சனி, 4 ஏப்ரல், 2009

ஃபெடெக்ஸ்: 1000 பணியாளர் நீக்கம்


அமெரிக்காவின் ஃபெடெக்ஸ் கார்ப்பரேஷன் தனது 1000 பணியாளர்களை நீக்கியுள்ளது.மூன்றாவது காலாண்டில் தனது வருமானத்தில் 75 சதவிகிதம் குறைந்துவிட்டதால் இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாததாகிவிட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

நீக்கப்பட்டவர்களில் பாதிப்பேர் மெம்பிஸ் கிளை அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்தின் மெம்பிஸ் கிளையில் மட்டும் மொத்தம் 33000 பேர் பணியாற்றுகின்றனர். உலகம் முழுக்க 290000 பேர் இந்நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.

பணி நீக்கத்துக்கென பட்டியலிடப்பட்டவர்களை அடையாளம் கண்டு, கணக்கு முடிக்கும் பணி இப்போது நடப்பதாக ஃபெட்எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அடுத்த காலாண்டுக்குள் பொருளாதாரம் மீட்சியடைந்து நஷ்டம் சரிகட்டப்படாவிட்டால் மேலும் பணியாளர்களைக் குறைப்பது தவிர்க்க முடியாததாகிவிடும் என இந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெஸ் பன் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin