
தமிழகத்தில் அடுத்த மாதம் 18ஆம் தேதியன்று 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலை புறக்கணிப்பது என்று அஇஅதிமுக முடிவு செய்திருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்லார்.
அஇஅதிமுக செயற்குழுவின் அவசரக் கூட்டம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, இன்றைய அஇஅதிமுக செயற்குழு கூட்டத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை புறக்கணிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாகக் கூறினார்.
இந்த தீர்மான விவரங்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தெரிவித்துள்ளதாகவும், அதனை அடுத்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பாமக, ஆகிய கட்சிகளுக்கும் தங்களின் முடிவு பற்றி தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மக்களவைத் தேர்தல் முடிவு வந்தவுடனேயே சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து வைகோவுடன் தாம் பேசியுள்ளதாகவும், எனவே அஇஅதிமுகவின் முடிவை அவர் ஏற்றுக் கொள்வார் என்று தாம் நம்புவதாகவும் ஜெயலலிதா கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக