
அமெரிக்காவின் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இந்த மார்ச் மாதம் மட்டுமே 742000 பணியாளர்களை நீக்கியுள்ள விவரம் தெரிய வந்துள்ளது. இது கடந்த 16 ஆண்டுகளில் நிகழ்ந்திராத படுமோசமான நிலையாகும்.
இவர்கள் விவசாயத்துறைச் சேராத நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து ஏடிபி நேஷனல் எம்ப்ளாய்மெண்ட் அறிக்கை கூறுவதாவது:
பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பெரும் வேலை இழப்புகள் ஏற்பட்டன. ஆனால் மார்ச் மாதம் மட்டும் அதைவிட அதிக வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த ஒரே மாதத்தில் மட்டும் 742000 பேர் பணியிழப்புக்கு உள்ளாகியுள்ளனர்
இவர்களில் 415000 பேர் தனியார் வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். 327000 பேர் உற்பத்தி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்
இதன் மூலம் அமெரிக்காவின் வேலையின்மை இன்னும் அதிகரித்துள்ளது, என அந்த அறிக்கை தெரிவிக்கிறது
thagaval : தட்ஸ்தமிழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக