திங்கள், 20 ஜூலை, 2009

ஸ்ரீவையில் வேட்பாளர் யார்?

இடைத் தேர்தலை சந்திக்கும் 5 தொகுதிகளும் ஒவ்வொரு வகையில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற விறுவிறுப்பான தொகுதிகளாகும்.

இதில் தமிழக காங்கிரஸ் கட்சி யினர் பெரிதும் நம்பிக் கொண்டிருப்பது தூத்துக் குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தொகுதியை மட்டுமே. காங்கிரஸ் தரப் பில் டிக்கெட் பெற இந்த தொகுதி யைச் சேர்ந்தவர்களுக்கும், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத காங்கிரஸ்காரர் களுக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலின் போது மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜயசீலன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பிறகு அவரை மாற்றி விட்டு ஊர்வசி செல்வராஜை வேட்பாளர் ஆக்கினார்கள். எனவே இந்த தடவை விஜயசீலனுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

செல்வராஜ் மனைவி நளினி தனக்கு டிக்கெட் தர வேண்டும் என்று கூறி வருகிறார். அனுதாப ஓட் டுக்கள் பெற்று வெற்றி பெற்று விட முடியும் என்று இவர் நம்புகிறார். வக்கீல் மகேந்திரன், மயிலை பெரியசாமி, மால் மருகன், சிவபாலன், பொன் பாண்டியன் ஆகியோரும் வழக்கம் போல டிக்கெட் கேட்பவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

தி.மு.க.வை சேர்ந்தவர் களுக்கும் இந்த தொகுதி மீது ஒருகண் இருக்கிறது. ஸ்ரீவைகுண்டம் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. டேவிட் செல்வின் இங்கு போட்டி யிட விருப்ப மனு கொடுத் துள்ளார். முன்னாள் எம்.பி. ராதிகா செல்வியும் இங்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க. சார்பில் மீண்டும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் நிறுத்தப்பட வாய்ப்பு உள் ளது. கடந்த தேர்தலில் இவர் சுமார் 1400 ஓட்டு கள் வித்தியாசத்தில் தான் வெற்றியை நழுவ விட்டார்.

இன்னும் ஓரிரு நாட்களில் இவர்களில் வேட்பாளர் யார் என்பது தெரிந்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin