அபுதாபி : அபுதாபியில் ஜனவரி 7 ஆம் தேதி ஸையித் சர்வதேச மாரத்தான் 2010 அபுதாபி கோர்னிச் பகுதியில் நடைபெற இருக்கிறது. இப்போட்டி அமீரக துணை பிரதமர் ஷேக் மன்சூர் பின் ஸையித் அல் நஹ்யான் அவர்களது ஆதரவில் நடைபெற இருக்கிறது.
பத்து முதல் பதினைந்து வயதுடையவர்கள் மூன்று கிலோமீட்டர் தூர ஓட்டத்திலும், பொதுமக்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கான 6 கிலோ மீட்டர் தூர ஓட்டத்திலும், ஓட்டப் பந்தய வீரர்களுக்கான 21 கிலோ மீட்ட ஓட்டத்திலும் பங்கேற்கலாம். கவர்ச்சிமிகு பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.
மேலதிக விபரங்களுக்கு 02 4415900 எக்ஸ்டென்ஷன் 2308
இணையத்தளம் : www.zayedmarathon.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக