தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஜஸ்டின், கதிர்வேல் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஸ்ரீவைகுண்டம் தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டியை ஆதரித்து நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு முக்காணி காமராஜர் திடலில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பேசுகிறார்.
இதில் மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியசாமி, அமைச்சர் கீதாஜீவன், மதுரை ஏ.ஜி.எல். ராம்பாபு, சித்தன் எம்.பி. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
எனவே இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக