ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஞா. தனலட்சுமியை ஆதரித்து தா. பாண்டியன், என். வரதராஜன் ஆகியோர் ஆக 10-ம் தேதி பிரசாரம் செய்கின்றனர்.
அன்று மாலை ஏரலில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு, மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் என். வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா. பாண்டியன், மார்க்சீய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலர் க. கனகராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் டி. ராமசாமி, எஸ். குணசேகரன், ஜான் ஜோசப், லீமா ரோஸ் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் பேசுகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக