தங்கமுதலீட்டு திட்டத்தை ஸ்டேட் பாங்க் மீண்டும் கொண்டு வந்துள்ளது. மக்கள் தங்களிடம் உள்ள தங்கத்தை வங்கிகளில் வைத்து முதலீட்டு காலம் முடிந்தவுடன் பணத்தையோ அல்லது சுத்த தங்கத்தையோ பெறலாம். அதற்கு வட்டியாக கூடுதல் தங்கத்தையும் பெறலாம்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா 1999ல் தங்க முதலீட்டு திட்டத்தை கொண்டுவந்தார். இதன்படி மக்கள் தங்களிடம் உள்ள கூடுதல் தங்கத்தை வங்கிகளில் டுதலீடு செய்யலாம். அது நகைகள் நாணயங்கள் கட்டிகள் என எந்த வடிவிலும் எத்தனை கேரட்டிலும் இருக்கலாம். கேரட்டுக்கு தகுந்தவாறு நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டன.
கோயில்கள் சார்பில் வங்கிகளில் அதிகளவில் தங்கம் முதலீடு செய்யப்பட்டது. குhணிக்கையாகவும் நகைகள் வடிவில் உபரியாக இருந்த தங்கத்தை முதலீடு செய்து முதலீட்டு காலத்துக்கு பின் கோயில் நிர்வாகங்கள் பணத்தை பெற்றுக் கொண்டன.
இந்நிலையில் இப்போது மீண்டும் தங்க முதலீட்டு திட்டத்தை ஸ்டேட் பாங்க் தொடங்கி உள்ளது.
ஆனால் நாடு முழுவதும் மொத்தம் 50 கிளைகளில் மட்டுமே தங்க முதலீடு பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் முதலீடு செய்த தங்கத்தை திரும்ப பெற முடியாது.
அதன் பின் 3 ஆண்டுக்குள் முதலீட்டுக் காலத்துக்கு முன்னதாக எடுப்பவர்களுக்கு அபராத வட்டியாக 0.5 சதவீதமும் 3 ஆண்டுக்குப் பின் முதலீட்டுக்கு காலத்துக்கு முன்னதாக தங்கத்தையோ பணத்தையோ திரும்ப பெறுபவர்களுக்கு அபராத வட்டியாக 0.25 சதவீதமும் வசூலிக்கப்படும். தங்க முதலீட்டு திட்டத்துக்கு இப்போது 3 ஆண்டு கால முதலீட்டுக்கு ஒரு சதவீத வட்டியும் 4 ஆண்டுக்கு 1.25 சதவீதம் 5 ஆண்டுக்கு 1.5 சதவீதம் வட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதால் பெருமளவில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக அந்நியச் செலவானியும் பெருமளவில் செலவழிக்கப்படுகிறது.
தங்க முதலீட்டு திட்டத்தின் மூலம் ஏராளமான அளவு தங்கம் மத்திய அரசுக்கு கிடைக்கும் என்பாதல் இறக்குமதியை குறைப்பதுடன் அந்நியச் செலவாணி வீணாவதும் தடுக்கப்படும்.
பொதுமக்களைப் பொருத்தமட்டில் தங்கத்தை வீட்டில் வைத்து பாதுகாப்பதை விட வங்கியில் முதலீடு செய்து கைவசம் உள்ள தங்கத்தில் லாபம் சம்பாதிக்கலாம்.
தகவல் : தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக