திங்கள், 4 மே, 2009

தேர்தல் அறிக்கை குறித்து ஜவஹிருல்லாஹ் கூறியது

மத்திய, மாநில அளவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான பட்டியல் சரி செய்யப்பட வலியுறுத்தப்படும்.

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளை உடனடியாக லோக்சபாவில் தாக்கல் செய்வதற்கும், அதன் பரிந்துரைப்படி சிறுப்பான்மையினருக்கான 15 சதவீதம் ஒதுக்கீடும், அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்கென 10 சதவீதம் ஒதுக்கீடு முழு அளவில் அமல்படுத்த ஆவண செய்வோம்.

பொதுத்துறை வேலை வாய்ப்பு, உயர்கல்வி, சமூக முன்னேற்றத்துக்கான நலன் ஆகியவற்றில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வலியுறுத்துவோம்.

மத்திய, மாநில அரசு திட்டங்களில் ,முஸ்லீம்களுக்கு துணைத் திட்டங்களை ஏற்படுத்தவும் அத்தகைய துணைத் திட்டங்களுக்கு தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதற்கு சமமான நிதியை ஒதுக்க
வேண்டும்

சிறுபான்மையினர் பெருவாரியாக வசிக்கும் இடங்களில் பள்ளி கூடம் அமைக்க 20 சதவீதம் சர்வ சிக்ஷா அபியான் நிதியை ஒதுக்கீடு செய்யவும், முஸ்லீம் சமூகம் கல்வியில் பின் தங்கியிருப்பதை முடிவுக்கு கொண்டு வரவும் வலியுறுத்துவோம்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு செலவிடப்பட வலியுறுத்துவோம்.

அனைத்து மாநில பாடநூல்களில் இருந்தும் வகுப்பு வாதத்தைத் தூண்டும் கருத்துகளை நீக்கி மாணவர்களிடையே மதச்சார்பற்ற மனித நேய கொள்கைகளை வளர்க்கும் வகையில் பாடத்திட்டங்களை வகுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

நீதிபதிகள் நியமனத்தில் உச்சநீதிமன்றம் வரை சமூகநீதி பேணப்பட வேண்டும்மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தும் பெயரில் கொண்டு வரும் கொடுஞ்சட்டங்களை ரத்து செய்ய ஆவன செய்வோம்.

மனிதநேய மக்கள் கட்சி தமிழகத்தில் மயிலாடுதுறை, மத்திய சென்னை, ராமநாதபுரம், பொள்ளாட்சி ஆகிய நான்கு தொகுதிகளிலும் ரயில் இன்ஜின் சின்னத்தில் போட்டியிடுகிறது. இதற்கு வாக்காளர் ஓட்டளித்து அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு ஜவஹிருல்லா கூறினார்.

பேட்டியின் போது, மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச்செயலர் தமீம்அன்சாரி, அமைப்பு செயலர் ஜெய்னுலாபுதீன், மாநில துணைச் செயலர் ஹாஜாகனி உட்பட பலர் உடனிருந்தனர்.

தகவல் : சமுதாய செய்திகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin