வெள்ளி, 5 ஜூன், 2009

யாஹூ அறிவிப்பு : வேண்டாம் மைக்ரோசாப்ட்!-

மைக்ரோசாப்டின் உதவி எங்களுக்கு அவசியமில்லை. எனவே அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்துக்கும் அவசியமில்லை என யாஹூ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து யாஹூ நிறுவனத் தலைவர் கரோல் பட்ஸ் கூறுகையில்,

இனி மைக்ரோசாப்டுடன் எந்த ஒப்பந்தமும் போட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. யாஹூவுக்கு மிகப் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. அப்படி ஒரு எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்ளும் திறமை யாஹூவுக்கு உண்டு.

மைக்ரோசாப்டுடன் எந்தத் தொடர்பும் இனி இல்லை என்ற நிலையில்தான் இனி எங்கள் செயல்பாடுகள் இருக்கும். அந்த கசப்பான அனுபவங்களை மறந்துவிடுங்கள் என்றார்.

47.5 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட யாஹூவை வாங்க மைக்ரோசாப்ட் பெரிதும் முயற்சி செய்தது. ஆனாலும் யாஹூவை வாங்கும் தன் முயற்சியைத் தொடர்வதாகவே மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin