற்குரியவர்களாகி விடுவார்களோ என்ற கவலையாலும், நன்றி மறந்த அந்த பிள்ளைகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோபத்துடனுமே அந்தம்மாவை விட்டு விலகினேன்.

பெற்றோர்களுக்கெதிரான சமூக கொடுமைகள் தலைவிரித்தாடுவதற்கு நன்றி கொன்றல் ஒன்றே தான் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. பிள்ளைகளாய் இருப்போரே! நாளை நமக்கும் அந்த நிலை வருவதற்கு முன் நமது பெற்றோர்களை பேணுவோம். அவர்களது மன திருப்தியை பெற்றுக் கொள்வோம்!

திங்கள், 31 ஆகஸ்ட், 2009

பட்டிணி தியாகம்!

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்;

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி(ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், 'எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை" என்று பதிலளித்தார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), 'இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?.".. அல்லது 'இவருக்கு விருந்தளிப்பவர் யார்?.".. என்று கேட்டார்கள்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'நான் (விருந்தளிக்கிறேன்)" என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார். (மனைவியிடம்) 'இறைத்தூதர்(ஸல்) அவர்களின் விருந்தாளியைக் கண்ணியப்படுத்து" என்று கூறினார். அதற்கு அவரின் மனைவி, 'நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை" என்று கூறினார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், 'உன் (குடும்பத்திற்கான) உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு விளக்கை ஏற்றி (விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து) விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு" என்று கூறினார்.

அவ்வாறே அவரின் மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றிவிட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்துவிட்டார். பிறகு விளக்கைச்சரி செய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்துவிட்டார். பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றார். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு சிரித்துக் கொண்டான் அல்லது வியப்படைந்தான்" என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ், 'தமக்கே தேவை இருந்தும் , தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், தம் உள்ளத்தின் கருமித்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களே வெற்றியாளர்கள்" என்றும் (திருக்குர்ஆன் 59:9ம்) வசனத்தை அருளினான்.

ஆதாரம் புஹாரி எண் 3798

இந்த பொன்மொழியில், நபி[ஸல்] அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க விருந்தாளியை அழைத்துச்சென்ற அன்சாரித்தோழரின் வறுமை நிலை பாரீர். அவரது வீட்டில் குழந்தைகளுக்கான உணவு மட்டுமே உள்ளது. அன்சாரி தோழருக்கும் அவரது மனைவிக்கும் கூட அங்கே உணவில்லை. இந்த நிலையிலும், தனது குழந்தைகளை தூங்கவைத்து விட்டு குழந்தைகளின் உணவை அந்த விருந்தினருக்கு வழங்கி தனது வள்ளல் தன்மையை காட்டிய அந்த அன்சாரித்தோழர் அவர்களின் வாழ்க்கையே தியாகமாக இருந்தது.

அதனால் அல்லாஹ் ஒரு வசனத்தையே இறக்கி இந்த தோழரின் ஈகை குணத்தை கண்ணியப்படுத்தி, இத்தகைய குணமுடையவரே வெற்றியாளர்கள் என்று தன் அருள்மறையில் கூறும் அளவுக்கு அன்சாரித்தோழரின் வாழ்க்கை அமைந்ததை பார்த்து உள்ளபடியே இத்தகைய நற்குணத்தை நாமும் பெறவேண்டும் என்ற சிந்தனை நம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும்.

ஆனால் இன்று நடப்பதென்ன? நமது வீட்டிற்கு நமது உறவினர்கள் யாரேனும் வந்துவிட்டால் அவனை பார்த்த மாத்திரமே 'வந்துட்டான்யா வந்துட்டான்யா' என்று மனதில் கருவும் எத்துணையோ பேரை பார்க்கிறோம். வந்த விருந்தாளியை வேண்டா வெறுப்பாக கவனிப்பதையும் 'எப்படா எடத்த காலி பன்னுவான்' என்று நினைப்பவர்களையும் பார்க்கிறோம். கணவனின் உறவினர்கள் வந்துவிட்டால் மனைவிக்கு எரிகிறது.

மனைவியின் உறவினர்கள் வந்துவிட்டால் கணவனுக்குஎரிகிறது. இவ்வாறான மன நிலையுள்ளவர்கள் இன்றைய நவீன உலகில் இருக்க, அன்றோ யார் என்றே தெரியாத ஒருவருக்கு விருந்தளித்து கண்ணியப்படுத்திய அன்சாரித்தோழரின் வாழ்வில் நமக்கு மிகப்பெரிய படிப்பினை உள்ளது.

நன்றி:சஹாபாக்களின் வாழ்வினிலே!

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

நோன்பாளிகள் கவனத்திற்கு…

நோன்பு என்றால் என்ன?

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி உணவு, குடிபானம், உடலுறவு போன்றவற்றிலிருந்து விலகியிருத்தலாகும்.

நோன்பின் நேரம்: -

சுப்ஹுக்கு அதான் சொன்னது முதல் சூரியன் மறையும் வரையாகும்.

நோன்பின் சட்டம்: -

ரமலான் நோன்பானது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்று என்பதால் புத்தி சுவாதீனமுள்ள, பருவமடைந்த, நோன்பு நோற்பதற்கு முடியுமான ஆண்-பெண் அனைவர் மீதும் கடமையாகும்.

நிய்யத்து வைத்தல்: -

எல்லாச் செயல்களும் எண்ணத்(நிய்யத்)தின் அடிப்படையிலே அமையும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி)நிய்யத் என்றால் மனதால் எண்ணுதல் என்பது தான் பொருளாகும். இன்று மக்கள் செய்வது போன்று வாயால் மொழிவது கிடையாது.

நிய்யத் எப்போது வைக்க வேண்டும்?

கடமையான நோன்பு நோற்பவர், சுப்ஹுக்கு முன்பே இன்று நோன்பு நோற்கிறேன் என்று மனதில் உறுதி கொள்ள வேண்டும்.நபிலான நோன்பாக இருந்தால் காலையில் தாமதித்துக் கூட நோன்பை மனதில் நினைத்து நோன்பிருக்க முடியும். அதற்கு ஹதீஸில் அனுமதி உள்ளது. அதே நேரம் சுப்ஹிலிருந்து ஏதும் உண்ணாமலோ, பருகாமலோ இருந்திருக்க வேண்டும்.

‘ஒரு நாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலையில் என்னிடம் வந்து, உண்பதற்கு ஏதேனும் உள்ளதா? எனக் கேட்டார்கள். நாங்கள் இல்லை என்றோம். அப்படியாயின் நான் இன்று நோன்பு வைத்துக் கொள்கிறேன் எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), (ஆதாரம்: நஸாயீ)

ஸஹர் உணவு: -

நீங்கள் ஸஹர் செய்யுங்கள்: ஏனெனில் அந்நேரத்தில் பரக்கத் உள்ளது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி)
ஸஹர் உணவை தாமதப்படுத்தி, நோன்பு திறப்பதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் இருக்கிறார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: அஹ்மத்)ஸஹர் செய்யும் விசயத்தில் நம் நாடுகளில் சில தவறுகள் நடைபெறுகின்றன.

உதாரணமாக, மூன்று மணிக்கே சாப்பிட்டு விட்டு சுப்ஹுத் தொழுகை கூட இல்லாமல் தூங்கி விடுகின்றனர். இது உண்மையில் மேலுள்ள சுன்னாவை விடுவதால் ஏற்படும் தவறாகும். ஏனென்றால் சுப்ஹுக்கு அதான் கூறப்படும் வரை உண்ணலாம் பருகலாம்.அதே போல் நோன்பு திறப்பதற்கு 10 நிமிடங்கள் தாமதிப்பதும் சுன்னாவுக்கு முரணனதாகும்.

நோன்பு திறக்கும் போது: -

நோன்பு திறந்த பின்னர், ‘தஹபள்ளமஉ வப்தல்லதில் உருகு வதபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’ என்று கூற வேண்டும்.பொருள்: தாகம் தீர்ந்தது, நரம்புகள் குளிர்ந்தன அல்லாஹ் நாடினால் கூலி கிடைத்து விடும். (ஆதாரம்: அபூதாவுத்)

நோன்பு திறக்கச் செய்தவருக்காக செய்யும் பிரார்த்தனை: -‘அஃப்தர இந்தகுமுஸ் ஸாயிமுன் வஅகல தஆமகுமுல் அப்ரார் வஸல்லத் அலைகுமுல் மலாயிகா’பொருள்: உங்களிடம் நோன்பாளிகள் நோன்பு திறந்தனர், நல்லவர்கள் உங்கள் ஆகாரங்களை உண்டனர், மலக்குகள் உங்களுக்காக (அல்லாஹ்விடம்) பிரார்த்தித்தனர். ஆதாரம்: அபூதாவுத்.

நோன்பாளிகள் கவனத்திற்கு:

நமது நோன்புகள் ஏற்றுக்கொள்ளப்படவேண்டுமா?பொய்யுரைப்பது, புறம் பேசுவது, கோள் சொல்வது, பழி சுமத்துவது… போன்ற அனைத்து தீமையான காரியங்களை விட்டும் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்.யார் பொய்யான பேச்சுக்களையும், அவற்றை நடைமுறைபடுத்துவதையும் விட்டுவிடாமல் அவர் பசித்திருப்பதோ, அல்லது தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி, அஹ்மத், திர்மிதி)
நாம் நல்லவர்களாக வாழ்வதற்காக அல்லாஹ் நமக்கு வருடா வருடம் தரும் ஒருமாத பயிற்சியாகும் இந்த ரமலான் மாதம். ரமலானைப் போலவே ஏனைய காலங்களிலும் பேணுதலுடன் வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் செய்வானாக!

நோன்பை விட அனுமதியுள்ளவர்கள்: -

1) தள்ளாத வயதுடையவர்

2) தீராத நோயுள்ளவர்விடுபடும் ஒவ்வொரு நோன்புக்கும் பரிகாரமாக ஒரு ஏழை வீதம் உணவளிக்க வேண்டும்.

நோன்பை தற்காலிகமாக விட அனுமதியுள்ளவர்கள்: -

1) பயணிகள்

2) மாதவிடாய் மற்றும் பிள்ளைப் பேற்று (நிபாஸ்) விலக்குடையோர்

3) கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்

4) தற்காலிக நோயாளிகளஇவர்களுக்கு நோன்பை விட அனுமதி உண்டு. இருந்தாலும் பின்னர் விடுபட்ட நோன்புகளைக் கணக்கிட்டு கழாச் செய்ய வேண்டும்.

நோன்பை முறிக்கக் கூடியவைகள்: -

1) வேண்டுமென்றே உண்ணுதல், பருகுதல்

2) நோன்புடன் பகலில் உடலுறவு கொள்ளுதல் (இவர்களுடைய நோன்பு பாலாகிவிடும்.
குற்றப்பரிகாரமாக ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். முடியாத போது தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். இதுவும் முடியாத போது அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்)

3) மாதவிடாய் அல்லது மகப்பேறு இரத்தம் வெளியாகுதல்

4) வேண்டுமென்றே வாந்தி எடுத்தல் (தானாக வெளியேறினால் நோன்பு முறிய மாட்டாது)

5) மதம் மாறுதல் (அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாகவும்)

கீழுள்ள விசயங்களால் நோன்பு முறியாது: –

1) மறந்த நிலையில் உண்ணுதல், பருகுதல் (புகாரி)

2) குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்தல் (புகாரி)

3) கடுமையான வெப்பத்தில் குளித்தல் (அஹ்மத், அபூதாவுத்)

4) நறுமணம் வாசனை சோப்புகளை உபயோகித்தல்

5) பற்பசை உபயோகித்து பல் துலக்குதல்

6) வாய் மூக்கு வழியாக இரத்தம் வெளியாகுதல்

7) இரத்தம் எடுத்தல், நோய் காரணமாக அவசியமேற்படின் ஊசி மருந்தேற்றல் போன்றவை.
(சக்திக்காக ஊசி வழியாக ஏற்றப்படும் குளுகோஸ் போன்ற வற்றினால் நோன்பு முறிந்து விடும்)‘PRIVATE “TYPE=PICT;ALT=8)”நோன்புடன் சுய நாட்டமின்றி ஸ்கலிதமாகுதல்9) தொண்டைக் குழியை அடையாதபடி உணவை ருசி பார்த்தலஇது போன்ற விடயங்களால் நோன்பு பாதிக்கப்படாது என்பதனை கவனத்தில் கொள்க.

பின்வரும் தினங்களில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்: -

1) ஷவ்வால் மாத ஆறு நாட்கள்

2) ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழன்

3) ஒவ்வொரு மாதமும் அய்யாமுத் தஷ்ரீக் எனப்படும் 13, 14, 15 ஆகிய நாட்கள்

4) துல்-ஹஜ் மாதம் ஒன்பதாம் நாளாகிய அறபா தினம்

5) முஹர்ரம் மாதம் 9, 10 ம் நாட்களில் நோற்கப்படும் ஆஷுரா எனப்படும் நோன்புகள.

நோன்பு நோற்பதற்கு தடை செய்யப்பட்ட நாட்கள்: -

1) சந்தேகத்திற்குறிய நாள் (ஷஃபான் 30 ம் நாளன்று சந்தேகத்துடன் நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது)

2) நோன்பு, ஹஜ் பெருநாள் தினங்கள்

3) அய்யாமுத் தஷ்ரீக் எனப்படும் 11, 12, 13 ம் நாட்கள் (தமத்துஃ மற்றும் கிரான் வகையான ஹஜ் செய்பவர்களுக்கு பிராணி அறுத்துப் பலியிட வசதியில்லாவிட்டால் இவர்கள் அத்தினத்தில் நோன்பு நோற்பர்)

4) வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்றல்

5) பெண்கள் கணவனது அனுமதியின்று நபிலான நோன்புகளை நோற்றல்.மேற்கூறிய சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்பது தடை செய்யப்பட் டுள்ளது.மேலே முக்கியச் செய்திகள் மட்டும் தரப்பட்டுள்ளன. மேலதிக விளக்கங்கள் தேவைப்படுவோர் மார்க்க அறிஞர்களை அணுகவும்.

யா அல்லாஹ்!

உண்மையான விசுவாசத்தோடும், உன்னிடம் நன்மையை எதிர் பார்த்தவர்களாகவும் இந்த ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று பாவக்கறைகளிலிருந்து நீங்கியவர்களாக மாறுவதற்கு நீயே எங்கள் அனைவருக்கும் அருள் பொழிவாயாக!

நன்றி : சுவனதேன்றல்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

பள்ளிவாசல் ‘மினாரா’ பேசுகிறேன்

ஆக்கம்: மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி)

என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே! என்னைப் பற்றிய அறிமுகம் அவசியமில்லையென்றாலும் சிலவற்றை கூறாமல் இருக்க முடியாது. என்னைத் தெரியாதவர்கள் உலகில் யாருமே இருக்க வாய்ப்பில்லை. அந்தளவுக்கு நான் மிகவும் பிரபலமானவன். எனது கம்பீரத்திற்கு இணையாக உலகில் வேறு எதையும் நீங்கள் கண்டிருக்கமாட்டீர்கள் எனபதை தைரியமாக சொல்வேன்!

என்னடா இது, மினாரா ஆணவப் போதையில் உளறுகிறது என நீங்கள் நினைத்தாலும் எனக்கு கவலையில்லை. நீங்கள் தரையில் நின்று கொண்டு எனது உச்சந்தலையை பார்த்தால் நான் வானத்தை உரசிக்கொண்டு நிற்பது போன்றதொரு மனப்பிரம்மை உங்களுக்குத் தோன்றும். நான் வானத்தை உரசி நிற்கவில்லையென்றாலும், வானத்தின் எல்லாப் பகுதிகளிலும் எனது அசைவுகள் எதிரொலித்துக் கொண்டேயிருக்கும்.

இவ்வளவு சிறப்புகளும் எனக்கு எங்கிருந்து வந்த்தென ஆச்சர்யப்பட வேண்டாம். உங்களையும், என்னையும் படைத்த இறைவனை வணங்குவதற்கு வாருங்கள் என ‘அதான்’ என்னும் பாங்கின் மூலம் எல்லோரையும் அழைக்கக்கூடிய பணியை நான் தான் செய்து வருகிறேன். அதனால் தான் இறைவன் எனக்கு இவ்வளவு பெரிய அந்தஸ்தை தந்துள்ளான்.

சுவனத்தின் தோழர்களில் ஒருவரான ஹழ்ரத் பிலால் ( ரலி ) அவர்களே, என் முதுகில் ஏறி நின்று பாங்கு சொன்னதால் இன்னும் எனக்கு பெருமை கூடிவிட்ட்து. நான் கொடுக்கும் சப்தம் வான் மண்டலம் முழுவதும் எதிரொலிப்பது உங்களுக்குத் தெரியுமா?. தெரியாவிட்டால் அறிவியல் ஆய்வாளர் ஆம்ஸ்ட்ராங்கை கேட்டுப் பாருங்கள். அவர் ஒரு முறை சந்திரமண்டலத்தில் கால் வைத்த போது எனது சப்தத்தை கேட்டு திடுக்கிட்டவராக பூமியில் சொல்லப்படும் பாங்கின் ஓசை சந்திர மண்டலம் வரைக்கும் எதிரொலிக்கிறதே என வியப்படைந்தவராக பூமிக்கு திரும்பியதும் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்.

இஸ்லாத்தின் தீர்க்க தரிசியாம் நமதருமை நாயகம் ( ஸல் ) அவர்களுக்கு அடுத்தபடியா முதன் முதலில் சந்திர மண்டலத்தில் கால்பதித்த சிறப்பையும் பெற்றவர்தான் ஆம்ஸ்ட்ராங். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்கு நான் கொடுத்த சப்தமும் ஒரு காரணம் எனபதை நினைக்கும் போதெல்லாம் எனக்குள் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும். உலகம் எப்போது அழியுமோ? அப்போது தான் எனக்கும் மரணம் நிகழும். இடையிடையே நான் நோய்வாய்ப்பட்டுவிட்டால் (பழைய மினாராகிவிட்டால்) என்னை குணப்படுத்தும் வகையிலேயே இடித்துவிட்டு மீண்டும் அதே இட்த்திலேயே உயிருடன் எழுப்பி விடுவார்கள். அப்போது சில அடிகள் நான் வளர்ந்துமிருப்பேன்.

இப்படி என் சிறப்பைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம். என்னை ஒரு கல்லாக பார்ப்பவர்களுக்கு எனது வரலாறு தெரியாது!. இன்னொரு கோணத்தில் பார்த்தால் நானும் ஒரு வகையில் தியாகி தான். உங்களை இறையாடியார்களாக மாற்றும் மிகப்பெரிய பொறுப்பை நான் செய்து வந்தாலும் உலக முடிவிற்குப் பிறகு நீங்களெல்லாம் மீண்டும் உயிர் கொடுக்கப்படுவீர்கள். ஆனால் நான் உயிர் கொடுக்கப்படாமலேயே போய் விடுவேன்.

எனது அழைப்பை செவிமடுத்து ஐந்து வேளை தொழுகையையும் இமாம் ஜமாஅத்துடன் தொழுதுவரும் நீங்கள் நல்லோர்களாகும் பட்சத்தில் சுவர்க்கம் சென்று விடுவீர்கள். ஆனால் நான் எதுவுமே இல்லாமல் நிராதரவற்றவனாகிவிடுவேன்.

ஒருவகையில் உலகம் அழியும் வரைக்கும் நான் மட்டுமே நீண்ட ஆயுளுடன் வாழ்வேன் எனபதை நினைக்கும் போது மனதிற்கு மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாகவே உள்ளது. என் இனிய சொந்தங்களே, எவ்வளவு தான் கஷடப்பட்டாலும் நல்ல விஷயங்களுக்கு துணை நின்றாலும் மண்ணில் உருவான எனது இறுதி முடிவு சல்லிக்காசுக்கு கூட தேறாது!. மறுமையில் மண்ணிற்கு மதிப்பில்லை என்பதை நன்கறிவேன். எனக்குத் தெரிந்த இந்த விஷயம் கூட அறிவுள்ள உங்களுக்குத் தெரியாமல் போனதேன்?. அதனால் தானே ஒரு சாண் அளவானாலும் அடுத்தவரின் இடத்தை (நிலத்தை) அபகரித்துக் கொள்ளத் துடிக்கிறீர்கள்.

எனதருமை நண்பா!. ஓ ……………காதர் பாய் உங்களைத்தான் கூப்பிடுகிறேன் என்ன சௌக்யமா இருக்கீங்களா!. அடேங்கப்பா போன வருஷம் ரமலானில் பார்த்தது. அந்த வருட பெருநாள் தொழுகைக்குப்பின் இப்போதுதான் உங்களை பார்க்க முடிகிறது. அதுவும் நான் பாங்கு சொல்வதற்கு முன்பே பள்ளிக்கு வந்து விட்டீர்களே, எதுவும் விசேஷமா? என நான் கேட்டு முடிப்பதற்குள் காதர் பாய்க்கு கோபத்தில் மூக்கு வியர்த்து விட்டது.

ஓ… அறிவு கெட்ட மினாராவே, நான் போன வருஷ ரம்ஜான் பெருநாள் தொழுகைக்குப் பின் நீ இருக்கும் திசை பக்கமே வரவில்லை என்றாயே?. எவ்வளவு பெரிய பொய்யை சொல்கிறாய்!. அதற்கடுத்து வந்த பக்ரீத் பெருநாள் தொழுகைக்கு நான் வந்ததை நீ மறந்து விட்டாயா?.

நான் எப்போதும் வளமையாக வருடத்தின் இரண்டு பெருநாள் தொழுகைக்கும் ரமலானின் முழுமாத இரவு தொழுகைக்கும் விசேஷமாக பள்ளிக்கு வந்திடுவேன் என்பதை கூடவா மறந்து விட்டாய்?. நோன்பு மாத்த்தில் உன் குரல் கேட்பதற்கு முன்பே நான் பள்ளிக்குள் நுழைந்தால் தானே, முதல் வரிசையில் நின்று தொழ வாய்ப்பு கிடைக்கும் என ( NON STOP ) இடை நிறுத்தமில்லாமல் தொடர்ந்து கொட்டி தீர்த்து விட்டார் காதர் பாய்!.

ஆனாலும் நான் விடவில்லை ஏன் காதர்பாய் வருஷம் முழுவதும் ஒரு வக்து தொழுகையை கூட விடாமல் தொடர்ந்து இமாம் ஜமாஅத்தின் முதல் வரிசையில் நின்று தொழுதுவரும் நல்லோர்களுக்கு சங்கை மிகும் ரமலானில் மட்டும் முதல் வரிசையில் நின்று தொழ முடியாமல் போகும் வகையில் சீசன் தொழுகையாளியான நீங்கள் இடையூறு செய்வது எந்த வகையில் நியாயம்? என நானும் விடாமல் துரத்தினேன்.

உங்களுடன் போன வருஷம் நோன்புக்கு மட்டும் தொழ வந்த உங்கள் கூட்டாளி கனிபாய் எங்கே? வெளிநாடு போய்விட்டாரா? இந்தக் கேள்வியை நான் கேட்ட்தும் காதர் பாயின் முகம் வாடிவிட்டது. என் நண்பர் கடந்த ஷஃபான் மாதம் மௌத்தாகிவிட்டார் எனக் கூறி கண் கலங்கினார். பரவாயில்லை காதர்பாய் உங்கள் நண்பரின் மறைவு உங்களுக்கு பேரிழப்புதான் என்றாலும் சராசரியாக நாளொன்றுக்கு ஒரு மய்யித்து வீதம் நான் பார்த்து வருவதால் எனக்கு அதில் வருத்தம் எதுவும் கிடையாது!.

ஆனாலும் சீசன் தொழுகையாளி என்ற குற்றப் பின்னணியுடன் மௌத்தாகிவிட்டாரே என்ற அனுதாபம் மட்டுமே எனக்குள் வந்து போகிறது. கடந்த வருட ரமலானில் நான் பார்த்த எத்தனையோ நபர்களை இவ்வருட ரமலானில் பார்க்க முடியவில்லை காதர்பாய்!.

ஏதோ உங்களைப் போன்ற ஒரு சில சீசன் நேர தொழுகையாளிகளை மட்டுமே இவ்வருட ரமலானில் காண முடிகிறது!

கல்லாக நிற்கும் நானே எனது இறைவனுக்கும் கடமையை பேணுதலோடு செய்து வரும் போது மனிதனாய் இருக்கும் நீங்கள் சீசன் காலத்து தொழுகையாளியாய் (வேடந்தாங்கல் பறவை போல் ) இருப்பது வெட்கம் இல்லையா? என்னை வணங்குவதற்கேயன்றி உம்மை படைக்கவில்லையென ஓராயிரம் முறைக்கு மேல் கூறியுள்ள இறைவனின் கூற்றுகள் உமது செவிகளுக்கு உறைக்கவில்லையா?

ஆட்சியாளர்களின் பார்வையில் நிரந்தர ஊழியர்களும், தற்கால பணியாளர்களும் எப்படி சம அந்தஸ்தை பெற முடியாதோ? அதே போலத்தான் இறைவனின் பார்வையிலும் நிரந்தர தொழுகையாளிகளும், சீசன் காலத்து தொழுகையாளிகளும் சமநிலையை அடைய மாட்டார்கள்.

கல்லும், மண்ணுமாகவுமிருக்கிற நானே இவ்வளவு கேவலமாக பேசியதற்குப் பிறகும் ரோசமுள்ள மனிதர்களான நீங்கள் இவ்வருட நோன்பிலிருந்தாவது நிரந்தரமான தொழுகையாளிகளாய் வாழும் காலம் வரை தொழக்கூடிய நிலைக்கு உங்களை மாற்றிக் கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். அடிக்க, அடிக்க அம்மிக் கல்லும் நகரும் என்பது போல நானும் தொடர்ந்து ஐந்து நேரமும் உங்களை தொழுகைக்கு வாருங்கள் என அழைத்துக் கொண்டேயிருப்பேன்! நீங்கள் தொழ வர வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, உங்களுக்கு தொழ வைக்க வேண்டும் என்பதற்காக அல்ல!.

( மௌலவி ஜஹாங்கீர் அரூஸி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர். தற்பொழுது துபையில் பணியாற்றி வருகிறார். தொடர்பு எண் : 050 795 9960. மின்னஞ்சல்: sjaroosi@yahoo.com

நேர் வழிகண்ட சகோதரி!

சத்திய மார்க்கத்தைத் தேடிய பயணத்தில் வென்ற டாக்டர் மதுமிதா மிஷ்ரா!

ஒரு ஹிந்து பிராமணப் பெண்ணாக, ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த டாக்டர் மதுமிதா மிஷ்ரா, இன்று தனது முழுக் குடும்பத்தையும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே ஒரு காரணத்திற்காகப் பகைத்துக் கொண்டுள்ளார். அந்த ஒரு காரணத்திற்காகவே உறவுகளை விடுத்து ஒதுங்கி, தன்னந்தனியாக வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்.

ஆம், நியூ டெல்லியின் லோக் நாயக் ஜெய் ப்ரகாஷ் மருத்துமனையில் சீனியர் டாக்டராகப் பணி புரிந்து வரும் டாக்டர் மதுமிதா, தடைகள் பலவற்றை உடைத்தெறிந்து இஸ்லாத்தைத் தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார், அல்ஹம்து லில்லாஹ்!

நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூலகங்களுக்குச் சென்று புத்தகங்கள் வாசிப்பதும் இணையத்தில் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடுவதும் டாக்டர் மதுமிதாவின் வழக்கம். பணியின் காரணமாக, தன்னுடைய சகோதரருடன் நொய்டா நகரில் இவரும் மருத்துவரான கணவர் கொல்கத்தாவிலும் சிறிது காலம் பிரிந்து வசிக்க வேண்டிய சூழலில் ஒரு நாள் மிக யதார்த்தமாக இணையத் தளங்களை உலா வந்து கொண்டிருந்த டாக்டர் மதுமிதாவின் கண்ணில் ஆங்கில மொழியாக்கக் குர்ஆன் பிரதியொன்று எதேச்சையாகப் பட்டது.

இதைப் பற்றி மதுமிதா கூறுகையில் "அதிக மதக் கட்டுப்பாடுகளைக் கொண்ட சூழலில் நான் வளரவில்லை. ஆனாலும் எதேச்சையாகக் குர்ஆன் ஆங்கில மொழியாக்கத்தை வாசித்த எனக்கு புதியதொரு விஷயமான இஸ்லாத்தைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. என்னுடைய MD பட்டப்படிப்பினை முடித்த பிறகு எனக்குக் கிடைத்த நேரத்திலெல்லாம் இணைய தளத்தில் இஸ்லாத்தைப் பற்றி தேட ஆரம்பித்தேன்" என்றார்.

ஆர்வமிகுதியில் இஸ்லாம் தொடர்பான நிறைய புத்தகங்களையும் இணைய தளங்களையும் தொடர்ந்து வாசித்து வந்த மதுமிதா, தன் மனதில் இஸ்லாம் பற்றிய ஓர் ஐயத்தை ஆர்குட் இணைய தளத்தில் "இஸ்லாம் & முஸ்லிம்" என்ற தலைப்புள்ள கலந்துரையாடலில் சில கேள்விகளை முன் வைத்தார். அதற்கு ஃபெரோஸ் ஹுசைன் என்பவர் தொடர்ந்து பதில்கள் அளித்து வந்தாலும் அவற்றில் மதுமிதாவுக்கு முழு திருப்தி ஏற்படவில்லை.

திருப்தி அடையாத சூழலிலேயே அடுத்த கேள்வியான "என்னை நாடி வரும் நோயாளிகளுக்கு திருப்தியளிக்கும்படி நான் மருத்துவம் செய்வது அல்லாஹ்விற்கு சேவகம் செய்வதாகுமா?" என்பதை முன் வைத்தார்.

இக்கேள்விக்கு பெங்களூருவில் IBM நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரியும் முகம் தெரியாத முஹம்மத் யாஸீன் என்பவர் முழுமையான விளக்கங்களை எழுதினார்.

மிகவும் திருப்தியைப் பெற்றுத் தந்த அந்த பதிலைத் தொடர்ந்து, தன் மனதில் இஸ்லாம் பற்றி எஞ்சியிருந்த கேள்விகள் அடுக்கடுக்காய் எழ, அவற்றைத் தொடர்ந்து எழுப்பினார் மதுமிதா. இறைமறை/ நபிமொழியின் வெளிச்சத்தில் அவற்றிற்குத் துல்லியமான விடைகள் கிடைத்து விட்ட திருப்தியில் மதுமிதா மனதில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. மத ரீதியிலான தடைகள், பல தயக்கங்கள் ஆகியற்றை உதறித் தள்ளி விட்டு, பதில் அளித்த முஹம்மத் யாஸீனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி தமது மகிழ்ச்சியையும் நன்றிகளையும் வெளிப் படுத்திக் கொண்டார் மதுமிதா.

"மரணம் என்பது எப்போது வேண்டுமானாலும் நேர்ந்து விடும். இறப்பது எப்போது என்று தெரியாத சூழலில் உடனடியாகச் சத்திய மார்க்கத்தில் இணைந்து கொள்ளுங்கள்" என்ற முஹம்மத் யாஸீனின் வார்த்தைகள் சத்தியத்தைத் தேடி அலைந்த டாக்டர். மதுமிதாவின் மனதை அலைகழித்தது.

குர்ஆனின் வரிகளான சத்தியம் வெல்லும் என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது. அதிக காலம் எடுத்துவிட்ட போதிலும் இறுதியில் அசத்தியம் தோற்றது... சத்தியமே வென்றது" என்கிறார் டாக்டர் ஜைனப் (மதுமிதா மிஷ்ரா).

குழப்பங்கள் தெளிய சிறிது தனிமையை விரும்பிய மதுமிதா சில மாதங்களில் தமது வீட்டிலிருந்து வெளியேறி கரோல்பாக் பகுதியில் உள்ள ராமானுஜன் விருந்தினர் மாளிகைக்குக் குடியேறினார். விருந்தினர் மாளிகையில் இருந்து ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஒரு மருத்துவக் கல்லூரிக்கு பணி நிமித்தமாக அடிக்கடி வெகு தூரம் பயணிக்க நேர்ந்தது. பயணங்களில் நிறைய வாசிப்புகளும் சத்தியத்தைத் தேடிய சிந்தனைகளுமாகக் கழிந்தன.

மனம் ஓர் உண்மையைச் சுட்டெரித்ததன் காரணமாக, கடந்த செப்டம்பர் 3, 2007 அன்று திடீரென்று ராமானுஜன் விருந்தினர் மாளிகையை விட்டு வெளியேறினார். பெங்களூருவிற்கு விமானம் ஏறினார். ஷிஃபா ஹெல்த் ஃபவுண்டேஷன் எனும் அமைப்பின் கீழ் இயங்கும் 'ஜம்மியத்துல் முஹ்ஸினாத்' பெண்கள் கல்விக்கூடத்தின் படியேறி, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் (ஆனாலும் பெயரில் மாற்றம் உள்ளிட்ட பதிவுகளைச் செய்யவில்லை).

நான்கு நாட்களுக்கு பின்னர் இதனையறிந்த மதுமிதாவின் கணவரும் கண் மருத்துவருமான டாக்டர் சுபிஜே ஸின்ஹா, அருகிலுள்ள காவல் நிலையத்தில், "தன் மனைவியை பெங்களூருவைச் சேர்ந்த சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கடத்திச் சென்று விட்டதாக"ப் புகார் செய்தார்.

இதனைத் தொடர்ந்து டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு உடனடியாக பெங்களூருவைச் சேர்ந்த 32 வயதான முஹம்மத் யாஸீன் மற்றும் அவர் நண்பரான 31 வயதுடைய ஷாஜி யூஸுப் ஆகிய இரு மென்பொருள் பொறியாளர்களைக் கைது செய்தது. இவர்கள் இருவரும் டாக்டர் மதுமிதாவைக் கடத்தியதாகவும் பணயத் தொகை கேட்டு டாக்டர் மதுமிதா குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டதாகவும் அவ்விருவர் மீதும் குற்றம் சுமத்தப் பட்டது.

பெங்களூருவில் இருந்த டாக்டர் மதுமிதாவை மீட்க, பெண்கள் கல்விக்கூடத்துக்குள் திடீர் சோதனை என்ற பெயரில் புகுந்த காவல் துறையினர், மதுமிதாவின் கூக்குரலுக்குச் செவி சாய்க்காமல் பலவந்தமாக அவரை டெல்லிக்கு அழைத்து வந்தனர்.

மேற்கு பெனகலில் உள்ள துர்காபூர் வீட்டில் பல மாதங்கள் மதுமிதா சிறை வைக்கப்பட்டிருந்தார். ஆனாலும் அவரது இஸ்லாத்தைப் பற்றிய தேடல்களுக்கும் சிந்தனைகளுக்கும் சிறையிட யாராலும் முடியவில்லை. கடந்த வருடம் 2008 மார்ச் மாதம், தயக்கத் தளைகளை அறுத்தெறிந்து விட்டு, முழுமையாக இஸ்லாத்தைத் தழுவினார். மதுமிதா மிஷ்ரா என்ற தமது பெயரை மாற்றி சந்தோஷமாக ஜைனப் எனத் தேர்வு செய்து, இயற்கை மார்க்கத்திற்குத் திரும்பினார்.

"வெயிலில் இருந்து பாதுகாக்க சன் ஸ்க்ரீன் அணிந்து சருமத்தைப் பாதுகாப்பது போன்று ஹிஜாபில் எனது பெண்மைக்கு முழுப் பாதுகாப்பு உள்ளதென்று கருதுகிறேன். இஸ்லாத்தை ஏற்றதன் மூலம் என் குடும்பத்தினரை இழந்து விட்டேன். ஆனால் நான் நிர்க்கதியாய் இல்லை. நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளன. இஸ்லாத்தை அறியும் முயற்சியில் என்னுடைய முழு நேரத்தைச் செலவு செய்து வருகிறேன்" என்று உறுதியுடன் பேசுகிறார் டாக்டர் மதுமிதா என்ற ஜைனப்.
ஜம்மியத்துல் முஹ்ஸினாத் பெண்கள் கல்விக்கூடத்திலிருந்து தன்னைப் பலவந்தமாக அழைத்து வந்த பின்னர், "முஹம்மது யாஸீனும் ஷாஜி யூஸுஃபும் குற்றவாளிகள்" என்ற தொனியில் ஒரு புகார் எழுதித் தருமாறு டெல்லி காவல்துறையினர் தம்மைத் தொடர்ந்து வற்புறுத்தியதாகக் கூறுகிறார். தன்னை அவ்விருவரும் கடத்தியதாகவும் பிணைத் தொகையாகப் பத்து இலட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் வளைகுடா நாட்டில் பெரிய சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டியதாகவும் காவல்துறை போலியாகத் தயாரித்திருந்த அந்தப் புகாரில் அபாண்டமாக எழுதப் பட்டிருந்தது என்கிறார் டாக்டர் ஜைனப் (மதுமிதா மிஷ்ரா).

ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது முழுக்க முழுக்க தமது விருப்பத்தின் பெயரிலேயே என்றும் தம்மை எவரும் கட்டாயப் படுத்திடவில்லை என்றும் தெள்ளத் தெளிவாகவும் உறுதியாகவும் CRPC செக்க்ஷன் 164இன் படி எழுதிக் கையொப்பமிட்டுள்ளார் டாக்டர் ஜைனப். விசாரணையில் வெட்ட வெளிச்சமான பொய்களுக்குப் பின்பு, நீதிமன்ற உத்தரவின்படி வேறு வழியின்றி அப்பாவிகளான பொறியாளர்கள் இருவரையும் விடுதலை செய்துள்ளனர் டெல்லி காவல் துறையினர்.

"முஹம்மத் யாஸீனும் ஷாஜி யூஸுஃபும் கடந்த வாரம் விடுதலை செய்யப் பட்டது குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! குர்ஆனின் வரிகளான சத்தியம் வெல்லும் என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது. அதிக காலம் எடுத்துவிட்ட போதிலும் இறுதியில் அசத்தியம் தோற்றது... சத்தியமே வென்றது" என்கிறார் டாக்டர் ஜைனப் (மதுமிதா மிஷ்ரா).

இஸ்லாத்தைத் தாம் விருப்பப்பட்டு ஏற்ற ஒரே காரணத்துக்காக டெல்லி காவல்துறையின் பிரத்யேக சிறைச்சாலைக்கும் விசாரணை அறைகளுக்கும் நீதி மன்றங்களுக்கும், தான் அலைக்கழிக்கப் பட்டதை நினைவு கூர்கிறார் மதுமிதா.

கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்திய கடந்த இரு வருடங்களைத் தாம் மறக்க விரும்புவதாகக் கூறுகிறார் டாக்டர் ஜைனப். "மன்னிப்பதை இஸ்லாம் போதிக்கிறது. அபாண்ட பழிகளைச் சுமத்தி இரு அப்பாவிகளின் குடும்பத்தினரை அவதிக்குள்ளாக்கிய என்னுடைய மாஜி கணவரையும் அவரோடு கைகோத்துக் கொண்டு தவறிழைத்த காவல் துறையினரையும் நான் ஏற்கனவே மன்னித்து விட்டேன்" என்றார் டாக்டர் ஜைனப்.

- நன்றி சத்தியமார்க்கம்.காம்

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

ரமழானே வருக...! ரஹ்மத்தைத் தருக...!!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


ரமழானே வருக...! ரஹ்மத்தைத் தருக...!!


அல்லாஹ்வின் அருள்மழை பொழியும் அற்புதத் திங்கள்!

ஆவலுடன் எதிர்பார்த்த அடியார்களின் ஆசை மாதம்!

இறைவனுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் இணையில்லா மாதம்!

ஈகையை ஈந்துவக்கும் ஈடில்லாதவனின் இனிமை மாதம்!

உயர் பண்புகளை உருவாக்கும் உன்னத மாதம்!

ஊண், உறக்கம் துறந்து உயர்வான குணங்களை உள்ளத்தில் கொண்டுவரும் மாதம்!

எத்தகைய இடர்பாடுகள் ஏற்படினும் பொறுமையை கற்றுத்தரும் மாதம்!

ஏழ்மையை விரட்டும் ஏந்தல்களின் ஏற்றமிகு மாதம்!

ஐயங்கள் நீங்கி படைத்தவனிடம் ஐக்கியமாகும் மாதம்!

ஒற்றுமையை ஒலி(ளி)க்கும் ஒப்பற்ற மாதம்!

ஓரிறைக் கொள்கையை உலகெங்கும் ஓதிய மாதம்...

நம்மை நோக்கி தன் ஒளிக்கதிர்களை பதிக்க விரைவில் வர இருக்கின்றது.

சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பக்கதிர்கள் நம்மை தாக்க வரும்போது நிழல் தேடி அலைவது போல் நம் பாவங்களை கருக வைக்கும் தீப்பிழம்பாய் ரமழான் வருகிறது.

அருள்மறையை அருளிய அருளாளனின் அன்பு மாதம் நம்மை அரவணைத்துச் செல்ல அண்மையில் வந்துகொண்டிருக்கிறது.

ஏக வல்லோன் அல்லாஹ்விடம் நெருங்க வைக்கும் மேலதிக வணக்க வழிபாடுகள் செய்ய வழிவகுக்கும் வரப்பிரசாதம் இந்த ரமழான்.

இறை நம்பிக்கைக் கொண்டோர் தம் உள்ளங்களால் எண்ணிய அனைத்து நற்செயல்களுக்கும் வழிதிறக்கும் அற்புத மாதம்.

இறைவனிடம் அருள் வேண்டும் முதல் பத்து தினங்களை உள்ளடக்கிய அருள் மாதம் அழகாக வருகின்றது.

பாவ மன்னிப்பு கோரும் நெஞ்சங்களில் பால்வார்க்கும் புண்ணிய மாதம் இரண்டாம் பத்து தினங்களுடன் புதையலாக வருகின்றது.

நரக நெருப்பின் விடுதலையை வேண்டி நிற்கும் நல்லோர்களின் நம்பிக்கை மாதம்,

சுவனத்தில் நுழைய துடிக்கும் சுந்தர நபிகளின் உம்மத்துகள் சுற்றும் சூழ காண துடிக்கும் சூப்பர் மாதம்

முத்தான மூன்றாம் பத்து தினங்களுடனே முன்னறிவிப்புடன் வருகின்றது.

உள்ளத்தால் அன்பை விதைத்து, உடலால் பணிவை வெளி கொணர்ந்து மக்களிடம் கருணையை அறுவடை செய்யும் காலம் ரமழான் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

ஆன்மீக பயிற்சிக்கு அடிகோலும் அற்புத வாய்ப்பை அள்ளி வழங்கிடும் மாதம்!

இறைவனின் வற்றாத கருணையான ரஹ்மத்தையும், ஊற்றுக்கண்ணாக விளங்கும் பரக்கத்தையும் ஒருசேர வாரி வழங்கிடும் வள்ளல் மாதம்.

செய்த குற்றங்கள் சிறியதாயினும், பெரியதாயினும் மன்னிப்பின் வாசல் திறக்கப்பட்டு பாவிகளுக்கு பாவமன்னிப்பு பகிர்ந்திடும் படைத்தவனின் மாதம்.

நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற நம்முடைய இருகரமேந்திய பிரார்த்தனை அவசியம், அப் பிரார்த்தனை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உடனடியாக பதிலளிக்கப்படும் பண்புள்ள மாதம்.

நாம் படைக்கப்படுவதற்கு முன்னர், மனிதனையா படைக்கப் போகிறாய்? என்று ஆச்சரிய வினா தொடுத்த வானவர்கள் நம் செயல்களைக் கண்டு, வியந்து இறைவனிடம் பெருமை பாராட்டி பெருமிதப்படுத்தும் பேருள்ள மாதம்.

நம்மை வழிகெடுக்கும் நாசகார, தீய சக்திகளான ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டு கொட்டிலில் அடைக்கப்படும் காருண்ய மாதம்.

இணையில்லா இறைவனின் எல்லையில்லா கூலி வழங்கப்படும் மாதம்.

நோன்பாளிகள் மட்டும்... என்ற அறிவிப்புடன் திறக்கப்பட்டுள்ள உயர்தர சுவனத்தில் நாம் நோன்பாளி என்ற பெருமையுடன் நுழைய வைக்கும் மாதம்.

சுகந்த காற்று வீசும் வசந்த கால திறப்பு போல சுவனக்காற்றை வீச வானங்கள் மற்றும் சுவனங்களின் திறப்பு விழா நடைபெறும் விழாக்கா(கோ)லம்.

கோடைகால வெப்பத்தையே தாங்க முடியாத நமக்கு நரகத்தின் கொடுமையை தாங்க முடியுமா?

அதற்கு முடிவுகட்டும் விதமாக முடிவில்லாத முன்னவன் அல்லாஹ்வின் முன்னேற்பாடு தான் இந்த ரமழான்.

ஆம்! இந்த வசந்த காலத்தில் நரகச்சூடு நம்மைத் தொட அனுமதியில்லை.

எங்கும் எப்போதும் சுகம்! அதுதான் இறைவன் மனிதனுக்குக் கொடுத்த வரம்!! அதற்காகத்தான் இந்த மாதத்தில் மூடப்படும் நரகம்!!!

ஓராயிரம் இரவுகள் விழித்திருந்தால்தான் ஒருசில நன்மைகளை பெற முடியும் என்ற வாழ்க்கைச் சூழலில் ஓரிரவு விழித்திருந்தாலே போதும் ஓராயிரம் இரவுகள் செய்த செயல்களுக்குண்டான நன்மைகளை சம்பாதித்துக் கொள்ளலாம் என்ற சுபச் செய்தியுடன் லைல(த்)துல் கத்ர் என்ற புதையலை தன்னுள் வைத்திருக்கும் அருள் சுரங்கம்.

வாடிய பயிரை கண்டபோது வாடுவதை விட அதற்கு தண்ணீர் வார்ப்பது மேலான செயல் என்பது போல வறியோருக்கும், எளியோருக்கும், இல்லாதோருக்கும் வாரி வழங்கி கொடைத்தன்மையையும், வள்ளல் குணத்தையும் வாஞ்சையுடன் கற்றுத்தரும் வளமிகு மாதம்.

நாம் மட்டும் நன்மைகள் பல செய்து, தீமைகளை விட்டும் தவிர்ந்திருந்தால் போதுமா?

பிறருக்கும் நல்லவற்றை போதிக்க வேண்டாமா? தீமையை விட்டும் தடுக்க வேண்டாமா?

அந்தப் புனிதப் பணியை வழங்கும் பயிற்சிக்களம்தான் இந்த ரமழான்.

அடுத்தவருக்கு அநீதி இழைத்தல் ஆபத்தானது என்பதை அனைவருக்கும் அறிவுறுத்தும் அழகிய மாதம்.

பிறரின் தேவைகளை அறிந்து முடிந்தளவு உதவிகள் புரிய உள்ளத்தில் உதவிப்பண்பை ஊற்றெடுக்க வைக்கும் உன்னத மாதம்.

கஸ்தூரி மணம் கமழும் மணப்பொருளை விட நோன்பாளியின் வாய் வாடை வல்லோன் விரும்பும் வாசனை என்பதை வலியுறுத்தும் வசந்த மாதம்.

உலக காரியங்களில் போட்டியிட்டால் வெற்றியாளர் ஒருவரே!

மற்ற அனைவரும் தோல்வியுற்றோர் என்பது நாம் அறிந்த நியதி.

ஆனால், இம்மாதத்தில் நற்செயல்களில் போட்டியிடுவோர் அனைவரும் வெற்றியாளர்கள் என்பதும், தோல்வியில்லா வாழ்க்கையும், துவண்டு போகாத நிம்மதியும் கிடைக்கும் என்பதும் வெற்றியளிக்கும் அல்லாஹ்வின் வாக்குறுதி என்பதை உணர்த்தும் மாதம்.

வழிபாடுகள் என்ற குறைவான மூலதனம். இறைபொருத்தம் மற்றும் சுவனம் என்ற இலாபம் மட்டுமே! வேறு எந்தவித நஷ்டமும் இல்லை என்ற புதுவித வியாபார உத்தியை கற்றுக்கொடுக்கும் கல்வி மாதம்.

இறுதியாக...

இறையச்சம் என்னும் தக்வாவை நம் உள்ளங்களில் உறையவைக்க உண்மையாளன் அல்லாஹ் உம்மி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உம்மத்திற்கு வகுத்தளித்த செயல்முறை திட்டம்.

அம்மாதத்தில் நாம் செய்ய வேண்டியது நோன்பு நோற்பது மட்டும் தானா...?

இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து. நன்மைகளை எதிர்பார்த்து நோன்பு நோற்க வேண்டும்.

அதே அடிப்படையில் இரவு வணக்கங்களை நிறைவேற்ற வேண்டும்.

இவ்விரண்டு செயற்பாடுகளும் நம்முடைய முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும்.

ஐவேளை தொழுகைகளையும் பள்ளிவாசலுக்கு சென்று கூட்டா(ஜமாஅத்தா)க நிறைவேற்ற வேண்டும்.

இது கூட்டு வாழ்க்கை முறையையும். சகோதர பாசத்தையும் பலப்படுத்த உதவி செய்யும்.

தினந்தோறும் திருக்குர்ஆனை உள்ளச்சத்துடன். பொருள் விளங்கி, ஓத வேண்டிய முறையில் ஓத வேண்டும்.

இது இறைவனின் கருணையும். மன நிம்மதியும் ஏற்பட வழிவகுக்கும்.

இஸ்லாமிய அறிவை கற்றுக்கொள்ள அல்லது கற்றுக்கொடுக்க முயற்சி செய்ய வேண்டும்.

இது ஈருலுக வெற்றிக்குண்டான பாதையை திறந்து வைக்கும்.

இரவு வணக்கம் என்ற தராவீஹ் மற்றும் தஹஜ்ஜத் தொழுகைகளை அதிகமாக தொடர்ந்து தொழுது வர வேண்டும்.

இவை இறைவனின் நெருக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த வழிமுறையாகும்.

உறவுமுறையை பேணி வாழ வேண்டும்.

இது குடும்ப சீரமைப்பிற்கும். சொந்தங்கள் சேர்ந்து வாழ்வதற்கும் சீரான வழியை காட்டும்.

இல்லாருக்கும். எளியோருக்கும் முடிந்த வரை உதவிகள் புரிய வேண்டும்.

இது பிறர் மீது அன்பு செலுத்துதல் என்ற மேலான குணத்தை உள்ளத்தில் ஊற்றெடுக்க வைக்கும்


அன்பின் இஸ்லாமியச் சகோதர, சகோதரிகளே...!

தயாராகுவோம் நாம்...!

இறைவழிபாட்டில் திளைத்திருப்போம்!

இறைமறை குர்ஆனை ஓதுவதில் மூழ்கியிருப்போம்!

வீண் பேச்சுகளை தவிர்ந்திருப்போம்!

வீணாணவைகளை விட்டும் ஒதுங்கியிருப்போம்!

பகல் முழுவதும் பசித்திருந்து நோன்பிருப்போம்!

இரவு முழுவதும் விழித்திருந்து இறையைத் தொழுவோம்!

புனித ரமழானில் புதையலைத் தேடிப் புறப்படுவோம்!

நாளை மறுமையில் பொன்னான வாழ்வை சென்றடைவோம்!

இங்கே நாள்தோறும் நன்மைகள் பல புரிவோம்!

ஈருலகிலும் நாயன் அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சிப்போம்!

அல்குர்ஆனின் வழிமுறையில் செல்வோம்!

அல்லாஹ்வின் அளவிலா அருளைப் பெறுவோம்!

சுன்னத்தைப் பேணி சிறப்பாக வாழ்வோம்!

சுகந்தரும் சுவனத்தில் சுதந்திரமாக நுழைவோம்!

உலக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் புனித ரமழான் நல் வாழ்த்துக்கள்!



பரங்கிப்பேட்டை
மவ்லவீ அஃப்ழலுல் உலமா
அ. பா. கலீல் அஹ்மத் பாகவீ
எம்.ஏ (அரபிக்)., எம்.ஏ (தத்துவமும் சமயமும்).,
(Kfhk; : Fitj;)


மின்னஞ்சல்கள் : abkaleel@gmail.com / abkaleel@yahoo.com / abkaleel1@gmail.com / khaleel_baaqavee@yahoo.com

வலைப்பூக்கள் : www.ulamaa-pno.blogspot.com / www.mypno.blogspot.com / www.lalpetexpress..blogspot.com / www.khaleelbaaqavee.blogspot.com / www.ppettai.blogspot.com / www.khaleel-baaqavee.blogspot.com / www.infopno.blogspot.com



இணையதளங்கள் : www.k-tic.com / www.mypno.com / www.parangipettai.com / www..muslimleaguetn.com / www.parangi.com


Thanks To Mr. Niyaz, Chennai

சனி, 15 ஆகஸ்ட், 2009

நாங்களும் இந்துக்களே !!

நாங்களும் இந்துக்களே!!
இந்தியா எங்கள் தாய் நாடு!! இஸ்லாம் எங்கள் வழிபாடு!!



முஸ்லிம்களாகிய நாங்கள் யார்?

முஸ்லிம்களாகிய நாங்கள், இந்தியத் திருநாட்டில், இந்திய நாட்டவருக்குப் பிறந்த இந்தியராகிய நாங்கள் இஸ்லாத்தை எங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளோம். எம் இந்திய திருநாட்டிற்காக அன்றைய தேசவிடுதலைப் போராட்டத்திலிருந்து நேற்றைய கார்க்கில் யுத்தம் வரை எங்களின் சதவிகிதத்திற்கும் அதிகமாக உயிர்தியாகம் செய்துள்ளோம்.

நாங்கள் இந்தியராக இங்குதான் பிறந்தோம் இங்குதான் வாழ்கிறோம் இங்குதான் செத்ததுமடிவோம் என்ற இலட்சியத்தில் இருக்கிறோம். நமது நாடு என்று வரும்போது இங்குள்ள ஒரு பிடி மண்ணையும் எவருக்கும் விட்டு கொடுக்க மாட்டோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

முஸ்லிம்களாகிய எங்களைப் பார்த்து நீ இஸ்லாமியனா? அல்லது இந்தியனா? என்று வினவுவது உனக்கு அம்மா முக்கியமா? அப்பா முக்கியமா? என்று கேட்பதற்குச் சமம். அடிப்படையில் இப்படி கேட்பதே முரண்பாடானது. ஏனெனில் முஸ்லிமா என்ற கேள்வி ஒருவரின் மதநம்பிக்கையை பற்றி வினவுவது. இந்தியனா என்ற இரண்டாவது கேள்வி அவரின் தேசத்தைக்குறித்து வினவுவது. எனவே 'இந்திய முஸ்லீம்களா' அல்லது 'முஸ்லிம் இந்தியர்களா என்ற கேள்வியே அர்தமற்றது.


இந்தக் கேள்விக்கு ஒருபடி மேலாக பதில் சொல்கிறோம். அது, பூலோக விதியின் படி இந்துக்கள் என்னும் சொல் 'இந்துச் சமவெளியில் வாழும் மக்கள்' என்பதைக் குறிக்கும். படைத்த இறைவனாகிய அல்லாஹ்வை கடவுளாகவும், நபிகள் நாயகத்தை இறைவனின் தூதராகவும், இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகவும் ஏற்றுக்கொண்ட இந்திய முஸ்லிம்களாகிய நாங்கள் இந்துச் சமவெளியில் வாழுகின்ற காரணத்தால் பூலோக விதியின்படி மட்டும் நாங்களும் இந்துக்களே என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறோம்.


ஆனாலும் நம்நாட்டு இராணுவ ரகசியத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பார்ப்பன கும்பலால் வகுக்கப்பட்ட இந்துமத தத்துவங்கள் பகுத்தறிவிற்கும், உண்மைக்கும், நீதிக்கும், தர்மத்திற்கும் எதிராக
இருப்பதால் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்.

கடந்த (10-08-2007) தினமணியில் 'முஸ்லிம் இந்தியன் பெயர் மாறுகிறது' என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் வெளியாகியது அதற்கு "இஸ்லாமிய இணையப் பேரவை" தக்க பதில் அளித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது அந்த கட்டுரையில் இருந்து.....முழு கட்டுரையையும் வாசிக்க இங்கு சொடுக்கவும்.

THANKS : WWW.IIPONLINE.ORG

பன்றி காய்ச்சல் சில கேள்விகள் பதிலுடன்

எப்பஇந்த பன்றிக் காய்ச்சல் வந்தது?

கடந்த மார்ச் மாதம் பன்றிக்காய்ச்சல் நோய் என்று ஒரு புதியநோய் தோன்றி இருப்பது தெரியவந்தது.

எங்கிருந்து வந்தது ?

அமெரிக்காவில் உள்ள தெற்குகலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தஒருவரைத்தான் உலகின் முதன்முதலாக இந்த நோய் தாக்கியது.முதலில் இதை சாதாரண வைரஸ் காய்ச்சல்என்றே நினைத்தனர்.. பிறகு தான்ரத்தப் பரிசோதனைகள் செய்த போதுஇது ஏதோ ஒரு புது வைரசின் வேலைஎன்பதை உணர்ந்தனர்.

பன்றிக்கும் இதற்கு என்ன சம்பந்தம்?

பன்றிகளின் மூச்சுக் குழாய்மற்றும் நுரையீரலை தாக்கும்ஒரு வகை வைரஸ் இது என்று தெரிந்தது.இந்த வைரசால் பாதிக்கப்படும்பன்றியிடம் இருந்து மனிதர்களுக்குஇது பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.எனவே இந்த வகை காய்ச்சலுக்குபன்றிக் காய்ச்சல் என்று பெயரிடப்பட்டனர்.ஆங்கிலத்தில் இது ஸ்வைன் ப்ளுஎன்றழைக்கப்படுகிறது.

பன்றி கறி சாப்பிட்டால் வருமா?

பன்றிக் காய்ச்சல் என்பது நேரடியாகஎல்லா பன்றிகளிடம் இருந்துவந்து விடுவதல்ல. பன்றிக் கறிசாப்பிட்டால் இந்த நோய் வந்துவிடாது. கொடூர வைரஸ் பாதிப்புக்குள்ளாகிஇருக்கும் பன்றி பக்கத்தில்இருந்தாலோ, அல்லது அந்த வைரஸ்காற்று மூலம் பரவி, நம் உடம்புக்குள்புகுந்தாலோ பன்றிக் காய்ச்சல்வந்து விடும். நேற்றும், இன்றும்வந்த தலைப்பு செய்திகளை பார்த்தால்கூட இந்த காய்ச்சல் வர வாய்ப்பிருக்கிறது.

H1N1 என்றால் என்ன ?

இந்த வைரசின் கொடூரத் தன்மையைமுழுமையாக கண்டு பிடித்த பிறகுஇந்த வைரஸ்சுக்கு எச்.1 என்.1என்று பெயரிட்டுள்ளனர். அவ்வளவுதான்.

எனக்கு ஜலதோஷம், காய்ச்சல் வரும்மாதிரி இருக்கிறது, எனக்கு பன்றிகாய்ச்சலா ?

ஜலதோஷம், தொண்டை வறட்சி, உடல்வலி, காய்ச்சலுடன் சோர்வு, தலைவலி சிலருக்கு வயிற்றுப் போக்கு,குமட்டல், வாந்தி எல்லாம் அறிகுறிகளாகும்.அதற்காக காய்ச்சல் ஏற்பட்டதும்ஆ... பன்றிக் காய்ச்சல் என்றுபீதி அடைந்து அலற வேண்டியதில்லை.

என்ன செய்ய வேண்டும் ?
முதலில் நீங்கள் வழக்கமாக சிகிச்சைபெறும் குடும்ப டாக்டர்களிடம்உடம்பை காட்டி ஆலோசனை பெறுங்கள்.காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில்தயங்காமல் உடனடியாக ரத்த பரிசோதனைசெய்து பார்த்து விடுங்கள்.

எங்கள் வீட்டுக்கு பக்கத்தில்யாருக்கோ பன்றி காய்ச்சல் என்றுசொல்லுகிறார்கள் என்ன செய்ய?

உங்கள் பகுதியில், ஒருவருக்குபன்றிக் காய்ச்சல் இருப்பதுதெரிந்தால் உங்களை பாதுகாத்துக்கொள்ள சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகளைஎடுத்துக் கொள்ளுங்கள். காய்ச்சல்-இருமல் இருக்கும் நோயாளிகள்அருகில் செல்லாதீர்கள். தும்மல்போட்டாலோ, இருமினாலோ பன்றிக்காய்ச்சல் வைரஸ்கள் கொண்டாட்டத்துடன்பரவும். எனவே இருமல் ஆசாமிகள்பக்கத்தில் நிற்காதீர்கள்.உங்களுக்கு இருமல் தும்பல்இருந்தால் கையில் ஒரு நல்ல கைகுட்டையைவைத்துக்கொள்ளுங்கள். வெ‌ளி‌யி‌ல்செ‌ன்று ‌வி‌ட்டு வ‌ந்தது‌ம்கை‌, கா‌ல்களை சோப்பை‌க் கொ‌ண்டுகழுவுங்கள்.

பன்றி காய்ச்சல் குணப்படுத்தகூடியதா ?
பன்றிக் காய்ச்சல் என்பது குணப்படுத்தக்கூடிய நோய் உங்களுக்கு தெரிந்தபத்து பேருக்கு இந்த விழிப்புணர்வைபரப்புங்கள். அவர்களையும் பரப்பசொல்லுங்கள்.

இதுவரை எவ்வளவு பேர் பாதிக்கப்படுள்ளார்கள்?

10 கோடிக்கும் மேற்பட்டவர்கள்இன்று உலகம் முழுவதும் பன்றிக்காய்ச்சலுடன்உள்ளனர். எனவே பயம் வேண்டாம்.இதில் 2 ஆயிரம் பேர் மட்டும்தான் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவுக்குள் பன்றிக் காய்ச்சல்வராது என்று கடந்த ஜூன் மாதம்மார்தட்டி மத்திய அரசு சொன்னது.அப்படி இருக்க இந்தியாவிற்குள்எப்படி வந்தது ?

புனே பள்ளி மாணவர்கள் 11 பேர்அமெரிக்காவின் நாசா விண்வெளிநிறுவனத்துக்கு சுற்றுலா சென்றுவந்த போது கையோடு பன்றிக் காய்ச்சலையும்கொண்டு வந்துவிட்டனர்.

யார் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?
சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிப்பெண்களிடம் மிக, மிக எளிதாகபன்றிக்காய்ச்சல் வைரஸ் தொற்றிக்கொள்ளும். காற்று மூலம் மிகஎளிதாக இந்த வைரஸ் பறக்கும்.அதனால் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். நுரையீரல், ஆஸ்த்மாநோயாளிகள் மிக ஜாக்கிரதையாகஇருக்க வேண்டும்.கொஞ்ச நாளைக்கு குழந்தைகளைமுடிந்தவரை சுற்றுலா, மருத்துவமனைகள்,ரயில்நிலையம், பஸ்நிலையம் போன்றஇடங்களுக்கு அழைத்துச் செல்லவேண்டாம்.

குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பலாமா?

சின்ன குழந்தைகள் என்றால் அனுப்பாதீர்கள்.கொஞ்ச நாளைக்கு ஹோம் வர்க் செய்யாமல்இருக்கட்டுமே. 8வதுக்கு மேல்அனுப்பலாம். உங்கள் இஷ்டம்.

வேற என்ன செய்ய வேண்டும் ?

நல்லா தூங்க வேண்டும். காற்றுவரும் இடத்தில் இருக்க வேண்டும்.
நிறைய தண்ணீர்குடிக்க வேண்டும்.ஜாலியாக இருக்க வேண்டும்.

டாமிப்ளு மாத்திரை சாப்பிடலாமா? பக்கவிளைவுகள் இருக்கும் என்றுசொல்லுகிறார்களே ?

டாமிப்ளூ மருந்தை நாமாக எடுக்கக்கூடாது.மருத்துவர் சொன்ன பிறகு எடுத்துக்கொள்ளுங்கள்.டாமிப்ளு மாத்திரை மட்டும்இல்லை, எல்லா ஆண்டிபயாடிக் மாதிரைகளிலும்பக்கவிளைவுகள் இருக்கிறதுஎன்பது தான் உண்மை.

மீடியாவை பார்த்தால் பயமாகஇருக்கிறதே ?

அவர்களுக்கு வேற நியூஸ் இல்லைஎன்ன செய்ய. இந்தியாவில் 1079 பேர்களில்இதுவரை 15 பேர் இறந்திருக்கிறார்கள்.589 பேர் சரியாகி வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.மற்றவர்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார்கள்.கொஞ்ச நாளைக்கு மீடியாவை பார்க்காதீர்கள்/படிக்காதீர்கள்.H1N1 சாதாரணமாக மழைகாலத்தில் வரும்ஃபுளுவைவிட மைல்டானது என்றுடாக்டர்கள் சொல்லுகிறார்கள்.

முயலும் வெல்லும்,ஆமையும் வெல்லும், முயலாமை வெல்லாது

Thanks To Mr. Emam Niyas, Saudi Arabia

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

மனக்குமுறலை எழுதியவன் பேசுகிறேன் !

என் இதயங்கவர்ந்த வாசகர் நெஞ்சங்களே, உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் நல்லருள் நிலவிட பிரார்த்தனை செய்தவனாக துவங்குகிறேன்…. நான் எழுதிய “ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல்” கட்டுரையை படித்துவிட்டு நீங்கள் கொடுத்து வரும் ஆலோசனை களையும், நல்லாதரவையும் எண்ணி பெருமிதம் கொண்டவனாக இறைவனுக்கு நன்றி சொல்கிறேன் !

எனது நெருக்கமான நண்பர் ஒருவர் தம் பிரச்சனையை என்னிடம் சொன்னதைத் தான் உங்களிடம் கட்டுரையாய் சமர்ப்பித்துள்ளேன். நான் சொல்லியுள்ள விஷயங்கள் தனிப்பட்ட ஒருவரின் விஷயமாக பார்க்காமல் ஒரு சமூக கண்ணோட்டத்துடன் பார்த்ததால் உருவானதே இந்தக் கட்டுரை !

இதை மிகவும் நிதானமாக படித்துவிட்டு ஒவ்வொரு வாசகரும் அவரவர் தம் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்ட விதம் குறித்து என்னவென்று சொல்வேன்? எவ்வளவு அற்புதமான கருத்துக்கள். சமூகத்தின் மீது கவலை கொண்ட நிறைய பேர் பாதிக்கப் பட்ட நண்பரின் நிலை குறித்து தங்கள் கண்கள் குளமானதாகவும், அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென புரியவில்லையென்றும் கூறினர்.

சில வாசகர்கள் கட்டுரைக்குரிய நபர் இந்துவா? முஸ்லிமா? கிறிஸ்டினா? என்றெல்லாம் கேட்டனர். காரணம் நான் அவரின் மதத்தை அடையாளப்படுத்தவில்லையாம் !
பிறப்பால் மனிதனாகவும், பேசும் மொழியால் தமிழனாகவுமே நான் அவரை பார்த்ததால் மதத்தை இங்கு குறிப்பிடவில்லை என அந்த வாசகர்களுக்கு பதிக் கூறினேன்.

உங்கள் கட்டுரை காலத்திற்கேற்ற கண்ணாடி ! என் கணவரின் நிலையும் அப்படித்தான் உள்ளது உரிமைகளையும், உணர்ச்சிகளையும் இழந்தவளாய் நான் பரிதவிக்கிறேன். தயவுசெய்து என் கணவரின் பார்வைக்கு உங்கள் கட்டுரையை அனுப்புவீர்களா? எனக்கேட்டு அவரது கணவரின் மின்னஞ்சல் முகவரியையும் நமக்கு கொடுத்தார் மதுரையைச் சேர்ந்த பெண் வாசகி ஒருவர். அவர் விருப்பப்படியே நமது கட்டுரையை சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பி வைத்தோம் !

காரைக்கால் நண்பர் அமீருத்தீன் தொலைபேசி வாயிலாக நம்மை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட நபர் இனியும் இங்கே இருப்பதில் அர்த்தமில்லை. அவர் உடனே கேன்சலில் ஊர் போகட்டும் ஊரில் போய் அவருக்கு தெரிந்த தொழில் எதையாவது செய்து கொண்டு மனைவியுடன் மகிழ்வோடு வாழட்டும். தொழில் செய்ய என்னால் இயன்ற பொருளாதாரத்தை செய்யவும் தயார் எனக் கூறியதை கேட்டதும் அவரது அளவு கடந்த மனிதாபிமானத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.

வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் ஊருக்கு செல்லும் ஒவ்வொரு மனிதனும் அளவுக்கு மீறிய வகையில் சாமான்களை கட்டிக் கொண்டு பெட்டி, பெட்டியாய் இறக்குவதால் தான் ஊரில் இருக்கும் பெண்களுக்கு இங்கு படும் நம்மவர்களின் கஷ்டங்கள் தெரிவதில்லையென்றும், ஒரு முறை பொருள் கொடுத்து எப்போது பிரச்சினை வந்ததோ? அப்போதே கட்டுரைக்குரிய நபர் சுதாரித்திருக்க வேண்டாமா? தொடர்ந்து அதே தவறை செய்தது அவரின் அறிவீனத்தையே காட்டுகிறது. என விமர்சனம் செய்தார் கடைய நல்லூர் பாரூக்.

இவரது கூற்றிலும் உண்மை இருக்கவே செய்கிறது. அதிக சம்பளம் பெறுபவரும் சாமான்களுடன் தாயகம் செல்கிறார். குறைந்த சம்பளம் பெறுபவரும் சாமான்களுடன் தான் ஊர் போகிறார். ஆக வெளிநாட்டிலிருந்து ஊர் செல்லும் எல்லோருமே பெட்டி, பெட்டியாய் சாமான்கள் வாங்கி செல்லும்போது பெண்களின் பார்வைக்கு அனைவரும் சமமாகவே தெரிகின்றனர். அதனால் தான் பக்கத்து வீட்டு ரேவதிக்கு அதிக சம்பளம் பெறும் அவள் புருஷன் பத்தாயிரம் ரூபாய்க்கு தங்க வேட்டை புடவை வாங்கி கொடுத்ததால் ரேவதிக்கு அவள் புருஷன் வாங்கி கொடுத்த அதே புடவையை எனக்கும் வாங்கி அனுப்புங்கள் என்று மிக குறைந்த சம்பளம் பெறும் தம் புருஷனுக்கு போன் மூலம் விண்ணப்பிக்கிறாள் ராக்காயி ஆக வெளிநாட்டு சாமான்கள் மீதான மோகம் ஒட்டுமொத்த பெண்களை யும் வாட்டி வதைப்பது எதார்த்தம். இதற்கு முழுபொறுப்பும் உழைப் பாளிகளாகிய நாம் தான் !

மாண்புமிகு மக்களவை உறுப்பினர் ஒருவர் டெல்லியிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களது கட்டுரையை மின்னஞ்சல் மூலம் படித்து மிகவும் வேதனை அடைந்தேன். இந்த நிலை ஒருவருக்கு மட்டுமே சொந்தமானதல்ல பல பேரின் எதார்த்தமும் அதுவாகவே உள்ளது. அருமையான கருத்துக் களை காலம் அறிந்து சமூக அக்கறையுடன் கொடுத்துள்ளீர்கள். சம்பந்தப்பட்ட நபரின் பிரச்சினைகள் தீர அவர் தாயகம் செல்வதுதான் சிறந்தது. அவர் வாழ்க்கை வளம்பெற எல்லோரும் பிரார்த்திப்போம் எனக் கூறியதையும் இங்கே பதிவு செய்கிறேன்.

பிரச்சினைக்குரிய நபர் உணர்ச்சி வயப்பட்டு கேன்சல் செய்து விடாமல் குழந்தையில்லா தமது சூழ்நிலையை அவரது கம்பெனி நிர்வாகத்திடம் எடுத்து சொல்லி ஐந்தரை மாதம் நீண்ட கால விடுமுறை வாங்கி ஊர் செல்வது தான் நல்லது என்றார் வேலூர் ராஜேஸ் கண்ணன்.
! அதனால் குழந்தையின்மையை தவிர்க்க உடனடியாக அவர் கேன்சலில் ஊர் செல்லட்டும். கடவுள் பாக்கியத்தால் அவரது எல்லா காரியங்களும் கை கூடிய பிறகும் அவர் துபாய் வர ஆசைப்பட்டால் நானே எனது நண்பரின் கம்பெனியில் நல்ல சம்பளத்திற்கு வேலையில் சேர்த்து விடுகிறேன் எனக்கூறிய தஞ்சை ஜவஹரின் மனிதநேய சிந்தனையை என்னவென்று சொல்வது?

பொதுவாக அமீரக வாழ்க்கை என்பது சிலருக்கு வேண்டுமானால் சோலைவனமாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலானோர்க்கு பாலைவனமாகவே இருக்கிறது. தற்போதைய பொருளாதார மாற்றத்தால் குடும்பத்துடன் இருப்பவர்களுக்கும் பல பிரச்சினைகள் உள்ளன. குடும்ப வசதிக்காக எடுத்த லோன் மற்றும் கிரெடிட் கார்டு போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியால் ஒவ்வொருவரும் செய்வதறியாது திகைத்து நிற்கிறோம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் மிஞ்சுவது ‘0’ பூஜ்ஜியமே ! அதனால் பிரச்சினைக் குரிய நண்பர் தாயகம் செல்வதுதான் சரியானதாக இருக்கும். என்றார் முகவை தைய்யூப் அலி,

உங்கள் கட்டுரையை படித்ததும் ‘ஷாக்’ காகி விட்டேன். காரணம் நானும் தற்போது திருமணம் முடிந்து 55 வது நாளிலேயே துபாய் வந்து விட்டேன். நிச்சயம் உங்கள் கட்டுரை எனக் கொரு எச்சரிக்கை மணியாக இருக்கும் எனக் கருதுகிறேன். உங்கள் நண்பர் எதைப் பற்றியும் யோசிக்காமல் இறைவன் மீது நம்பிக்கை வைத்து கேன்சலில் ஊர் செல்வது தான் சிறந்தது எனக்கூறி நம்மை வியப்படைய வைத்தார் ஏர்வாடி சுல்தான்.

இப்படி ஒவ்வொருவருக்குள்ளும் பல்வேறு பிரச்சனைகள். எனவே இதனை நாம் சந்தித்து ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி இதுபோன்ற பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு நம்மால் இயன்ற ஆலோசனைகளை வழங்கி அவர்களது வாழ்வு மேம்பட துணைபுரியலாமே !

இதில் இணைந்து பணியாற்ற விரும்புவோர் 050 795 99 60 எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
துபாய் ..

நன்றி : லால்பேட்டை எக்ஸ்பிரஸ்

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

ஆகஸ்ட் 15 ம் தேதி இந்தியாவின் சுதந்திர தினமாம்! - முஸ்லிம் என்பதால்தானே தியாகத்தை மறைக்கிறீர்கள்?

ஆகஸ்ட் 15 ம் தேதி இந்தியாவின் சுதந்திர தினமாம் அன்றைய தினம் நாமும் (முஸ்லிம்களும்) மறக்காமல் ஏற்றுவோம் தேசியக் கொடியை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போற்றத்தக்க உம்மத்தல்லவா நாம்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்களே நாட்டுப்பற்றே ஈமானின் ஒரு பகுதி என்று. நம் ஈமானை உறுதிப்படுத்தத்தானே இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடினோம். நாம் பெற்ற சுதந்திரத்தை நாம் தானே மதிக்க வேண்டும். நாம் மறக்க முடியுமா? நம் முன்னோர்களும் மூதாதையர்களும் போராடிப் பெற்ற சுதந்திரத்தை நம்மால் மறக்கத்தான் மூடியுமா?
இன்றைய ஆட்சியாளர்களுக்கும், முஸ்லிம் எதிர்ப்பாளர்களுக்கும் சுதந்திரப் போராட்ட தியாகி பகத்சிங்கை தெரியும், அவரை நினைவுகூர்ந்து போற்றத் தெரியும்.

சுதந்திரப் போராட்ட தியாகி பகத்சிங் தூக்கிலிடப்பட்ட அதே நாளில்தானே சுதந்திரப் போராட்ட தியாகி மாவீரன் அஸ்வ குல்லா கான் தூக்கிலிடப்பட்டார். அவரைத்தெரியவில்லையா இன்றைய ஆட்சியாளர்களுக்கும், சுதந்திரப்பெருமை பேசுவோருக்கும். ஏன் இந்தப் பாரபட்சம்? முஸ்லிம் என்பதால்தானே.வெள்ளையனின் கடல் ஆளுகையை எதிர்த்து சுதேசிக் கப்பல் விடுவதற்கு ஒரு டிரஸ்ட் அமைக்கப்பட்டு, கப்பல் வாங்குவதற்கு அன்றைய இந்திய நாளிதழில் பாராதியார் விளம்பரம் போட்டதற்கு வந்ததோ அற்பமான சில நூறு ரூபாய்களும், சில அனாக்களும்தான்.

ஆனால் கப்பலை வாங்குவதற்கு அன்றைய மதிப்பில் ரூ. 10 லட்சம் வழங்கிய ஹாஜி பக்கீர் முஹம்மதுவை மறைத்துவிட்டார்கள். முஸ்லிம் என்பதால்தானே. கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சி என்று பள்ளிப் பாட புத்தகம் உட்பட ஆங்காங்கே நினைவுக் கூறப்படுகிறது. மண்டபங்கள் அமைக்கப்படுகிறது. வ.உ.சி ஓட்டிய கப்பலுக்கு தன் கஜானாவைக் காலிசெய்து அன்றைய மதிப்பில் ரூ. 10 லட்சம் வழங்கிய ஹாஜி பக்கீர் முஹம்மதுவுக்கு இந்த ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள்? ஏன் மறந்தார்கள்? முஸ்லிம் என்பதால்தானே.
இந்திய ஆட்சியாளர்களும் சுதந்திரப்பெருமை பேசுவோரும் இந்திய வரலாற்றிலிருந்து இந்த உண்மையை மறைக்கமுடியுமா? உலக வரலாற்றிலிருந்து இவற்றை எடுக்கத்தான் முடியுமா? உள்ளதை உள்ளபடி நினைவு கூற வெட்கம் ஏன்? தயக்கம் ஏன்? இந்திய முஸ்லிம்கள் அவர்களின் விகிதாச்சாரத்தைவிட பன்மடங்கு அதிகமாக சுதந்திர போராட்டத்தில் பங்குக்கொண்டுவிட்டார்களே என்ற தயக்கம், வெட்கம் தானே காரணம்.

முஸ்லிம்களாகிய எங்களுக்கு எங்கள் தாய்த்திரு நாட்டை மதிக்கத்தெரியும் போற்றத்தெரியும். சுதந்திரப்போராட்ட தியாகிகளை பாகுபாடு பார்க்காமல், மதம் பார்க்காமல் புகழத் தெரியும் அவர்களை கண்ணியப்படுத்தத் தெரியும்.

இந்திய ஆட்சியாளர்களும் சுதந்திரப்பெருமை பேசுவோரும் சுதந்திரத்தின்போது முஸ்லிம்களின் தியாகத்தை மறைத்தாலும், மறந்தாலும் கவலைப்படும் சமுதாயம் அல்ல முஸ்லிம் சமுதாயம்.

இந்திய ஆட்சியாளர்களும் சுதந்திரப்பெருமை பேசுவோரும் சொல்லித்தான் சுதந்திரத்தின்போது முஸ்லிம்களின் தியாகத்தை தெரிந்துக்கொள்ள வேண்டிய நிலையிலும் இல்லை இந்த முஸ்லிம் சமுதாயம்.

தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்த மாநிலமான குஜராத்தில், பிஜேபி யின் ஆட்சிக்காலத்தில் (குஜராத்தில் பிஜேபி யின் மோடி மத்தியில் பிஜேபி யின் வாஜ்பாய்) நடந்த கலவரத்தை ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் முடிந்தால், துணிவிருந்தால் நினைவு கூறட்டும் இந்திய ஆட்சியாளர்களும் சுதந்திரப்பெருமை பேசுவோரும்.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாசாரம் மங்கி வருகிறது-ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு சத்தியநாராயணன்

இப்படித்தான் வாழவேண்டும் என்பது இறைச்சட்டம்; எப்படியும் வாழலாம் என்பது மனிதர்களின் சட்டம். மனிதனை படைத்த இறைவன் மனிதனின் பலம்-பலவீனங்களை அறிந்த இறைவன் மட்டுமே மனிதனின் வாழ்க்கைக்கு ஏற்ற சட்டத்தை வழங்கமுடியும். அந்த வகையில் ஆண்கள் தமக்கு தேவையென்றால், அதற்குரிய சக்தி பெற்றிருந்தால் நான்கு திருமணம் செய்துகொள்ள இஸ்லாம் அனுமதியளிக்கிறது.

இந்த சட்டத்தை அவ்வப்போது முற்போக்காளர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் சிலர் விமர்சிப்பதுண்டு. இஸ்லாம் எதற்காக நான்கு திருமணம்வரை ஆண்களுக்கு அனுமதித்தது எனில்,ஆண்களை பொறுத்தவரை அவன் எந்த விஷயத்தில் வேண்டுமானாலும் தன்னை யோக்கியனாக நிலைநிறுத்தமுடியும் பெண் விஷயத்தை தவிர. தன் மனைவியை தவிர மற்ற பெண்களை ஏறெடுத்து அல்ல நினைத்துக்கூட பார்க்காத ஆண்களை அதிசயப்பிறவியாகத்தான் காணவேண்டியுள்ளது.

என்னதான் அழகான மனைவி தனக்காக இருந்தாலும் அந்நியப்பெண்ணிற்கு அதுவும் அடுத்தவன் பொண்டாட்டிக்கு வலைவீசுபவர்களும் ஆண்களில் உண்டு. தன் மனைவி அருகில் இருக்கும் பொது ஏகபத்தினி விரதனாக இருப்பவன் மனைவி பிரசவத்திற்கோ, அலது வேறு வேலை நிமித்தமாக வெளியூர் சென்றாலோ அல்லது இவனுக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பு அமைந்தாலோ அங்கே இவன் வேறு கிளையில் இளைப்பாறுவதையும் கேள்விப்படுகிறோம். அட! விபச்சாரம் அளவுக்கு செல்லாவிட்டாலும் ஒரு இச்சையோடு அந்நிய பெண்ணின் மீது ஒரு பார்வை வீசுபவனும், குறைந்த பட்சம் மனதளவிலாவது ஆசை கொள்பவனும் ஆண்களில் இல்லாமல் இல்லை. ஆக இதெல்லாம் உணர்த்துவதென்ன? அங்கே ஒருவனுக்கு ஒருத்தி என்பது போதுமானதாக இல்லை என்பதுதானே! மேற்கண்ட பலவீனங்களின் காரணத்தால் விபச்சாரம் போன்ற தவறை செய்து, அதனால் தானும் எயிட்ஸை பெற்று ஒன்றுமறியா அப்பாவி மனைவி-மக்களுக்கும் அந்த நோயை வழங்கி வாழ்நாளை எண்ணிக்கொண்டிருப்பதற்கு பதிலாக, உனக்கு சக்தியிருக்கிறதா? இன்னொரு பெண்ணை முறையாக மணந்து கவுரவமாக வாழு என்று சொல்லும் இந்த இறை சட்டத்தை மெய்ப்பிக்கும் வகையில்,சென்னையில் சென்னை நகர போலீசாருக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நேற்று முதல் நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் மாநில எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு சத்தியநாராயணன் கூறியதாக பத்திரிக்கைகளில் வந்துள்ள செய்தியில்,தமிழக போலீசில் 107 பேருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு உள்ளது. அவர்கள் யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அதை டி.ஜி.பி.க்கு கூட சொல்லமாட்டோம். எய்ட்ஸ் நோய் வந்தவர்கள் பயப்பட வேண்டாம். தைரியமாக உண்மையை சொல்லுங்கள். அதற்கான சிகிச்சையை எடுத்து கொள்ளுங்கள். எய்ட்ஸ் நோயை குணப்படுத்த முடியாவிட்டாலும், அதை கட்டுப்படுத்த ஏ.ஆர்.டி. என்ற கூட்டு சிகிச்சை முறை உள்ளது. அதன்மூலம் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தி நீண்டநாள் உயிர் வாழலாம்.

திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்ளாதீர்கள் என்று சொன்னார்கள். அதை யாரும் கேட்கவில்லை. திருமணத்திற்கு பின்பு மனைவியோடு மட்டும் உடலுறவு வையுங்கள் என்று சொன்னார்கள். அதுவும் யார் காதிலும் விழவில்லை. இதேபோல ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாசாரத்தையும் மறந்து வருகிறார்கள். இதனால் நாங்கள் இப்போது பிரசாரம் செய்வது என்னவென்றால் எப்படியும் வாழுங்கள், ஜாக்கிரதையாக வாழுங்கள். தவறான உறவில் ஈடுபடும்போது கண்டிப்பாக காண்டம் அணிந்து கொள்ளுங்கள் என்று தான் பிரசாரம் செய்கிறோம்.மற்ற துறைகளைவிட போலீஸ் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு தவறு செய்வதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. மனைவிமார்களை பிரிந்து பாதுகாப்பு பணிக்காக போலீசார் நீண்டநாள் வெளியூர்களில் தங்க நேரிடும். அதுவும் ஆயுதப்படை போலீசாருக்கு இதுபோன்ற சந்தர்ப்பம் அதிகமாக வரும். அப்போது தவறு செய்ய நேரிடும்.

எனவே ஜாக்கிரதையாக உங்கள் உறவை வைத்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் .ஒய்வு பெற்ற சூப்பிரண்டு அவர்களின் கூற்றுப்படி, விபச்சாரத்தை தடுக்கும் காவலர்களுக்கே எயிட்ஸ் எனில் சாமான்யர்களை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அதோடு காவலர்களை எப்படி வேண்டுமானாலும் வாழுங்கள் என்றும்,தவறான உறவில் ஈடுபடும்போது கண்டிப்பாக 'காண்டம்' அணியுங்கள் என்றும் அற்புதமான[?] யோசனையையும் வழங்கியுள்ளார். அதோடு காவலர்கள் இத்தகைய தவறை செய்வதற்கு காரணமாக அவர்கள் மனையை பிரிந்திருக்க வேண்டிய நிலை உள்ளதுதான் என்றும் கூறியுள்ளார்.

ஒரே திருமணத்தை கொண்டு திருப்தியாக வாழும் முஸ்லீம் ஆண்களும்-வளைகுடாவிலும் வேறுபல நாடுகளிலும் பல ஆண்டுகள் மனைவியை பிரிந்து வாழும் முஸ்லிம்களில் பலரும் அன்னியப்பென்னை நாடுவதில்லை. தவறான உறவுக்கு செல்வதில்லை. காரணம் மனித சட்டத்திற்கு பயந்து அல்ல. இறைவனின் சட்டத்திற்கு பயந்து!எனவே காவலர்கள் மட்டுமன்றி எவராக இருந்தாலும், அவசியமுள்ளவர்களுக்கு பலதார மனம் செய்வதற்கு அனுமதியளிப்பதே எயிட்ஸை ஒழிக்கும். அதோடு முறையற்ற உறவுகளையும்- இன்ஷியலில்லா குழந்தை பேற்றையும் தடுக்கும். புரிந்துகொண்டால் சரி!

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்

உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,
ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.

பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல..,

மீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்க்கின்றார்.., மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.
தந்தை அதனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் மீண்டும் பேச்சில் மும்முரமாகி விடுகின்றார்.
இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..! குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத பொழுது, மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல், குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.
இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

சிலர் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிலர் அடிக்க வேண்டும், சிலர் அது குழந்தை தானே என்று விட்டு விட வேண்டும், குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுவார்கள்.

உண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும், இதுவே சமூகத்;தின் எதிர்பார்ப்புமாகும்.

பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும், குணாதிசயங்கள் இருக்கும். இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்தமாதியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது. திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது, நல்லபல விளைவுகள் ஏற்படும்.

1. இளமையில் கல்வி

இந்த வயதில் அதற்கு என்ன தெரியும் என்று அங்கலாய்ப்பவர்களைக் காண முடியும், ஆனால் குழந்தைகளில் இளமைப் பருவம் தான் அவைகள் கற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு பருவமாகும், அவர்களை நல்லதொரு வழித்தடத்தின் கீழ் பயணிப்பது எப்படி என்பதை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய தருணம், குழந்தைகளின் ஆரம்ப நாட்களாகும். ஒருமுறை அவர்களிடையே நல்லதொரு பண்பாட்டை பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி விட்டால், அது அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடரும், அதிலிருந்து அவர்கள் மாற மாட்டார்கள்.

2. கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள்

நீங்கள் உங்களது குழந்தையிடனோ அல்லது சாதாரணமாக எதற்காகவோ நீங்கள் கோபமான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். அப்பொழுது உங்களது குழந்தைகளைத் திருத்த நினைக்காதீர்கள். உங்களது குழந்தைக்கு நல்லதைத் தான் நாடுகின்றீர்கள். ஆனால் அதுவல்ல இப்போது பிரச்னை.., நீங்கள் எந்த நிலையில் அதனைச் சொல்கின்றீர்கள் என்பது தான் பிரச்னை. எனவே, கோபம் இல்லாத நிலையில் அதனைத் தொடருங்கள்.

3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்

குழந்தைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது என்பது குறித்த திட்டத்தை குடும்பத்தலைவியும், தலைவனும் இணைந்து தீர்மானிக்க வேண்டும். அதனை இருவரும் இணைந்து நிறைவேற்றுவதற்கு திட்டமிடல் வேண்டும். ஒருவர் கறாராகவும், இன்னொருவர் இலகுவாகவும் நடந்து கொண்டால், இருவருக்கு மத்தியில் குழந்தைகள் விளையாட ஆரம்பித்து விடும். பெற்றோர்களில் கறாரானவர் மறுக்கின்ற பொழுது, அடுத்தவரிடம் சென்று அனுமதி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இருவரும் ஒரு விசயத்தில் ஒத்த கருத்தில் இருந்தால் தான் குழந்தைகளை நெறிப்படுத்த முடியும். பெற்றோர்களில் ஒருவர் சம்மதித்து இன்னொருவர் சம்மதிக்கா விட்டால், பெற்றோரில் ஒருவரின் மீது குழந்தைகளுக்கு வெறுப்புணர்வு ஏற்படும். எனவே, இது விசயமாக நாங்கள் கலந்தோலசித்து முடிவு சொல்கின்றோம் என்று குழந்தைக்குக் கூறுங்கள். பின்னர், குழந்தைகள் இல்லாத சூழ்நிலைகளில் அந்த விவகாரத்தை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். குழந்தைகளை வைத்துக் கொண்டு கலந்தாலோசனையில் ஈடுபடாதீர்கள். எடுத்த முடிவில் இருவரும் உறுதியாக இருங்கள்.

4. உறுதியாக இருத்தல்

பெற்றோர்கள் தங்களது கொள்கைகளில் உறுதியைக் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சட்ட திட்டங்களை மற்றும் எதிர்பார்ப்புகளை மாற்றிக் கொள்வது குழந்தைகளை குழப்பத்தில் ஆழ்த்தி விடும். உதாரணமாக, சுவரில் எழுதிக் கொண்டிருக்கின்ற குழந்தையை இன்றைக்கு தடுப்பது, நாளைக்கு தடுக்காது எழுதட்டும் என அனுமதிப்பது, இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இனிவரும் நாளில் நாம் சுவற்றில் எழுதினால் பெற்றோர்கள் கண்டிப்பார்களா, கோபப்படுவார்களா என்ற புரிந்துணர்வின்மை குழந்தைகளிடத்தில் தோன்றி விடும். உங்களது மனநிலைக்குத் தக்கவாறு உங்களது சட்ட திட்டங்களையும் மாற்றிக் கொள்வது நல்லதல்ல. இவ்வாறான நிலையில், எந்தக் காரியத்தையேனும் குழந்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது, நீங்கள் அதனை அனுமதிப்பீர்களா மாட்டீர்களா, அதனால் கோபமடைவீர்களா என்று உங்களைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்து விடும். எனவே தான் கூறுகின்றோம்.., குழந்தைகளை ஒரு விசயத்தின் மீது அதனைச் செய்யாதே என்று தடுத்தால், அந்தத் தடை எப்பொழுதும் நீடிக்க வேண்டும். அப்பொழுது தான் ஓ.., இதைச் செய்வது நல்லதல்ல என்று அந்தக் குழந்தை உடனே கற்றுக் கொள்ளும்.

அப்படியென்றால் சமய சந்தர்ப்பங்களுக்குத் தக்கவாறு நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாதா என்றால், மாற்றிக் கொள்ளலாம்.., நீங்கள் ஏன் முதலில் அனுமதி மறுத்தீர்கள்.., பின்னர் இப்பொழுது ஏன் நீங்கள் அனுமதிக்கின்றீர்கள் என்பது குறித்து அந்தக் குழந்தைக்கு விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகும். இன்னும் அதனை அதன் ஆரம்ப கட்டத்திலேயே விளக்கி விடுவது புரிந்துணர்வுக்கு நல்லதாகும். பெற்றோர்களிடம் உறுதி இல்லை என்றால், அதுவே குழந்தைகளின் கட்டுப்பாடின்மைக்கான ஆணி வேராகும்.

5. குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்

பிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம் வழங்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பொய் பேசக் கூடிய பெற்றோராக இருந்தால்.., அவர்கள் உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க மாட்டார்கள், நீங்கள் உண்மையையே பேசினாலும் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள்.

உதாரணமாக, உயரமான அலமாரியில் உள்ள பொருள் ஒன்றை உங்களது குழந்தை எடுத்துக் கொண்டிருக்கின்றது. அதனை முறையாக எடுக்க அதனால் இயலாது.., எனும் பொழுது சற்று பொறு.. இதோ என்னுடைய வேலைகளை முடித்து விட்டு வந்து எடுத்துத் தருகின்றேன் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறு கூறி விட்டால் நீங்கள் உங்களது வேலைகளை உடனே முடித்துக் கொண்டு உங்களது குழந்தைக்கு உதவுங்கள்.

மறக்க வேண்டாம்..! நீங்கள் கூறியதை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை என்றால் அந்தக் குழந்தை மீண்டும் அலமாரியில் உள்ள பொருளை எடுக்க முனையும். அதனால் இயலாத நிலையில், பொருட்கள் தவறிக் கீழே விழுந்த பின்பு அந்தக் குழந்தையை கோபித்துப் பயன் என்ன? ஒன்று, அதனை இப்பொழுது எடுக்க இயலாது. மற்ற வேலைகளைப் பாருங்கள், பின்பு எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறி இருந்தால், அந்தக் குழந்தை தன்னுடைய முயற்சியைக் கைவிட்டு விட்டு வேறு வேலையின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி இருக்கும். ஆனால், சற்று பொறு.., என்று நீங்கள் கூறிய பின்பு.. சற்றுக் காத்திருந்து விட்டு நீங்கள் வரததால் அந்தக் குழந்தை முயற்சி செய்து பார்த்திருக்கின்றது.

தவறு உங்கள் மீது.., குழந்தையின் மீதல்ல. நீங்கள் அடிக்கடி இப்படி நடந்து கொள்பவர் என்றால் பின்பு நீங்கள் சீரியஸாக எதனைச் சொன்னாலும், அதனை ஒரு பொருட்டாகவே குழந்தை எடுத்துக் கொள்ளாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
பின்பு ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுது உங்களது குணம் எவ்வாறு மாறும், கோபிப்பீர்களா, மாட்டீர்களா என்று உங்களையே பரிசோதிக்க ஆரம்பித்து விடும்.

6. அடம் பிடித்து அழுகின்றதா.., விட்டு விடுங்கள்

குழந்தை அடம் பிடித்து அழுகின்றதா.., அவை எதையோ உங்களிடம் எதிர்பார்க்கின்றன..! அவ்வாறு அழும் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு எதையும் கொடுத்து சமாதானப்படுத்தாதீர்கள். பின்னர் ஒவ்வொரு முறையும் அது விரும்புவதைப் பெறுவதற்கு அழ ஆரம்பித்து விடும். அழகையின் மூலமாக எதனையும் பெற முடியாது என்பதனை அது அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு தான் அழுதாலும்.. சரியே.., விட்டு விடுங்கள்.
அழத் தொடங்கி விட்டால் அனர்த்தம் தான் என்கிறீர்களா.., பொறுமை மிகவும் அவசியம். எப்பொழுது அந்தக் குழந்தை அழுகையினால் எதையும் சாதிக்க முடியாது என்பதைக் கற்றுக் கொண்டு விட்டதோ, வாழ்வே சந்தோஷம் தான். சில நாள் பொறுமை.., வாழ்வே இனிமை. தேர்வு உங்களது கையில்..!

7. தவறிழைத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள்

தவறிழைக்கக் கூடியது மனிதனின் சுபாவம். தவறிழைப்பவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளையுமாகும், அது சக மனிதனுக்குச் செய்யக் கூடிய தவறாக இருப்பினும் சரி.., அல்லது இறைவனுக்கு மாறு செய்யக் கூடிய பாவங்களாக இருந்தாலும் சரியே..! மன்னிப்புக் கோர வேண்டும் என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ளும் பொழுது, தவறிழைக்க நேரும் பொழுது மன்னிப்புக் கோர வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் மிகுந்து காணப்படும்.

8. மன்னித்து விடுங்கள்

குழந்தை தவறு செய்து விட்டது, அதனை உணர்ந்து தனது தவறுக்காக வருத்தம் தெரிவிக்கின்றது, உடனே அதனை மன்னித்து மறந்து விடுங்கள், மன்னித்து விட்டேன் என்பதை நேரடியாகவே குழந்தையிடம் சொல்லுங்கள், நீங்கள் செய்யும் தவறுகளை அல்லாஹ் மன்னிப்பதில்லையா.., அதனைப் போல தவறிழைத்த குழந்தை மன்னிப்புக் கேட்பதே அது சரியான பாதையில் பயணிக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
அல்லாஹ் மன்னிப்போனாக இருக்கின்றான், மன்னிப்பை விரும்புகின்றான்.., எனவே நீங்களும் குழந்தை செய்யும் தவறுகளுக்காக உடனே பிரம்பைத் தூக்காதீர்கள். அவர்கள் மன்னிப்புக் கோரினால் மன்னித்து விடுங்கள், இன்னும் நான் உன்னை மிகவும் நேசிக்கின்றேன் என்பதை அடிக்கடி அவர்களிடம் கூறி வாருங்கள், அது உங்களது உள்ளத்தில் இருந்து வர வேண்டும். இதன் காரணமாக பெற்றோர் பிள்ளைகள் உறவு மேலும் வலுவடையும்.

9. உங்களது தவறுக்கும் மன்னிப்புக் கோருங்கள்

நீங்கள் தவறிழைத்து விட்டீர்கள், நான் பெற்றவன், பிள்ளைகளிடம் எப்படி மன்னிப்புக் கேட்பது என்று இறுமாப்புக் கொள்ளாதீர்கள். தவறிழைக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரியே.., நம்முடைய குழந்தையாக இருந்தாலும் சரியே.., மன்னிப்புக் கோருங்கள், அதுவே நீதிக்குச் சாட்சியம் பகர்வதாகும். அவ்வாறு நீங்கள் மன்னிப்புக்கோரவில்லை என்றால், அதுவே அடக்குமுறையின் ஆரம்பமாகும்.

10. இளமையிலேயே இஸ்லாத்தை அறிமுகப்படுத்துங்கள்

சிறுபிராயத்திலிருந்து அவர்களுக்கு அல்லாஹ், இறைநம்பிக்கை, நபிமார்கள், நபித்தோழர்கள், நபித்தோழியர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள், மாபெரும் தலைவர்கள் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை சிறு சிறு சம்பவங்களாக அவர்களுக்குச் சொல்லி வாருங்கள். அது போன்றதொரு உன்னத வாழ்க்கைக்கு ஆசைப்படும்படி அறிவுறுத்துங்கள்.
இறைத்தூதர் (ஸல்)அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உதுமான் (ரலி), அலி (ரலி) மற்றும் நேர்வழி பெற்ற நபித்தோழர்கள் பற்றிய சம்பங்கள் குழந்தைகளின் உள்ளத்தை பண்படுத்த வல்லது.

அவர்கள் வழிதவறும் பொழுதெல்லாம் மேற்கண்ட சம்பவங்கள் அவர்களை பண்படுத்தப் பயன்படும். இஸ்லாத்தில் உறுதியாக இருப்பதற்கு வழியமைக்கும்.

இன்றைக்கு நம் குழந்தைகள் சக்திமான், இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் மற்றும் வரலாற்றுத் தொடர்களால் பாதிக்கப்படுகின்றன. அவர்களைப் போல அமானுஷ்யமான வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை பின்பற்றி வாழ வேண்டும் என்று கனவு காண்கின்றன. அதனால் தான் மாடியிலிருந்து குதித்து சக்திமான் போல சகாசம் செய்யப் பார்க்கின்றன. சக்திமான் வந்து காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை தான் அவர்களை மாடியிலிருந்து குதிக்க வைக்கின்றது. இது போன்ற கதைகளை விட.., இஸ்லாமிய வரலாற்று நாயகர்களின் உண்மை வாழ்வு படிப்பினை மிக்கதாகும். இன்னும் நீங்களும் கூட அவர்களின் வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ளலாம்.

11. நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுங்கள்

உங்களது குழந்தைகளுக்கு நல்லொழுக்க போதனைகள் அவசியம். ஒழுக்கம் சார்ந்த இஸ்லாமிய நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றினை அவர்களுக்கு பரிசளியுங்கள்.
இப்பொழுது பள்ளி ஆண்டு விழாக்கள் என்று கூறிக் கொண்டு சினிமாப் பாடல்களுக்கு ஆடும் கலாச்சாரத்தைப் பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுக்கின்றார்கள். சினிமாக்களில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப்பிடித்து ஆடிப்பாடும் அசிங்கமான அங்க அசைவுகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, இவ்வாறான விழாக்களில் ஆட வைத்து பெற்றவர்களும், மற்றவர்களும் ரசிக்கின்றார்கள்.

இதனை முஸ்லிம் பெற்றோர்கள் ஊக்கப்படுத்தக் கூடாது. அவ்வாறான போட்டிகள் தவிர்த்து ஏனைய கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.

12. கீழ்ப்படிதல்

பெற்றோர்களுக்குக் கீழ்படிதல் என்பது இறைவன் குழந்தைகள் மீது கடமையாக்கியதொன்று. தாயும், தந்தையும் இணைந்து இதற்கான பயிற்சியை வழங்க வேண்டும். ஆனால் குடும்பங்களில் நடப்பது வேறு..!

தந்தையை கரடி போல பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்துவது.., அதாவது.., அப்பா வரட்டும்.., உன்னை என்ன செய்கிறேன் பார்.. என்று பிள்ளைகளை மிரட்டுவது தாய்மார்களது வாடிக்கை. இது தவறான வழிமுறை..!

முதலாவது, எப்பொழுது குழந்தை கீழ்ப்படியாமையைக் காட்டுகின்றதோ அப்பொழுதே கீழ்ப்படிவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தாமதப்படுத்தக் கூடாது. தாமதப்படுத்தும் பொழுது ஒன்று அந்த சம்பவத்தையே குழந்தை மறந்திருக்கும் நிலையில், அவர்களைத் தண்டிக்கும் பொழுது தான் எதற்காக தண்டிக்கப்படுகின்றோம் என்பது அதற்கு விளங்காது.

இரண்டாவது, அந்தத் தவறை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் அதற்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், குழந்தையும் தவறை உணர்ந்து திருந்தியிருக்கும், குழந்தையைத் திருத்துவதற்கு தந்தை தான் வர வேண்டும் என்று தாய் காத்திருக்க வேண்டியதில்லை. இதன் மூலம் தாயோ அல்லது தந்தையோ குழந்தையின் தவறைத் திருத்த முனையும் பொழுது, இருவரது சொல்லுக்கும் அது கட்டுப்பட்டு நடக்கும் பழக்கம் அதனிடம் ஏற்படும்.

மூன்றாவதாக, பெற்றோர்களில் யாராவது ஒருவர் தான் குழந்தையின் தவறைக் கண்டிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பவர் என்ற நிலை வளர்ந்தால், தவறைக் கண்டிக்கும் பெற்றோரை குழந்தைகள் நேசிப்பதில்லை, மாறாக கண்டிக்கும் தாயையோ அல்லது தந்தையையோ அவர்கள் வில்லனாகப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவும் கூட குழந்தைகளிடம் கீழ்படியாமை வளர்வதற்குக் காரணமாகி விடும். பெற்றோர்களில் இருவரது சொல்லுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலை அவர்களிடம் உருவாகாது. பெரும்பாலான குடும்பங்களில் இது போன்ற தவறுகள் தான் நிகழ்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

நன்றி : முதுவை ஹிதாயத்

வியாழன், 6 ஆகஸ்ட், 2009

அறிவைத் தேடுவோம் !

( ஆக்கம் : மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி ! )


http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=171

இறைவனின் படைப்புகளில் எத்தனை விதமான அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிகழ்கின்றன. விலங்குகள், பறவைகளை ஐந்தறிவாகவும், மனிதனை பகுத்தறிவென்னும் ஓர் அறிவை அதிகப்படுத்தி ஆறறிவு படைப்பாகவும் படைத்துள்ள இறைவன் அறிவையும், அனுபவத்தையும் தேடும் விஷயத்தில் மட்டும் மனிதனை விட விலங்குகள், பறவைகளை சிறப்பித்தே வைத்திருக் கிறான். மனிதன் பிறந்து வளர்ந்து வரும் பருவத்திலேதான் கொஞ்சம், கொஞ்சமாய் அறிவையும், அனுபவத்தையும் பெறுகிறான். அதுவும் அவனாக முயற்சி செய்யும் பொருட்டே அவனுக்கு அது வசமாகிறது. ஆனால் விலங்குகள், பறவைகளுக்கு அப்படியல்ல அவைகள் பிறக்கும் போதே அடிப்படை அறிவையும், அனுபவத்தையும் கொண்டே பிறந்து விடுகின்றன.

உதாரணத்திற்கு ஒன்றை சொல்லலாம் ! பசி என்ற உணர்தல் உயிருள்ள எல்லாவற்றிற்கும் பொதுவானது. தாவரங் களுக்கும் கூட பொருந்தும். சரியான முறையில் தாவரங்களான செடி, கொடிகளுக்குரிய உணவு ஆதாரமான நீரை சரிவர கொடுக்கவில்லை யென்றால் அது தானாகவே வாடி கருகி அழிந்துவிடும். ஆக பசியென்பது உயிருள்ளவைகளுக்கு பொதுவானதே ! இதனடிப்படையில் பசி என்ற உணர்தல் ஏற்படும்போது பிறந்த குட்டிகளை தேடிப்போய் விலங்குகள் பாலூட்டுவதில்லை. குட்டிகளே தாயின் மடுவில் வாய் வைத்து பால் குடித்து பசி போக்கிக்கொள்ளும். ஆனால் மனிதனின் நிலையோ தலைகீழ் ! பசியை உணரும் குழந்தை தாயின் மடுவை தேடிப்போய் குடிப்பதில்லை. பசியால் அழும் குழந்தையை ஓடிப்போய் தூக்கி கொள்ளும் தாய் தன் மடியில் போட்டு பாலூட்டுகிறாள். தன் மடுவை குழந்தையின் வாயில் வைப்பது கூட தாய்தான் ! மடுவை தேடிப்போய் வாய் வைக்கும் அறிவை மனிதனாய் பிறந்த குழந்தைக்கு இறைவன் கொடுக்கவில்லை !
இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன் ! விலங்குகளில் பூனை தனி ரகமாகும். பூனை மலம் கழிக்கும் முன்பே மண்ணில் குழிதோண்டி விட்டு அந்தக் குழிக்குள் தான் மலம் கழிக்கும் பிறகு அந்தக் குழியை தோண்டிய மண்ணைக் கொண்டே மூடி விடும். மூடிய பிறகு அந்த இடத்தை முகர்ந்து பார்க்கும். மலக்கழிவின் வாடை வந்தால் மீண்டும் கொஞ்சம் மண்ணை அள்ளிப் போடும். வாடை வராவிட்டால் போய்விடும் ! இந்த அறிவையும் அனுபவத்தை யும் எந்த தாய் பூனையும் குட்டிகளுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை. விலங்குகள் தானாகவே அந்த அறிவைப் பெற்று விடுகின்றன. ஆனால் மனிதன் குழந்தையாய் தவழும் பருவத்தில், தான் கழித்த மலத்தை தானே எடுத்து வாயில் வைக்கும் காட்சிகளை பார்த்து தான் மனிதன் பிறக்கும் போது அறிவில்லாதவனாகவே பிறக்கிறான். என்னும் அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றுள்ளோம்.

மனிதன் வளரும் போது தான் அறிவைப் பெறுகிறான். மலம், ஜலம் கழிக்கும் விஷயத்தில் சாதாரண ஒரு பூனைக்கு இருக்கும் நாகரீகம் கூட இன்று ஆறறவுக்கு சொந்தமான மனிதனிடம் இருப்பதில்லை. என்பதை நினைக்கும் போது விலங்குகளை விடவா மனிதன் கேவலமாக போய் விட்டான்? என வெட்கப்பட வேண்டியுள்ளது. அதனால் தான் மனிதன் தெருக்களிலும், நடைபாதைகளிலும் மலம் ஜலம் கழித்து விட்டு அதை அப்படியே போட்டு விட்டு போய் விடுகிறான் ! பொது இடங்களில் மலம் ஜலம் கழிக்கும் கேவலத்தை மனிதன் எங்கிருந்து கற்றானோ? தெரியவில்லை? நிச்சயம் விலங்குகளிடமிருந்து கற்றிருக்க மாட்டான் ! காரணம் பூனை போன்ற நாகரீக விலங்குகள் அதற்கு இடம் கொடுக்காது ! இன்னொரு விஷயத்தையும் நாம் யோசிப்போம் ! விலங்குகள், பறவைகள் தான் ஈன்ற குட்டிகளையோ, குஞ்சுகளையோ பிற விலங்குகள் அல்லது மனிதர்கள் தொட முயற்சித்தால் கூட தாய் பறவை அல்லது தாய் விலங்கு நம்மீது பாய்ந்து பிராண்டி விடும். தன் குஞ்சுகளை, குட்டிகளை பாதுகாப்பதில் அப்படியொரு அக்கறை உணர்வை அவைகளுக்கு இறைவன் கொடுத்துள்ளான்.

ஆனால் ஆறறிவு பெற்றுள்ள மனித சமுதாயமோ தான் பெற்ற குழந்தையை “பெண் சிசு” என்ற காரணத்தினால் தானே கள்ளிப்பால் கொடுத்து படு கொலை செய்து வரும் கொடுமைகளை என்னவென்று சொல்வது? இந்த ஈனச்செயலை மனிதன் எங்கிருந்து கற்றான்? விலங்குகளிட மிருந்தா? சீ…. சீ நிச்சயமாக இருக்காது ! மனிதனை விட மிருகங்கள் எவ்வளவோ மேல் ! சிறுத்தை குட்டிகளுக்கு பாலூட்டிய நாய், நாய்க் குட்டிகளுக்கு பாலூட்டிய ஆடு என்றெல்லாம் பத்திரிகைகளில் செய்தி படிக்கிறோமே, இது விலங்குகளிடமிருக்கும் இரக்கப் பண்புகள் தானே? ஆனால் இதே ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த தாயை இழந்த குழந்தைக்கு மேல் ஜாதி பெண்ணொருத்தி பாலூட்டி உயிர் காப்பாற்றி விடுவாரா? விலங்குகளிடமிருக்கும் ஈவு இரக்கம் கூட மனிதர்களிடம் இல்லாதிருப்பது வெட்கக் கேடல்லவா? மனிதன் வளரும் போதே அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறது நியதி ! மனிதன் தேடும் அறிவு அது அவனுக்கும் அவன் சார்ந்த சமூகத்திற்கும் பயனுள் ளதாக இருக்க வேண்டும். அத்தகைய அறிவை தேடும் முயற்சியில் ஒவ்வொரு மனிதனும் சிரத்தை எடுத்துக் கொள்வது காலத்தின் கட்டாயம் !
சீனா சென்றேனும் சீர்கல்வி (அறிவு) தேடுக என முகம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதும், எவனொருவன் அறிவை தேடும் முயற்சியில் ஒரு அடி எடுத்து வைக்கிறானோ? அம்மனிதன் சுவர்க்கம் செல்வதற்கு ஒரு அடியை இறைவன் சுலபமாக்கி கொடுக்கிறான் என்றும் முகம்மது நபி (ஸல்) அவர்களே கூறி இருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் அறிவை தேடிக்கொள்வது எவ்வளவு அவசிய மென்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது ! அறிவென்னும் தேடலை காலத்திற்குத் தகுந்தாற் போல அமைத்துக் கொள்வது தான் மிகவும் புத்திசாலித்தனம். தற்போதைய அறிவுத்தேடல் என்பது கம்ப்யூட்டர் (கணிணி) மயமாகி விட்டது. ஒரு மனிதனின் அறிவுப் பசிக்குத் தேவையான தீனியை (கணிணி) உலகம் குறைவின்றி வழங்குகிறது என்பது மிகையல்ல !

“கரணம் தப்பினால் மரணம்” என்ற பழமொழி கம்ப்யூட்டரை நாடும் மனிதனுக்கும் பொருந்தும். கணிணி மூலம் வாழ்க்கைக்கு தேவையான நல்ல அறிவாற்றலையும் பெற முடியும் ! அதே நேரத்தில் தம் வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதற் கான சந்தர்ப்பத்தையும் உருவாக்கி கொள்ள முடியும். உலகின் மூலை முடுக்குகளில் நடக்கும் எந்தவொரு விஷயமானாலும் அடுத்த நிமிடமல்ல, நேரடியாகவே (கணிணி) இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு இணையதளத்தின் அடிப்படை அறிவு மிகவும் முக்கியம் ! இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இணையதள அறிவை தேடும் இன்றைய இளைஞர்களில் பெரும் பாலானோர் தமது விலை மதிப்பில்லா நேரத்தை ஆபாச காட்சிகளை பார்ப்பதற்கும், ஆபாச நாரசார செய்திகளை படிப்பதற்கும் செலவிடுவ தென்பது தன் விரல் கொண்டு தன் கண்ணையே குருடாக்கி கொள்வதற்கு ஒப்பாகும். ஆக்கப்பூர்வமான அறிவுத் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட “டேட்டிங்” வசதியை காதலர்களின் காம உணர்ச்சிகளை பரிமாறிக் கொள்ளும் ஹைவே (high way) யாக மாற்றிக்கொள்வது அபத்தமானதில்லையா? கணிணி மூலம் கடலை போடும் காதலர்களே ! கொஞ்சம் சிந்திக்கக் கூடாதா?

”டேட்டிங்” மூலம் தன் கற்பை பறி கொடுத்த அபலை பெண்களின் பரிதாப நிலையை என்னவென்று சொல்வது? தெருவுக்கு தெரு மளிகை கடைகள் வைத்த காலம் போய், “புரெளசிங் சென்டர்” வைக்கும் காலம் மாறிவிட்டது. இத்தகைய இண்டர்நெட் சென்டர் களெல்லாம் தற்போது காவல் துறையினரின் கண்காணிப்புக்குட் படுத்தப் பட்டுள்ளதாக செய்திகள் வருவது ஏன்? அறிவை தேட வேண்டிய சென்டர்களுக்குப் போய் அழிவை தேடிக் கொள்ளும் இளம் ஆண்களையும், பெண்களையும் பாதுகாக்கவே காவல் துறையினரின் இந்த கண்காணிப்பு நடவடிக்கை ! வேறு வழியின்றி இதை நமது எதிர்கால தலைமுறையினரின் ஒழுக்க வாழ்வியலுக்குரிய பாதுகாப்பு அரணாக எடுத்துக் கொள்ளவேண்டும். இணையதளங்கள் வந்தபிறகு தான் பெரும்பாலான இளைஞர்கள் வழி தவறி போய்க்கொண்டிருக் கிறார்கள் என்ற பெரியோர்களின் குற்றச்சாட்டையும் புறக்கனித்துவிட முடியாது ! அதற்காக இணைய தளங்களே வேண்டாமென சொல்லிட முடியாது.

ஒரு மனிதனின் அறிவுத்தேடல் என்பது தொடக்கப்பள்ளி யிலிருந்து கல்லூரி வரை தான் என நினைத்தால் நிச்சயமாக அவன் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறான் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தான் மரணிக்கும் வரை அறிவை தேடிக் கொண்டே இருக்க வேண்டும் என சொல்கிறார் ஹஸ்லிட் எனும் அறிஞர். மேலும் நம்மில் பலர் படித்து பட்டம்பெற்று ஒரு வேலையில் சேர்ந்த பின் புத்தகம் படிப்பதையே நிறுத்தி விடுகின்றனர். அன்றாட செய்திகளை கூட படிப்பதில்லை. இப்படிப்பட்ட மனிதர்கள் இறந்து விட்டால், இவர்களை அடக்கம் செய்யப்பட்ட பின் இவர்களின் கல்லறைகளில் 30 வயதில் இறந்துபோன இம்மனிதனை 60 வயதில் அடக்கியுள்ளோம் என எழுதி வைக்க வேண்டும் என்கிறார். ஹஸ்லிட் எனும் பிரபல அறிஞர். இவரது கூற்று மனிதன் தன் மரணம் வரைக்கும் அறிவை தேடிக் கொண்டேயிருக்க வேண்டும் என்பது தான். அத்தகைய அறிவை நூலகங்களுக்கு (Library) சென்று தேட முயற்சிக்க வேண்டும்.

அவசர யுகத்தில் அதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடியா விட்டால் குறைந்தபட்சம் அன்றாட நாட்டுநடப்பு செய்திகளையாவது கேட்க, படிக்க ஆர்வம் கொள்ள வேண்டும். வீட்டுக்கு வீடு தொலைக் காட்சிப்பெட்டி வைத்தது தொலை தூரத்தில் நடக்கும் செய்திகளை தெரிந்து கொள்ளத்தானே தவிர, தொல்லை தரும் காட்சிகளை பார்த்து வீணாவதற்கல்ல ! ஒரு வீட்டில் ஒரே நேரத்தில் செய்தி கேட்பதா? (சீரியல்) தொடர் பார்ப்பதா? என வாக்கெடுப்பு நடத்தினால் அதிக வாக்கெடுப்பு வித்தியாசத்தில் அல்ல. மொத்த வாக்குகளும் (சீரியல்) தொடருக்கு கிடைத்து விடும். அதன் விளைவு கள்ளக்காதலை கண்டித்த மகனை தாயும்,கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்தது. கள்ளக்காதலை கண்டித்த புருஷனை மனைவியும், அவளது காதலனும் சேர்ந்து துண்டுதுண்டாக வெட்டி வீசியது போன்ற கொடூரமான செய்திகளே இன்றைய நாளிதழ்களின் முக்கிய நிகழ்வுகளாய் பதிவாகி வருகின்றன. இது போன்ற கேடுகெட்ட வக்கிரமான செயல்கள் நடப்பதற்கு முழுக்காரணமும் சினிமா படங்களும், டி.வி. சீரியல் தொடர்களும் தான் ! தற்போதைய டி.வி. தொடர்களில் அதிகமாக வரும் கதாபாத்திரங்கள் ஒருவனை இரண்டு பெண்கள் அடைய முயற்சிப்பதும் ஒருத்தியை இரண்டு ஆண்கள் அடைய முயற்சிப்பது மான படுகேவலமான கன்றாவிகளை கதையென ஒளிபரப்பி வருபவர் களின் மூளையைச் சுற்றி மண்டைக்குள் ஓடிக் கொண்டிருப்பது நிச்சயம் சாக்கடை கழிவு நீராகத்தானிருக்கும். இப்படிப்பட்ட கீழ்த் தரமான சீரியல் தொடர்களுக்காக நேரத்தை செலவிடுபவர்கள் அதில் கொஞ்சத்தையேனும் அறிவை வளர்க்கும் சிறந்த நூல்களை படிக்க செலவிட்டால் போதும் !

தன்னைச் சுற்றியுள்ள மாசுக்களை களைந்து விடலாம். எதிர்காலத்தில் ஆரோக்கியமான அறிவுள்ள சமுதாயம் உருவாக இப்போதே நாம் எல்லோரும் அறிவை தேடி பயணிப்போம் !

நன்றி : முதுவை ஹிதாயத்

LinkWithin

Blog Widget by LinkWithin