அமெரிக்காவின் தாராள நிதி உதவி காரணமாக துபாய் உள்பட வளை குடா நாடுகளில் பொரு ளாதார நெருக்கடி தீர்ந்து வருகிறது. இதனால் அங்கு வாழும் ராம நாத புரம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ள னர்.
பொருளாதார நெருக்கடி
கடந்த ஆண்டு பல முன்னணி வங் கிகள் திடீரென திவாலானது. இதனால் அடுத்தடுத்து அங்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதன் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. குறிப்பாக துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பணப்புழக்கம் இல்லாமல் நிதி நெருக்கடி ஏற்பட்டது.
இங்கு ராமநாதபுரம் உள்பட தென்மாவட்டத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். கீழக்கரையை சேர்ந்த தொழில் அதிபர்கள் துபாய் முழுவதும் பல முன்னணி நிறுவனங்களை நடத்தி வரு கின்றனர். இவற்றில் இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ் தான் உள்பட பல பகுதி களை சேர்ந்தவர்கள் பணி யாற்றி வருகின்றனர்.
சகஜ நிலை
பொருளாதார நெருக் கடியால் வளைகுடா நாடுக ளில் பணியாற்றும் பல்லா யிரக் கணக்கானோர் வேலை இழந்து நாடு திரும்பும் நிலை ஏற்பட்டது. இதனால் ராமநா தபுரம் மாவட்டத்துக்காரர் கள் பெரும் கவலை அடைந்த னர். இப்போது அந்த நிலை மாறி விட்டது. பொருளா தார நெருக்கடியை சமாளிக்க அமெரிக்கா அரசு 11/2 லட்சம் கோடி டாலர் பணத்தை விடு வித்துள்ளது. இதனால் உல கம் முழுவதும் குறிப்பாக வளைகுடா நாடுகளில் பொரு ளாதாரம் சகஜ நிலைக்கு வேக மாக திரும்பி வருகிறது.
இதன் காரணமாக வளை குடா நாடுகளில் வாழும் ராமநாதபுரம் மற்றும் கீழக் கரையை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது நிலைமை சீராகி வருவதால் கீழக்கரை தொழில் அதிபர்களுக்கு பல்வேறு நாடுகளில் பணிகளுக்கான புதிய ஒப்பந்தங்கள் கிடைத் துள்ளன. மேலும் வேலை இழந்து நாடு திரும்பும் நிலை யில் இருந்த பணியாளர்கள் மீண்டும் பணியில் நீட்டிக் கப்பட்டு பணியாற்றி வருகின் றனர். இதனால் வேலை இழப்பு அபாய நிலை அடி யோடு மாறி விட்டது.
தகவல் : தினத் தந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக