
அபுதாபியில் அரேபிய கலை மற்றும் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சியில் இஸ்லாம்: நம்பிக்கை மற்றும் வழிபாடு எனும் தலைப்பில் துருக்கி சுற்றுலாத்துறை ஆதரவுடன் இஸ்லாமிய கலை வேலைப்பாடுகளைக் கொண்ட 150க்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன
எமிரேட்ஸ் பேலஸ் ஹோட்டலில் நடைபெறும் இக்கண்காட்சி வரும் அக்டோபர் மாதம் வரை நடைபெறும்.
கண்காட்சியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கை முறையினை சித்தரிக்கும் வண்ணம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்லாமிய நம்பிக்கை, வழிபாட்டினை மையமாகக் கொண்ட நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.இதனையொட்டி பல்வேறு சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் இடம் பெற்று வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக