வியாழன், 3 நவம்பர், 2011

ஸ்ரீவை., எல்லைக்குட்பட்ட பகுதியில் பன்றி, நாய்களை ஒழிக்க பஞ்., கூட்டத்தில் விவாதம்

ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ், எல்லைக்குள் பன்றிகள், நாய்களை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என பஞ்., கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது. ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்., உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு டவுன் பஞ்.,தலைவர் அருணாசலம் தலைமை வகித்தார்.

துணைத்தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது

பிச்சை: ஸ்ரீவைகுண்டம் மின் சந்தை வளாகத்தில் அதிகமாக மழைநீர் தேங்குவதால் அந்தபகுதியில் சுகாதார கேடு ஏற்படுகிறது.

தலைவர்: மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து பஞ்.,நிர்வாகம் உடனடியாக தீர்வு காணப்படும்.

பொன்பாண்டி: ஸ்ரீவைகுண்டம் டவுன்பஞ்.,சிற்கு புதிய டிராக்டர் ஒன்று தேவை. தற்போது உள்ள டிராக்டர் சரிவர இயங்கவில்லை. அதனை வாங்க உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்.

பெருமாள்: டிராக்டர் வாங்கும் போது அதோடு சேர்த்து மண் அள்ளும் இயந்திரமும் வாங்கவேண்டும்.

தலைவர்: தற்போது உள்ள டிராக்டர் சரி இல்லை எனில் கண்டிப்பாக மக்கள் சேவைக்கு புதிய டிராக்டர் வாங்க ஆவன செய்யப்படும்.

பொன்பாண்டி: ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள ரதவீதிகளில் திருவிழா காலங்களில் ஆடு வெட்டுவதை தடை செய்யவேண்டும்

தலைவர்: அதனை நகர சுகாதாரம் கருதி சந்தை வளாகத்தில் மாற்ற உடனடியாக அறிவிப்பு வெளியிடப்படும்

பெரியார் செல்வம்: நகர பகுதிக்குள் நாய், பன்றிகள் தொல்லை அதிகமானதால் சுகாதார கேடு ஏற்படுகிறது.

தலைவர்: ஓரு மாதத்திற்குள் கால அவகாசம் கொடுத்து அதனை முற்றிலுமாக ஒழித்து சுத்தமான ஸ்ரீவை.,யை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்

பால்ராஜ்: குடிநீர், சுகாதாரம் போன்ற பெரிய பிரச்னைகள் இருக்கும்போது பிறர் வார்டுகளில் பிரச்னையை பற்றி உறுப்பினர்கள் பேசலாமா?

தலைவர்: நாம் 18 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் ஸ்ரீவைகுண்டத்தை வளம்பெற செய்யமுடியும். நான் உட்பட யாரும் எந்தவிதமான கமிஷன் ஏதும் வாங்காமல் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கூறினார்.

எழுத்தர் தாமரை செல்வன் நன்றி கூறினார்.

செய்தி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin