ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக திமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சியினர் மீது இதுவரை 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இம் மாதம் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனுமதி இல்லாமல் தேர்தல் விதிமுறைகளை மீறி விளம்பரப் பலகைகள் வைத்தல், கட்சிக் கொடி கட்டுதல், தேர்தல் அலுவலகம் அமைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.
அவ்வாறு ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இதுவரை 46 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில், திமுகவினர் மீது 18 வழக்குகள், காங்கிரஸôர் மீது 10 வழக்குகள், தேமுதிகவினர் மீது 8 வழக்குகள், புதிய தமிழகம் கட்சியினர் மீது 5 வழக்குகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது 2 வழக்குகள், சுயேச்சை உள்ளிட்ட மற்றவர்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டுமே 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேமுதிகவினர் மீது ஸ்ரீவைகுண்டத்தில் 2 வழக்குகள், சாயர்புரம், புதுக்கோட்டையில் தலா ஒரு வழக்கு, காங்கிரஸôர் மீது புளியம்பட்டியில் 2 வழக்குகள், சாயர்புரம், ஏரல் ஆகிய இடங்களில் தலா ஒரு வழக்கு, திமுகவினர் மீது ஏரலில் ஒரு வழக்கு, தேர்தலை புறக்கணிப்பதாக விளம்பரப் பலகை வைத்தது தொடர்பாக புதிய தமிழகம் மீது புளியம்பட்டியில் ஒரு வழக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு வழக்கு என மொத்தம் 11 வழக்குகள் ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில் கட்சி நிர்வாகிகள் பெயர் எதுவும் பதிவு செய்யாமல் கட்சியினர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக