அமெரிக்காவில் தற்காலிக அயல்நாட்டு பணியாளர்களை நியமிப்பதற்கான எச் - 2 பி விசா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வேளாண் துறை தவிர்த்து இதர துறைகளில் தேவைப்படும் 'செமி ஸ்கில்டு' பணியாளர்களை, அமெரிக்க நிறுவனங்கள் அயல்நாடுகளிலிருந்து வரவழைத்துக் கொள்வதற்காகவே எச் - 2 பி விசா வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அமெரிக்க அரசின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, இந்த விசா விண்ணப்பங்கள் வழங்குவதை அமெரிக்க தூதரகங்கள் குறைத்துக்கொண்டதன் காரணமாக 'செமி ஸ்கில்டு' பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.
இந்நிலையில், தற்காலிக அயல்நாட்டு பணியாளர்களின் தேவை அதிகரித்து இருப்பதால், அவர்களை வரவழைப்பதற்கான எச் - 2 பி விசா திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து வந்த கோரிக்கையையடுத்து,அத்திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது அமெரிக்கா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக