வியாழன், 31 டிசம்பர், 2009

கபடி போட்டி, ஸ்ரீவை அணிக்கு 6வது பரிசு

எட்டயபுரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அம்பேத்கர் விளையாட்டு கழகம் சார்பில் மின்னொளி கபடி போட்டி நடந்தது.

இப்போட்டியில் விருதுநகர் தூத்துக்குடி மாவட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 34 அணிகளை சார்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

அதில் ஸ்ரீவைகுண்டம் எஸ்.எம்.எஸ்.அணி 6வது இடத்தை பிடித்து ரூ.1001.00 பரிசை பெற்றது.

விழா ஏற்பாடுகளை எட்டயபுரம் அம்பேத்கர் விளையாட்டு கழகம் தலைவர் ஜெயபால், செயலாளர் சின்னப்பர், பொருளாளர் மோட்சம், ஆலோசகர் அலெக்சாண்டர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்

திங்கள், 28 டிசம்பர், 2009

சவுதியில் விசா நடைமுறை தளர்த்தப்பட்டது- இந்தியர்கள் மகிழ்ச்சி

துபாய்: சவுதியில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பணி அடிப்படையில் அல்லாமல், பொருளாதார அடிப்படையில் நிரந்தரக் குடியிருப்பு விசா வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் சவுதியில் வேலைபார்க்கும் இந்தியர்கள் தங்கள்
குடும்பத்தினரை நிரந்தரமாக தங்களுடனேயே தங்க வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்பு ஒயிட் காலர் ஜாப் என கருதப்படும், என்ஜினியர், டாக்டர் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே தங்களது மனைவி, குடும்பத்தினரை உடன் தங்க வைத்துக் கொள்ள அனுமதிக்கும் நிரந்தரக் குடியிருப்பு விசா தரப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது பணியை அடிப்படையாகக் கொள்ளாமல் பொருளாதார நிலையைப் பார்த்து விசா வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் சவுதியில் பணியாற்றும் வெளிநாட்டினர், குறிப்பாக இந்தியர்கள் தங்களது மனைவி, குடும்பத்தினரை தங்களுடன் வைத்துக் கொள்ள வழி ஏற்பட்டுள்ளது. இதனால் தாயகத்தில் குடும்பத்தை குறிப்பாக மனைவிகளை தவிக்க விடும் அவலம் முடிவுக்கு வருகிறது.

இந்த அறிவிப்பை அடுத்து, ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்திலும், ஜெட்டா துணை தூதரகத்திலும் ஏராளமான இந்தியர்கள் தங்கள் மனைவி பெயரை சேர்க்க ஆவலுடன் விண்ணப்பங்களை தரத் துவங்கியுள்ளனர்.

ஸ்ரீவை.,யில்அரசு ஊழியர் சங்க ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவைகுண்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் கணபதி தலைமை வகித்தார். வட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட துணைத் தலைவர் ராமமூர்த்தி ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் பற்றி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் வி.ஏ. ஓ., சங்க தலைவர் ரா மையா, சாலைபணியாளர் சங்க வட்டத் தலைவர் வேல்பாண்டி, அரசு ஊழியர் சங்க துணைத்தலைவர் சேதுபதி, வருவாய் துறை சங்க வட்டத் தலைவர் முத்துராமலிங்கம் உட்பட பல ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் 18 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

செய்தி : தினமலர்

ஸ்ரீவை.,யில் ஓய்வூதியர்கள் குறை கேட்பு கூட்டம்

ஸ்ரீவை.,யில் ஓய்வூதியர்கள் குறை கேட்பு கூட்டம் நடந்தது.தூத்துக்குடி மாவட்ட மத்திய அரசு ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஓய்வூதியர்களின் குறை கேட்பு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் சங்க நிர்வாகிகளும் ஓய்வூதியர்களும் கலந்து கொண்டனர். மாதாந்திர கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட சங்க தலைவர் பிச்சையா தலைமை வகித்தார். ஆலோசகர் கோவிந்தராஜ் வரவேற்றார். சங்கத்தின் செயல்பாடுகளுக்காக கருத்து பரிமாற்றம் நடந்தது.மூன்றாம் நிகழ்ச்சியாக ஓய்வூதியர் தினக் கூட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆனந்தபெருமாள், ஸ்ரீனிவாசகதாத்தம், முருகேஸ்வரன், ஈஸ்வரன், நடராஜன், சரவணபவன் பிச்சையா, பாண்டிகுமார், அருணாசலம், பாண்டி பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி : தினமலர்

ஸ்ரீவையில் அரசு போக்குவரத்து கழக ஐ.என்.டி.யு.சி.சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

ஸ்ரீவைகுண்டத்தில் அரசு போக்குவரத்து கழக ஐ.என்.டி.யு.சி.சங்கம் சார்பில் இலவச நோய் கண்டறியும் மருத்துவ முகாம் நடந்தது.ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக டெப்போ முன்பு நடந்த முகாமிற்கு ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ.சுடலையாண்டி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

சங்க தலைவர் சுந்தரம், செயலாளர் வின்செண்ட், பொருளாளர் பிச்சையா, நகர காங்.,தலைவர் சேதுபாண்டியன், மாவட்ட துணைத் தலைவர் நல்லகண்ணு, வட்டார செயலாளர் ஜெயராஜ், நகர இளைஞர் காங்.,தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் பணிமனை தொழிலாளர்கள் பொதுமக்கள் உட்பட 250 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சுதர்சன் ஆஸ்பத்திரி டாக்டர் ராமசாமி, தலைமை நிலைய மேலாளர் மோகன் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள், 15வது வார்டு உறுப்பினர் சொர்ணலதா, நகர பொருளாளர் சந்திரன், காளியப்பன், சேதுராமலிங்கம் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொய்யாழி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஐ.என்.டி.யு.சி.நிர்வாகிகள் செய்திருந்தனர்

செய்தி : தினமலர்

ஸ்ரீவை K G S கல்லூரி பட்டமளிப்பு விழா

ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் கலைக்கல்லூரியின் 45வது பட்டமளிப்பு விழா கல்லூரியில் நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சங்கர நாராயணன் தலைமை வகித்தார்.

கல்லூரி துறைத்தலைவர்களான இயற்பியல் துறை பீட்டர் அருள் அல்போன்ஸ், வணிகவியல் துறை சந்திரசேகர், தாவரவியல் துறை முத்துகுமாரசாமி, வேதியல் துறை நயினார், கணிதத்துறை சுப்பையா, விலங்கியல் துறை சுப்பிரமணியன், பொருளியல் சங்கர நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி மாநில தகவல் ஆணையர் பெருமாள்சாமி சுயவேலை வாய்பின் மூலம் தேசத்தின் நிலையை உயர்த்த பாடு படவேண்டும் என பேசினார்.

விழாவில் பேராசிரியர்கள் நிசார், சேதுராமன், சூரியன், ஸ்ரீதர், முருகன், பெருமுடையான், குழந்தை பாண்டியன், பொன்னுசாமி விஸ்வநாதன், சுடலை, சுப்பிரமணியன் , சின்னதம்பி, பிரேமலதா, மாரியப்பன், குமாரி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர். 122 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

வியாழன், 24 டிசம்பர், 2009

வஃபாத்து செய்தி

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )

நமது ஊர் நடுத்தெருவை சார்த்த ஜனாப் பாதுஷா அவர்களின் தகப்பனார் செய்யது அவர்கள் இன்று (24-12-09) மதியம் 1.30 மணி அளவில் காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜானஷா இன்ஷாஅல்லா இன்று மாலை 5.30 மணி அளவில் நமது பள்ளி வாசலில் வைத்து நல்லடக்கம் செய்யப்படுகிறது

அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்ளோம

தொடர்பு கொள்ள :

ஜனாப். பைசல் - 91 96880 17776

ஜனாப். மீரான் ( பாபு சார் ) - 91 94435 28227


வஸ்ஸலாம்
srivaimakkal@gmail.com

புதன், 23 டிசம்பர், 2009

அனிதா ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி: திமுகவினர் கொண்டாட்டம்


திருச்செந்தூர் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் அம்மன் டி நாராயணனை விட 46,861 வாக்குகள் அதிகம் பெற்று, திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். திமுகவினர் இந்த வெற்றியை பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

திருச்செந்தூர் தொகுதியில் இதுவரை அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்று தமிழகத்தில் அமைச்சராக வலம் வந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். அதிமுக தலைமைக்கும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட மோதலில் அக்கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். பின்னர் தனது தொண்டர்கள் 10 ஆயிரம் பேருடன் அதிரடியாக திமுகவில் இணைந்தார்.

திமுக தலைவர் கருணாநிதி, அனிதாவிற்கு திருச்செந்தூர் தொகுதியையும் அமைச்சர் பதவியும் தருவதாக வாக்குறுதி அளித்தார். அதன் அடிப்படையில் அனிதா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து திருச்செந்தூர் தொகுதயில் போட்டியிட அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

கடந்த 19ம் தேதி நடந்த திருச்செந்தூர் இடைத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணி இன்று காலை துவங்கியது. துவங்கியதிலிருந்தே அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்து வந்தார். மொத்தம் 14 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் 14வது சுற்றின் முடிவில் திமுக 75,223 வாக்குகளும், அதிமுக 28,362 வாக்குகளும், தேமுதிக 4186 வாக்குகளும் பெற்றன.

இதனையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன், அதிமுக வேட்பாளரை விட 46,861 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார். திருச்செந்தூர், உடன்குடி, ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் திமுக நிர்வாகிகளும், அனிதா ஆதரவாளர்களும் பட்டாசு வெடித்தும் , இனிப்பு வழங்கியும் தங்களது வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

செய்தி : தூத்துக்குடி வெப்சைட்

செவ்வாய், 22 டிசம்பர், 2009

ஸ்ரீவை.,யில் வரும் 26ம் தேதி இலவச நோய் கண்டறிதல் முகாம்

ஸ்ரீவைகுண்டத்தில் வருகிற 26ம் தேதி இலவச நோய் கண்டறிதல் முகாம் நடைபெற உள்ளது.

ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீவை.,அரசு போக்குவரத் து கழக ஐ.என்.டி.யு. சி.சங்கமும், நெல்லை வண்ணாரபேட்டை ஸ்ரீசுதர்சன் மருத்துவமனையும் இணைந்து நடத்தும் இலவச நோய் கண்டறியும் முகாம் வருகிற 26ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடக்கிறது.

ரத்தஅழுத்தம்,சர்க்கரை, யூரியா மற்றும் அனைத்து நோய்களையும் கண்டறியும் சிறப்பு முகாம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஐ.என். டி.யு.சி. நிர்வாகிகள் செய்துள்ளனர்.


செய்தி : தினமலர்

சனி, 19 டிசம்பர், 2009

வந்தேமாதரம் பாடல் பாடுவதை வெறுப்பது ஏன்! விளக்கம்...!

வந்தேமாதரம் பாடல் பாடுவதை வெறுப்பது ஏன்! விளக்கம்...!பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்)
வந்தேமாதரம் பாடல் பாடுவதை வெறுப்பது ஏன்! விளக்கம் :
தலைப்பு : வந்தே மாதரம்
தலைப்பின் பொருள் : தாயே வணங்குகிறோம்
பாடலின்தாய்மொழி : தேவ நாகரி &வங்காளம்
பாடலை எழுதியவர் : பன்கிம் சந்திரசட்டோபாத்யாய்
பாடல் உருவான கதை 1870 ஆம் ஆண்டுகளில் இந்தியாவை ஆங்கிலேயபிரிட்டீஷ் ஏகாதிபத்திய குரங்குகள் ஆட்சி செய்தன.

அப்பாவி இந்திய மக்களை கொன்று குவித்து அதன் மூலம் நாட்டை உரிமைகொண்டாடினர் இது உலகம் அறிந்த விஷயம். இப்படிப்பட்ட சர்வாதிகாரநிலைமையில் தாங்கள் செய்வதுதான் சரி என்று தங்கள் நாட்டு மக்களுக்குஉணர்த்தும் விதமாக ஒரு பாடலை இயற்றினர் அதுதான் இங்கிலாந்து நாட்டின்ராணியைப் பற்றிய புகழ் பாடல் அந்த பாடலுக்கான பெயர் God Save the Queenஇந்த ஆங்கில பாடலை இந்த ஆங்கிலேய ஏகாதிபத்திய குரங்குகள் தங்கள் நாட்டுதேசபக்திப் பாடலாக அறிவித்து அனைவரும் பாடும்படி கட்டாயப்படுத்தினார்கள்.

இதுதான் இந்த வரலாற்று பின்னனி. இந்த பாடலைக் கண்டு அன்றைய இந்தியர்கள்வெகுண்டெழுந்தனர் அவர்களில் ஒருவர் தான் இந்த வங்காளி பன்கிம் சந்திரர்சட்டோபாத்யாய். இவர் நமக்கும் நாடு உள்ளது நம் நாட்டிற்கும் ஒரு தாய்இருக்கிறால் என்று எண்ணி பாரதமாதாவிற்கு பாடலை இயற்றினார் அதுதான்வந்தேமாதரம் (தாயே வணங்குகிறோம்) என்ற பாடல் இது 1876லேயேஎழுதப்பட்டுவிட்டது. இந்த பாடல் ஆனந்தமாதா அதாவது வங்காள மொழியில்ANONDOMOTTஎன்ற நூலில் முதன்முதலில் காணப்பட்டது. எனினும்,இப்பாடல்அப்பொழுது, ஜாதுனாத் பட்டாச்சார்யா இப்பாடலுக்கு மெட்ட மைத்துத் தந்தார்.
இவ்வாறுதான் இந்த வந்தேமாதரம் பாடல் உருவானது! சுநத்திர இந்தியாவில்இந்தப் பாடலுக்கு சர்ச்சை ஏன்? விடுதலை பெறுவதற்கு முன் இந்தியமக்களிடையே விடுதலை தாகத்தை இப்பாடல் தூண்டி விடக்கூடிய ஆபத்தை உணர்ந்தஆங்கிலேய ஆட்சியர்கள் இப்பாடலை பொது இடங்களில் பாடுவதை தடை செய்தனர்;தடையை மீறிய விடுதலைப் போராட்ட வீரர்களை சிறையில் இட்டனர். ரபீந்திரனாத்தாகூர் முதலிய பலரும் இப்பாடலை பல்வேறு காலகட்டங்களில் பொது மன்றங்களில்பாடினர்.லாலா லஜ்பத் ராய் லாகூரில் இருந்து வந்தே மாதரம் என்ற பெயரில்இதழ் ஒன்றை தொடங்கினார்.
இந்த பாடலின் மூல கருத்து துர்கை அம்மனை துதி பாடுவதே! ஆம் அதுதான்உண்மை! எனவேதான் அன்றைய காலத்திலேயே முஸ்லிம்கள் எதிர்த்து வந்தனர்.வந்தே மாதரம் இந்தியாவின் நாட்டுப் பண்ணாக பல ஆண்டு காலம் கருதப்பட்டுவந்தாலும், இறுதியில் ஜன கண மன நாட்டுப் பண்ணாக முடிவு செய்யப்பட்டது.வந்தே மாதரம் பாடல் நாட்டை தாய்க்கும், அதன் மூலம் மறைமுகமாக இந்துதெய்வமான துர்கைக்கும் ஒப்புமைப் படுத்துவதாக இஸ்லாமியர்கள் கருதியதால்அன்றைய தேசத் தலைவர்கள் சமய சார்பற்ற நாட்டுப்பண்ணை தேர்ந்தெடுக்கும்முகமாக வந்தே மாதரம் நாட்டுப்பண்ணாக்க வில்லை.
இது இந்திய தேசத் தலைவர்களின் நற்குணத்தை பிரதிபலிக்கிறது. மேலும் வந்தேமாதரப் பாடல் இடம் பெற்றிருந்த பன்கிம் சந்திரரின் நூல்இசுலாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்ததாகவும் அவர்கள்கருதினார்கள். சுந்திர இந்தியாவில் இஸ்லாமியர்கள் எழுப்பிய உரிமைக்குரள்அப்போதைய தேசத் தலைவர்களால் நியயாமான முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது அதன்மூலம் பாடல் சர்ச்சை நீங்கியது. இந்தப் பாடலுக்கு மீண்டும் சர்ச்சைஎவ்வாறு எழுப்பப்பட்டது? வந்தே மாதரம் நாட்டுப் பாடலாக அறிவிக்கப்பட்டு100ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக07.09.2006 அன்று இந்தியாமுழுக்க அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் பகல் 11 மணிக்கு இப்பாடலை பாடவேண்டும் என்று இந்திய அரசு அறிவித்தது.
அப்போதுதான் இசைப் புயல் என்றழைக்கப்படும் ஏ.ஆர். ரஹ்மான் வந்தேமாதரம்பாடலுக்கு இசையமைத்தார். பல இஸ்லாமிய அமைப்புக்கள் இந்த பாடலை பாடுவதற்குதயக்கம் தெரிவித்தன எனவே மத்திய மாநில அரசாங்கம் கீழ்கண்ட வழிகளைஅறிவித்தது. • மத்திய அரசாங்கம் - இப்பாடலைப் பாடுவது கட்டாயமல்ல என்றும்சமயச் சார்பற்ற முதல் இரண்டு பத்திகளை பாடினால் போதும் என்றும் இந்தியஅரசால் அறிவிக்கப்பட்டது. • மதச்சாற்பற்ற மாநில அரசாங்கங்கள் -தமிழ்நாடுஉள்ளிட்ட பல மாநில அரசுகள் இப்பாடலை பாடுவதை மாணவர்களின்விருப்பத்துக்கு விட்டிருந்தான. • மதவாத ஆளும் மாநிலங்களில் இப்பாடலை பாடவைப்பதற்கு உறுதியான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதை அடுத்து, சில இஸ்லாமிய அமைப்புகள், அன்றைய தினம் பெற்றோர் பிள்ளைகளைபள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்கள். பாடல்பாடப்பட்டதன் நோக்கமும் அதன் பொருளும்
வந்தே மாதரம் என்றால் "தாய்க்குவணக்கம்' என்று ஆனந்தமத் நூலில் உள்ள வந்தேமாதரம் பாடலின் முழு வடிவம்(வந்தேமாதரம்) தாயே வணங்குகிறோம்! இனிய நீர்......இன்சுவைக்கனிகள்......தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை.. மரகதப் பச்சைவயல்களின் மாட்சிமை.... எங்கள் தாய்... தாயே வணங்குகிறோம்... வெண்ணிலவின்ஒளியில் பூரித்திடும் இரவுகள்...இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும்மரக்கூட்டங்கள் எழில்மிகு புன்னகை... இனிமை ததும்பும் ஏற்றமிகுமொழிகள்... எங்கள் தாய் சுகமளிப்பவளே..வரமருள்பவளே.. தாயேவணங்குகிறோம்...கோடிக் கோடிக் குரல்கள்..உன் திருப்பெயர்முழங்கவும்..கோடிக் கோடிக் கரங்கள்.. உன் காலடிக்கீழ் வாளேந்திநிற்கவும்... அம்மா ! 'அபலா!“ என்று உன்னை அழைப்பவர் எவர் ?.. பேராற்றல்பெற்றவள்... பேறு தருபவள்.. பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்...எங்கள் தாய்.. தாயே வணங்குகிறோம்.. அறிவு நீ... அறம் நீ... இதயம் நீ...உணர்வும் நீ...எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ.. எம் உள்ளத்தில் தங்கும்பக்தி நீ... எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்...தெய்வச் சிலைகளில்திகழும் ஒளி நீ.. தாயே வணங்குகிறோம்.... ஆயுதப் படைகள் கரங்களில்அணிசெய்யும்...அன்னை துர்க்கை நீயே.. செங்கமல மலர் இதழ்களில் உறையும்...செல்வத் திருமகள் நீயே... கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே.. தாயேவணங்குகிறோம்.. திருமகளே.. மாசற்ற பண்புகளின் மனையகமே.. ஒப்புயர்வற்ற எம்தாயகமே.. இனிய நீரும்.. இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே... கருமைஅழகியே.. எளிமை இலங்கும் ஏந்திழையே.. புன்முறுவல் பூத்தவளே.. பொன் அணிகள்பூண்டவளே.. பெற்று வளர்த்தவளே..பெருமைகள் அனைத்தும் அளித்தவளே..
தாயேவணங்குகிறோம்...
ஆங்கிலேயரின் தேசபக்தி பாடல்
God save our gracious Queen... Long liveour noble Queen, God save the Queen... Send her victorious, Happy andglorious... Long to reign over us: God save the Queen... O Lord, ourGod, arise, Scatter her enemies... And make them fall. Confound theirpolitics... Frustrate their knavish tricks, On Thee our hopes wefix... God save us all. Thy choicest gifts in store... On her bepleased to pour; Long may she reign.. May she defend our laws, Andever give us cause.. To sing with heart and voice God save the Queen.

இந்துக்களின் வந்தேமாதரம் பாடல்
सुजलां सुफलां मलयजशीतलाम्स.. स्य श्यामलां मातरंम् .. शुभ्र ज्योत्सनाम्पुलकित यामिनीम्.. फुल्ल कुसुमित द्रुमदलशोभिनीम्, सुहासिनीं सुमधुरभाषिणीम् .. सुखदां वरदां मातरम् ॥ सप्त कोटि कन्ठ कलकल निनादकराले..द्विसप्त कोटि भुजैर्ध्रत खरकरवाले के बोले मा तुमी अबले.. बहुबलधारिणीम् नमामि तारिणीम्.. रिपुदलवारिणीम् मातरम् ॥ तुमि विद्या तुमिधर्म, तुमि ह्रदि तुमि मर्म... त्वं हि प्राणाः शरीरे.. बाहुते तुमि माशक्ति, हृदये तुमि मा भक्ति... तोमारै प्रतिमा गडि मन्दिरे-मन्दिरे ॥त्वं हि दुर्गा दशप्रहरणधारिणी.. कमला कमलदल विहारिणी.. वाणीविद्यादायिनी, नमामि त्वाम् नमामि कमलां अमलां अतुलाम्सु.. जलां सुफलांमातरम् ॥ श्यामलां सरलां सुस्मितां भूषिताम्ध.. रणीं भरणीं मातरम् ॥

வணக்கம் என்பது என்ன? வணக்கத்துக்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்குதெரியுமோ?
அதாவது கும்பிடுதல், தொழுதல், வழிபடுதல் என்றுதான்அர்த்தமாகும். சிலர் காலில் விழுந்து வணங்குவார்கள், சிலர் கையால்கும்பிட்டு வணங்குவார்கள், சிலர் பாடலை பாடி வணங்குவார்கள் அப்படிப்பட்டபாடல் வணக்கங்களில் வந்தேமாதரம் ஒன்று எனவே நாம் இந்த பாடலை பாடிவணக்கத்தை பாடலாமா? அல்லாஹ்வைத்தான் வணங்குவோம் என்பது முஸ்லிம் களின்நிலை அவ்வாறு இருக்க.. வணங்குவது முறையா?
நபியவர்கள் இருக்கும் வரை வணங்கக் கூடாது என்றார்கள்...
தன் மறைவுக்குப் பின்னும் தன்னை வணங்கக் கூடாது என்றும் எச்சரித்துச்சென்றார்கள்.
லா இலாஹ இல்லல்லஹ் முஹம்மதுர் ரசூலல்லாஹ்(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை நபிகள் நாயகம் (ஸல்)அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்). அல்லாஹ்வைத்தவிர யாரையும் எதையும்வணங்காதீர்கள்! அல்லாஹ்வை பயந்துக்கொள்ளுங்கள்! அல்ஹம்துலில்லாஹ்!எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே

நெல்லை ஹமீது

ஹிஜ்ரி புத்தாண்டு- படிப்பினைப் பெறுவோம்

ஹிஜ்ரி புத்தாண்டு- படிப்பினைப் பெறுவோம்
ஹிஜ்ரத்- நபி(ஸல்…) அவர்களும் அவர்களுடைய உற்றத் தோழர்களும் மக்காவை விட்டு மதீனாவிற்கு அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்ட ஒரு பூமியைத்தேடி புறப்பட்டு இன்றோடு 1430 ஆண்டுகள் நிறைவடைகிறது.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்…)அவர்கள் எந்த நோக்கத்திற்காக மதீனாவை நோக்கிச்சென்றார்களோ அந்த இலட்சியமும் நோக்கமும் இன்றைக்கும் முஸ்லிம் சமூகம் உணராதது வேதனைக்குரிய ஒன்று.
கிறிஸ்தவர்களும் இன்னும் சில மதத்தவர்களும் தங்களது புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடுவதற்கும் களியாட்டங்கள் போடுவதற்கும் பயன்படுத்துவதைபோல நமது புத்தாண்டு வருவதில்லை. இஸ்லாமிய ஆண்டை எந்த நிகழ்விலிருந்து ஆரம்பிக்கலாம் என்பது தொடர்பாக உமர்(ரலி…) அவர்களுடைய காலத்தில் கலந்தாலோசனை நடைபெற்றபொழுது அவர்கள் தேர்வுச்செய்தது ஹிஜ்ரத் என்ற மாபெரும் நிகழ்வையே.
ஹிஜ்ரத் என்பது ஏதோ உயிரை காப்பாற்றுவதற்காக தமது இருப்பிடத்தை விட்டு ஓடி ஒளிந்து தலைமறைவு வாழ்க்கை மேற்க்கொண்டது அல்ல. இன்றும் பல்வேறு வகையான புலம்பெயர்வுகள் உலகில் நடைபெற்றுக் கொண்டிருக்கத்தான் செய்கின்றன. ஆனால் ஒரு குறிப்பிட்ட இலட்சியத்திற்காக அதுவும் தன்னைப்படைத்த இறைவனின் மார்க்கத்தை நிலைநாட்ட இவ்வுலகில் நடைபெற்ற மாபெரும் புலம்பெயர்வுதான் ஹிஜ்ரத்.
இஸ்லாத்தை வாழ்விப்பதற்கு ஒரு நிலம் தேவை. அதனை தனது வாழ்க்கை நெறியாகக் கொண்டு அடியொற்றி நடக்க ஒரு சமூகம் தேவை என்ற நோக்கத்திற்காகத் தான் மக்காவை விட்டும் மதீனாவிற்கு தனது வசிப்பிடம், சொந்தங்கள், செல்வங்கள் ஆகியவற்றையெல்லாம் விட்டுவிட்டு மதீனாவை நோக்கிப்புறப்பட்டார்கள் நபி(ஸல்…) அவர்களின் தலைமையில் அந்த லட்சிய வீரர்கள்.

எந்த லட்சியத்திற்காக ஹிஜ்ரத் மேற்க்கொள்ளப்பட்டதோ அந்த லட்சியம் நிறைவேறவும் செய்தது. அந்த ஹிஜ்ரத்திலிருந்து நமக்கு ஏராளமான படிப்பினைகள் உள்ளது. ஆனால் அதற்கு பக்கங்கள் போதாது. தற்போதைய நமது சமுதாயத்தின் நிலை என்ன?, கேவலம் ஆங்கிலப் புத்தாண்டையும், தமிழ் புத்தாண்டையும் அறிந்திருக்கும் நம்மவர்கள் ஹிஜ்ரி ஆண்டையோ அல்லது அதன் மாதத்தையோ பற்றி அறியாதவர்களாகவே உள்ளனர்.
நோன்பு நோற்கும்பொழுது ரமலான் என்றுத் தெரிகிறது. தியாகப்பெருநாள் கொண்டாடும்பொழுது துல்ஹஜ் மாதம் என்று தெரிகிறதேயொழிய இஸ்லாமிய ஆண்டைப்பற்றிய போதிய அறிவும் அதில் கிடைக்கும் படிப்பினைகளும் இல்லாமலேயே நம்மில் பெரும்பகுதியினர் உள்ளோம்.
ஆங்கில ஆண்டை நம்மீது திணித்து விட்டார்கள் இஸ்லாத்தின் எதிரிகள். அதனுடைய வாரக்கிழமைகளின் பெயரை சிந்தித்துப் பார்த்தால் தெரியும் அந்த 7 தினங்களின் பெயர்களும் ரோமர்கள் வணங்கி வந்த கடவுள்களின் பெயர்கள். இன்று இந்தக்கலாச்சாரம் நமது வாழ்வில் ஒன்றிணைந்துவிட்டது.
உலகளாவிய அளவிலான ஹிஜ்ரா காலண்டரை உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு இல்லை. 50க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் செல்வ வளங்கள் இருந்தும் முஸ்லிம்கள் புழங்குவதற்கு ஒரு இஸ்லாமிய காலண்டரை நம்மால் ஏன் உருவாக்க இயலவில்லை. பிறையை கணக்கிடுவதிலேயே நம்மிடையே பல்வேறுவிதமான சர்ச்சைகளும் வாதப் பிரதிவாதங்களும் தான் உள்ளதே தவிர ஆக்கப்பூர்வமான முடிவுகளை நம்மால் எடுக்க இயலவில்லை.
நபி(ஸல்…)அவர்கள் ஹிஜ்ரத்தின் ஊடே கட்டியெழுப்பிய அந்த சமூகம் காணாமல் போய்விட்டது. ஹிஜ்ரத்தின் வரலாற்றிலிருந்து நாம் படிப்பினைகளை பெறவேண்டும்.
அமெரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராடிய மாவீரன் மால்கம் X கூறிய கூற்று இங்கு நினைவுக்கூறத்தக்கது "தனது சொந்தவரலாற்றை மறந்த சமுதாயத்தால் வரலாறு படைக்க இயலாது". ஆகவே மீண்டும் ஒரு இஸ்லாமிய சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டுமென்றால் அந்த ஹிஜ்ரத்திலிருந்து பாடங்களை பயின்று நமது சமூக வாழ்க்கையில் அதனை நடைமுறைப்படுத்த நாம் தயாராகவேண்டும்.
ஹிஜ்ரத்தின் வரலாற்றை படித்து முடித்து விட்டு புத்தக அலமாரியில் பாதுகாக்காமல் அதனை செயல்களத்திற்கு கொண்டுவர நம் அனைவருக்கும் வல்ல இறைவனாகிய அல்லாஹ் துணைபுரிவானாக!

யா அல்லாஹ் இஸ்லாமிய சமூக புனரமைப்பில் எங்களையும் பங்கேற்கசெய்வாயாக! அந்த சமூகம் விரைவில் இவ்வுலகில் புலர்வதற்கு நீ துணைபுரிவாயாக! ஆமீன்!
அனைவருக்கும் பாலைவனத்தூதின்

இஸ்லாமிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
குல் ஆம் வ அன்தும் பி ஹைர்

இவன்
நெல்லை ஹமீது & சிந்தா

ஸ்ரீவை K.G.S. பள்ளி நிர்வாககுழு புதிய உறுப்பினர்கள் தேர்தல்


ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி நிர்வாக குழு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய நிர்வாக குழுவிற்கான தேர்தல் நடந்தது.கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

புதிய தலைவராக ராமானுஜம் கல்வி அபிவிருத்தி சங்க செயலாளராக சிவசுப்பிரமணியம், பள்ளி குழு தலைவராக சண்முகநாதன், பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்களாக வைகு ண்ட பெருமாள், ராமசாமி, முகமது அப்துல் காதர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களை பள்ளி சிரியர்கள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

செய்தி : தினமலர்

வெள்ளி, 18 டிசம்பர், 2009

முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டமியற்ற வேண்டும்

கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில தலைவர் கே.எம். காதர் முகைதீன் கோரிக்கை விடுத்துள்ளார்

நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணைய அறிக்கையைத் தாக்கல் செய்யவும், அவரது பரிந்துரைப்படி கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கவும் சட்டமியற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளதற்கு முதல்வர் கருணாநிதியே காரணம்.

தஞ்சை மாவட்டம் வளுத்தூரில் இம் மாதம் 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை முஸ்லிம் இளைஞர்களுக்கு மத நல்லிணக்கம், தீவிரவாத ஒழிப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. பெங்களூரில் ஜனவரி 15,16-ல் எங்கள் கட்சியின் தேசிய மாநாடு நடைபெற உள்ளது என்றார் காதர் முகைதீன்.

பேட்டியின்போது, மாநில அமைப்புச் செயலர் அப்துல் மஜீத், மாவட்டத் தலைவர் துராப்ஷா, செயலர் எல்.கே.எஸ். மீரான் மைதீன், ஷிபா எம்.கே. முகம்மது ஷாபி ஆகியோர் உடனிருந்தனர்

வியாழன், 17 டிசம்பர், 2009

புகையை கக்கும் வாகனம் ஓட்டினால் அபராதம்: நாளை முதல் அமல்!


சென்னையில் புகையை அதிகளவில் வெளியிடும் வாகனங்களை ஓட்டினால் நாளை (18ம் தேதி) முதல் ரூ.50 அபராதம் வசூலிக்க போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தற்போது வாகன பெருக்கம் அதிகரித்து வரும் சூழலில், அதில் இருந்து வரும் புகையினாலும் அதிக அளவில் மாசு ஏற்படுவது தெரிய வந்துள்ளதால், அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, மாசு ஏற்படுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, சென்னை போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், இப்போது புதிதாக 16 பொலைரோ கார்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காரும் ரூ.9 லட்சம் மதிப்புடையவை. ஒவ்வொரு காரிலும் புகையை கண்டறியும் இயந்திரம், கம்ப்யூட்டர், யு.பி.எஸ்., வெப்கேமரா ஆகியவை ரூ.2 லட்சம் செலவில் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் 8 கார்கள் பெட்ரோல் வாகனத்தையும், 8 கார்கள் டீசல் வாகனத்தையும் கண்டறியும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நாளை (18ம் தேதி) முதல் நகர் முழுவதும் இந்த கார்களை முக்கியமான சாலை ஓரமாக நிறுத்தி, வாகனங்களை சோதனையிட சென்னை போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

புகையை அதிக அளவில் வெளியிடும் வாகனம் ஓட்டினால் ரூ.50 அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புதிய வாகனங்கள் மூலம் சோதனை நடத்துவதால், பெருமளவில் வாயுவை வெளியிடும் வாகனங்களை கட்டுப்படுத்த முடியும் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும், புகை சோதனை நடத்தும் கம்ப்யூட்டரே அபராதத்துக்கான பில்லை கொடுக்கும்.

நாளை முதல் சோதனை நடத்த உத்தரவிடப்படும். நகர் முழுவதும் முக்கியமான சாலைகளில் இந்த கார்களை நிறுத்த சோதனை நடத்தப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஸ்ரீவையில் ஆன்மிக நூலகம் திறப்பு விழா

ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான் சுவாமி திருக்கோயிலில் ஆன்மிக நூலக திறப்பு விழா நடந்தது.

கோயில் வளாகத்தில் நடந்த விழாவிற்கு இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் தனபால் தலைமை வகித்தார். அறங்காவலர் குழு தலைவர் பெருமாள், நிர்வாக அதிகாரி தங்கபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகத்தை இணை ஆணையர் தனபால் திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்.

விழாவில் ஸ்தலத்தார்கள் ஸ்ரீனிவாசன், வெங்கிடாச்சாரி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் இசக்கியப்பன், ராஜவேல், முருகேசன், ஆறுமுகம், முத்தையா, டி.வி.எஸ்.ஆலோசகர் முருகன், சுப்பு மற்றும் ஊழியர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவை.,விவசாய சங்க தலைவர்கள் பதவி ஏற்பு

ஸ்ரீவைகுண்டத்தில் மருதூர் அணைக்கட்டு நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்கள் பதவி ஏற்றனர்.மருதூர் அணைக்கட்டுக்கு கீழ் உள்ள பாசன கால்வாய்களான மருதூர் அணைக்கட்டு மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு வடகால், தென்கால் ஆகிய பாசன கால்வாய்களுக்கான பகிர்மானக்குழு தலைவர் தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் 24ந் தேதி நடந்து முடிந்தது.

இந்த தேர்தலில் மருதூர் அணைக்கட்டு மேலக்கால் தலைவராக அலங்காரம், கீழக்கால் தலைவராக சீனிப்பாண்டியன், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு வடகால் தலைவராக உதயசூரியன், தென்கால் தலைவராக ராஜபாண்டியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்ட்டனர்.

இவர்களுக்கான பதவி ஏற்பு நிகழ்ச்சி ஸ்ரீவைகுண்டம் பொதுப்பணித்துறை ஆபிஸில் நடந்தது. திருநெல்வேலி பொதுப்பணித்துறை இன்ஜினியர் நாகராஜன் தலைமை வகித்தார். உதவி இன்ஜினியர் நிர்மல் கிருஷ்தாஸ், பிரிவு அலுவலர்கள் ரகுநாதன், வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பொதுப்பணித்துறை இன்ஜினியர் நாகராஜன் பதவிபிரமாணம் செய்து வைத்தார்.

செய்தி: தினமலர்

ஸ்ரீவையில், ஓய்வு பெற்றோர் அலுவலர் சங்க கூட்டம்

ஸ்ரீவைகுண்டம் வட்ட ஓய்வு பெற்றோர் அலுவலர் சங்க கூட்டம் நடந்தது.

தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். செயலர் வேதநாயகம் முன்னிலை வகித்தார். உதவித் தலைவர் சாமி, உதவி செயலர் துரைராஜ், பொருளாளர் வைத்தீஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொருளாளர் வைத்தீஸ்வரன் நன்றி கூறினார்.

செய்தி :தினமலர்

தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளில் பத்து ஆண்டுகள் கனரக வாகனம் ஓட்டியவரை டிரைவராக வைக்க வேண்டும்.கலெக்டர் அறிவிப்பு


கல்லூரி முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிரகாஷ் தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அதிகாரி தங்கவேல், முதன்மை கல்வி அதிகாரி பிறைட்சேவியர், ஆர்.டி.ஓ குருதேவி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சந்திரசேகர், சத்தியமூர்த்தி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், பள்ளி, கல்லூரி முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது;

1. பள்ளி,கல்லூரி வாகனங்களில் முன் பக்கம் மற்றும் பின் பக்கத்தில் பள்ளி குழந்தைகள் ஏற்றிச் செல்லப்படுகிறார்கள் என்பதை தெளிவாக எழுத வேண்டும்.

2. வாடகை வாகனம் என்றால் பள்ளி அல்லது கல்லூரி பணி என்று தெளிவாக எழுதிகாட்ட வேண்டும்.

3 கல்வி நிலையத்திற்கு சொந்தமான எந்த ஒரு பஸ்சும் அனுமதிக்கப்பட்ட இருக்கைக்கு மேலாக குழந்தைகளை ஏற்றிச் செல்லக் கூடாது.

4. முதலுதவிப் பெட்டி கண்டிப்பாக பள்ளி வாகனங்களில் வைக்க வேண்டும். பஸ்களின் ஜன்னல்களில் நீளவாட்டில் கிரீல் கம்பிகள் பொறுத்த வேண்டும்.

5. தீ அணைப்பான் கருவியும் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். பள்ளி, கல்லூரியின் பெயர், போன் எண் போன்றவை அதில் எழுதியிருக்க வேண்டும்.

6. கனரக வாகனம் பத்து ஆண்டுகள் ஓட்டிய, போக்குவரத்து தண்டனை முந்தைய காலத்தில் இல்லாதவரை மட்டுமே டிரைவாக பள்ளி வாகனத்திற்கு நியமிக்க வேண்டும்.

7. டிரைவர் எந்த காரணம் கொண்டும் செல்போன் பேசக் கூடாது.

இவ்வாறு கலெக்டர் பேசினார். வாகனங்கள் அனைத்தையும் வரும் 18ம் தேதிக்குள் ஆர்.டி.ஓ ஆபிசிற்கு கொண்டு வந்து ஆய்வு செய்து கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

புதன், 16 டிசம்பர், 2009

குவைத் தமிழ் இஸ்லாமிய சங்க முப்பெரும் விழா

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் சார்பில், முப்பெரும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

ஹிஜ்ரா/ ஆஷூரா சிறப்பு தொடர் நிகழ்ச்சிகள், சங்கத்தின் 5ம் ஆண்டு துவக்கம் மற்றும் சமுதாய கல்வி விழிப்புணர்வு ஆகிய முப்பெரும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

முதல் நாள் நிகழ்ச்சிகள்:

இந்த நிகழ்ச்சிகள் 17ம் தேதி மாலை குவைத் ஃபஹாஹீல், கத்ஆ 7, பகுதியில் உள்ள 'மஜீத் அல் ஹிலால் அல் உதைபீ (உர்தூ குத்பா நடைபெறும் பள்ளி)' பள்ளிவாசலில் நடைபெறும்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்:

18ம் தேதி நிகழ்ச்சிகள், மாலையில் குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் (கேபிடிசி பேரூந்து நிலையம் / லிபரேஷன் டவர் அருகில், சூக்குல் வதனிய்யா எதிரில்)' பள்ளிவாசலில் நடைபெறும்.

பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விவரங்களுக்கு: இணையத் தளம்- www.k-tic.com

மின்னஞ்சல் முகவரி- q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com

யாஹு குழுமம்- http://groups.yahoo.com/group/K-Tic-group

துபாய் தமிழக பொறியாளர் இக்பாலுக்கு சமுதாயச் சுடர் விருது-ஆளுநர் வழங்கினார்


சென்னை: துபாயில் வசிக்கும் தமிழ் பொறியாளரான எம்.ஜே.முஹம்மது இக்பாலுக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா சமுதாயச்சுடர் விருது வழங்கி கெளரவித்தார்.

முஹம்மது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமுதாய கூடத்தில் நடந்த இஸ்லாமிய இலக்கிய இரண்டாம் மாநில மாநாட்டில் இலக்கிய ஆய்வுகள், பட்டின்றம், நூலாய்வுகள், நூல் வெளியீடுகள் நடந்தன.

நிறைவு விழாவில் பலருக்கு இலக்கியமாமணி விருதுகளும், மூன்று பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும், 7 பேருக்கு சமுதாய சுடர் விருதுகளும் வழங்கப்பட்டன.

தஞ்சை மாவட்டம், வழுத்தூரைச் சேர்ந்தவரும் தற்போது துபாயில் வசிப்பவருமான எம்.ஜே.முஹம்மது இக்பாலுக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா சமுதாயச்சுடர் விருது வழங்கி கெளரவித்தார்.

பி.இ, எம்.பி.ஏ. பட்டதாரியான இக்பால் 1986ம் ஆண்டு துபாய் ETA MELCO Elevator நிறுவனத்தில் பயிற்சி என்ஜினீயராக தனது பணியை தொடங்கியவர்.

தனது கடின உழைப்பால் பொது மேலாளர் ஆனார். துபாயில் உருவான முக்கிய கட்டிடங்கள், விமான நிலைய லிப்ட்டுகள் மற்றும் எலிவேட்டர்கள் அமைக்கும் பணியை வெற்றிகரமாக செய்து முடித்து பாராட்டு பெற்றவர்.

ஜப்பானின் மிட்சுபிஸி நிறுவனத்தின் "தங்கச் சான்றிதழை" தொடர்ந்து 3 முறை வென்றவர்.

ஜப்பான் மற்றும் பன்னாட்டு கல்வி நிறுவனங்களில் பல்வேறு மேலாண்மை பட்டயம் மற்றும் சான்றிதழ் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்.

அமெரிக்காவின் முன்னணி தொழில்முறை அமைப்பான I.E.E.E (Institute of Electrical and Electronics Engineer) அமைப்பின் மூத்த உறுப்பினராகவும் உள்ளார்.

துபாய் என்ஜினீயர்கள் சங்கத் தலைவராகவும், ஆலோசகராகவும் உள்ள இவர் அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் ஆவார்.

இது தவிர பல்வேறு இந்திய, வளைகுடா மற்றும் சர்வதேச அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகிறார். பிரபலங்களின் விபரங்கள் அடங்கிய உலகப்புகழ் பெற்ற புத்தகமான மார்குயூஸ் கூ இஸ் கூ புத்தகத்தில் பொதுப்பிரிவிலும் அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவிலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

துபாயில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ்களில் தனது துறை சார்ந்த கட்டுரைகளையும், ரமலான் காலங்களில் நோன்பின் பெருமைகள் குறித்த கட்டுரைகளையும், சமய ஒற்றுமை நல்லிணக்கத்திற்கான கட்டுரைகளையும் எழுதி வருபவர்.

இது தவிர அமெரிக்காவில் இருந்து வெளிவரும் எலிவேட்டர் வோர்ல்டு மாத இதழின் ஆசிய நாடுகளின் நிருபராகவும் உள்ளார்.

பல்வேறு சர்வதேச கருத்தரங்குகள், மாநாடுகள், கூட்டங்களில் பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல் வளர்ச்சி, சமுதாய முன்னேற்றம், இளைய தலைமுறையினருக்கான வழிகாட்டல் குறித்து ஆய்வு கட்டுரைகளை சமர்பித்துள்ளார்.

வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் இளைய தலைமுறையினர் வேலை வாய்ப்பு பெற தேவையான ஆலோசனைகளையும், உதவிகளையும் அளித்து வருகிறார்.

மேலும் பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி குறித்த ஆலோசனைகளையும் வழங்கி வரும் இக்பால், தனக்கு வழங்கப்பட்ட சமுதாயச் சுடர் விருதை தனக்கு தொழில் வழிகாட்டியாக விளங்கும் தொழிலதிபர் செய்யது முஹம்மது ஸலாஹுத்தீன் மற்றும் தன் பெற்றோருக்கு அர்ப்பணிப்பதாகக் கூறுகிறார்.

விழாவில், தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் டாக்டர். கவிக்கோ அப்துல் ரஹ்மான், தமிழக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் எஸ்.எம். ஹிதாயத்துல்லாஹ், கேப்டன் அமீர் அலி மற்றும் பலரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் உமர் புலவர் விருது கவிஞர் மு.மேத்தாவுக்கும், கவிக்கோ அப்துல் ரஹ்மான் அறக்கொடை நிதியை துபாஷ் தாஜுதீனும், சமுதாயச் சுடர் விருதுகள் ஜமால் முஹம்மது கல்லூரியின் செயலாளர் M.J.M. அப்துல் கபூர், A.M.S. என்ஜினீயரிங் கல்லூரியின் தாளாளர் S.N.M. ஷேக் நூருத்தீன், பத்திரிக்கையாளர் சையத் முஹம்மத், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா தலைவர் மெளலவி TJM. ஸலாஹுத்தீன் ரியாஜி, நோபல் மரைன் ஷாஹுல் ஹமீது ஆகியோருக்கும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 15 டிசம்பர், 2009

தஞ்சையில் உலமாக்கள் வாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது

கலெக்டர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் முன்னேற்றத்திற்காக தனியாக வாரியம் அமைத்து முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இவ்வாரியத்தில் 18 வயது முதல் 60 வயது க்கு உட் பட்ட பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணியாற்றும் ஆலிம்கள், பேஷ்இமாம் கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷிர் கானாக்கள் மற்றும் முஸ் லீம் அனாதை இல்லங்கள் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராகத் தகுதியானவர்கள்.

இந்நலவாரியத்தில் உறுப்பினராகச் சேர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி விண்ணப்பம் பெற்றுக்கொ ள்ளலாம். தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 279 பேருக்கு உலமாக்கள் நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றார்

ஸ்ரீவையில், பா.ம.க தலைவர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம்


ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுக்கு மேல்புறம் ராட்சத குழாய் அமைத்து தூத்துக்குடியிலுள்ள தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதை தடுத்து நிறுத்தக் கோரி,பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம் தெற்கு ரதவீதியில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மருதூர்,ஸ்ரீவைகுண்டம்
அணைக்கட்டை தூர்வார வேண்டும், மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், புதிய தடுப்பணைகள் கட்ட வேண்டும், ஆற்றை தூய்மைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பாமக தலைவர் கோ.க.மணி, உழவர் பேரியக்க தலைவர் இல.சடகோபன்,தனித் தமிழர் சேனை நிறுவனர் நகைமுகன்,மாநில இளைஞரணி செயலர் அன்பழகன்,தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் நயினார் குலசேகரன்,பாமக மாநில பொதுச்செயலர் உஜ்ஜல்சிங்,மாவட்ட செயலர் இசக்கியப்பன்,ஒன்றிய செயலர் வள்ளி நாயகம்,நகர செயலர் பழனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை பாமக மாநில கொள்கை விளக்க அணி செயலர் அ.வியனரசு செய்திருந்தார்.

திங்கள், 14 டிசம்பர், 2009

துபாய்க்கு 10 பில்லியன் டாலர்-அபுதாபி உதவி


பெரும் நிதிச் சிக்கலில் மூழ்கியுள்ள துபாய் வேர்ல்டை காப்பாற்ற, அபுதாபி உதவி நிதியாக 10 பில்லியன் டாலர் நிதியை அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்று அபுதாபியும், துபாயும். துபாய் தற்போது பெரும் நிதிச் சிக்கலில் மாட்டியுள்ளது. இந்த நிலையில் அபுதாபி, துபாய்க்கு 10 பில்லியன் டாலர் நிதியுதவியை அளித்துள்ளது.

இதில் 4.1 பில்லியன் நிதி, கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கும் துபாய் அரசின், துபாய் வேர்ல்டுக்கு உடனடியாகத் தரப்படும்.

துபாய் வேர்ல்ட் 26 பில்லியன் கடனில் மூழ்கியுள்ளது. இந்த கடன் சிக்கல் காரணமாக ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன. வர்த்தகங்கள் நடுநடுங்கின என்பது நினைவிருக்கலாம்.

அபுதாபியின் உதவி நிதி குறித்து துபாய் உயர் மட்ட நிதிக் கமிட்டித் தலைவர் தெரிவிக்கையில், அபுதாபி அரசு 10 பில்லியன் டாலர் நிதியுதவியை அளிப்பதாக ஒத்துக் கொண்டுள்ளது.

இதன் மூலம் துபாய் வேர்ல்டின் கடன் சுமை குறைக்கப்படும். முதல் கட்டமாக 4.1 பில்லியன் நிதி துபாய் வேர்ல்டுக்கு அளிக்கப்படும். இன்று இந்த நிதி வந்து சேரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

இந்த உதவி நிதி அறிவிப்பைத் தொடர்ந்து டாலர், யூரோ ஆகியவற்றின் மதிப்பு லேசான உயர்வைக் கண்டன. அதேபோல ஆசிய பங்குச் சந்தைகளிலும் புள்ளிகள் உயர்வு கண்டன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸிலேயே மிகப் பெரிய நாடு அபுதாபிதான். மேலும் எமிரேட்ஸின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடும் அபுதாபி என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 12 டிசம்பர், 2009

சென்னையில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநில மாநாடு

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநில மாநாடு சோழிங்கநல்லூரில் நாளை நடக்கிறது.

இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய 2வது மாநில மாநாடு சென்னை அருகே சோழிங்கநல்லூரில் உள்ள முகமது சதக் கலை அறிவியல் கல்லூரியில் நாளை நடைபெறவுள்ளது.

கேப்டன் அமீர் அலி தலைமையில் நடக்கும் இம் மாநாட்டில் பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ. ஆய்வுக் கோவைகளை வெளியிடுகிறார். எல்.கே.எஸ்.சையது அகமது அதைப் பெற்றுக் கொள்கிறார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சபாபதி மோகன் இலக்கிய சுடர் விருதை வழங்குகிறார்.

மாலை நடக்கும் நிறைவு விழாவுக்கு இஸ்லாமிய இலக்கிய கழக பொதுச்செயலாளர் எஸ்.எம்.இதயதுல்லா தலைமை தாங்குகிறார். கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா கலந்து கொண்டு ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் கூடிய உமறுப் புலவர் விருதை கவிஞர் மு.மேத்தாவுக்கு வழங்குகிறார்.

மத்திய செய்தித்துறை இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை நெல்லை சதக் அப்துல்லா கல்லூரி தலைவர் டி.இ.எஸ்.பத்ஹூர் ரப்பானிக்கும், சதக் கல்லூரி தலைவர் எஸ்.எம்.ஹமீது அப்துல்காதருக்கும் வழங்குகிறார்.

11 பேருக்கு சமுதாய சுடர் விருதுகளை சபாநாயகர் ஆவுடையப்பன் வழங்குகிறார்.

கவிக்கோ அறக்கொடை நிதியை துபாஷ் தாஜூதீனுக்கு நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி வழங்குகிறார். 15பேருக்கு இலக்கிய சுடர் விருது வழங்கப்படுகிறது.

விழாவில் இஸ்லாமிய இலக்கிய கழக துணைத்தலைவர் பிரசிடென்ட் அபுபக்கர் எஸ்.ஐ.இ.டி. கல்லூரிக்கு ரூ.1 லட்சம் வழங்குவார். அதைக் கொண்டு அவரது பெயரில் தமிழ் ஆய்வுக்காக அறக்கட்டளை தொடங்கப்படுகிறது.

நாளை சென்ட்ரல் ரயில் நிலையம் மூடல்


நாளை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மூடப்படவுள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் விரிவாக்கம், கிராசிங் மற்றும் சிக்னல் பராமரிக்கும் பணி 4 கட்டமாக நடக்கிறது.

நாளை இறுதிக் கட்டப்பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை சென்ட்ரல் நிலையத்துக்கு எந்த ரயில்களும் வராது.

அங்கிருந்து எந்த ரயிலும் புறப்பட்டுச் செல்லாது.

சென்ட்ரலுக்கு வர வேண்டிய ரயில்கள் எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம் நிலையங்களில் நிறுத்தப்படும்.

பயணிகளுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கீ்ழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அந்த ஹெல்ப் லைன் எண்கள்:

29015209, 29015210, 29015211, 25330710, 25330717, 28190216

வஃபாத்து செய்தி

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )

ஸ்ரீவை சார்த்த ஜனாப் ஹனிபா அவர்களின் தாயார் ஜனாபா பல்கிஸ் அவர்கள் நேற்று (11-12-09) இரவில் 10.00 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் வைத்து காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜானஷா இன்ஷாஅல்லா இன்று லுஹர் தொழுகைக்கு பின் சென்னை புரசைவாக்கம் பள்ளி வாசலில் வைத்து நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்ளோம

தொடர்பு கொள்ள :

ஜனாப் ஹனிபா : 91 98846 47567

புதிதாக உருவாகிறது - நபி(ஸல்) பற்றிய சர்வதேசத் திரைப்படம்!


இறைத் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்க்கையை உரிய ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டும் ஆவணமாக பெரும் பொருட்செலவில் புதியதோர் ஆங்கிலத் திரைப்படம் உருவாகிறது.

"இறுதித் தூதர் நபி(ஸல்) அவர்களின் பிறப்பிற்கு முன்பு துவங்கி, நபியவர்களின் மரணம் வரையிலான முழுமையான தொகுப்பான இத்திரைப்படம், நபியவர்கள் பற்றி தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எண்ணங்களையும், காழ்ப்புணர்ச்சியுடன் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வரும் அனைத்து அவதூறுகளையும் களையும்!" என்கிறார் அஹ்மது அப்துல்லாஹ் அல் முஸ்தஃபா. இவர் கத்தர் நாட்டின் தலைநகரான தோஹாவில் அல் நூர் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைவராவார்.

வளைகுடா நாட்டின் முக்கிய நாடுகளில் ஒன்றான கத்தரிலுள்ள முன்னணி ஊடக நிறுவனமான அல்நூர் ஹோல்டிங் இந்தத் திரைப்படத்தினைத் தயாரிக்கிறது. சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர் பொருட்செலவில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு துவங்கவிருக்கும் இத்திரைப்படம், 25 முதல் 30 மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

“ இத்திரைப்படம், சர்வதேச அளவில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீது பிற மதத்தவர் மட்டுமின்றி இஸ்லாத்தின் அடிப்படையைச் சரியாக விளங்காத முஸ்லிம்களும் இஸ்லாம் மீது கொண்டுள்ள தவறான எண்ணங்களைக் களையும் முகமாக விளங்கும்!" - அப்துல்லாஹ். ”

திரைப்படத் தயாரிப்புக் குழுவிற்கான தேவைக்காக அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உள்ள திறமையான படத் தயாரிப்புக் நிறுவனங்களைத் தேர்வு செய்து கொண்டு வருகிறது அல் நூர் ஹோல்டிங் நிறுவனம். இப்படத்தைத் தயாரிக்க அமெரிக்கத் தயாரிப்பாளரான பேர்ரி எம். ஆஸ்போர்ன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், உலகமெங்கும் சிறார்கள் மனதையும் பல ஆஸ்கர் பரிசுகளையும் அள்ளிச் சென்ற “The Lord of the Rings: The Return of the King”படத் தயாரிப்பாளராவார். இத்திரைப்படத்திற்காக இவருக்கு Academy Award for Best Picture விருது கிடைத்திருப்பது குறிப்பிடத் தக்கது. மேலும் புகழ் பெற்ற The Matrix படத்தினைத் தயாரித்தவரும் இவரே.

"ஆங்கிலம் பேசும் முஸ்லிம்களை மட்டுமே கொண்டு இத்திரைப்படம் தயாரிக்கப்படும். இத்திரைப்படம், சர்வதேச அளவில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீது பிற மதத்தவர் மட்டுமின்றி இஸ்லாத்தின் அடிப்படையைச் சரியாக விளங்காத முஸ்லிம்களும் இஸ்லாம் மீது கொண்டுள்ள தவறான எண்ணங்களைக் களையும் முகமாக விளங்கும்!" என்கிறார் அப்துல்லாஹ்.

இத்திரைப்படம் பற்றி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ள டாக்டர். யூஸுப் அல் கர்ளாவி, "இத்திரைப்படம் ஒரு இஸ்லாமிய தஃவா (அழைப்பு) ஆகும்" என்று தெரிவித்துள்ளார். இந்தத் திரைப்படத் தயாரிப்பின் டெக்னிக்கல் கன்ஸல்டண்ட் மற்றும் முழு மேற்பார்வையையும் இவரே கவனிக்கிறார்.

இத்திரைப்படத்தின் உரைகள் (ஸ்க்ரிப்ட்), படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு ஆகியவற்றின் மேற்பார்வையாளராக டாக்டர் யூஸுப் அல் கர்ளாவியும், அவர் தலைமையில் ஒரு இஸ்லாமியக் குழுவும் அமைக்கப் படவுள்ளது என்கிறார் அப்துல்லாஹ்

இத்திரைப்படம், உலகெங்கும் தவறான புரிதல்களுக்குப் பதிலடியாக பெரும் தாக்கத்தையும் கூடவே மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தும் என்கிறார் சர்வதேச முஸ்லிம் அறிஞர்களுக்கான ஒன்றியத்திற்குத் தலைவரான டாக்டர். யூஸுப் கர்ளாவி

கடந்த 2005 ஆம் ஆண்டு டென்மார்க்கின் ஜில்லண்ட்ஸ் போஸ்டன் என்ற பத்திரிகை 12 கார்ட்டூன்களை தனது தினசரியில் வெளியிட்டிருந்தது. இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் அங்கீகாரத்திற்கும் சற்றும் தொடர்பில்லாத அவதூறுகளைச் சுமத்தி இழிவு படுத்தும் எண்ணத்துடன் அப் பத்திரிகை கார்ட்டூன்கள் வெளியிட்டதைத் தொடர்ந்து உலகமெங்கும் முஸ்லிம்கள் கொந்தளித்தனர்.

பெரும் எண்ணிக்கையிலான பேரணிகள், ஊர்வலங்கள் மற்றும் சர்வதேச மீடியா சாதனங்கள் மூலம் முஸ்லிம்களின் கண்டனங்களும், எதிர்ப்புகளும் பதிவு செய்யப் பட்டன. அது நாள் வரை இஸ்லாத்திற்கு எதிராக திரைமறைவில் இருந்து நடந்து வந்த சூழ்ச்சிகளும், உலகெங்கும் இஸ்லாம் மீது வலிந்து பரப்பப் பட்டு வந்த இஸ்லாமோஃபோபியாவின் ஒட்டுமொத்த உருவமும் வெளியானது. அத்துடன் இஸ்லாத்தின் மீதான பொய்ப்பிரச்சாரத்தை முறியடித்து, இஸ்லாம் பற்றிய அறிவை முழு அளவில் உலக மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிம்கள் மீது சாட்டப் பட்டிருப்பதை உணர்ந்தனர்.

அதனைத் தொடர்ந்த உலகமெங்கும் "இறைத்தூதரை அறிந்து கொள்" எனும் வகையிலான இஸ்லாமிய பிரச்சாரங்கள் பெருமளவில் முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வருகிறது. இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களை இழிவு படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்ட டென்மார்க்கிலேயே 27 பெரும் முஸ்லிம் அமைப்புகள் ஒன்றுகூடி European Committee for Honoring the Prophet என்ற பெயரில் வலுவான ஒன்றியத்தை அமைத்திருக்கிறது.

இஸ்லாத்தின் மீதும் இறைத்தூதர் மீதும் உலகமெங்கும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வரும் தவறான எண்ணங்களுக்கான ஒரு சரியான மறுமொழியாக இத்திரைப்படம் அமையும் என்று நாமும் எதிர்பார்ப்போம்.

- அபூ ஸாலிஹா

தகவல் : சத்தியமார்க்கம்.காம்

ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாததால் பணிகள் தேக்கம்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் பல இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாததால் பணிகள் தேங்கியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

÷மாவட்ட கிராம வாழ் மக்கள் நலச் சங்க தலைவர் எஸ். நயினார் குலசேகரன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு:

÷ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் 69 வருவாய் கிராமங்கள் உள்ளன. அதன்படி 69 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் தற்போது 33 கிராம நிர்வாக அலுவர்களே பணியில் உள்ளனர். 36 வருவாய் கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

÷இதனால், ஒரு கிராம நிர்வாக அலுவலர் மூன்று அல்லது நான்கு கிராமங்களை சேர்த்து கவனிக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக பல கிராமங்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் வருவது கிடையாது. பல கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் வாரகணக்கில் மூடிக்கிடக்கின்றன. மேலும், கிராம உதவியாளர்கள் பணி நேரங்களில் கிராமங்களில் இருப்பதில்லை.

÷இதன் காரணமாக பொதுமக்கள் எந்தவித சான்றிதழுக்கும் கிராம நிர்வாக அலுவலரிடம் கையெழுத்து வாங்க முடிவதில்லை. தங்கள் கிராம நிர்வாக அலுவலர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் உள்ளனர்.

÷இதைத்தவிர மாவட்டத்தில் 8 வட்டங்களிலும் 8 தலைமை நில அளவையர் பணியில் இருக்க வேண்டும். ஆனால், நான்கு பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் 8 பேர் பார்க்க வேண்டிய பணிகளை 4 பேர் பார்க்க வேண்டியுள்ளது.

÷கோவில்பட்டி தலைமை நில அளவையரிடம் ஒட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய வட்டங்களின் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவர் பொறுப்பு ஒப்படைத்தப்பட்ட 4 மாதங்களில் ஒரு நாள் கூட ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்கு வந்ததில்லை.

÷இதனால், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் மற்ற நில அளவையர்களும் சரியாக பணிக்கு வருவதில்லை.

இதனால், பணிகள் பெருமளவில் தேங்கியுள்ளன. இந்த பிரச்னையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து, காலியான பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றார் அவர்.

இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் வைகோ- கனிமொழி நேருக்குநேர் சந்திப்பால் திடீர் பரபரப்பு!



திருச்செந்தூர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், கனிமொழி எம்.பியும் நேருக்குநேர் சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் வருகிற 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அதிமுக வேட்பாளர் அம்மன் நாராயணனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ கிராமம் கிராமமாக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்துவருகிறார்.

இதுபோல் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை ஆதரித்து கனிமொழி எம்.பி. தேர்தல் பிரச்சாரம் செய்துவருகிறார். தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் அதிமுக – திமுகவினர் எந்த நேரத்திலும் மோதும் சூழ்நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுவருவதால் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் எஸ்.பி. செந்தில்குமார் தலைமையில் போலீசார் கிராமம் கிராமமாக 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ, அதிமுக வேட்பாளர் அம்மன் நாராயணனை ஆதரித்து திருச்செந்தூர், மணப்பாடு பிரச்சாரம் செய்துவிட்டு பரமன்குறிச்சிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வேனில் வந்துகொண்டிருந்தார். அப்போது திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்.பி. பரமன்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்.

இதை தொடர்ந்து அதிமுக – திமுகவினர் மோதுவதை தடுக்க பரமன்குறிச்சிக்கு வந்துகொண்டிருந்த வைகோவிடம் போலீசார் மாநாடு கிராமத்தில் அவரது வேனை நிறுத்தி கனிமொழி எம்.பி பிரச்சாரம் செய்துகொண்டிருப்பதால் தாங்கள் 10 நிமிடம் நின்று செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த வை.கோ காட்டுப்பகுதியில் நிறுத்தி வேனுக்குள் அமர்ந்திருந்தார்.

வைகோ வேனை போலீசார் நிறுத்தியதை கண்டித்து மதிமுகவினர் கொந்தளித்து அதிமுகவினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து அதிமுகவினர் சுமார் 20க்கும் மேற்பட்ட கார்களில் மாநாடு கிராமத்திற்கு விரைந்து வந்து வைகோ வேனை தங்களது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவந்து வைகோவுக்கு பாதுகாப்பாக நின்று கொண்டனர்.

இதற்கிடையில் பரமன்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு கனிமொழி எம்.பி மாநாடு கிராமம் வழியாக திருச்செந்தூர் சென்றார். அப்பொழுது வை.கோ.வும் கனிமொழி எம்.பியும் நேருக்குநேர் சந்திக்கும் சூழ்நிலை உருவானதால் அங்கு பதட்டம், பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கனிமொழி எம்.பி வைகோ வேன் அருகே வந்ததும் இரு கை கூப்பி வை.கோ.வுக்கு வணக்கம் தெரிவித்தார். பதிலுக்கு வைகோவும் இரு கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். இருவரும் சிறு புன்னகையை சிந்திவிட்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்பட்டனர். வைகோவும், கனிமொழி எம்.பி.யும் நேருக்குநேர் சந்தித்து கொண்டதால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்பட்டது.

அதன்பின் பரமன்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரச்சாரக்குழுவில் வைகோ பேசும்போது, திமுகவினர் எது நடக்கும் என்று எதிர்பார்த்தார்களோ அது நடக்கவில்லை. தேர்தல் களம் என்பது அமைதியாக நடைபெற வேண்டியது. வன்முறைக்கு இடமில்லை. அதிமுக வேட்பாளர் வெற்றி உறுதியாகி விட்டது. இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

நன்றி :திரு. சக்திமுருகன், தூத்துக்குடி வெப்சைட்.

வெள்ளி, 11 டிசம்பர், 2009

வஃபாத்து செய்தி

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )

நமது ஊர் தெற்கு தெருவை சார்த்த ஜனாப் பாட்சா ( வனத்துறை அதிகாரி ) அவர்கள் நேற்று (10-12-09) இரவில் 9.30 மணி அளவில் காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜானஷா இன்ஷாஅல்லா இன்று மாலை 5.00 மணி அளவில் நமது பள்ளி வாசலில் வைத்து நல்லடக்கம் செய்யப்படுகிறது

அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்ளோம

தொடர்பு கொள்ள :

ஜனாப். மீரான் ( பாபு சார் ) - 91 94435 28227

ஜனாப். பைசல் - 91 96880 17776

வஸ்ஸலாம்
srivaimakkal@gmail.com

வியாழன், 10 டிசம்பர், 2009

ஹஜ் புகைப்படம்

ஹஜ் புகைப்படம்
யா எங்களுக்கும் இந்த பாக்கியத்தை தருவாயாக..................

























































அமீரகத் தமிழ் மன்றத்தின் `குடும்ப சங்கமம்`

துபாய் அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் சார்ஜா தேசியப் பூங்காவில் குடும்ப சங்கமம் விழா கொண்டாடப்பட்டது.

இதில் நூற்றுக்கும் அதிகமானோர் குடும்பத்துடன் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். காலை உணவுக்குப் பின் துவங்கிய விழாவில் உறுப்பினர்கள் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து மழலைகள், சிறுவர்கள், மகளிர் மற்றும் ஆண்களுக்கான விளையாட்டு போட்டிகள் என தனித்தனி பிரிவுகளில் நடத்தப்பட்டது.

மதிய உணவுக்குப் பின் ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் மற்றொரு அணியாகவும் பிரிந்து பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில் உற்சாகமாகக் கலந்து கொண்டனர். சார்ஜா தேசியப் பூங்கா முழுவதும் தமிழ் இசைப் பாடல்களே ஓங்கி ஒலித்தன.

மாலைத் தேநீருக்குப் பின் நடந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக இலங்கையைச் சேர்ந்த கவிஞர் ஜின்னா ஷெர்புதீன் கலந்துகொண்டார். தமிழ் மன்ற அமைப்பின் ஆலோசகர் ஜெகபர், போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை அமைப்பின் துணைத்தலைவர் சிவகுமார், பொருளாளர் நஜிமுதீன், செயலர் ஃபாரூக் அலியார், இணைச் செயலாளர் ஜெஸிலா ரியாஸ், வஹிதா தீன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். அமைப்பின் தலைவர் ஆசிப் மீரான் அனைவருக்கும் நன்றி கூறினார்.

ஈடிஏ கிரிக்கெட் சாம்பிய‌ன்களுக்கு பரிசளிப்பு விழா


துபாய் ஈடிஏ மெல்கோ நிறுவ‌ன‌த்தின் சார்பில் ந‌டைபெற்ற‌ கிரிக்கெட் போட்டியில் சாம்பிய‌ன் ப‌ட்ட‌ம் பெற்ற‌வ‌ர்க‌ளுக்கு ப‌ரிச‌ளிப்பு விழா ந‌டந்ததது.

சாம்பிய‌ன் ப‌ட்ட‌ம் வென்ற‌ ஊழியர்க‌ளுக்கு டிராஃபியும், நிக‌ழ்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய‌வ‌ர்க‌ளுக்கு ப‌ரிசுக‌ளும் வ‌ழ‌ங்க‌ப்பட்ட‌ன‌.

விழாவில் ஈடிஏ மெல்கோ ம‌னித‌வ‌ள‌ மேம்ப்பாட்டுத்துறை மேலாள‌ர் சிக்க‌ந்த‌ர் பாட்சா பேசுகையில், ஈடிஏ மெல்கோவில் ந‌ல‌த்துறை துவ‌க்க‌ப்ப‌ட்ட‌ பின்ன‌ர் அது மேற்கொண்டு வ‌ரும் ப‌ல்வேறு ப‌ணிக‌ள் குறித்து விவ‌ரித்தார்.

இப்போட்டிக‌ளை ஒருங்கிணைத்த‌ ந‌ல‌த்துறை அலுவ‌ல‌ர் ராஜெந்திர‌ன், ஈடிஏ மெல்கோ எக்ஸிகியூடிவ் டைர‌க்ட‌ர் எம்.ஏ. ச‌யீத், இய‌க்குந‌ர் ஏ.எஸ்.ஏ. ப‌ஷீர், துணைப் பொது மேலாள‌ர் கே.எஸ்.ஏ. ப‌ஷீர் ஆகியோர் ஊழிய‌ர்க‌ளுக்காக‌ சிற‌ப்பான‌ முறையில் ஏற்பாடு செய்து கிரிக்கெட் போட்டியினை ந‌ட‌த்தினார்கள் என்று பாராட்டு தெரிவித்த‌ார்.

அஜீஸ் ந‌ன்றி கூறினார். பொறியாள‌ர் முஹைதீன் அப்துல் காத‌ர் நிக‌ழ்ச்சியினை தொகுத்து வ‌ழ‌ங்கினார்.

பாபரி மஸ்ஜித் புனர்நிர்மாணம் மூலம் நாட்டின் மானம் காக்கப்பட வேண்டும் - நீதிபதி கிருஷ்ணய்யர்!

தகர்க்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை அதே இடத்தில் புனர் நிர்மாணித்து நாட்டின் மானத்தைக் காக்க வேண்டும் என நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் கூறியுள்ளார். கேரள முஸ்லிம் இளைஞர் அமைப்பு கொச்சியில் நடத்திய மதசார்பின்மை பாதுகாப்பு கூட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"பாபரி மஸ்ஜித் தகர்ப்பின் மூலம் நாட்டின் ஆத்மாவிற்குக் காயம் ஏற்பட்டுள்ளது. பாபரி மஸ்ஜித் பூமி குறித்த பிரச்சனை முன்னரே தீர்க்கப்பட்டிருக்கும் எனில் மஸ்ஜித் தகர்க்கப்பட்டிருக்காது. இவ்விஷயத்தில் நீதிமன்றத்தில் ஏற்பட்ட காலதாமதம் மூலம் முஸ்லிம்களுக்கு நீதி மறுக்கப்பட்டது. சமத்துவத்தினைப் போதிக்கும் இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரானதாகும். உலக சகோதரத்துவம் என்ற இஸ்லாமிய தத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்ட வகையில் நானும் ஒரு முஸ்லிமே" என்று கிருஷ்ணய்யர் கூறினார்.

"பாபரி மஸ்ஜித் தகர்ப்பின் மூலம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அவமானத்தை அதன் புனர் நிர்மாணம் மட்டுமே சரி செய்யும்" என்றும் அவர் கூறினார்.

காயல்பட்டினத்தில் அனிதாவுடன் அமைச்சர் மைதீன்கான் வாக்கு சேகரிப்பு


திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனுடன் இணைந்து அமைச்சர் மைதீன்கான் காயல்பட்டினம் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

தைக்கா தெருவில் பிரசாரத்தை துவக்கிய அனிதா காட்டு தைக்கா தெரு, சிறு நயினார் தெரு, குத்துக்கல் தெரு, குறுக்கு தெரு, முகதும் தெரு, காஜியப்பா தைக்கா தெரு, ஆறாம்பள்ளி தெரு, அம்பலமறைக்கார் தெரு, புதுக்கடை தெரு, சித்தன் தெரு, கீழசித்தன் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் காதர், மதுரை துணை மேயர் மன்னன், மதுரை மாவட்ட செயலாளர் தளபதி, முன்னாள் நகர செயலாளர் சொளுக்கு, நகர துணைச் செயலாளர் முகைதீன், மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம், நகர இளைஞரணி செயலாளர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி :தூத்துக்குடி வெப்சைட்,திரு. கந்தன், திருச்செந்தூர்

ஸ்ரீவை, வெள்ளுறை சேர்ந்தவருக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை

ஸ்ரீவைகுண்டம் அருகே தாயை மிரட்டுவதற்காக வெடிகுண்டு வீசிய வழக்கில் ரெடிக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, தூத்துக்குடி முதலாவது விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

வெள்ளூர் நடுத்தெருவை சேர்ந்த கணபதி மனைவி சுப்புலெட்சுமி (60). இவரது மகன் கந்தன் (40).

தனது பெயருக்கு வீட்டை எழுதித் தருமாறு தாய் சுப்புலெட்சுமியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். அதே போன்று 2.8.2007 அன்று, தனது தாயை மிரட்டுவதற்காக நாட்டு வெடிகுண்டை வீட்டின் முன்பு வீசியுள்ளார். இது தொடர்பாக சுப்புலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கந்தனை ஸ்ரீவைகுண்டம் போலீஸôர் கைது செய்தனர். வழக்கு விசாரணை தூத்துக்குடி முதலாவது விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை நீதிபதி (பொறுப்பு) எம். சேகர் விசாரித்து, எதிரி கந்தனுக்கு வெடிகுண்டு வீசிய குற்றத்திற்காக 25 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், தாயை கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 7 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதமும், அவதூறாக திட்டிய குற்றத்திற்கு ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த தண்டனைகள் அனைத்தையும் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி: தினமணி

புதன், 2 டிசம்பர், 2009

குவைத் சிறையில் உள்ள 236 இந்தியர்களை ஒப்படைக்க ஒப்பந்தம்

குவைத் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 236 இந்தியர்களை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக அந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. எண்ணெய் வளமிக்க அரபு நாடான குவைத்தில் 6 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் அங்குள்ள பல்வேறு நிறுவனங்களில் தற்காலிகமாக வேலை செய்து வருகின்றனர். பலர் நிரந்தரமாக அங்கேயே தங்கியுள்ளனர். அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 35 லட்சம்தான்.

குவைத் நாட்டு சிறைகளில் பல்வேறு குற்றங்களுக்காக 236 இந்தியர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பான ஒப்பந்தத்தை குவைத் நாட்டுடன் இந்தியா செய்ய உள்ளது. இருதரப்பும் நடத்திய பேச்சுவார்த்தைகளின் மூலம் இந்த ஒப்பந்தத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இது கையெழுத்தாகும் என்று எதிர்பார்ப்பதாக இந்த நாட்டுக்கான இந்திய தூதர் அஜய் மல்கோத்ரா டெல்லியில் நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‘‘இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் குவைத் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் அனைவரும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார்கள். இருப்பினும், அங்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை இந்திய சிறைகளில் அவர்கள் அனுபவிக்க வேண்டும். குவைத் மத்திய சிறையில் 175 இந்தியர்களும், மற்ற சாதாரண சிறைகளில் 61 இந்தியர்களும் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியாவுக்கு இவர்கள் அனுப்பப்பட்டால், தங்கள் குடும்பத்தினரை பார்க்க இயலும். குவைத் சட்டங்களால் பாதிக்கப்படும் இந்தியர்களுக்கு உதவ தனி சட்ட உதவி மையம் திறக்கப்பட்டு உள்ளது. உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையால், மற்ற நாடுகளில் உள்ளதை விட குவைத்தில் குறைந்த அளவிலான இந்தியர்களே வேலையை இழந்துள்ளனர்’’ என்றார்

துபாய் த‌மிழ் ச‌ங்க‌த்தில் மாபெரும் க‌லை நிக‌ழ்ச்சி

துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ம் அமீர‌க‌த்தின் 38வ‌து தேசிய‌ தின‌ம், வேலூர் எம்.பி. அப்துல் ர‌ஹ்மானுக்கு பாராட்டு விழா ம‌ற்றும் க‌லை நிக‌ழ்ச்சிக‌ளை நாளை (டிச‌ம்ப‌ர் 2ம் தேதி) இந்திய‌ உய‌ர்நிலைப்ப‌ள்ளி ஷேக் ராஷித் அர‌ங்கில் ந‌ட‌த்துகிறது.

இந்த விழாவில் இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் வேணு ராஜாம‌ணி, ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும‌ நிர்வாக‌ இய‌க்குனர் செய்ய‌து எம். ஸ‌லாஹுத்தீன், இந்திய‌ க‌ம்யூனிட்டி வெல்ஃபேர் க‌மிட்டியின் க‌ன்வீன‌ர் கே. குமார் உள்ளிட்டோர் கௌர‌வ‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட‌ உள்ள‌ன‌ர்.

மேலும் வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எம். அப்துல் ர‌ஹ்மானுக்கு பாராட்டு நிக‌ழ்ச்சியும் ந‌டைபெற‌வுள்ள‌து.

விழாவில் க‌லைப்புலி தாணு சிற‌ப்பு விருந்தின‌ராக‌ ப‌ங்கேற்கிறார். ச‌ன்டிவி க‌ல்யாண‌மாலை புக‌ழ் வாசுகி ம‌னோக‌ர‌ன் குழுவின‌ரின் ப‌ட்டிம‌ன்ற‌ம், இசைய‌மைப்பாள‌ர் க‌ங்கை அமர‌ன் த‌லைமையில் பாட்டுக்கு பாட்டு நிக‌ழ்ச்சியும் ந‌டைபெற‌ உள்ள‌து.

துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ குழ‌ந்தைக‌ளின் ந‌ட‌ன‌ நிக‌ழ்ச்சியும் இட‌ம்பெற‌ இருக்கிற‌து.

அனும‌திச் சீட்டு உள்ள‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே அர‌ங்கினுள் அனும‌திக்க‌ப்ப‌டுவ‌ர்.

அனும‌திச் சீட்டுக‌ளை பெற‌ துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ பொதுச்செய‌லாள‌ர் சி. ஜெக‌நாத‌ன் 050 5787657/
விழாக்குழு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா 050 467 4399 / 050 51 96 433 மற்றும் dubaitamilsangam@gmail.com ஆகிய எண்க‌ளையும் இணையத்தளத்தையும் தொட‌ர்பு கொள்ளலாம்

தடை செய்தாலும் இயங்கும் சீன செல்போன்கள்... !


கடந்த சில தினங்களாக 'ஐ.எம்.இ.ஐ. எனப்படும் ரகசிய எண்கள் இல்லாத செல்போனா... இனி செல்லாது செல்லாது' என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டு வந்தது.

ஆனால், இப்போது அந்தத் தடை செல்லுபடியாகவில்லை. காரணம் அரசு பரிந்துரைத்து, செல்போன் நிறுவனங்கள் பயன்படுத்திய செயலிழக்க வைக்கும் தொழில்நுட்பம் முழுமையாக பலனளிக்கவில்லை.

ரகசிய குறியீட்டெண்கள் இல்லாத செல்போன்கள் தேச விரோத சக்திகளின் செயலுக்கு துணைபோகும்... எனவே அவற்றை அடியோடு செயலிழக்க வைக்கப் போகிறோம் என மத்திய அரசு அறிவித்தது.

இதன்படி ஐஎம்இஐ எண்கள் இல்லாத 2.5 கோடி செல்போன்கள் செயலிழக்கும் நிலை தோன்றியது. நவம்பர் 30-ம் தேதிக்குள் எல்லா செல்போன் சேவை நிறுவனங்களும், இந்த செயலிழப்பு தொழில்நுட்பத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

அதேபோல வாடிக்கையாளர்களும் நவம்பர் 30க்குள் தங்கள் இணைப்பை ஐ.எம்.இ.ஐ. உள்ள மொபைலுக்கு மாற்றிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். மேலும் தங்களிடம் உள்ள போன்கள் ஐ.எம்.இ.ஐ. எண் உள்ளதுதானா என அறிய எஸ்எம்எஸ் ஒன்றையும் அனுப்பச் சொல்லியிருந்தனர்.

இந்த வகையில் அனைத்து செல்போன் நிறுவனங்களுமே கணிசமாக லாபம் பார்த்தன.

இந் நிலையில், சிலர் ஐ.எம்.இ.ஐ. இல்லாத மொபைலுக்கு, ரகசிய எண் தருவதாக தலா ரூ. 200 வசூலித்த கதையும் நடந்துள்ளது.

இதையெல்லாம் செய்ய முடியாத சிலர், வருவது வரட்டும் என்று அப்படியே விட்டுவிட்டனர்.

ஆனால் நவம்பர் 30க்குப் பிறகு இயங்காது என்று கருதப்பட்ட, ரகசிய எண்கள் இல்லாத செல்போன்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் பழையபடியே இயங்கின. அரசுத் துறை மொபைல் சர்வீஸான செல் ஒன் இணைப்பு பெற்ற போன்களும் கூட இயங்கின.

இதுகுறித்து தொலைத்தொடர்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், அரசு எங்களுக்குப் பரிந்துரைத்த தொழில்நுட்பத்தைப் பிரயோகித்துவிட்டோம். ஆனால் அது முழுமையாக வேலை செய்யவில்லை. ஆனால் இதற்காக அப்படியே விட்டுவிட மாட்டார்கள். தொழில்நுட்ப சிக்கலை சரி செய்து மீண்டும் தடை செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார்.

இந் நிலையில் ஐஎம்இஐ எண்கள் உள்ள, சீனா மற்றும் கொரிய மொபைல்களை இனி தருவிக்க மொபைல் விற்பனையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

கால அவகாசம் நீடிப்பு..

இதற்கிடையே, ஐஎம்இஐ எண்கள் இல்லாத போன்களுக்குரியவர்கள் அந்த எண்ணைப் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு, புதுவைக்கான செல்போன் டீலரான அமீத் என்பவர் கூறுகையில், எண்கள் பெற ஒரு வார கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஐஎம்இஐ எண் இல்லாததால் துண்டிக்கப்பட்ட போன் வைத்திருப்பவர்கள் இந்த எண்ணைப் பெற விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

LinkWithin

Blog Widget by LinkWithin