தென் தமிழகத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று திருநெல்வேலி.
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் நெல்லைக்கு தனி இடம் உண்டு. மாபெரும் தலைவர்கள் அவதாரம் எடுத்த பூமி நெல்லை.
நெல்லை லோக்சபா தொகுதியில் இடம் பெற்றிருந்த பழைய சட்டசபைத் தொகுதிகள் - விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் (தனி), திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி.
புதிய நெல்லை லோக்சபா தொகுதியில், ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நான்குநேரி, ராதாபுரம் ஆகியவை இடம் பெற்றுள்ளன
விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகியவை நீக்கப்பட்டு விட்டன. அதற்குப் பதிலாக ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நான்குநேரி, ராதாபுரம் ஆகியவை இணைந்துள்ளன
ஆரம்பத்தில் காங்கிரஸ் கோட்டையாக திகழ்ந்த இந்தத் தொகுதி இடையில் அதிமுகவின் கோட்டையாக மாறியது. இங்கு அதிமுக 6 முறை வெற்றி பெற்றுள்ளது
திமுகவுக்கு இங்கு 2 முறை வெற்றி கிடைத்துள்ளது. தற்போது காங்கிரஸ் வசம் மீண்டும் வந்துள்ளது நெல்லை.
கடந்த தேர்தல் நிலவரம்
தனுஷ்கோடி ஆதித்தன் (காங்) -3,70,127
அமிர்த கணேசன் (அதிமுக) - 2,03,052
வெற்றி வித்தியாசம் -1,67,075 வாக்குகள்.
இதுவரை எம்.பி. ஆக இருந்தவர்கள்
1951-57 - தாணு பிள்ளை - காங்.
1957-62 - தாணு பிள்ளை - காங்.
1962-67 - முத்தையா - காங்.
1967-71 - சேவியர் - சுதந்திரா கட்சி.
1971-77 - முருகானந்தம் - சிபிஐ.
1977-80 - அருணாச்சலம் - அதிமுக.
1980-84 - சிவப்பிரகாசம் - திமுக.
1984-89 - கடம்பூர் ஜனார்த்தனம் - அதிமுக.
1989-91 - கடம்பூர் ஜனார்த்தனம் - அதிமுக.
1991-96 - கடம்பூர் ஜனார்த்தனம் - அதிமுக.
1996-98 - சிவப்பிரகாசம் - திமுக.
1998-99 - கடம்பூர் ஜனார்த்தனம் - அதிமுக.
1999-04 - பி.எச்.பாண்டியன் - அதிமுக.
2004 - தனுஷ்கோடி ஆதித்தன் - காங்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக