செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

முதல்வர் இல்லம் முற்றுகை-3000 தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கைது


ராமநாதபுரத்தில் பள்ளிவாசல் ஒன்று சீல் வைக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் முதல்வரின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த 3,000பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் எஸ்.வி. பட்டின, சோழகன்பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்துவது தொடர்பாக இரு பிரிவு முஸ்லிம்கள் இடையே தகராறு ஏற்பட்டது.

இது தொடர்பாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையால் பலன் ஏற்படாததையடுத்து கடந்த 31ம் தேதி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீஸாரும் பள்ளிவாசலை பூட்டி சீல் வைத்தனர்.

மேலும், அங்கு தொழுகைக்கு வந்திருந்தவர்களையும் கைது செய்யப்பட்டனர். இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடும் கண்டனம் தெரிவித்தது.

பள்ளிவாசல் சீல் வைக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியின் இல்லத்தை தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் பக்கீர் முகமது, பொதுச் செயலாளர் அப்துல் அமீது ஆகியோர் தலைமையில் சுமார் 3,000 பேர் முற்றுகையிட முயன்றனர்.

நேற்று அண்ணா சாலை ஆயிரம் விளக்கு மசூதி அருகே திரண்ட அவர்கள் கோபாலபுரம் நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்றபோது போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

அவர்கள் பஸ்கள், வேன்களில் பல்வேறு சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin