தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் தாமிரபரணி ஆறு வெள்ளமாக ஓடுகிறது.
நேற்று ஸ்ரீவைகுண்டம் அனைக் கட்டில் இருந்து வினாடிக்கு 1161 கன அடி தண்ணீர் வெளியறி கடலுக்கு சென்றது. ஸ்ரீவைகுண்டம் அனை கட்டு வடிகாலில் வினாடிக்கு 800 கன அடி தண்ணிரும், தென்காலில் வினாடிக்கு 800 கன அடி தண்ணிரும் திறந்து விடப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் அனைக் கட்டில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் ரூ 9 கோடி மதிப்பிட்டில் புதிய பாலம் கட்டும் பணி ஆரம்பித்து நடந்து வருகிறது. புதிய பாலம் கட்ட கான்கீரட் போடும் பணி நடந்து வருகிறது.ஆற்றில் வெள்ளமாக ஓடுவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வயல்கள் மழையால் முழ்கி உள்ளதால் விவசாய்கள் வேதனை அடைத்துள்ளனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக