புதன், 3 ஜூன், 2009

எம்.பி.பி.எஸ். படிப்புக்கு இன்று விண்ணப்பம் விநியோகம்

எம்.பி.பி.எஸ். மற்றும் பல்மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் இன்று தொடங்கியது. தமிழ கத்தில் உள்ள 15 அரசு மருத்துவ கல்லூரிகள் ஒரு அரசு பல்மருத்துவ கல்லூரி களில் இன்று முதல் 17-ந்தேதி மாலை 3 மணி வரை விண் ணப்பம் வினியோகம் செய்யப்படுகிறது.

அரசு மருத்துவ கல்லூரி களில் 1,483 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 85 இடங்களுக்கும் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். மருத்துவ படிப்புக்கான விண்ணப்பத்தின் விலை ரூ.500 ஆகும்.

சென்னையில் எம்.எம்.சி., கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரிகளில் விண்ணப்பம் விற்பனை செய்யப்படு கிறது. மாணவ-மாணவிகள் எம்.பி. பி.எஸ். படிப்பில் சேர மருத் துவக்கல்லூரி வளாகங்களில் குவிந்தனர். நீண்ட வரிசை யில் நின்று விண்ணப்பங் களை பெற்றுச் சென்றனர்.

விண்ணப்ப விற்பனையை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் கனக சபாபதி மேற்பார்வையிட்டார். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 17-ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப் பிக்க வேண்டும். இது குறித்து மருத்துவ தேர்வு கமிட்டி செயலாளர் டாக்டர் ஷீலா நிருபர்களிடம் கூறியதா வது:-

தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரி களில் இன்று முதல் விண் ணப்பங்கள் வினியோகிக்கப் படுகின்றன. கடந்த ஆண்டு 14 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன.

இந்த ஆண்டு 18 ஆயிரம் விண்ணப்பங்களை விற்க திட்டமிட்டுள்ளோம் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் இலவச மாக வழங்கப்படுகிறது. அவர்கள் அதற்கான சான்றி தழை காட்டி பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin