குற்றாலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குற்றாலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 நவம்பர், 2009

குற்றால அருவிகளில் வெள்ளம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


கனமழை காரணமாக பழையகுற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாலும், மெயின் அருவியில் இரவு மின் விளக்கு எரியாததாலும் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலையில் இருந்து இரவு வரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. மாலையில் மெயின் அருவியில் ஆர்ச் மீது தண்ணீர் கொட்டியது. இரவு அருவி பகுதியில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் சுற்றுலா பயணிகள் அருவியில் சென்று குளிக்க போலீசார் தடை விதித்தனர்.அருவிக்கு செல்லும் பகுதியின் குறுக்கே கயிறு கட்டி போலீசார் தடை ஏற்படுத்தியிருந்தனர்.

டவுன் பஞ்., ஊழியர்கள் மழை காரணமாக மின்விளக்கு சுவிட்சை போடாமல் சென்று விட்டதால் விளக்குகள் எரியவில்லை என்று அப்பகுதி வியாபாரிகள் கூறினர்.பழையகுற்றால அருவியில் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அருவிக்கு செல்லும் பகுதி வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

குற்றால அருவிகளில் கரை புரண்டு ஓடும் வெள்ளம் :சிற‌ப்பு ப‌ட‌ங்க‌ள்


குற்றாலத்தில் பெய்து வரும் கனமழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனா‌ல் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டு‌ள்ளது.

நெல்லை மாவட்டம் குற்றாலம் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக நேற்று காலையில் இருந்து மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது

கடந்த இரண்டு நாட்களாக மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. எனவே அந்த 2 அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு காவ‌ல்துறை‌யினர் தடை விதித்தனர்.

பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி ஆகியவற்றில் சுற்றுலாப் பயணிகள் குளித்தனர். மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளம் குறைந்ததும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப் படுவார்கள் என்று காவ‌ல்துறை‌யின‌ர்.

மெயின் அருவியில் சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் குளிக்க‌ த‌டை விதிக்க‌ப் ப‌ட்டிருந்த‌தால் வெறிச்சோடி காண‌ப்ப‌ட்ட‌து. குர‌ங்குக‌ள் அங்கும், இங்கும் தாவி விளையாடிக் கொண்டிருந்த‌ன‌. சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் அருவியில் குளித்துக் கொண்டிருக்கும் போது அவ‌ர்க‌ளின் பையை பிடுங்குவ‌து, உண‌வுப் பொருட்க‌ளை த‌ட்டிப் ப‌றிப்ப‌து என‌ ப‌டு பிஷியாக‌ இருக்கும் குர‌ங்குக‌ள் சோக‌மாக‌வே காண‌ப்ப‌ட்ட‌ன‌..

நன்றி : அலெக்ஸ்,தென்காசி

திங்கள், 7 செப்டம்பர், 2009

குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு: குளிக்கத் தடை


தென்காசி, குற்றாலம் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், அருவிகளில் பயணிகள் குளிக்க போலீஸôர் தடைவிதித்தனர்.

சனிக்கிழமை இரவு குற்றாலம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஞாயிற்றுக்கிழமை காலை 6 முதல் 2 மணி நேரம் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

பின்னர், பயணிகள் அருவிகளின் ஓரமாக நின்று குளிக்க போலீஸôர் அனுமதித்தனர்.
காலையிலும் தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பகல் 12 மணி முதல் பேரருவியில் குளிக்க போலீஸôர் மீண்டும் தடைவிதித்தனர்.

இதேபோல, குற்றாலம் ஐந்தருவியிலும் பிற்பகலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பயணிகள் குளிக்க போலீஸôர் தடைவிதித்தனர். பழைய குற்றாலம் அருவியில் மட்டும் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

மாலை முதல் குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் பயணிகள் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

குற்றாலத்தில் 50ஆயிரம் கொள்ளை: திருடனைக் காட்டிக் கொடுத்த நவீன செல்போன்

குற்றாலத்தில் கான்ட்ராக்டர் ஒருவரின் காரிலிருந்து பணம், நகை மற்றும் செல்போனை திருடிய வழக்கில், காணாமல் போன நவீன செல்போனால் துப்பு துலங்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வல்லான் கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் போஸ் (வயது 40). பில்டிங் காண்ட்ரக்டரான இவர் கடந்த 5ம் தேதி தனது நண்பர்களுடன் காரில் குற்றாலம் சென்றுள்ளார். குற்றாலம் அருவியில் குளிப்பதற்காக தான் அணிந்திருந்த 5பவுன் செயின், ரூ.10ஆயிரம், செல்போன் ஆகியவை அடங்கிய பேக்கை காரில் வைத்துவிட்டு, காரை பூட்டிச் சென்றுள்ளார் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, கார் கண்ணாடி உடைக்கப்படாமேலயே, உள்ளிருந்த பேக் திருடபட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து குற்றாலம் போலீஸில் புகார் செய்தார். திருட்டு போன பொருட்களின் மதிப்பு சுமார் 50 ஆயிரம் இருக்கும் என தெரிகிறது. இது குறித்து குற்றாலம் இன்ஸ்பெக்டர் விசாரணை செய்து வருகிறார்.

தற்போது, இந்த வழக்கில் பதிய திருப்பமாக, போஸ் பயன்படுத்திய நவீன செல்போனால் துப்பு துலங்கியுள்ளது. காணமல் போன செல்போனில் மொபைல் டிராக்கர் வசதி இருந்ததால், செல்போனை திருடிய நபர் பழைய சிம்மை கழற்றி விட்டு, புதிய சிம் மாற்றும் போது பழைய சிம்மில் ஏற்கனவே பதிவு செய்திருந்த இரண்டு நம்பர்களுக்கு தகவல் செல்லும். இதனை வைத்து செல்போன் திருடிய நபரை கண்டு பிடித்து விடலாம்.

குற்றாலத்தில் பணம், நகை மற்றும் செல்போன் பறிகொடுத்த போஸின் மனைவி செல்போனுக்கு அதேபோல் ஒரு மெசேஜ் வந்தது. அதில் தொலைந்து போன செல்போனில் புதிய சிம் கார்டு பொறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த சிம் கார்டின் எண்ணும் அந்த எஸ்.எம்.எஸில் வந்திருந்தது.

திருடியவரை தேடிக்கொண்டிருந்த காவல்துறையினருக்கு அல்வா சாப்பிட்டது போல் இருந்தது. காவல்துறையினர் உனடியாக செல்போன் கம்பெனியை தொடர்பு கொண்டபோது, முக்கூடல், பாப்பாக்குடியைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் மீனாட்சி சுந்தரம் (48) என்பது தெரியவந்துள்ளது. உடனடியாக போலீசார் அவரை அழைத்து விசாரித்ததில், நகை, பணம், செல்போன் திருடியவர் அவர்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.50ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திரும்பக் கிடைக்க காரணமான நவீன வகை செல்போன்களால், இனி இதுபோல் செல்போன் திருடர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். இனி மொபைல் திருட்டு மட்டுமல்ல பல்வேறு குற்றங்களை கண்டுபிடிக்க இந்த வகை செல்போன்கள் உதவும் என்பதில் ஆச்சரியமில்லை.

சனி, 8 ஆகஸ்ட், 2009

பயணிகளை ஏமாற்றும் குற்றாலம்!


குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துவிட்டதால் ஏமாற்றமடைந்துள்ள சுற்றுலா பயணிகள் பல்வேறு பகுதிகளிலுள்ள சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

தென்மேற்கு பருவமழையை மட்டுமே நம்பி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலுள்ள குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளும், குண்டாறு, அடவிநயினார், மோட்ட, ஸ்ரீமூலப்பேரி, கருப்பாநதி உள்ளிட்ட நீர்த் தேக்கங்களும் பல ஆயிரம் விவாசய நிலங்களும் உள்ளன.

இந்தாண்டு தென்மேற்கு பருவமழை மகாராஷ்டிரா, கேரளா, ஒரிஸ்ஸா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் முன்கூட்டியே ஜூன் முதல் வாரத்தில் தொடங்கினாலும் போதிய அளவு பெய்யவில்லை. சுமார் 15 தினங்கள் மட்டுமே இப்பகுதியில் மழை விட்டு விட்டு பெய்தது.

குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் சீசனை அனுபவிக்க வருவது வழக்கம். இந்தாண்டும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஆனால் குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துவிட்டதால் வந்ததுதான் வந்தோம் என்று குண்டாறு நீர்த்தேக்கம், கேரள மாநில ஆரியங்காவு பாலருவி, அச்சன்கோவில் கும்பாஉருட்டி அருவி, புளியங்குடி தலையனை, பாபநாசம், மணிமுத்தாறு என பல பகுதிகளிலுள்ள அருவிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் சாரல் திருவிழாவில் கலந்து கொள்ளும் விஜபிககள் அணைக்க கட்ட முயற்சி எடுக்கப்படும் என்று அறிவித்துவிட்டு போவதோடு சரி. அதன்பின் அடுத்தாண்டும் இதே பேச்சுதான் தொடரும்.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

குற்றாலம் சாரல் விழாவில் படகுப் போட்டி:குற்றாலம் முதலிடம்


குற்றாலம் சாரல் விழாவின் நிறைவுநாளான நேற்று படகுப் போட்டி நடைபெற்றது.
குற்றாலம் - ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் நடைபெற்ற இப் போட்டி இருபிரிவாக நடைபெற்றது. ஆண்களுக்கான போட்டியில் இருவர் செல்லும் மிதிபடகில் இப் போட்டி நடைபெற்றது. இதில் 24 பேர் கலந்துகொண்டனர்.

போட்டியை குற்றாலம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார் கொடியசைத்து தொடக்கிவைத்தார். குற்றாலம் கனகராஜ், அருண்ராஜ் ஆகியோர் முதலிடத்தையும், கண்ணன், மணி ஆகியோர் 2-ம் இடத்தையும், புதுக்கோட்டை கருணாநிதி, சரவணன் 3-ம் இடத்தையும் பெற்றனர்.

பெண்களுக்கான போட்டியை குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சித் துணைத் தலைவர் பா. ராமையா கொடியசைத்து தொடக்கி வைத்தார். இப் போட்டியில் 28 பேர் கலந்துகொண்டனர். இவர்கள் 4 பேர் செல்லும் மிதி படகில் கலந்துகொண்டனர்.


இப் போட்டியில் தென்காசி அருகேயுள்ள இலத்தூர் சுப்புலட்சுமி, பார்வதி, லட்சுமி, அழகம்மாள் ஆகியோர் அடங்கிய அணி முதலிடத்தையும், சங்கீதா, ராஜம்மாள், காளியம்மாள், மல்லிகா ஆகியோர் அடங்கிய அணி 2-ம் இடத்தையும், செங்கோட்டை சித்ரா, பேச்சியம்மாள், கலா, சுசிலா ஆகியோர் அடங்கிய அணி 3-ம் இடத்தையும் பெற்றனர்.

நிகழ்ச்சிக்கு சுற்றுலா அலுவலர் செல்லப்பா, மாவட்ட மக்கள் செய்திதொடர்பு அலுவலர் உல.இரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடுவர்களாக மாவட்ட நீச்சல் பயிற்றுநர் பிரேம்குமார், வசந்தகுமார் ஆகியோர் செயல்பட்டனர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஹோட்டல் குற்றாலம் கிளை மேலாளர் கருப்பையா, செங்கோட்டை நூருல்உமல் டிரஸ்ட் குழுத் தலைவர் கோமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உதவிமக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான் நன்றி கூறினார்.

அலெக்ஸ்,தென்காசி

வியாழன், 23 ஜூலை, 2009

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது


குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி காணப்படுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது.

இதனால் குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் அனைத்து அருவிகளுக்கும் சென்று ஆனந்த குளியல் போடுகின்றனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையை தொடர்ந்து அங்கு வியாபாரமும் சூடு பிடித்துள்ளது. இதனால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஐந்தருவி அருகே உள்ள படகு குழாமிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதி காணப்படுகிறது.

அருவிகளில் கூட்ட நெரிசலை தடுப்பதற்காக சுற்றுலா பயணிகள் அனைவரும் வரிசையாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருவதால் குற்றாலத்தில் வாகன நெருக்கடி அடிக்கடி ஏற்படுகிறது. அதை போலீசார் சமாளித்து வருகின்றனர். தீவிர பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே வருகிற 25-ந்தேதி குற்றாலத்தில் சாரல் விழா நிகழ்ச்சி நடக்கிறது.

ஞாயிறு, 19 ஜூலை, 2009

25ம் தேதி குற்றாலம் சாரல் விழா தொடக்கம் - அமைச்சர்கள் பங்கேற்பு


குற்றாலத்தில் சாரல் விழா வரும் 25ம் தேதி ஆரம்பமாகிறது. இதில் சபாநாயகர், 4 அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

குற்றாலம் கலைவாணர் அரங்கில் ஆண்டுதோறும் சாரல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா வரும் 25ம் தேதி ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி வரை நடக்கிறது.

குற்றாலம் கலைவாணர் அரங்கில் 25ம் தேதி மாலை 5 மணிக்கு சாரல் விழா துவக்க விழா நடக்கிறது. சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகிக்கிறார். கலெக்டர் ஜெயராமன் வரவேற்கிறார். சாரல் விழாவை துவக்கி வைத்து வீட்டு வசதி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகிறார்.

கலைநிகழ்ச்சிகளை துவக்கி வைத்து சுற்றுலா துறை அமைச்சர் சுரேஷ் ராஜன், பல்வேறு போட்டிகளை துவக்கி வைத்து அமைச்சர் மைதீன்கான், குத்துவிளக்கேற்றி
அமைச்சர் பூங்கோதை பேசுகின்றனர். எம்பி லிங்கம், எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் முன்னிலை வகிக்கின்றனர்.

எம்பி ராமசுப்பு, எம்எல்ஏக்கள் பீட்டர் அல்போன்ஸ், மாலைராஜா, அப்பாவு, வேல்துரை, வசந்தகுமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கிரகாம்பெல், கருப்பசாமி, சதன் திருமலைகுமார், வேளாண் விற்பனை குழு தலைவர் கணேசன், குற்றாலம் டவுண் பஞ் தலைவர் ரேவதி உள்பட பலர பேசுகின்றனர். டிஆர்ஓ ரமண சரஸ்வதி நன்றி கூறுகிறார்.

கலைநிகழ்ச்சிகள்

அன்று மாலை 5 மணிக்கு ஆழிதிருவரங்கம் சகோதரிகள் அபிராமி-ஆனந்தி ஆகியோரின நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி, 5.30 மணிக்கு அரசு இசை பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம், இரவு 7 மணி்க்கு சின்ன திரை இயக்குனர் ராஜ்குமாரின் அசத்தபோவது யாரு நிகழ்ச்சி நடக்கிறது.

துவக்க விழா வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசை, பரதநாட்டியம், மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில் தோட்டாக்குடி மாரியப்பன் குழுவினரின் நையாண்டி மேளம், கரகாட்டம், பொய்கால் குதிரையாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம் நிகழ்ச்சிகளும் நடக்கிறது என்று கலெக்டர் ஜெயராமன் தெரிவித்தார்.

வெள்ளி, 17 ஜூலை, 2009

குற்றாலம் பேரருவியில் அலைமோதும் மக்கள் கூட்டம்


குற்றாலம் பேரருவியில் அதிக தண்ணீர்வரத்து காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை நீக்கப்பட்டதால் வழக்கம்போல சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் தொடர் சாரல்மழை காரணமாக, அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. பேரருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், நேற்று காலை 7 மணிமுதல் 11 மணி வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் தடைவிதித்தனர்.

இதனால் புலியருவி, ஐந்தருவி, சிற்றருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்தது. குற்றாலம் பகுதியில் சாரல்மழையும், குளிர்ந்த காற்றும் வீசியது.இன்று வழக்கம்போல சுற்றுலாப் பயணிகள் குளித்து வருகின்றனர்.

அலெக்ஸ், தென்காசி

குற்றாலம் பேரருவியில் குளிக்க 4 மணி நேரம் தடை

குற்றாலம் பேரருவியில் அதிக தண்ணீர்வரத்து காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு போலீஸôர் 4 மணி நேரம் தடை விதித்தனர்.

குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் தொடர் சாரல்மழை காரணமாக, அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. பேரருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், வியாழக்கிழமை காலை 7 மணிமுதல் 11 மணி வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸôர் தடைவிதித்தனர். இதனால் புலியருவி, ஐந்தருவி, சிற்றருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்தது.

வியாழக்கிழமை நாள் முழுவதும் சாரல்மழையும் வெயிலும் மாறி மாறி நிலவியது. குளிர்ந்த காற்று வீசியது.

வியாழன், 16 ஜூலை, 2009

குற்றாலம் – தென்னாட்டு சுவர்க்கம்


நமது நாட்டில் மட்டுமல்ல, உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அருவிகளைப் பார்க்கலாம். ஆனால் குற்றால அருவிகளுக்கு இணையான அருவி ஒன்றைக் காண்பது அபூர்வம்.

குற்றாலத்தின் பேரருவியாக இருந்தாலும், அதன் மேல் பகுதியிலுள்ள செண்பகாதேவி அருவியானாலும், ஐந்தருவியானாலும், பழைய குற்றாலம் ஆனாலும், இந்த அருவிகள் எதுவும் பெரும் உயரத்தில் இருந்து ஒரு தூண் போல தண்ணீரைக் கொட்டி நம்மை பிரமிப்பில் ஆழ்த்தவில்லை.

நயாகராவைப் போல அச்சமூட்டும் அளவிற்கோ அல்லது கேரளத்தில் சாலக்குடி ஆற்றின் போக்கிலுள்ள அதிரம் பள்ளி போன்று ஒரு அழகிய இயற்கை சூழலில் உள்ளதோ அல்ல குற்றால அருவிகள்.


ஆயினும் குற்றால அருவியை இவ்வளவு சிறப்புடன் போற்றப்படுவதற்கு காரணம்: அதன் அருவி நீர் உடலிற்கு நன்மை பயப்பது, குற்றாலச் சூழல் மனதிற்கு இதமளிப்பது. இதனால்தான் குற்றாலத்தில் குளித்து ஊறியவர்கள் எவரும், வேறு எந்த அருவியிலும் குளிக்க முற்படுவதும் இல்லை, போற்றுவதும் இல்லை.

தமிழர் பாரம்பரியத்திலும், வரலாற்றிலும், இலக்கியத்திலும் போற்றப்படும் பொதிகை மலையைத் தழுவி ஓடிவரும் குற்றால அருவி நீர், அதன் வழியிலுள்ள பல மூலிகைச் செடிகளைத் தழுவி ஓடி வருவதால்தான் அதற்கு இந்த தனித்த மகிமை இருப்பதாகக் கூறுகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை எவராயினும் குற்றால அருவிகளில் குளித்து குறை கூறியவர் எவருமில்லை! மழை பொய்த்துப் போகும் காலங்களில் போதுமான அளவிற்கு அருவியில் நீர் கொட்டவில்லையே என்று ஒரு குறைபாடல் தவிர, குற்றால அருவிகளை கொஞ்சாதவர்களை காண்பதரிது.

அப்படியென்ன குற்றால அருவிகளுக்கு சிறப்பு என்று இதற்கு மேலும் கேட்பவர்கள், ஒரு முறை குற்றாலத்திற்குச் சென்று அங்குள்ள அருவிகளில் குளித்து நீராடிவிட்டு, அன்றோ அல்லது மறுநாளோ செங்கோட்டைக்கு அப்பால் தமிழ்நாடு எல்லையைத் தாண்டிசென்று கேரளத்திலுள்ள பாலாறு அருவியில் குளித்துவிட்டு வாருங்கள், அந்த வேறுபாடு தெரியும்.

Thanks By Webdunia

திங்கள், 13 ஜூலை, 2009

பாலருவி, கும்பா உருட்டி அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்


குற்றால சீசன் களை கட்டியுள்ளதால் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கும்பா உருட்டி அருவிக்கு படையெடுத்து வருகின்றனர்.

குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மேற்கு தொடர்ச்சி பருவ மழையின் காரணமாக சீசன் களை கட்டுவது வழக்கம். இந்தாண்டு பருவமழை தாமத்தோடு தொடங்கினாலும் குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

காட்டு பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்வதால் வறட்சியின்றி தண்ணீர் வரத்து உள்ளதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் கட்டுகடங்காமல் உள்ளது.

மேலும் அருவிகளில் குளிக்க அலை மோதும் கூட்டத்தினராலும், வாகனத்தினாலும் காவல் துறையினர் பெரும் சிரமத்தோடு பணியாற்றி வருகின்றனர். மேலும் அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் வருகையால் குற்றாலமே குலுக்கும் நிலை நேற்று (காலை முதல் மாலை வரை) நீடித்தது.

மேலும் குற்றால அருவிகளில் உள்ள கூட்டத்தை கண்டு மேலும் பிற சுற்றுலா பயணிகள் வாகனங்களில் 30 கிமீ தொலைவிலுள்ள கேரள மாநிலம் ஆரியங்காவு பாலருவி, அச்சன்கோவில் கும்பா உருட்டி அருவி, மணலாறு, பகுதிக்கு படையெடுத்தனர்.

இதனை தொடர்ந்து அங்கும் கூட்டம் அலை மோத தொடங்கியுள்ளது.

ஆரியங்காவு பாலருவியில் குளிக்க செல்லும் முன்பு குடிகாரர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது. மேலும் பெண்கள் உடைமாற்றுவதற்கு போதிய வசதி இல்லை. அதே சமயம் இரு அருவிகளுக்கு செல்லும் சோதனை சாவடிகளிலும் கட்டண கொள்ளை அதிகமாவே உள்ளது.

வாகனத்திற்கு ஒரு கட்டணம் குளிப்பதற்கு ஒரு கட்டணம் என இஷ்டம் போல் வசூலித்து வனத்துறை வளமாகி வருகிறது.

ஞாயிறு, 12 ஜூலை, 2009

குளுகுளு சீசன் - குற்றாலத்தில் அலைமோதும் மக்கள்


குற்றாலத்தில், சீசன் படு குளுமையாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது.

குற்றாலத்தில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக சீசன் கலக்கி வருகிறது. ஒருநாள் கூட இடைவெளி இல்லாமல் சாரல் பொழிகிறது. நேற்று காலை சுமார் அரை மணி நேரம் பலத்த சாரல் பெய்தது. பிறகு மாலை வரை லேசான வெயில் காணப்பட்டது. மாலையில் மீண்டும் இதமாக சூழல் நிலவியது.

மெயினருவி, பழைய குற்றால அருவி, செண்பகாதேவி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. இந்த சீசனில் நேற்று முதன்முறையாக குற்றாலம் குலுங்கின்ற அளவிற்கு சுற்றுலா பயணிகல் கூட்டம் காணப்பட்டது. இதனால் அனைத்து அருவிகளிலும் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

மெயினருவில் பெண்கள் இரண்டாவது பாலம், மற்றும் சன்னதி பஜார் வரை அணிவகுத்து நின்றனர். அதிகமான வாகனங்கள் வந்ததால் ஐந்தருவிக்கு செல்ல ஓருவழி பாதை நடைமுறைப்படுத்தப்பட்டது.

மெயினருவி கார் பார்கிங் நிறைந்து பேரூராட்சி அலுவலக சாலை, கலைவாணர் கலையரங்கம், தென்காசி தங்கும் விடுதி சாலை போன்றவற்றிலும் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டத்திற்கு ஏற்ப அருவிகளில் தண்ணீர் வரத்து இல்லாததால் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் குண்டாறு நீர்த்தேக்கம், கேரள மாநிலம் ஆரியங்காவு பாலருவி, அச்சன்கோவில் கும்பாஉருட்டி அருவிகளுக்கு வாகனங்களில் படையெடுத்து வருகின்றனர்.

விடுமுறை தினம் என்பதால் கட்டுக்கு அடங்காத அளவு கூட்டம் நிரம்பி வழிகிறது. போதிய அளவு வாகன போக்குவரத்தை சீர் செய்ய போலீசார் பற்றாக்குறை உள்ளது.

வெள்ளி, 10 ஜூலை, 2009

குற்றாலத்தில் சீசன் அருமை: படகு போக்குவரத்து ஜோர்


குற்றாலத்தில் சீசன் அருமையாக உள்ளது. குற்றாலத்தில் தற்போது குளுகுளு காற்றுடன் ரம்மியமான சீசன் நிலவுகிறது. ஐந்தருவிக்கு செல்லும் வழியில் வெண்ணமடை குளத்தில் சுற்றுலா துறையினர் ஏற்பாடு செய்துள்ள படகு குழாமில் தற்போது படகுகள் இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மலைப்பகுதியில் மழை பெய்வதால் மெயின்அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. நேற்று பிற்பகலில் மாவட்டம் முழுவதுமே சாரல் மழை பெய்தது. குற்றாலத்தில் வெயில் தெரியவில்லை. சனி, ஞாயிறுகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அலெக்ஸ், தென்காசி

திங்கள், 6 ஜூலை, 2009

அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியல்


அகஸ்தியர் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. மேலும் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அகஸ்தியர் அருவியில் ஆனந்த குளியல் நடத்தி வருகின்றனர்.
குற்றாலத்தில் கடந்த சுமார் 1 வார காலமாக தொடர்ந்து நிலவி வரும் சீசனால் சுற்றுலாப்பயணிகள் அகஸ்தியர் அருவிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அருவியில் ஜில்லென்று விழுந்து கொண்டிருக்கும் தண்ணீரில் இவர்கள் ஆனந்த குளியல் நடத்தி வருகின்றனர்.

அலெக்ஸ், தென்காசி

சனி, 4 ஜூலை, 2009

அனைத்து அருவிகளிலும் தண்ணீர்: குற்றால சீசன் ஜோர்


குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் சாரல் மழையுடன் ஆனந்தமாக குற்றால சீசனை அனுபவித்து வருகின்றனர். வெயில் தலை காட்டாததால் இதமான தென்றல் காற்றுடன் குளு குளு நிலைமை நிலவியது.

இன்று அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுந்து சுற்றுலாப் பயணிகளை திக்குமுக்காடச் செய்தது. மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழையகுற்றால அருவியில் பரவலாகவும், தேனருவி, செண்பகாதேவி அருவியில் மிக அதிகமாகவும் தண்ணீர் விழுந்தது.

அலெக்ஸ், தென்காசி

குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது


குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

இதனால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக சீசன் களைகட்டியுள்ளது.

வியாழக்கிழமை அதிகாலை முதல் அவ்வப்போது மிதமான வெயில் அடித்தது. நாள்முழுவதும் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. குளிர்ந்த காற்றும் வீசியது.

இதனால், குற்றாலம் பேரருவி, புலியருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர்கொட்டுகிறது.

குற்றாலம் பேரருவியில் வியாழக்கிழமை மாலை பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் விழுந்தது.

ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகமாக காணப்பட்டது

புதன், 1 ஜூலை, 2009

குற்றால சீசன் களைகட்டியது : ஆர்ப்பரிக்கிறது அருவிகளில் தண்ணீர்


குற்றாலத்தில் சாரல் மழை துவங்கியுள்ளதால் குற்றால சீசன் மீண்டும் களைகட்டத் துவங்கியுள்ளது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து வீழ்வதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.

குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான செங்கோட்டை, தென்காசி ஆகிய பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்திலும் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றுடன் குளுமையான சீசன் நிலவி வருகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுவதால் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குற்றால சீசனை அனுபவித்து வருகின்றனர்.

இன்னும் சில தினங்களில் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வியாபாரிகள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், மசாஜ் செய்யும் நபர்கள் சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அலெக்ஸ், தென்காசி

திங்கள், 29 ஜூன், 2009

குற்றாலத்தில் பெண்களுக்கு சிறப்பு வசதி: கருப்பசாமி பாண்டியன்


குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்ட துவங்கி விட்டது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுவதால் சுற்றுலாப் பயணிகள் சந்தோசமடைந்துள்ளனர். குற்றாலத்தில் பெண்களுக்கு சிறப்பு வசதி ஏற்படுத்த தென்காசி சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் ஆய்வு செய்தார்.

இம்மாத துவக்கத்தில் சீசன் துவங்கினாலும் தொடர்ந்து வெயில் அடித்ததால் சீசன் டல்லடித்தது. கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் குற்றாலத்தில் சாரல் மழை பெய்தது. அதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இன்று காலையில் குற்றாலத்தில் பேரருவி, ஐந்தருவி, புலியருவி ஆகிய அருவிகளில் நன்றாக தண்ணீர் விழுகிறது. பழைய குற்றாலத்தில் தண்ணீர் குறைவாகவே விழுகிறது.
நேற்றும் இன்றும் விடுமுறை நாளாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

இன்று காலையில் லேசான வெயில் அடித்தது. சாரல் இல்லாவிட்டாலும், இதமான தென்றல் குற்றாலம் சுற்றுபுறத்தில் வீசியது. சுற்றலுலாப் பயணிகள் மெயின் அருவியில் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.

இதனிடையே தென்காசி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் இன்று காலை குற்றாலம் அருவி பகுதிகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம், பெண்கள் குளிக்கும் இடத்திற்கு அருகே தற்காலிக உடை மாற்று அறை அமைக்க உத்தரவிட்டார்.

அலெக்ஸ், தென்காசி

சனி, 27 ஜூன், 2009

குற்றாலத்தில் களை கட்டும் சீசன்

குற்றாலத்தில் சீசன் களை கட்டுகிறது. அருவிகளில் வெள்ளிக்கிழமை தண்ணீர்வரத்து அதிகரித்தது.

குற்றாலம் பகுதியில் வியாழக்கிழமை இரவும், வெள்ளிக்கிழமை அதிகாலையும் சாரல் மழை பெய்தது.

நாள் முழுவதும் மேகமூட்டத்துடன் மனதுக்கு இதமளிக்கும் குளுகுளு தென்றல் காற்றும் தொடர்ந்து வீசிக்கொண்டிருந்தது.

பேரருவி மற்றும் ஐந்தருவிகளில் வியாழக்கிழமையை விட தண்ணீர் அதிகளவில் ஆர்ப்பரித்துக் கொட்டியது.

இருப்பினும், பழைய குற்றாலம் அருவியில் மட்டும் மிகக் குறைந்த அளவிலேயே தண்ணீர் விழுகிறது.

அதே வேளையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.

LinkWithin

Blog Widget by LinkWithin