செவ்வாய், 2 ஜூன், 2009

நாளை முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். (பல் மருத்துவம்) படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பம் புதன்கிழமை (ஜூன் 3) வழங்கப்படுகிறது.

சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, கோவை, சேலம், தர்மபுரி உள்பட 15 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் விண்ணப்பம் விநியோகிக்கப்படும்.

‘Secretary, Selection Committee’ என்ற பெயரில் சென்னையில் செலுத்தக்கூடிய வகையில் ரூ.500-க்கு வரைவுக் காசோலை அளித்து விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

சுகாதாரத் துறையின் www.tnhealth.org என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பம், தகவல் குறிப்பேட்டை ஜூன் 3-ம் தேதி காலை 10 மணி முதல் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

மொத்தம் உள்ள 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,483 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. மேல்மருவத்தூர் உள்ளிட்ட நான்கு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 251 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வரும் 17-ம் தேதி கடைசி நாளாகும்.

சென்னையில் வரும் ஜூன் 28-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஜூலை 6-ம் தேதி முதல் கவுன்சலிங் தொடங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin