சனி, 18 ஜூலை, 2009

ஸ்ரீவை இடைத்தேர்தல் ஒரு பார்வை :

ஸ்ரீவை இடைத்தேர்தல் :

ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் M.L.A. ஊர்வசி செல்வராஜ் கடத்த 06- 07-2009 அன்று மாரடைப்பால் காலமானார் எனவே ஸ்ரீவையில் தேர்தல் நடக்கிறது.

ஸ்ரீவைகுண்டம் உட்பட‌ ஓரிருநாளில் 5 தொதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகஸ்ட் 18ம் தேதி நடக்கிறது.வாக்குப் பதிவு ஆகஸ்ட் 18ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 22ம் தேதியும் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்

இந்த தொகுதியில் கடந்த 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 1,40,131 வாக்காளர்களில் 93,648 பேர் வாக்களித்தனர். இதில் 38,188 ஓட்டுகள் பெற்று காங்கிரசை சேர்ந்த ஊர்வசி செல்வராஜ் வெற்றி பெற்றார்.

கடந்த தேர்தலை விட 23 ஆயிரம் வாக்காளர் குறைவு :

இந்த நிலையில் தொகுதி சீரமைப்பு செய்யப்பட்டு, பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது வீடு வீடாக ஆய்வு நடத்தப்பட்டு பலரது பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தல் 2006-ம் ஆண்டில் தொகுதியின் எல்லையை கணக்கில் கொண்டு நடத்தப்படுகிறது. ஆகையால் தற்போது ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு தனியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதில் 57 ஆயிரத்து 353 ஆண் வாக்காளர்களும், 59 ஆயிரத்து 254 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 1 லட்சத்து 16 ஆயிரத்து 607 வாக்காளர்கள் உள்ளனர்.

இது கடந்த தேர்தலை விட 23 ஆயிரத்து 524 வாக்காளர்கள் குறைவு ஆகும். இதே போன்று தொகுதியில் 172 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன

வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும்

2006ம் ஆண்டு தேர்தல் விதிமுறையின்படியே இந்த இடைத் தேர்தல் நடைபெறும். 172 வாக்கு மையங்களில் வெப் கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் ஆனையத்தின் தனி இனையதள சர்வர் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் இருந்தவாறே தேர்தல் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.

ஸ்ரீவைகுண்டம் இடைத் தேர்தலுக்கு துணை ராணுவம்

தமிழக சட்டசபை இடைத் தேர்தல் பாதுகாப்புக்கு முழுக்க முழுக்க துணை ராணுவமே பயன்படுத்தப்படும். அதேபோல வாக்குச் சாவடிகளில் மத்திய அரசு ஊழியர்களே பயன்படுத்தப்படுவார்கள் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.

வாக்குச் சாவடிகளி்ல் முழுமையாக மத்திய அரசு ஊழியர்களை நியமிக்கவுள்ளோம்

தேர்தல் முடிவுகளை எஸ்.எம்.எஸ். மூலம் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் குப்தா.

ஸ்ரீவைகுண்டம் இடைத் தேர்தலில் வாக்களிப்போருக்கு இடது கை நடுவிரலில் அழியாத மை:

ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடதுகை நடுவிரலில் அழியாத மை வைக்கப்படும் என, ஆட்சியர் கோ. பிரகாஷ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு வழக்கமாக இடது கை ஆள்காட்டி விரலில் அழியா மை வைக்கப்படும். மக்களவை தேர்தல் முடிந்து 2 மாதங்களே அவதால், அந்த தேர்தலில் வைக்கப்பட்ட மை இன்னும் முழுமையாக அழிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, இடைத்தேர்தலில் இடது கை நடுவிரலில் அழியா மை வைக்கப்படும்.

இந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்

ஸ்ரீவை தொகுதியில் உள்ள 172 வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் வாக்குப்பதிவு வேப் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டு, லேப் டாப் கணினிகள் உதவியுடன் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியர் கோ. பிரகாஷ் தெரிவித்தார்.

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் அரசியல் கட்சியினர் சுறுசுறுப்படைந்துள்ளனர்.

வேட்பாளர் யார்?

எஸ்.பி. சண்முகநாதன் :

அதிமுகவைப் பொருத்தவரை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.2001 தேர்தலில் இதே தொகுதியில் சண்முகநாதன் 2,886 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் டேவிட்செல்வினை தோற்கடித்து, சில மாதங்கள் கைத்தறி துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

டேனியல் ராஜு :

தூத்துக்குடி நகர்மன்ற முன்னாள் தலைவரான எஸ். டேனியல் ராஜும் களம் இறங்க தயாராகி வருகிறார். தூத்துக்குடி நகர்மன்ற முன்னாள் தலைவரான எஸ். டேனியல் ராஜும் களம் இறங்க தயாராகி வருகிறார். இவர், இந்த தொகுதியில் 1984, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

வேட்பாளர் யார்? என்பது ஒரிரு நாள்களில் தெரியவரும்.அதைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin