விஞ்ஞானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஞ்ஞானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 2 ஜூன், 2011

அதிக நேரம் செல் போன் பேசினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம்: உலக சுகாதார மையம் எச்சரிக்கை


கைத்தொலைபேசி பயன்படுத்தாதவர்கள் யாராவது இருக்கிறார்‌களா என்றால் கிட்டதட்ட இல்லை என்று சொல்லும் அளவிற்கு இன்று சர்வதேச சமுதாயத்தில் கைத்தொலைபேசியின் பயன்பாடு ஊடுருவி இருக்கிறது.

இன்றி‌யமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் கைத்தொலைபேசிகளை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப்படுத்துவதால் உடலில் புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தும் என அவ்வப்போது எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

இருப்பினும் கைத்தொலைபேசிகள் பயன்பாட்டால் புற்றுநோய் ஏற்படும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்ற வாதமும் நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தான் கைத்தொலைபேசிகள் பயன்பாட்டால் புற்றுநோய் நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக உலக சுகாதார மையம் அண்மையில் விடுத்துள்ள எச்சரிக்கை குறிப்பில் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார மையத்தின் ஒரு அங்கமான சர்வதேச புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. கைத்தொலைபேசிகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அந்தக் குழுவில் 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் இடம் பெற்றிருந்தனர்.

குழுவுக்கு தலைவராக அமெரிக்க அ‌திபர் ஒபாமாவின் தேசிய புற்றுநோய் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான டாக்டர் ஜொனாதான் சாமெட் இருந்தார்.

கைத்தொலைபேசிகள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்றும் எனவே அதனை அபாயகரமான பூச்சிக்கொல்லி, சலவை காரங்கள் ஆகிய ரசாயனப் பொருட்களுக்கு நிகராக பட்டியலிட வேண்டும் என்றும் அந்த ஆராய்ச்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.

கைத்தொலைபேசிகளில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தான் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. வெளிநாட்டில் கைத்தொலைபேசிகள் வாங்குபவர்கள், அந்த போனில் இருந்து வெளியேறக்கூடிய கதிர்வீச்சு அளவு ஆகியனவற்ற‌ை அறிந்து கொண்டு பின்னர் தான் கைத்தொலைபேசியை வாங்குகின்றனர்.

ஆனால் இந்தியா போன்ற மற்ற ஆசிய நாடுகளில் நுகர்வோர் மத்தியில் இந்த விழிப்புணர்வு இல்லை என்று பரவலாக கூறப்படுகிறது. இத்தகைய விழிப்புணர்வோடு கைத்தொலைபேசிகளை வாங்கினால் புற்றுநோய் அபாயத்தில் இருந்து ஓரளவுக்கு நாம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்

வியாழன், 10 ஜூன், 2010

"ஜாக்கி'கள் மூலம் வீட்டை அப்படியே தூக்கி உயர்த்தி கட்டும் அதிசய தொழில்நுட்பம்


சென்னை:மழைக்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் 60 டன் எடை கொண்ட ஒரு அடுக்குமாடி வீட்டை பெயர்த்து, 260 "ஜாக்கி'கள் மூலம் அப்படியே தூக்கி, நான்கு அடி உயர்த்தும் புதிய கட்டட தொழில்நுட்ப பணிகள், தமிழகத்தில் முதல் முறையாக வேளச்சேரியில் நடந்து வருகிறது.


மழைக்காலம் என்றால் வேளச்சேரி, வெள்ளக் காடாகிவிடும். குடியிருப்பு பகுதிகளில் இடுப்பளவு மழைநீர் தேங்கும். படகுகள் மூலம் தான் பயணிக்க முடியும். இப்பிரச்னை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்பகுதியை சேர்ந்த ராமன் என்ற ஆடிட்டர் ஒருவர், நவீன தொழில்நுட்பம் மூலம் தனது வீட்டை பெயர்த்து, வாகனங்களுக்கு பயன்படுத்தும் "ஜாக்கி'கள் மூலம் நான்கு அடி உயரம் தூக்கி, கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ராமன் மனைவி லட்சுமி கூறியதாவது: நாங்கள் வேளச்சேரி, பேபி நகர், பட்டுக்கோட்டை முத்துக்குமாரசாமி சாலையில் 2001ம் ஆண்டு இடத்துடன் புதியதாக கட்டப்பட்ட வீட்டை வாங்கினோம். கீழ் தளம், மேல் தளம் 2,600 சதுர அடியில் கட்டப்பட்டது. குடிவந்த சில மாதங்களில் மழைக்காலம் துவங்கியது. அப்போது, வேளச்சேரி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை கண்டு அதிர்ச்சியடைந்தோம். எங்கள் வீட்டிற்குள் இடுப்பளவு தண்ணீர் புகுந்தது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் எங்களுக்கு இதே நிலைதான். விமோசனம் கேட்டு மாநகராட்சியை அனுகினோம். பலரிடம் ஆலோசனை கேட்டோம். அப்போது, முகப்பு பகுதியில் தடுப்பு கட்டுங்கள்; வீட்டின் தரைத்தளத்தை உயர்த்துங்கள்; கீழ்தளத்தில் உள்ள அறைகளை அகற்றிவிட்டு கார் "பார்க்கிங்' ஆக்கிவிடுங்கள் என தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.


வீடு கட்டும் கான்ட்ராக்டர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டபோது,"உங்கள் வீட்டை இடித்துவிட்டு அடுக்குமாடி வீடுகள் கட்டி விடலாம். அதில், எனக்கு 60 சதவீதமும்; உங்களுக்கு 40 சதவீதம்' என பங்குபோட ஆரம்பித்தார். இதனால், நாங்கள் குழம்பிப் போனோம். இறுதியில், என் கணவர் டில்லியில் உள்ள தனது நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டார். அப்போது, வீட்டை இடிக்காமல் பெயர்த்து, வாகனங்களுக்கு டயர் மாற்றப் பயன்படுத்தும் "ஜாக்கி'களை பயன்படுத்தி தேவையான உயரத்திற்கு மாற்றியமைக்கும் தொழில்நுட்பம் குறித்து கூறினார். அவ்வாறு உயரமாக்கப்பட்ட, கட்டப்படும் சில வீடுகளையும் நேரில் கண்டு அதிசயித்தோம். தற்போது, எங்கள் வீட்டையும் அதே தொழில்நுட்பம் மூலம் பெயர்த்து நான்கு அடிக்கு உயர்த்தி வருகிறோம். இவ்வாறு லட்சுமி கூறினார்.


இந்த புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வரும் அரியானாவை சேர்ந்த அர்கேஷ் குமார் சவுகான் கூறுகையில்,""ஜாக்கி'கள் மூலம் பழைய வீடுகளை தரைமட்டத்தில் இருந்து பெயர்த்து,தேவையான அளவு உயர்த்தும் கட்டட தொழில்நுட்ப முறையை நாங்கள் கடந்த 1991ம் ஆண்டு முதல் செய்து வருகிறோம். முதன் முதலில் அரியானா பகுதியில் இருந்த பாலத்தை பெயர்த்து உயர்த்தினோம். அதன் பிறகு பல மாநிலங்களில் நூற்றுக்கணக்கான வீடுகளை இடிக்காமல், பெயர்த்து தேவையான உயரத்திற்கு உயர்த்திக் கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் முதல் முறையாக ராமனின் வீட்டை எங்கள் தொழில்நுட்பத்தில் உயர்த்தி வருகிறோம். கடந்த மாதம் 16ம் தேதி பணிகளை துவக்கினோம். இன்னும் சில நாட்களில் பணிகள் முடிந்து விடும். இந்த தொழில்நுட்ப முறையை நாங்கள் அரசிடம் முறைப்படி பதிவு செய்துள்ளோம். பல முறை லிம்கா சாதனை புத்தகத்தில் எங்கள் தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது. கின்னஸ் புத்தகத்திலும் பதிவு செய்துள்ளோம்' என்றார்.


வீட்டை தூக்கும் நவீன தொழில்நுட்ப முறை: வேளச்சேரியில் உள்ள ராமன் வீட்டில் 16 பேர் கொண்ட குழுவினர் பணி புரிந்து வருகின்றனர். 2,600 சதுர அடி, 60 டன் எடை கொண்ட அவரின் வீட்டை தரை மட்டத்தில் இருந்து நான்கு அடி உயர்த்தி வருகின்றனர். முதலில் சுவர்களின் இருபுறமும் தோண்டி அதன் கீழ் ஒவ்வொரு பக்கமாக "ஜாக்கி'கள் வைக்கின்றனர். அந்த வீட்டிற்கு 260 "ஜாக்கி'கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தேவையான உயரத்திற்கு 16 பேரும் ஒரே நேரத்தில் "ஜாக்கி'களை இயக்கி உயர்த்துகின்றனர். பின், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சிமென்ட் செங்கற்களை வைத்து கட்டுகின்றனர். இந்த முறையில் வீட்டின் தரைத்தளம் மட்டும் சேதமடைகிறது. சுவர்களில் விரிசல் கூட விழுவதில்லை. மூன்று அடி வரை உயர்த்துவதற்கு, சதுர அடிக்கு 225 ரூபாய் கூலி மட்டும் வசூலிக்கின்றனர். அதன் பிறகு ஒவ்வொரு சதுர அடிக்கும் ரூ.80, ரூ.100 என வசூலிக்கின்றனர். ஒரு மாதத்திற்குள் வீட்டை உயர்த்தும் பணிகள் முடிக்கப்படுகின்றன.


செய்தி : தினமலர்

புதன், 2 டிசம்பர், 2009

தடை செய்தாலும் இயங்கும் சீன செல்போன்கள்... !


கடந்த சில தினங்களாக 'ஐ.எம்.இ.ஐ. எனப்படும் ரகசிய எண்கள் இல்லாத செல்போனா... இனி செல்லாது செல்லாது' என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டு வந்தது.

ஆனால், இப்போது அந்தத் தடை செல்லுபடியாகவில்லை. காரணம் அரசு பரிந்துரைத்து, செல்போன் நிறுவனங்கள் பயன்படுத்திய செயலிழக்க வைக்கும் தொழில்நுட்பம் முழுமையாக பலனளிக்கவில்லை.

ரகசிய குறியீட்டெண்கள் இல்லாத செல்போன்கள் தேச விரோத சக்திகளின் செயலுக்கு துணைபோகும்... எனவே அவற்றை அடியோடு செயலிழக்க வைக்கப் போகிறோம் என மத்திய அரசு அறிவித்தது.

இதன்படி ஐஎம்இஐ எண்கள் இல்லாத 2.5 கோடி செல்போன்கள் செயலிழக்கும் நிலை தோன்றியது. நவம்பர் 30-ம் தேதிக்குள் எல்லா செல்போன் சேவை நிறுவனங்களும், இந்த செயலிழப்பு தொழில்நுட்பத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

அதேபோல வாடிக்கையாளர்களும் நவம்பர் 30க்குள் தங்கள் இணைப்பை ஐ.எம்.இ.ஐ. உள்ள மொபைலுக்கு மாற்றிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். மேலும் தங்களிடம் உள்ள போன்கள் ஐ.எம்.இ.ஐ. எண் உள்ளதுதானா என அறிய எஸ்எம்எஸ் ஒன்றையும் அனுப்பச் சொல்லியிருந்தனர்.

இந்த வகையில் அனைத்து செல்போன் நிறுவனங்களுமே கணிசமாக லாபம் பார்த்தன.

இந் நிலையில், சிலர் ஐ.எம்.இ.ஐ. இல்லாத மொபைலுக்கு, ரகசிய எண் தருவதாக தலா ரூ. 200 வசூலித்த கதையும் நடந்துள்ளது.

இதையெல்லாம் செய்ய முடியாத சிலர், வருவது வரட்டும் என்று அப்படியே விட்டுவிட்டனர்.

ஆனால் நவம்பர் 30க்குப் பிறகு இயங்காது என்று கருதப்பட்ட, ரகசிய எண்கள் இல்லாத செல்போன்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் பழையபடியே இயங்கின. அரசுத் துறை மொபைல் சர்வீஸான செல் ஒன் இணைப்பு பெற்ற போன்களும் கூட இயங்கின.

இதுகுறித்து தொலைத்தொடர்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், அரசு எங்களுக்குப் பரிந்துரைத்த தொழில்நுட்பத்தைப் பிரயோகித்துவிட்டோம். ஆனால் அது முழுமையாக வேலை செய்யவில்லை. ஆனால் இதற்காக அப்படியே விட்டுவிட மாட்டார்கள். தொழில்நுட்ப சிக்கலை சரி செய்து மீண்டும் தடை செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார்.

இந் நிலையில் ஐஎம்இஐ எண்கள் உள்ள, சீனா மற்றும் கொரிய மொபைல்களை இனி தருவிக்க மொபைல் விற்பனையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

கால அவகாசம் நீடிப்பு..

இதற்கிடையே, ஐஎம்இஐ எண்கள் இல்லாத போன்களுக்குரியவர்கள் அந்த எண்ணைப் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு, புதுவைக்கான செல்போன் டீலரான அமீத் என்பவர் கூறுகையில், எண்கள் பெற ஒரு வார கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஐஎம்இஐ எண் இல்லாததால் துண்டிக்கப்பட்ட போன் வைத்திருப்பவர்கள் இந்த எண்ணைப் பெற விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

சனி, 14 நவம்பர், 2009

நோக்கியாவை பின்னுக்குத்தள்ளிய ஆப்பிள்


செல்போன் விற்பனையில் அகில உலக அளவில் முன்னணியில் இருக்குக் நோக்கியா நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி லாபம் ஈட்டுவதில் முதலிடம் பெற்றுள்ளது ஆப்பிள்.எல்லாம் ஐபோன் செய்யும் மாயம்.

செல்போன் சந்தையில் நோக்கியைவை எட்டிப்பிபடிக்க முடியாமல் மற்ற முன்னணி நிறுவனங்கள் திணறிக்கொன்டிருக்க ஐபோன் மூலம் இந்த சந்தையில் நுழைந்த ஆப்பிள் மட்டும் நோக்கியாவுக்கு ஈடு கொடுத்து நிற்கிறது.வெகுஜன மாடல்களின் சந்தையில் வேண்டுமானால் நோக்கியா முடிசூடா மன்னனாக இருக்கலாம் ஆனால் விலை உயர்ந்த பிரிவில் அறிமுகமான ஐபோன் ஸ்மார்ட்போன் என்று வர்ணிக்கப்படும் இந்த பிரிவில் தனிக்காட்டு ராஜாவாக விளங்குகிறது.

நோக்கியாவின் என் 90 இந்த பிரிவில் அறிமுகமானாலும் ஐபோன் பக்கத்தில் கூட நெருங்க முடியவில்லை.இருப்பினும் ஒட்டுமொத்த சந்தையில் நோக்கியாவே முன்னணியில் இருக்கிறது. வருவாய் மற்றும் லாபத்தைலும் இதே நிலை தான்.

ஆனால் தற்போது முதல்முறையாக ஆப்பிள் நோக்கியவைவிட அதிக லாபம் ஈட்டியிருக்கிறதாம்.இந்த ஆண்டின் சமீபத்திய காலாண்டு முடிவுகளின் படி நோக்கியா 1.1 பில்லியன் டாலர் லாபம் ஈட்ட ஆப்பிள் 1.6 பில்லியன் டாலர் லாபம் ஈட்டியுள்ளது

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

உங்களுடைய மீடியாபிளேயரை இணைய உலாவியிலிருந்தே இயக்குவது எப்படி?

நீங்கள் இணையத்தில் அதிகம் வலம் வருபவரா? அதுவும் பாடல்களை ஒலிக்க விட்டே இணையத்தில் இருப்பவரா? மேற்கண்ட கேள்விகளுக்கு உங்களின் பதில் “ஆம்” என்றால் உங்களுக்காகவே இருக்கிறது ஒரு இலவச மென்பொருள். அதன் பெயர் Foxy tunes.

இது Internet Explorer, Mozilla Firefox உடன் வேலைசெய்கிறது. இதை உங்கள் கணினியில் நிறுவிவிட்டால் உங்களது மீடியாபிளேயரை இணைய உலாவில் இருந்துகொண்டே இயக்கலாம். உங்களிடம் இருக்கும் பாடல்களை உங்களது மீடியா பிளேயரில் பாடவிடவும், பின்னர் மீடியா பிளேயரை மினிமைஸ் செய்துவிட்டு இணைய உலாவியில் இருக்கும் Foxy Tunes மூலமாக இயக்கிக்கொள்ளலாம்.. இதை பயர்பாக்ஸில் உபயோகித்தால் யூ‍‍-டியூப் தளத்தின் playlist கூட கையாள‌முடியும் என்பது கூடுதல் சிறப்பு

சந்திராயன் விண்கலத்துடன் தகவல் தொடர்பு துண்டிப்பு


நிலவை ஆராய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திராயன் விண்கலத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை 'சந்திராயன்-1' திட்ட இயக்குநர் எம்.அண்ணாதுரை பெங்களூரில் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

எனினும், தொழில்நுட்ப ரீதியாக சந்திராயன் விண்கலம் 100 சதவீதம் முழுமையாக செயல்பட்டுள்ளது என்றும், தனது பணிகளில் 90 முதல் 95 சதவீதம் அறிவியல்பூர்வமாக பூர்த்தி செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

2008 அக்டோபர் 22ம் தேதி ஏவப்பட்ட இந்த விண்கலத்தின் பணிக்காலம் 2 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்னதாக அதன் பணி முடிவடைந்துவிட்டதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

Web 3.0 டெக்னாலஜி

Web 3.0 டெக்னாலஜியாம் விரைவில் இணைய உலகை ஆளப்போகிறதாம். இதற்கு முன்னாடி அதாவது தற்போது Web 2.0 அதற்கு முன்னாடி Web 1.0 எனும் தொழில்நுட்பங்கள் இருக்கின்றனவாம், இருந்ததாம். இப்படி அள்ளி விட்டுக்கொண்டு Web 3.0 எனும் புதிய தொழில்நுட்பத்தை பற்றி கொள்கை ரீதியாக(theoritically) பேசிக்கொண்டிருக்கின்றது ஒரு கூட்டம். உண்மையில் Web 1.0, Web 2.0 என்ற தொழில்நுட்பங்கள் இருக்கின்றனவா என பார்த்தால் இவையெல்லாம் வியாபார உத்திகள் போன்றே தோன்றுகிறது. காரணம் தற்போது இணையம் பாவித்து கொண்டு இருப்பதாக சொல்லப்படும் Web 2.0 தொழில்நுட்பம் தனது தனித்துவமான இயல்புகளாலேயே அதாவது முக்கியமாக comments, feedback என்ற இரு இயல்புகளாலேயே அடையாளம் காணப்பட்டது. Web 2.0 கண்டுபிடிக்கபட்டதும் அதற்கு முன்னால் இருந்த தொழில்நுட்பம் அதாவது இணையத்தில் publishing only என்ற தொழில்நுட்பம் Web 1.0 என சொல்லப்பட்டது. எல்லாம் இணையத்தில் கொட்டிக்கிடக்கும் அல்லது கொட்டுவதற்கு தயாரக இருக்கும் பணத்துக்காகவே இந்த புதிய புதிய தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்புகள். ஒரு புதிய தொழில்நுட்பம் என்றவுடன் கையில் பெட்டியை வைத்துக்கொண்டு பலபேர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்காகவே இந்த Web 3.0.

இணையமானது இதுவரை இரு தொழில்நுட்பங்களை கண்டுள்ளது. நான் முன்பு சொன்னது போல் Web 1.0, Web 2.0 என்பன தான் அவை. இதில் Web 1.0 என்ன செய்ததென்றால் இணையத்தில் பதிக்க மட்டுமே வழி செய்தது அதாவது இணையத்தில் நீங்கள் தேடும் தகவல்கள் விதவிதமான தளங்களில் கொட்டிக்கிடக்கும் நீங்கள் அவற்றை தேடி படித்தீர்கள். அவை சரியா, தவறா என சொல்லக்கூட உங்களுக்கு வழி இருக்கவில்லை. அடுத்து வந்த Web 2.0 தொழில்நுட்பம் இந்த குறையை தீர்த்தது இப்போது நீங்கள் ஒரு தகவலை பார்த்தால் அதைப்பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றையும் சொல்கிறீர்கள். முன்பு இருந்த Web 1.0 ல் குறிப்பிட்ட காரை வாங்க வேண்டுமென்றால் அது தொடர்பான தளங்களை தேடி தேடி அந்த கார் உங்களது தேவையை தீர்க்குமா என்று தெரியாமலேயே வாங்க வேண்டியிருக்கும், ஆனால் Web 2.0 ல் உடனே facebook, Twitter போன்ற சமூக வலைதளங்களுக்கோ அல்லது வலைப்பூக்களுக்கோ செல்கிறீர்கள் அங்கே நீங்கள் இப்படி ஒரு காரை வாங்க விரும்புவதாக சொல்கிறீர்கள் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு தேவையான அந்த காரைப் பற்றிய சகல விடயங்களையும் டீடெய்லாக சொல்வார்கள். எப்படியான இடத்தில் எவ்வளவு பெற்றோல் குடிக்கும் என்பது வரையிலான தகவல்களை தெரிந்து கொண்டு நீங்கள் காரை வாங்கலாம். Web 2.0 வின் மிக மிக லேட்டஸ்ட்டான வடிவமே இந்த Facebook போன்ற சமூகவலைத்தளங்களும் tweetter ம். இந்த வடிவங்கள் நம்மை முழுதாக வந்தடையாத. அலுத்துவிடாத நிலையிலேயே அடுத்த இணைய தொழில்நுட்பத்தை பற்றிய பேச்சு அடிபடுகின்றது.

Web 3.0 ல் முக்கியமான இயல்பாக சொல்லப்படுவது அதன் intelligent ஆன தேடும் முறை தான். இந்த தொழில்நுட்பத்தில் அமைந்த இணையமானது உங்களது தனிப்பட்ட உதவியாளர் போன்று உங்களின் விருப்பு வெறுப்பு அறிந்து செயல்படும். Web 1.0 ல் இணையம் ஒரு நூலகம் மாதிரி உங்களுக்கு தேவையான தகவலை நீங்களே தேடி எடுத்து கொள்ள வேண்டும். Web 2.0 ல் இணையம் உங்களது நண்பர் கூட்டம் போன்றது உங்களுக்கு தேவையான தகவலை உங்களுக்கு தேவையான வடிவத்தில் நண்பர்கள் தேடி தருவார்கள். Web 3.0 ல் இணையமே உங்களுக்கு தேவையான தகவலை தேடி எடுத்து தரும். Web 3.0 கால இணையம் SEMANTIC WEB என சொல்லப்படுகிறது. இது முழுக்க முழுக்க metadata எனப்படும் தகவல்களின் தகவல்களால் ஆனது. உதாரணமாக ஒரு கைக்குட்டையை பார்க்கிறீர்கள் அது நீங்கள் உங்கள் காதலிக்கு பரிசாக கொடுத்த கைக்குட்டையை போன்ற ஒன்று அதை பார்த்ததும் உங்களுக்கு உங்களின் காதலியின் ஞாபகம் வரலாம் உடனே நேற்று காதலிக்கு தெரியாமல் கடலை போட்ட காதலியின் நண்பியின் ஞாபகமும் வரலாம் நீங்களும் அந்த கைக்குட்டையை படமெடுத்து facebook ல் போட்டு உங்கள் காதலியின் பெயரை tag ம் பண்ணுகிறீர்கள். அதே போல்தான் இணையமும், இப்போ உங்கள் காதலி உங்களை அல்லது உங்கள் Facebook profile ஐ இணையத்தில் தேடினால் உங்கள் facebook profilம் அந்த கைக்குட்டை படமும் காதலியின் நண்பியின் facebook profile ம் முடிவாக வரலாம். உங்களுக்கு பிடித்த, தேவையான தகவல்களை மட்டுமே தந்து நேரத்தை மீதப்படுத்துவதே Web 3.0 இன் முக்கியமான நோக்கம். உங்களது தொடர்ச்சியான இணைய தேடல்களின் மூலம் இணையம் உங்களை பற்றி அறிந்துக் கொள்ளும். RSS எனப்படும் இணைய செயலி மூலமாக இப்போது உங்களுக்கு பிடித்த தளங்களில் இருந்து புதிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடிகிறது இதே RSS, Web 3.0 ல் உங்களுக்கு பிடித்த தளத்தில் உங்களுக்கு பிடித்த தேவையான தகவலை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கும். உங்களது தொடர்ச்சியான இணைய தேடல் இதை சாத்தியமாக்கும்.

ஒருவரின் Search history ஐ கொண்டு அவரை பற்றியே தெரிந்து கொள்ளும் இந்த தொழில்நுட்பம் பாவனைக்கு வந்தால் எதிர்காலத்தில் திருமண பொருத்தங்கள், வேலைக்கு ஆள் தேடுதல் என்பன இணையத்திலேயே முடிந்துவிடும் அதே நேரம் நீங்கள் ஷகிலாவை பற்றி தேடியிருந்தால் அதுவும் உங்களை பற்றிய தகவலாக, நீங்கள் ஷகிலா ரசிகர் என்று தேடலில் தெரிவிக்கப்படும். முழுக்க முழுக்க Web 1.0 போன்று தகவல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் இந்த தொழில்நுட்பத்தை பற்றிய பேச்சுகள் ஆரம்பித்திருக்கும் நிலையில் இப்போதே Web 4.0 க்கான குறிசொல்லல்கள் தொடங்கிவிட்டன. அதாவது Web 1.0 தகவல்களுக்கு முக்கியத்துவம் வழங்கியனிலையில் Web 2.0 ஆனது தகவல்களை சிறப்பாக பெற்றுக்கொள்ளும் web applications களுக்கு வழிசமைத்தது தற்போது Web 3.0 ஆனது தகவல்களை சிறப்பன வடிவத்தில் சேமிக்கவும் பெற்றுக்கொள்ளவும் உதவும் என சொல்லப்படும் நிலையில் Web 4.0 ஆனது தற்போது இருக்கும் Facebook, Tweetter தளங்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளை தரும் என சொல்லப்படுகிறது. ஆனால் இப்பொது கொள்கை அளவிலேயே இருக்கும் இத்தொழில்நுட்பம் வருவதற்கு கொஞ்ச காலம் ஆகும் போலத்தான் தெரிகிறது.

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

செல்பேசியின் மூலம் அதிவேகமாக இணையம் உபயோகிக்க

செல்பேசியில் இணையத்தை உபயோகிப்பதை பற்றி அனைவரும் அறிந்து இருப்பீர்கள். ஆனால் செல்பேசியில் இணையத்தை உபயோகிப்பதில் மிகுந்த சிரமங்கள் உள்ளன.

முக்கியமாக அதன் வேகம் மிகவும் குறைவாக இருக்கும். அனைத்து முகவரிகளையும் பார்க்க இயலாது. இந்த குறைகளை போக்குவதற்கு என்றே தயாரிக்கப்பட்டது தான் ஒபோரா மினி என்னும் மென்பொருள். இதன் மூலம் நீங்கள் கணினியில் அப்படி இணையத்தை பயன்படுத்துகிறீர்களோ அதை போலவே உங்கள் செல்பேசியிலும் உபயோகிக்கலாம்.

கீழே உள்ள முகவரிக்குச் சென்று உங்கள் செல்பேசியின் நிறுவனத்தை (model) தேர்வு செய்து தரவிக்கம் செய்து கொள்ளுங்கள் அல்லது உங்கள் கணினி நேரடியாக தரவிறக்கம் செய்து விட்டு பின்பு உங்கள் செல்பேசிக்கு cable அல்லது bluetooth மூலமாக upload செய்து உபயோகியுங்கள்

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

கூகுள் எர்த்துக்குப் போட்டியாக இஸ்ரோவின் 'புவன்'!

கூகுள் எர்த் போன்ற இணையதளம் ஒன்றை இஸ்ரோ தொடங்கியுள்ளது. இதற்கு புவன் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என போற்றப்படும் விக்ரம் சாராபாயின் 90வது பிறந்த நாளையொட்டி இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள இந்திய வானியல் கழகத்தில் நடந்த புவன் தொடக்க விழாவில் நாட்டின் முன்னணி விண்வெளி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த தேசிய ரிமோட் சென்சிங் ஏஜென்சி இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளது.

ஏஜென்சியின் இயக்குநர் [^] வி.ஜெயராமன் கூறுகையில், 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தத் திட்டத்திற்காக, இஸ்ரோவிலிருந்து இளம் விஞ்ஞானிகள் சிலர் தேர்வு செய்யப்பட்டனர். இந்தப் பணியின் தொடக்கம் முதல் முடிவு வரை அயராமல் பாடுபட்ட அந்தக் குழு தற்போது வெற்றிகரமாக புவனை உருவாக்கியுள்ளது.

இந்திய செயற்கைக்கோளான ரிசோர்ஸ்சாட்-1 போன்றவற்றிலிருந்து கிடைத்த டேட்டாக்களைப் பயன்படுத்தி புவன் உருவாக்கப்பட்டுள்ளது. புவன் என்றால் சமஸ்கிருத மொழியில் பூமி என்று பொருள்.

இந்த இணையதளத்தில், பூமியில் எங்கு ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பது உள்பட பல்வேறு தகவல்கள் அடங்கியுள்ளது. இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ள தகவல்களுக்கு மத்திய அரசின் ஒப்புதல் உள்ளது. அதேசமயம், பொது பாதுகாப்பு [^] சம்பந்தப்பட்ட தகவல்களை பகிரங்கமாக வெளியிடாமல் காப்போம் என்றார்.

இஸ்ரோ தலைமை செய்தித் தொடர்பாளர் சதீஷ் கூறுகையில், கூகுள் எர்த்துடன் ஒப்பிடுகையில், புவன் சிறப்பானது. இந்திய நகரங்கள் [^] குறித்த அனைத்துத் தகவல்களையும் இது தரும். பயன்பாட்டாளர்களுக்கு இந்த தளம் மிகவும் சவுகரியமானதாக இருக்கும் என்றார்.

கூகுள் எர்த் தளத்தில், 200 மீட்டர் வரைக்கும்தான் 'ஜூம்' செய்ய முடியும். அதேசமயம், புவனில் 10 மீட்டர் வரை செல்ல முடியும் என்று இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புவன் சாப்ட்வேரை http://bhuvan.nrsc.gov.in/ இணையத் தளத்தில் டெளன்லோட் செய்யலாம்.

ஆனால், இஸ்ரோவின் இந்தத் தளத்திலிருந்து புவனை டெளன்லோட் செய்வதற்கு உங்களுக்கு ரொம்பப் பொறுமை வேண்டும். அதிவேக பிராண்ட் பேண்ட் லைனிலேயே இதை டெளன்லோட் செய்ய அரை மணி நேரத்துக்கும் மேலாகிறது. இடையில் சர்வர் 'உட்கார்ந்துவிட்டால்' இன்னும் அரை மணி நேரமும் ஆகும்.

இன்று பகல் முழுவதும் இந்த இணையத் தளம் ஓபன் ஆகவே இல்லை. அதைவிடக் கொடுமை இந்த புவன் குறித்து இஸ்ரோ இணையத் தளத்தில் எந்தத் தகவலும் இல்லை என்பது தான்.

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

இனி செல்போனிலும் "HD" தொழில்நுட்பம்!


நாளுக்கு நாள் பெருகிவரும் மொபைல் போன் பயன்பாட்டை அடுத்து அதை தயாரித்து தரும் நிறுவனங்களுக்கிடையில் பலத்த போட்டி நிலவுகிறது.

இதனால் தாங்கள் தயாரிக்கும் போன்களின் புதிய புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி பயனாளர்களை கவர வேண்டிய கட்டாயத்துக்கு தயாரிப்பு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

அந்த வகையில் அண்மையில் தென்கொரிய நாட்டை சார்ந்த சாம்சங் நிறுவனம் தண்ணீரிலிருந்து பாதுகாக்கும் வகையில் ஒரு மொபைல் போனை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது.

அதே போல் சூரிய ஒளியில் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை புகுத்தி ஒரு போனையும் அறிமுகப்படுத்தியது.அதே போல் இப்போது இருக்கும் TFT-LCD திரையின் அடுத்த கட்டமாக உள்ள AMOLED என்ற தொழில்நுட்பத்தை புகுத்தி Samsung Jet என்ற போனை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது.

இப்படி புதிய புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் தென்கொரிய நிறுவனங்கள் தான் முதலிடத்தில் உள்ளன.

இப்போது தென்கொரிய நாட்டை சாந்த மற்றொரு நிறுவனமான எல்.ஜி நிறுவனம் மொபைல் திரையில் மிக உயர்ரக தொழில்நுட்பமாக முதல் முறையாக HD (HighDefinition) தொழில்நுட்பத்தை புகுத்தி "Chocolate BL40" என்ற பெயரில் ஒரு போனை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

கிட்டதட்ட எல்.சி.டி டிவிக்களில் பயன்படுத்தப்படும் இந்த HD தொழில்நுட்பம் முதமுறையாக மொபைல் போனில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் நாம் நமது மொபைல் போனில் எல்.சி.டி டிவியில் காட்சிகளை பார்ப்பது போன்ற ஒரு புதிய அனுபவத்தை பெறலாம்.

இன்னும் இந்திய சந்தையில் வராத இந்த போனின் விலை 38000/- என்ற குறியீட்டு விலைக்கு விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பேஸ்மேக்கர் கருவியை ஐ-பாட் பாதிக்காது


இருதயத்தில் பேஸ்மேக்கர் கருவியை பொருத்தியிருப்போர் ஐ-பாட் பயன்படுத்தும் போது, அதிலிருந்து வரும் மின்காந்த அலைகளால் சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஹோவர்டு பாஸன் இத்தகவலை தெரிவித்துள்ளார்.பல்வேறு ஐ-பாட்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்யப்பட்டதில், பேஸ்மேக்கர் கருவிகளை பாதிக்கக்கூடிய அளவு மின்காந்த அலைகளை அவை உற்பத்தி செய்யவில்லை என்று தெரிய வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மனித உடலில் சலைன் நிரப்பப்பட்ட பை மூலம், காயில் மூலமாக மின்காந்த அலைகளை உருவாக்கி ஹோவர்டும், அவரது குழுவினரும் சோதனை நடத்தினர்.4ம் தலைமுறை ஐ-பாட், வீடியோவுடன் கூடிய ஐ-பாட், ஐ-பாட் நானோ உள்ளிட்ட மாடல்களைக் கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.இந்த ஆய்வுகள் மூலம் ஐ-பாட்களால், இருதய பேஸ்மேக்கர் கருவிகளுக்கு பாதிப்பில்லை என்று தெரிய வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஐ-பாட் தவிர வேறு இசை உபகரணங்களை வைத்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

திங்கள், 27 ஜூலை, 2009

இணையதள பயன்பாடு: 2013இல் இந்தியாவுக்கு 3வது இடம்

வரும் 2013ஆம் ஆண்டில் அதிகளவில் இணையதளம் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 3வது இடம் கிடைக்கும் என சமீபத்திய அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

‘ஃபாரஸ்டெர் ரிசர்ச்’ (Forrester Research) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 2013ஆம் ஆண்டுக்குள் உலகளவில் இணையதளம் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை 45% அதிகரித்து 2.2 பில்லியனாக உயர்ந்து விடும். இதில் பிற கண்டங்களை விட ஆசியாவில் அதிகளவு வளர்ச்சி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வரும் 2013இல் இணையதளம் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா 3வது இடத்தில் இருக்கும் என்றும், சீனாவும், அமெரிக்காவும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2008 நிலவரப்படி, உலகம் முழுவதும் 1.5 பில்லியன் இணையதளப் பயனாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளோபல் ஆன்லைன் பாப்புலேஷன் ஃபோர்காஸ்ட்- 2008 முதல் 2013 வரை என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், ‘இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை (2013க்குள்) 10 முதல் 20% வரை வளர்ச்சி பெறும்’ எனக் கூறப்பட்டுள்ளது.

புதன், 22 ஜூலை, 2009

யு.எஸ்.பி.சேப்லி ரிமூவ் ( USB Safely Remove )

விண்டோஸ் சிஸ்டத்திலேயே யு.எஸ்.பி. போர்ட்களில் இணைக்கப்படும் சாதனங்களை எடுத்திட சேப்லி ரிமூவ் வசதி தரப்பட்டுள்ளது. இருப்பினும் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் இதற்கென வடிவமைக்கப்பட்டு நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன.USB Safely Remove என்ற அந்த புரோகிராமின் புதிய பதிப்பு 4.1 தற்போது வெளியாகியுள்ளது.

இதில் என்ன புதிதாய் இருக்கிறது என்று பார்க்கலாமா!

1. இந்த புரோகிராமில் இருந்த ஆட்டோ ரன் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. எந்த சாதனத்தை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்தாலும் அதில் உள்ள தேர்ட் பார்ட்டி புரோகிராம் ஒன்றினை இயக்கும் வகையில் செட் செய்திடலாம். இதனைப் பயன்படுத்தி எக்ஸ்புளோரர் புரோகிராமினை இயக்கலாம். அல்லது பைல் மேனேஜரை இயக்கி என்ன என்ன பைல்கள் இருக்கின்றன எனப்பார்க்கலாம்.

2. யு.எஸ்.பி.யில் இணைக்கப்பட்டுள்ள சாதனத்தை நீக்கும் முன் அதில் உள்ள பைல்களை ஆட்டோ பேக் அப் எடுக்கும் வகையில் செட் செய்திடலாம்.

3. எக்ஸ்டெர்னல் டிரைவ் என்றால் அதனை இணைக்கும்போதே ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சோதனை செய்திடும் படி அமைக்கலாம். இதே போல பல செயல்பாடுகளை செட் செய்திடலாம்.
யு.எஸ்.பி.யில் இணைத்த சாதனம் எந்நிலையில் உள்ளது என்று அறிய பல்வேறு ஐகான்கள் காட்டப்படுகின்றன. இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் அனைத்தும் இயக்கத்தில் உள்ளனவா என்று காட்டப்படும். போர்ட்டில் சாதனங்களே இல்லை என்றாலும் ஐகான் மூலம் தெரிந்து கொள்ளலாம். இணைக்கப்பட்ட ஒரு சாதனத்தின் இயக்கம் நிறுத்தப்பட்ட பின்னர் அது நீக்கப்படவில்லை என்றால் காட்டப்படும். இதன் பயன்பாடுகள் குறித்து மேலும் அறிய மேலே தரப்பட்டுள்ள இணைய தளத்தினையே காணவும்

டவுன்லோட் செய்ய : http://safelyremove.com/

செவ்வாய், 21 ஜூலை, 2009

நிலவுக்கு மனிதன் போய் 40 வருடங்கள் நிறைவு


நியூயார்க்: நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்து 40 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது.

40 வருடங்களுக்கு முன்பு ஆம்ஸ்டிராங், ஆல்ட்ரின், காலின்ஸ் ஆகியோருடன் சென்ற அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் நிலவில் இறங்கியது. நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார் ஆம்ஸ்டிராங்.

ஒட்டு மொத்த உலகம் நிலவைப் பார்த்து வியந்து நின்ற நாள் இது.

ஜான் எப். கென்னடி தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்ட இந்த வியப்புக்குரிய பயணம் அமெரிக்கர்களை விண்வெளித்துறையில் தனியிடத்தில் அமர வைத்தது.

அறிவியல் துறையின் வளர்ச்சியி்ல் சாதனைக்குரிய மைல் கல் இந்த நிகழ்ச்சி என்றாலும் கூட, சோவியத் யூனியனுக்குப் போட்டியாக உருவானதே நிலவுப் பயணம் என்பதே நிஜம்.

ஆரம்பத்தில் அப்பல்லோ திட்டத்தில் சில சறுக்கல்கள் ஏற்பட்டன. 3 விணவெளி வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் நாசா இத்திட்டம் குறித்து மறு பரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால் அப்பல்லோ 11 விண்கலம், 1969ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி ஆம்ஸ்டிராங், ஆல்ட்ரின், காலின்ஸ் ஆகிய மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் நிலவுப் பயணத்தைத் தொடங்கியது.

நிலவை அடைந்த அப்பல்லோவின் கமாண்ட் மோட்யூலில் காலின்ஸ் தங்கிக் கொள்ள, முதலி்ல் நிலவில் காலடி எடுத்து வைத்தார் ஆம்ஸ்டிராங். அவரைத் தொடர்ந்து 19 நிமிடங்கள் கழித்து நிலவில் இறங்கினார் ஆல்ட்ரின். நான்கு நாள் நிலவுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பெருமை பொங்க பூமிக்குத் திரும்பியது அப்பல்லோ.

உலகமே வியந்து போய் நின்ற நேரம் அது. அந்த தருணம் குறித்து ஆல்ட்ரின் கூறுகையில், மிகப் பெரிய நிகழ்வு அது, பெருமைக்குரிய தருணம் அது என்றார் ஆல்ட்ரின்.

நிலவில் இறங்கிய ஆம்ஸ்டிராங்கும், ஆல்ட்ரினும் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் அங்கு இருந்தனர். நிலவில் மாதிரி மண்ணை எடுத்துக் கொண்டனர். புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் நாசா நேரடியாக ஒளிபரப்பு செய்து உலகை சிலிர்க்க வைத்தது.

நிலவுப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்புவதற்கு முன்பு நிலவில் அமெரிக்க கொடியை நாட்டினர் ஆல்ட்ரினும், ஆம்ஸ்டிராங்கும்.

நிலவைப் பார்த்து கதை பேசிக் கொண்டிருந்த காலத்திற்கு அமெரிக்கா முற்றுப்புள்ளி வைத்து 40 வருடங்கள் உருண்டோடி விட்டத அமெரிக்க மக்கள் மட்டுமல்லாது உலக மக்களும் கூட பெருமையுடன் நினைவு கூருகின்றனர்.

திங்கள், 20 ஜூலை, 2009

சூரிய, சந்திர‌ கிரகண தொழுகைகள்:

(வரும் July 22 2009 துபாயில் சூரிய கிரஹண நேரம் காலை y 5:43 - 5:48; இந்தியாவில் சூரிய கிரஹண நேரம் காலை J5:31 - 7:25 )

விரிந்து பரந்த இப்பிரபஞ்சமெனும் புத்தகத்தின் எந்தப் பக்கத்திலும் அதை உருவாக்கியவனின் பெயர் எழுதி வைக்கப் படவில்லை. ஆனால் பிரபஞ்ச புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்தும் இதனைப் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்பதைப் பறைசாற்றுகின்றன!
அப்படைப்பாளனின் வல்லமைகள், குணநலன்கள் குறித்த தேவையான விபரங்களை அப்புத்தகத்தின் வாக்கியங்கள் நமக்குக் கற்றுத் தருகின்ர்றான்

இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன். (7:54)

இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன. (21:33)

சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. (55:05)

நபியவர்களது காலத்தில் (அவர்களது மகனான) இப்றாஹீம் மரணித்த தினத்தன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களெல்லாம் அது இப்றாஹீமின் மரணத்தினாலே ஏற்பட்பது என்று பேசிக்கொண்டனர். (இதனைக்கேட்ட) நபி(ஸல்) அவர்கள் சூரியனும் சந்திரனும் யாருடைய இறப்பிற்கும் மறைவது கிடையாது நீங்கள்(அதனைக்) கண்டால் தொழுங்கள் மேலும் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை புரியுங்கள் எனக் கூறினார்கள் (புஹாரி)

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார்கள். (ருவிலிருந்து) எழுந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் மற்றொரு ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் முதல் ரக்அத்தில் செய்தது போன்றே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். கிரகணம் விலகியதும் தொழுகையை முடித்தார்கள். மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, ‘சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்கோ எவருடைய வாழ்வுக்கோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் காணும்போது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவனைப் பெருமைப் படுத்துங்கள்; தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்” என்று குறிப்பிட்டார்கள். மேலும் தொடர்ந்து ‘முஹம்மதின் சமுதாயமே! ஓர் ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்யும்போது அல்லாஹ் கடுமையாக ரோசம் கொள்கிறான். முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரித்து அதிகமாக அழுவீர்கள்’ என்றும் குறிப்பிட்டார்கள். புஹாரி: 1044 ஆயிஷா (ரலி)

சூரிய கிரகண தொழுகை:

கிரஹண சமயத்தில் 2 ரக்அத் நஃபில் தொழுவது சுன்னத். இதற்கு ஸலாத்துல் குஷூஃப் என்று சொல்லப்படும். இந்த தொழுகையை பாங்கு, இகாமத் இல்லாமல் ஜமாஅத்தோடு தொழ வேண்டும்.

இந்த நேரத்தில் நாம் செய்யவேண்டியது:

அதிகமாக துஆ செய்வதுபாவங்களைநினைத்து, வருந்தி,

அஞ்சுவதுசுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என்று அதிகமாக ஓதுவதுஇஸ்திஃக்ஃபார் அதிகமாக செய்வதுதர்மம் செய்வதுசந்திர கிரஹண தொழுகை:சந்திர கிரஹண நேரத்தில் 2 ரகஅத் நஃபில் (ஸலாத்துல் ஃகுஷூஃப்)
தொழுவது சுன்னத்தாகும். இந்த தொழுகை ஜமாஅத் இல்லாமல் தனித்தனியாக தொழவேண்டும்.

சூரிய கிரகணம் பற்றிய‌ முழு விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.
http://www.shadowandsubstance.com/

லால்பேட்டை எக்ஸ்பிரஸ்

வெள்ளி, 17 ஜூலை, 2009

சந்த்ரயான் விண்கலத்தின் சென்சார் பழுதானது-தொடர்ந்து இயங்குவதில் சிக்கல்!


இந்தியா மிகப் பெரும் ஆராவாரத்துடன் நிலவுக்கு அனுப்பிய சந்த்ரயான்-1 விண்கலத்தின் முக்கிய சென்சார் பழுதடைந்துவிட்டது. இதனால் அந்த விண்கலமே பயனில்லாமல் போகும் என்று தெரிகிறது.

நிலவை ஆராய கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி இந்த விண்கலத்தை பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ.

இந்தக் கலத்திலிருந்து பிரிந்து சென்ற ஒரு துணைக் கலம் நிலவைத் தொட்டது. அதே நேரத்தில் சந்த்ராயன்-1 விண்கலம் நிலவை 100 கி.மீ. உயரத்தில் சுற்றிவந்தபடி படங்கள் எடுத்தும், நிலவின் வளி மண்டலத்தில் சில ஆய்வுகளையும் நடத்தி வந்தது.

இந் நிலையில் அதன் 'ஸ்டார் சென்சார்' பழுதடைந்துவிட்டது.

இந்த ஸ்டார் சென்சார் தான் சந்த்ராயன்-1 விண்கலத்தை நிலவை நோக்கி திரும்பியிருக்கச் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பதாகும். இது பழுதடைந்துவிட்டதால் சந்த்ராயனின் கேமராக்கள் நிலவை விட்டு வேறு பக்கமாக திரும்பிவிட்டன.

இதையடுத்து சந்த்ராயனில் உள்ள ஆன்டெனா உதவியாலும், கைராஸ்கோப்கள் உதவியாலும் விண்கலத்தை நிலவை நோக்கித் திருப்பியுள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். ஆனால், சென்சார் உதவியில்லாமல் தொடர்ந்து நீண்ட நாட்கள் இப்படியே வைத்திருக்க முடியாது.

எனவே 2 ஆண்டுகள் நிலவை ஆராயும் வகையில் உருவாக்கப்பட்ட சந்த்ராயனின் ஆயுட்காலம் விரைவிலேயே முடிவுக்கு வந்துவிடும் என்று கருதப்படுகிறது.

(பழங்காலத்தில் முக்கிய நட்சத்திரங்களை வைத்து முன்னோர்கள் திசைகளை அறிந்தது மாதிரி, சந்த்ராயனில் உள்ள ஸ்டார் சென்சாரும் நட்சத்திரங்களை அடிப்படையாக வைத்து நிலவி்ன் திசையை உணர்ந்து, விண்கலத்தை அதை நோக்கி திருப்பும் கருவியாகும்).

வியாழன், 16 ஜூலை, 2009

இரு பெரும் பிஸ்தாக்களின் யுத்தம் – Microsoft Vs Google

Microsoft மற்றும் Google இடையாலான போட்டி சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அண்மையில்தான் Google இற்குப் போட்டியாக Microsoft தனது புதிய தேடுபொறியான bing இனை களத்தில் இறக்கியது. சும்மா இருக்காத Google, Microsoft இனது இயங்குதளத்திற்குப் போட்டியாக தனது புதிய இயங்குதளமான Google Chrome OS இனை அறிவித்தது.

அந்த சூடு தணியுமுன்பாகவே Microsoft அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது Google இன் Docs இற்குப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது Microsoft office இன் அடுத்த பதிப்பான Microsoft office 2010 இல் ஆன்லைனில் பயன்படுத்தும் வசதியையும் வளங்குகின்றது. இந்த Web based applications அவற்றின் ஆன்லைன் தன்மையால் install செய்ய எடுக்கும் இடமும் குறைவாகவே இருக்கும்.

மேலும் அவற்றை இணையத்தில் Save செய்யவும், உருவாக்கிப் பயன்படுத்தவும், அடுத்தவருடன் பகிரவும் இலகுவாக இருக்கும். Google இன் Docs இல் இப்போதிருக்கும் வசதிகளை விட இது அதிகளவான வசதிகளைக் கொண்டிருக்கும்.

இந்த வசதியை இலவசமாகவே Microsoft வளங்கவிருக்கிறது. அதற்குத் தேவையானது ஒரு Windows live கணக்கு மாத்திரமே. அது இல்லாதவர்கள் இலவசமாக உருவாக்கிக்கொள்ளவும் முடியும். இந்த Microsoft office 2010 இன்னும் சில மாதங்களிலேயே பாவனைக்கு வரவிருக்கிறது.

இதுவரை நாளும் இணையத்தில் ஜாம்பவானாகத் திகழ்ந்த google இற்கும், மென்பொருட் துறையில் பிஸ்தாவான Microsoft உம் மோதிக்கொள்வது அடுத்த தலைமுறைக்கான கணினித்துறையின் வளற்சிநான் ஆரம்பம் எனக் கொள்ளலாம்.

எது எப்படியோ, ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதுபோல, இனி நம்ம காட்டில மழைதான்.

மொபைல் போன் கதிர்வீச்சால் தூக்கமின்மை ஏற்படும்


செல்போன்களை பயன் படுத்துவதால் புற்று நோய், நரம்ப தளர்ச்சி, கேட்கும் திறன் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.ஆனால் இந்த தகவல்கள் ஆதாரமற்றவை. அவை நிரூ பிக்கப்படவில்லை என்று மாறுபட்ட தகவல்களும் வெளியாயின.

இந்த நிலையில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க டாக்டர்கள் இணைந்து ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.இந்த ஆய்வில் மொபைல் போன்களில் இருந்து வெளி யாகும் கதிர்கள் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இந்த கதிர் வீச்சு நமது தூக்கத்தை பாதிக்கும். இதனால் தூக்கம் வராமல் அவதிப்பட நேரிடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.மூளையின் செல்களை இந்த கதிர்வீச்சு தூண்டி விடுவதால் மூளை விழிப்பு டன் செயல்படும்.

இதனால் ஆழ்ந்த தூக்கம் வராது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 35 ஆண்கள் மற்றும் 36 பெண்களிடம் இந்த சோதனை நடத்தப்பட்டு நிரூபிக்கப் பட்டுள்ளது. இவர்கள் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்

செவ்வாய், 26 மே, 2009

முதல் செயற்கைக்கோளை ஏவுகிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது முதல் செயற்கைக்கோளை வரும் அக்டோபர் மாதம் விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளது. இது அந்நாட்டு அரசு மற்றும் வர்த்தக நிறுவனங்களின் தொலைத் தொடர்பு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுதொடர்பாக அல்-யாஹ் செயற்கைக்கோள் தொடர்பு நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அலுவலர் மார்டின் ஜீ, கலீஜ் டைம்ஸ் (Khaleej Times) நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், செயற்கைக்கோளின் வடிவம் மற்றும் அது சுமந்து செல்லும் பொருட்களின் எடை இறுதி செய்யப்பட்டு விட்டதாகக் தெரிவித்துள்ளார்
யாஷாட்-1ஏ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், அந்நாட்டின் தொலைத் தொடர்பு சேவைக்காக பயன்படுத்தப்படும் என்றும் மேற்கு ஆசியா, ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஒருங்கிணைந்த தொலைத்தொடர்பு சேவையை வழங்க இது பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது
யாஷாட்-1ஏ செயற்கைக்கோள் தயாரிப்புப் பணிகள் துரிதமாக நடந்து வரும் நிலையில், இதற்கு அடுத்தப்படியாக யாஷாட்-1பி என்ற செயற்கைக்கோளை 2011ஆம் ஆண்டின் மத்தியில் விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது

செவ்வாய், 5 மே, 2009

இணைய இணைப்பு டவுண் ஆனால் என்ன செய்யலாம்???

இன்டர்நெட் இணைப்பு கிடைக்காமல் டவுண் ஆவது என்பது நமக்கு தும்மல் வருவது போல. தும்மலையாவது ஒரு சில காரணங்களுக்காகக் கட்டாயம் வரும் என எதிர்பார்க்கலாம். ஆனால் இன்டர்நெட் இணைப்பு எப்போது கட் ஆகும்; மீண்டும் எப்போது வரும் எனச் சொல்ல முடியாது. பொதுவாக இது போல கட் ஆனால், உடனே கம்ப்யூட்டரை ரீபூட் செய்து பார்க்கிறோம்

நமக்கு இன்டர்நெட் சர்வீஸ் வசதி தரும் நிறுவனத்தைத் திட்டித் தீர்க்கிறோம். கட்டிய காசு தீர்ந்தவுடன் முதலில் இவனை மாற்றினால் தான் நிம்மதி என்கிறோம். இருப்பினும் கீழ்க்காணும் விஷயங்களையும் செய்து பார்க்கலாமே!

1. வேறு எதனையும் செய்வதற்கு முன்னால், உங்கள் மோடத் தினை மீண்டும் ரீபூட் செய்திடுங்கள். ஒன்றுமில்லை, அதற்கு வரும் மின்சக்தியை நிறுத்தி சில நொடிகள் கழித்து மீண்டும் ஆன் செய்திடுங்கள். பின் உங்கள் ரூட்டரை ஆன் செய்திடுங்கள்.

2. உங்களுக்கு ரூட்டர் வழி இணைப்பு இல்லை என்றால் கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடுங்கள். அதன் பின் கேபிள் மோடத்தினை பூட் செய்திடுங்கள்.

3. மோடத்தில் விளக்குகள் எரிந்து டேட்டா பரிமாற்ற விளக்குகள் சிமிட்டத் தொடங்கினால் இன்டர்நெட் இணைப்பு வந்துவிட்டது என்று பொருள். அனைத்து விளக்குகளும் எரியவில்லை என்றால் உங்கள் இணைப்பிற்கான கேபிள்கள் அனைத்தும் சரியாகப் பொருத்தப்பட்டிருப்பதனை உறுதி செய்திடுங்கள். அதன் பின் உங்களுக்கு இணைப்பு தந்துள்ள நிறுவனத்தின் கஸ்டமர் சர்வீஸ் எண்ணுக்கு போன் செய்திடுங்கள். அதற்கு முன் அவரிடம் எது போன்ற குறை என்று சொல்ல வேண்டும் என்பதனைத் தீர்மானித்து வைத்துக் கொள்ளுங்கள்.

4. ஸ்டார்ட் ரன் அழுத்தி பாக்ஸில் cmd என டைப் செய்து என்டர் தட்டவும். உங்கள் திரையில் கறுப்பு பாக்ஸில் டாஸ் இயக்கம் கிடைக்கும். அங்கு துடிக்கும் கர்சரில் Ipconfig /all என டைப் செய்திடுங்கள். உங்களுடைய default gateway மற்றும் DNS servers அறிந்து கொள்ளுங்கள். பின் இவற்றிற்கு கட்டளை கொடுத்துப் பாருங்கள். பதில் கிடைக்கிறதா?



5. இவை அனைத்தும் உங்கள் இணைப்பைத் தராவிட்டால், traceroute எனக் கொடுத்துப் பார்த்தால் எங்கு பிரச் சினை ஏற்பட்டு இணைப்பு அறுந்து போகிறது என்று தெரியும். traceroute என்பது ஒரு கட்டளைச் சொல். உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து தகவல்கள் ஒரு பாக்கெட்டாக எங்கு எங்கு செல்கின்றன என்று காட்டச் சொல்லும் ஒரு கட்டளை.
traceroute எனக் கொடுத்து பின் ஒரு ஸ்பேஸ் கொடுத்து உங்களுக்குச் சிக்கலைத் தரும் தளத்தின் முழு முகவரியைத் தர வேண்டும். பொதுவாக ஒரு தளம் கிடைக்கவில்லை என் றால் இது போல traceroute மற்றும் ping கட்டளைகள் கொடுத்துப் பார்த்துவிட்டுப் பின் இன்டர் நெட் சேவை தரும் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். நிறுவனத்தின் சர்வரில் பிரச்சினை இருந்தால் அவர்கள் உடனே கவனித்துச் சரி செய்வார்கள்.
தகவலுக்கு நன்றி : S.M.S. ஹமீது, துபாய் .

LinkWithin

Blog Widget by LinkWithin