புதன், 3 ஜூன், 2009

நெல்லை புதிய ஆட்சியராக ஜெயராமன் இன்று பொறுப்பேற்பு

திருநெல்வேலி மாவட்டத்தின் 201-வது ஆட்சியராக மு. ஜெயராமன் புதன்கிழமை பொறுப்பேற்கிறார்.

அவரிடம் தற்போதைய ஆட்சியர் அர. பழனியாண்டி பொறுப்புகளை ஒப்படைக்கிறார்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த ஜெயராமன், பணியிட மாறுதல் செய்யப்பட்டு இம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த அர. பழனியாண்டி, பொதுத் துறை இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன், 1989-ல் தென்காசி வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி உள்ளார்.

அதைத்தொடர்ந்து, மன்னார்குடி, கடலூர் ஆகிய இடங்களில் வருவாய் கோட்டாட்சியராகவும், கடலூர் மாவட்ட வழங்கல் அலுவலராகவும், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் சிறப்பு துணை ஆட்சியராகவும் (நிலம் எடுப்பு) பணயாற்றி உள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றியுள்ள இவர், கோயமுத்தூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

பின்னர், மோகனூர் சர்க்கரை ஆலை முதன்மை நிர்வாக அலுவலராகவும், சேலம் மாநகராட்சியின் ஆணையராகவும் பணியாற்றியுள்ள ஜெயராமன், கடந்த ஆண்டு ஜூன் 6-ம் தேதி முதல் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்தார்.

இவரது மனைவி ஜெ. உமாராணி இல்லத்தரசி ஆவார். மகன் மருத்துவர் ஜெ. ஜெயப்பிரகாஷ். மகள் ஜெ. பிரியா, மருத்துவம் பயின்று வருகிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin