சனி, 18 ஜூலை, 2009

ஸ்ரீவை. இடைத் தேர்தல்: மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஒத்திவைப்பு

ஸ்ரீவைகுண்டம் இடைத் தேர்தலையொட்டி ஜூலை 17ம் தேதி முதல் தேர்தல் முடியும் வரை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஸ்ரீவைகுண்டம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் நன்னடைத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் ஜூலை 17ம் தேதி முதல் தேர்தல் முடியும் வரை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறாது.

மேலும், தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிந்த பின்னர் வழக்கம்போல நடத்தப்படும் மக்கள் குறைதீர்க்கும் நாள் பற்றிய விபரம் பின்னர் வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : சக்திமுருகன், தூத்துக்குடி இனைதளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin