சவுதி அரேபியாவின் கிழக்குப் பிராந்திய அரசு ஆதரவுடன் தம்மாம் நகரில் வருடந்தோறும் ஏழைகள் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு உதவும் வண்ணம் நடைபெற்று வருகிறது.
இவ்வாண்டுக்கான ஓட்டப் போட்டிகள் தம்மாம் நகரில் 19.03.2009 வியாழக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்பதற்கான நன்கொடை நுழைவுக் கட்டணம் 50 சவுதி ரியால்.
இப்போட்டிகள் 5 மற்றும் 10 கிலோமீட்டர் தூர அளவுகள் என இரு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த எல். காஜா முஹைதீன் ஐந்து கிலோ மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்று ஐந்து கிலோ மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்று 25 நிமிடங்களில் கடந்து பதக்கம் பெற்றார். இவருடன் தமிழக மற்றும் இந்திய இளைஞர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக