சனி, 8 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் விஜயகாந்த் பிரச்சாரம்


ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத் தேர்தல், தேமுதிக வேட்பாளர் சவுந்திர பாண்டியனை ஆதரித்து விஜயகாந்த் நேற்று பிரச்சாரம் செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வருகிற 18ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் தொகுதியில் குவியத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று தேமுதிக வேட்பாளர் சவுந்திர பாண்டியனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

புதுக்கோட்டை பகுதியில் பிரச்சாரத்தில் பேசிய விஜயகாந்த், கருணாநிதி 52 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், 5 முறை முதல்வராக இருந்தும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, விலைவாசி கடுமையான உச்சத்திற்கு சென்றுள்ளது. இந்த தொகுதி மக்களின் குடிநீர் வசதி, பேரூந்து வசதி, சாலைவசதி உட்பட எந்த ஒரு அடிப்படை வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.

திமுக தலைவர் கருணாநிதி, தான் ஆட்சிக்கு வந்தால் ஒரு வருடத்திற்கு 5லட்சம் பேர் வீதம் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் இன்று 3லட்சம் பேருக்கு கூட வேலை கிடைக்க வில்லை. பொறியியல் படித்த 9லட்சம் பேர் வேலையின்றி தவித்துவருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் கட்டணக் கொள்ளையும், ஊழலும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது என்றார் விஜயகாந்த்.

நன்றி : சக்திமுருகன் (படம்: இருதயராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin