விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 ஏப்ரல், 2011

கிரிக்கெட் உலக சாம்பியனாக வரலாறு படைத்ததுடன் புதிய உலக சாதனையும் படைத்துள்ளது நமது இந்தியா


10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது நமது இந்தியா.

மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்று சாம்பியன் ஆனது



1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு 28 ஆண்டுகள் கழித்து இப்போது தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது.

இந்த முறை கோப்பையை வென்றதன் மூலம் கோப்பையை நடத்திய நாடுகள் அதன் சொந்த மண்ணில் இறுதி ஆட்டத்தை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றி புதிய சாதனைப் படைத்துள்ளது



இந்திய அணியின் வெற்றி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், உரக்கக் குரல் எழுப்பியும் கொண்டாடினர். 1983-ல் இந்தியா கோப்பையை வென்றபோது ஏற்பட்ட அதே உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் இந்தியா முழுவதும் காண முடிந்தது.

சனி, 2 ஏப்ரல், 2011

கிரிக்கெட் உலக கோப்பை 2011 நமக்கே !

இந்த 2011 கிரிக்கெட் உலக கோப்பை நமக்கு தான் என்று நினைக்க தோன்றுகிறது. ஏன் என்றால் கடந்த 1983 ஆம் வருட காலண்டரும் 2011 ஆம் வருட காலண்டரும் ஒரே மாதிரி உள்ளத்தால் இது கூட ஒரு காரணம் என்று சொல்லலாம்.




ஆனால் எல்லாம் வல்ல இறைவனின் நாட்டம் என்ன? என்பதை யாரும் அறியாத ஒன்று என்பது தெளிவான விஷயம் ஆகும்.

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

உலக கோப்பை கிரிகெட் 2011 இணையத்தில் நேரடியாக காண


2011 உலக கோப்பை கிரிகெட்டை இணையத்தளத்தில் நேரடியாக கண்டு களிக்க கீழ் காணும் சுட்டியை சொடுக்கவும்.

 

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை


10வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் வரும் 19ம் தேதி தொடங்குகின்றன.

இந்த மூன்று நாடுகளிலும் நடக்கும் போட்டிகளில் 14 அணிகள் பங்கேற்கின்றன.

அதன் விவரம்:

பிப் 19 வங்கதேசம் Vs இந்தியா பி மிர்பூர் (வங்கதேசம்) பகல் 2 மணி

பிப் 20 கென்யா Vs நியூசிலாந்து ஏ சென்னை காலை 9.30 மணி

பிப் 20 இலங்கை Vs கனடா ஏ ஹம்பன்டோட்டா (இலங்கை) பகல் 2.30 மணி

பிப் 21 ஆஸ்திரேலியா Vs ஜிம்பாப்வே ஏ அகமதாபாத் பகல் 2.30 மணி

பிப் 22 இங்கிலாந்து Vs நெதர்லாந்து பி நாக்பூர் பகல் 2.30 மணி

பிப் 23 கென்யா Vs பாகிஸ்தான் ஏ ஹம்பன்டோட்டா பகல் 2.30 மணி

பிப் 24 தென் ஆப்பிரிக்கா Vs வெஸ்ட் இண்டீஸ் பி டெல்லி பகல் 2.30 மணி

பிப் 25 ஆஸ்திரேலியா Vs நியூசிலாந்து ஏ நாக்பூர் காலை 9.30 மணி

பிப் 25 வங்கதேசம் Vs அயர்லாந்து பி மிர்பூர் பகல் 2 மணி

பிப் 26 இலங்கை Vs பாகிஸ்தான் ஏ கொழும்பு பகல் 2.30 மணி

பிப் 27 இந்தியா Vs இங்கிலாந்து பி பெங்களூர் பிறபகல் 2.30 மணி

பிப் 28 கனடா Vs ஜிம்பாப்வே ஏ நாக்பூர் காலை 9.30 மணி

பிப் 28 நெதர்லாந்து Vs வெஸ்ட் இண்டீஸ் பி டெல்லி பகல் 2.30 மணி

மார்ச் 1 இலங்கை Vs கென்யா ஏ கொழும்பு பகல் 2.30 மணி

மார்ச் 2 இங்கிலாந்து Vs அயர்லாந்து பி பெங்களூர் பகல் 2.30 மணி

மார்ச் 3 நெதர்லாந்து Vs தென் ஆப்பிரிக்கா பி மொகாலி பகல் 2.30 மணி

மார்ச் 3 கனடா Vs பாகிஸ்தான் ஏ கொழும்பு பகல் 2.30 மணி

மார்ச் 4 நியூசிலாந்து Vs ஜிம்பாப்வே ஏ அகமதாபாத் காலை 9.30 மணி

மார்ச் 4 வங்கதேசம் Vs வெஸ்ட் இண்டீஸ் பி மிர்பூர் பகல் 2 மணி

மார்ச் 5 இலங்கை Vs ஆஸ்திரேலியா ஏ கொழும்பு பகல் 2.30 மணி

மார்ச் 6 இங்கிலாந்து Vs தென் ஆப்பிரிக்கா பி சென்னை காலை 9.30 மணி

மார்ச் 6 இந்தியா Vs அயர்லாந்து பி பெங்களூர் பகல் 2.30 மணி

மார்ச் 7 கனடா Vs கென்யா ஏ டெல்லி பகல் 2.30 மணி

மார்ச் 8 நியூசிலாந்து Vs பாகிஸ்தான் ஏ பல்லிகிலே (இலங்கை) பகல் 2.30 மணி

மார்ச் 9 இந்தியா Vs நெதர்லாந்து பி டெல்லி பகல் 2.30 மணி

மார்ச் 10 இலங்கை Vs ஜிம்பாப்வே ஏ பல்லிகிலே பகல் 2.30 மணி

மார்ச் 11 அயர்லாந்து Vs வெஸ்ட் இண்டீஸ் பி மொகாலி காலை 9.30 மணி

மார்ச் 11 வங்கதேசம் Vs இங்கிலாந்து பி சிட்டகாங் பகல் 2.30 மணி

மார்ச் 12 இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா பி நாக்பூர் பகல் 2.30 மணி

மார்ச் 13 கனடா Vs நியூசிலாந்து ஏ மும்பை காலை 9.30 மணி

மார்ச் 13 ஆஸ்திரேலியா Vs கென்யா ஏ பெங்களூர் பகல் 2.30 மணி

மார்ச் 14 வங்கதேசம் Vs நெதர்லாந்து பி சிட்டகாங் காலை 9 மணி

மார்ச் 14 பாகிஸ்தான் Vs ஜிம்பாப்வே ஏ பல்லிகிலே பகல் 2.30 மணி

மார்ச் 15 அயர்லாந்து Vs தென் ஆப்பிரிக்கா பி கொல்கத்தா பகல் 2.30 மணி

மார்ச் 16 ஆஸ்திரேலியா Vs கனடா ஏ பெங்களூர் பகல் 2.30 மணி

மார்ச் 17 இங்கிலாந்து Vs வெஸ்ட் இண்டீஸ் பி சென்னை பகல் 2.30 மணி

மார்ச் 18 அயர்லாந்து Vs நெதர்லாந்து பி கொல்கத்தா காலை 9.30 மணி

மார்ச் 18 நியூசிலாந்து Vs இலங்கை ஏ மும்பை பகல் 2.30 மணி

மார்ச் 19 வங்கதேசம் Vs தென் ஆப்பிரிக்கா பி மிர்பூர் காலை 9 மணி

மார்ச் 19 ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் ஏ கொழும்பு பகல் 2.30 மணி

மார்ச் 20 கென்யா Vs ஜிம்பாப்வே ஏ கொல்கத்தா காலை 9.30 மணி

மார்ச் 20 இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் பி சென்னை பகல் 2.30 மணி

கால் இறுதிப் போட்டிகள்:

1. மார்ச் 23: முதல் கால் இறுதிப் போட்டி (ஏ1 Vs பி4)- மிர்பூர்- பகல் 2 மணி

2. மார்ச் 24: 2வது கால் இறுதி போட்டி (ஏ2 Vs பி3)- அகமதாபாத்- பகல் 2.30 மணி

3. மார்ச் 25: 3வது கால் இறுதி போட்டி (ஏ3 Vs பி2)- மிர்பூர்- பகல் 2 மணி

4. மார்ச் 26 கால் இறுதி (ஏ4 பி1) கொழும்பு பகல் 2.30 மணி

அரையிறுதிப் போட்டிகள்:

1. மார்ச் 29: கொழும்பு- பகல் 2.30 மணி

2. மார்ச் 30: மொகாலி- பகல் 2.30 மணி

இறுதிப்போட்டி:

ஏப்ரல் 2-மும்பை- பகல் 2.30 மணி


2011ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ள நகரங்கள், மைதானங்களின் விவரம்:

இந்தியா - மும்பை, டெல்லி, சென்னை, நாக்பூர், மொஹாலி, அகமதாபாத், பெங்களூர் மற்றும் கொல்கத்தா.

இலங்கை - கொழும்பு, ஹம்பந்தோட்டா, கண்டி.

வங்கதேசம் - டாக்கா, சிட்டகாங்.

அணிகள் விவரம்:

மொத்தம் 14 அணிகள். இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

ஏ பிரிவு: ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே, கனடா, கென்யா.

பி பிரிவு: இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம், மேற்கு இந்தியத் தீவுகள், நெதர்லாந்து, அயர்லாந்து.

போட்டிகள் நடைபெறும் மைதானங்கள்:

இந்தியா

எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சேப்பாக்கம், சென்னை

சர்தார் படேல் குஜராத் ஸ்டேடியம், மோத்தீரா, அகமதாபாத்

விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், நாக்பூர்

பெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியம், டெல்லி

எம். சின்னச்சாமி ஸ்டேடியம், பெங்களூர்

பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், மொஹாலி

வாங்கடே ஸ்டேடியம், மும்பை

ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா

வங்கதேசம்

ஷெர் பங்களா தேசிய ஸ்டேடியம், மிர்பூர், டாக்கா

ஷெர் அகமது செளத்ரி ஸ்டேடியம், சிட்டகாங்

இலங்கை

ஆர். பிரேமதாஸ ஸ்டேடியம், கொழும்பு

பலிகெல்லே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், கண்டி

மகிந்தா ராஜபக்சே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், ஹம்பந்தோட்டா

தகவல் : தட்ஸ்தமிழ்

வெள்ளி, 11 ஜூன், 2010

19வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று தொடக்கம்


சொவேடோ (ஜோஹன்னஸ்பர்க்): உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் 19வது உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜோஹன்னஸ்பர்க் நகரில் இன்று தொடங்குகிறது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை சர்வதேச கால்பந்து சம்மேளனம் நடத்தி வருகிறது. தற்போது தென் ஆப்பிரிக்காவில் 19வது உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த கோலாகல திருவிழா ஜோஹன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் தொடக்க விழா நேற்றிரவு ஆர்லான்டோ ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெற்றது. பாடகி ஷகீரா, ஜான் லிஜென்ட், ஆஜ்ஜெலிக் கிடிஜோ, அலிசியா கீஸ், பிளாஸ் ஐட் பீஸ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று ஆடிப் பாடினர்.

இன்று முதல் போட்டிகள் தொடங்குகின்றன. ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் முதல் போட்டியில், தென் ஆப்பிரிக்காவும், மெக்சிகோவும் மோதுகின்றன.

ஜூலை 11ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. அன்று இறுதி்ப் போட்டி நடைபெறுகிறது.

மொத்தம் 32 அணிகள் இதில் கலந்து கொள்கின்றன. 64 போட்டிகள் நடைபெறவுள்ளன. 32 அணிகளும் தலா நான்கு அணிகளைக் கொண்ட எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 16 அணிகள் காலிறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும். அவற்றிலிருந்து 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். அதிலிருந்து நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

பிரேசில், அர்ஜென்டினா ஆகிய அணிகள் வழக்கம் போல ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பையும், ஆதரவையும் ஏந்தியபடி போட்டித் தொடருக்குள் நுழையவுள்ளன. பிரேசிலே கோப்பையை வெல்லும் என பொதுவான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வியாழன், 31 டிசம்பர், 2009

கபடி போட்டி, ஸ்ரீவை அணிக்கு 6வது பரிசு

எட்டயபுரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அம்பேத்கர் விளையாட்டு கழகம் சார்பில் மின்னொளி கபடி போட்டி நடந்தது.

இப்போட்டியில் விருதுநகர் தூத்துக்குடி மாவட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 34 அணிகளை சார்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

அதில் ஸ்ரீவைகுண்டம் எஸ்.எம்.எஸ்.அணி 6வது இடத்தை பிடித்து ரூ.1001.00 பரிசை பெற்றது.

விழா ஏற்பாடுகளை எட்டயபுரம் அம்பேத்கர் விளையாட்டு கழகம் தலைவர் ஜெயபால், செயலாளர் சின்னப்பர், பொருளாளர் மோட்சம், ஆலோசகர் அலெக்சாண்டர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்

வியாழன், 5 நவம்பர், 2009

ஸ்ரீவை.,யில் பலமாத காலமாக பூட்டிகிடக்கும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட விளையாட்டு உபகரணங்கள்

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உபயோகமில்லாமல் பூட்டிகிடக்கும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட விளையாட்டு உபகரணங்கள் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையால் பாழாகி வருகிறது என இளைஞர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

நல்ல உடல்கட்டுள்ள இளைஞர்களை உருவாக்கவும் உலக அரங்கில் விளையாட்டில் பின்தங்கி இருக்கும் இந்தியாவை முன்னேற்றுவதற்காக தமிழக அரசு அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் கிராமபுற மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள், ஜிம் உபகரணங்கள் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வழங்கி வருகிறது.

இத்தகைய உபகரணங்கள் பெரும்பாலும் அந்தந்த பஞ்.,அலுவலகங்களின் பழைய பேப்பர் வைக்கும் கிடங்குகளில் தான் முடங்கி கிடக்கிறது. இதனால் கிராமபுற இளைஞர்களுக்கு இதன் பயன்பாடே இல்லாமல் போகிறது.

முன்பெல்லாம் கிராமங்களில் கிட்டிபுளி, கோலிகுண்டு, பம்பரம், கிளியாந்தட்டு போன்றவைகளும் கபடி, கோ-கோ, மல்யுத்தம், உரியடி, வழுக்குமரம் போன்ற வீரவிளையாட்டுகளும் அவ்வப்போது நடந்து வந்தது.

ஆனால் காலமாற்றங்களுக்கேற்ப நாகரிகங்களின் வளர்ச்சி ஆக்கிரமிப்பு செய்ததன் காரணமாக கிரிக்கெட், ஹாக்கி, புட்பால், வாலிபால் போன்ற தேசிய விளையாட்டுக்கள் கிராமபுறத்தை ஆக்கிரமிப்பு செய்ய துவங்கி உள்ளது.
ஆனால் அதற்கான இடவசதியும், உபகரணங்களும் போதிய அளவும் போதிய பயிற்சியும் கிடைக்காததால் இவர்களுக்கு சரியான பயிற்சியும் முயற்சியும் கிடைப்பது இல்லை.

இதனை புரிந்த தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கிராமபுறங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தேவையான உபகரணங்களை அவரவர் தகுதிக்கு ஏற்ப இடவசதிக்கேற்ப வழங்கி வருகிறது.

இதன்படி ஸ்ரீவைகுண்டம் பஞ்.,யூனியனுக்குட்பட்ட ஸ்ரீபராங்குசநல்லூர் ஊராட்சியில் விளையாட்டு தளம் அமைப்பதற்கு பஞ்.,எல்லைக்குட்பட்ட பள்ளி விளையாட்டு மைதானத்தில் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்து சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள் வந்தும் அது உபயோகபடாமல் ஒரு மூலையில் முடங்கி கிடப்பதால் யாருக்கு என்ன லாபம்.
இதுகுறித்து யூனியன் நிர்வாகம், மாவட்ட திட்ட இயக்குனர் ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல் ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்.,குட்பட்ட பகுதிகளில் விளையாட்டு உபகரணங்கள் வந்தும் மூலையில் முடங்கி கிடக்கிறது. முடங்கி கிடக்கும் விளையாட்டு உபகரணங்கள், இதுபோல் எத்தனை பஞ்.,களில் டவுன் பஞ்.,களில் மூலையில் முடங்கி கிடக்கிறதோ தெரியவில்லை.
அரசின் இது போன்ற திட்டங்கள் மாணவர்களுக்கோ, இளைஞர்களுக்கோ போய் சேராமல் மூலையில் முடங்கி கிடப்பதால் யாருக்கு என்ன லாபம். எதிர்காலம் இவர்கள் கையில் என்று மார்தட்டி பேசும் மேடை பேச்சுகள் இதில் அடிபட்டு போய்விட்டது.

அரசின் லட்சக்கணக்கான பணம் இவ்வாறு வீணாகுவதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் திட்ட இயக்குனர் ஆகியோர் நடவடிக்கை எடுப்பார்களா? உரிய விளையாட்டு உபகரணங்கள் போதிய அளவில் உரிய இடத்திற்கு சென்றடைந்து இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்படுமா? என்பதுதான் கேள்வி, பதில் வரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்தி: தினமலர்

புதன், 1 ஜூலை, 2009

ஒலிம்பிக் போட்டி வரலாறு


ஒலிம்பிக் போட்டி கி.மு. 776- ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்தது.

கி.பி. 393-ல் அப்போதைய கிரேக்க அரசர் தியோடிசியல் இந்த ஒலிம்பிக் போட்டிக்கு தடைவிதித்தார். பின்னர் 1890-ல் மீண்டும் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்டன.

கிரேக்கர்களின் கடவுள்களில் ஒருவரான ஜியஸ் கடவுளை போற்றும் வகையில் கொண்டாடப்பட்ட திருவிழாவின் ஒரு பிரிவுதான் ஒலிம்பிக்போட்டி. இந்த போட்டியில் கிரேக்க மரபினர் மட்டுமே கலந்து கொண்டனர். அப்போதைய கிரேக்க சாம்ராஜ்யம் ஸ்பெயின், துருக்கி வரை பெரியாதாக இருந்தது.

போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு ஆலிவ் இலைகளால் ஆனா கிரிடம் சூட்டப்பட்டது.
இந்த ஒலிம்பிக் போட்டியை புதுபிக்க பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பேரன் பியரி டி குபர்டின் என்பவர் விரும்பினார். அதன்படி 1896 ஏப்ரல் 6 -ம் தேதி ஏதென்ஸ் நகரில் பல நாடுகள் கலந்து கொண்ட முதல் ஒலிம்பிக் போட்டி ஆரம்பமானது. இந்த போட்டியை அப்போதைய கிரிஸ் அரசர் முதலாம் ஜார்ச் அரசன் தொடங்கிவைத்தார்.

முதல் ஒலிம்பிக் போட்டியில் 14 உலக நாடுகள் கலந்து கொண்டன. தடகள போட்டிகள், குத்துசண்டை, மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், சைக்கிள் ரேஸ், நீச்சல், ஜிம்னாஸ்டிக், பளுதூக்குதல் ஆகிய போட்டிகள் இதில் இடம் பெற்றன.

ஒலிம்பிக்கின் 11-வது நாள் மராத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் மராத்தான் போட்டியில் கிரேக்க வீரர் ஸ்பிரி டான் லூயின் தங்கம் வென்றார்.

1914-ம் ஆண்டு பேரான் டி.குபர்ட் ஒலிம்பிக் கமிட்டியின் 20-வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் ஒலிம்பிக் சங்க மாநாட்டின் போது வெள்ளை நிறத்திலான ஒலிம்பிக் கொடியை நிர்வாகிகளிடம் வழங்கினார்.

1920-ல் ஆன்ட் லெர்ப் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போதுதான் இந்தக் கொடி ஏற்றப்பட்டது. வெள்ளை நிறத்தில் அமைந்திருக்கும் ஒலிம்பிக் கொடியின் நடுவே அழகிய 5 வளையங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிபிணைந்தபடி அமைந்திருக்கும். இது ஒலிம்பிக்கில் பங்குபெரும் 5 கண்டங்களையும் குறிக்கும். மேல்புற வரிசையில் நீலம், கருப்பு, சிகப்பு நிறத்திலும் கீழ்வரிசையில் மஞ்சள், பச்சை நிறத்திலும் வளையங்கள் அமைந்திருக்கும்.

1920-ல் ஏற்றப்பட்ட கொடியைதான் 1984-ம் ஒலிம்பிக் வரை பயன்படுத்தினர். 1988 சியோல் ஒலிம்பிக்கில்தான் பழைய கொடி மாற்றப்பட்டது. புதிய கொடி ஏற்றப்பட்டது.

1896-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் சேர்த்துக் கெள்ளப்படவில்லை. 1900-ம் ஆண்டு பாரிசில் நடந்த 2-வது ஒலிம்பிக் போட்டியில் கோல்ப், வில்வித்தை, டென்னிஸ் ஆகிய மூன்று விளையாட்டுகளிலும் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

1928-ல் தான் பெண்கள் தடகள போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. த்ற்பொது ஒலிம்பிக் பொட்டியில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்துவிட்டனர். இருந்தாலும் ஒருசில நாடுகள் சர்வதேச போட்டிகளில் பெண்கள் கலந்து கொள்ள தடை விதித்து உள்ளன.

1992- பார்சிலோனா ஒலிம்பிக் போட்டிகளின் போது ஈரான் நாட்டு கொடியை ஒரு ஸ்பானிய பெண் ஏந்திவர தேர்வு செய்யபட்டதால் அந்நாட்டு அணியினர் ரகளை செய்துவிட்டனர். அல்ஜிரியா நாட்டு வீராங்கனை ஹஸிபா பவுஸ் மெர்கா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற போதுதிறந்த காலுடன் ஓடி அசிங்கப்படுத்தினார் என்று அந்நாட்டு பழமைவாதிகள் கூறினர். சிட்னி ஒலிப்பிக்கில் பெண்கள் சாதனைகளே அதிகமாக பேசப்பட்டது.

இதுவரை ஒலிம்பிக் போட்டி நடந்த இடங்கள்:

எதென்ஸ்-1896

பாரீஸ்-1900

செயின்ட் லூயிஸ்-1904

லண்டன்-1908

ஸ்டாக்ஹோம்-1912

ஆண்ட்வெர்ப்-1920

பாரீஸ்-1924

ஆம்ஸ்டர்டாம்-1928

லாஸ் ஏஞ்சல்ஸ்-1932

பெர்லின்-1936

லண்டன்-1948

ஹெல்சின்சி-1952

மெல்போர்ன்-1956

ரோம்-1960

டோக்கியோ-1964

மெக்சிகோ-1968

முன்ஜி-1972

மோன்தொல்-1976

மாஸ்கோ-1980

லாஸ் ஏஞ்சல்ஸ்-1984

சியோல்-1988

பார்சிலோனா-1992

அட்லாண்டா-1996

சிட்னி-2000

எதென்ஸ்-2004

பீஜிங்-2008

தகவல் : மாலைமலர்

வியாழன், 26 பிப்ரவரி, 2009

கிரிக்கெட் இணைதளம் :

இதில் உலகில் நடைபெறும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளின் ஸ்கோர்களை ஊடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.

மேலும் சில கிரிக்கெட் இணைதளம் :

1. http://icc-cricket.yahoo.com/

2. http://www.cricketweb.net/

LinkWithin

Blog Widget by LinkWithin