ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
வியாழன், 16 ஜூலை, 2009
சென்னையை தகர்க்க சதி
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் மற்றும் முக்கிய தகவல் தொழில் நுட்ப அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்த லஸ்கர்இதொய்பா தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டிருப்பதாக திடுக் கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள், முக்கிய தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள், கோயில்கள் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.
.
சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பிடிபட்ட லஸ்கர் இ தொய்பா தீவிரவாதியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மும்பையில் கடந்த நவம்பர் மாதம் நடத்திய அதே பாணியில் மும்பையில் 8 இடங்களில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதே போல சென்னை நகரிலும் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக பிடிபட்ட தீவிரவாதி திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கிறார். குறிப்பாக நூற்றுக்கணக்கான மக்கள் கூடும் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை தகர்க்க சதி திட்டம் தீட்டியிருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து உளவுத்துறை மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டு காவல் துறைக்கு தீவிரவாதிகள் பற்றிய எச்சரிக்கை தகவல் அனுப்பப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழக கடலோர பகுதிகளில் கடற்படை, கடலோர காவல்படையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இது தவிர தமிழ்நாட்டின் கரையோரத்தில் உள்ள 591 கிராமங்களில் மீனவர்கள் மற்றும் போலீசார் இணைந்து செயல்படும் கண்காணிப்பு குழுக்கள் மூலமும் கண்காணிப்பு பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. தற்போது வந்துள்ள எச்சரிக்கையின் மூலம் 24 மணிநேரமும் கடல் பகுதியில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப் பட்டு உள்ளன.
சென்னையில் சென்ட்ரல் ரெயில் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையம் மற்றும் தாம்பரம், மாம்பலம், கடற்கரை போன்ற அனைத்து ரெயில் நிலையங்களிலும் பலத்து பாதுகாப்பு போடப் பட்டுள்ளன.
மேலும், ரெயில்கள் நிறுத்தப் பட்டுள்ள யார்டுகள், பிளாட்பாரங் களிலும் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஆயுதம் ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் சோதனை செய்யப்படுகிறது. அவர்களது உடமைகளும் மெட்டல் டிடக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே அனுமதிக்கப் படுகின்றன. இதே போன்று எழும்பூர் ரெயில் நிலையத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதுதவிர தமிழ்நாட்டில் கோவை , மதுரை, திருச்சி, நெல்லை போன்ற அனைத்து ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்களின் எல்லை பகுதிக ளிலும் கண்காணிப்பு பணி நடை பெறுகிறது.
லாட்ஜ்கள், தங்கும் விடுதிகள், வெளிநாட்டவர் யார் தங்கி உள்ளனர். அவர்கள் எதற்காக வந்து உள்ளனர் என்பது பற்றிய தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இது தவிர, தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்களிலும் பொது மக்கள் கூடும் இடங்களிலும் மாறு வேடத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
சென்னையில் கோயம்பேடு பஸ் நிலையம், மார்க்கெட் போன்ற இடங்க ளிலும் ஷாப்பிங் காம்ளக்ஸ் திரை அரங்குகள் மற்றும் அடுக்குமாடி கட்டி டங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் போன்ற இடங்களிலும் பலத்த பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
இதே போன்று தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கமிஷனர் பேட்டி
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் இது குறித்து கேட்கப்பட்டது. சென்னை நகர் மீது தாக்குதல் குறித்து குறிப்பாக எந்த தகவலும் வரவில்லை. உடல் நலத்தை கண்டறிய சோதனை செய்வது போல, காவல்துறையினர் ஆங்காங்கே முன்னெச்சரிக்கையாக சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்று கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக