செவ்வாய், 2 ஜூன், 2009

நெல்லையில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்


நெல்லையில் புகையிலை ஒழிப்பு தினமான நேற்று ட்ரூ டிரஸ்ட் நிறுவனம் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 3மாவட்டங்களில் புகையில்லாத மாவட்டமாக உருவாக்க ட்ரூ டிரஸ்ட் நிறுவனம் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து நேற்று புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடத்தியது.

இதில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து புகைபிடித்து வந்த சென்னை சேர்ந்த சர்புதின் என்பவர் தனது புகை பழக்கத்தால் தொண்டையில் புற்றுநோய் பரவி குரல்வளையை பறிகொடுத்ததாக கூறினார். தற்போது இயந்திரம் மூலம் தனது குரல்வளை இயங்கிவருவதாக தெரிவித்தார்.

மேலும் புகைப்பிடிப்பதால் ஏற்படும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்களை தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் செய்து வருவதாக தெரிவித்தார். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை ட்ரூ டரஸ்ட் நிறுவனர் சார்லஸ் பிரேம்குமார் செய்திருந்தார்.

நன்றி : செலவா, திருநெல்வேலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin