பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 14 (வியாழக்கிழமை) வெளியாகும் என்று பள்ளிக் கல்வி இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
தமிழகம் மற்றும் புதுவையில் மார்ச் 2 முதல் மார்ச் 23-ம் தேதி வரை நடைபெற்ற பிளஸ்-2 தேர்வுகளை சுமார் 6 லட்சத்து 90 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர்
பள்ளிக் கல்வி இயக்குநர் பெருமாள்சாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மார்ச் 2009-ல் நடைபெற்ற மேல்நிலைப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 14-ம் தேதி காலை 9 மணிக்கு அரசு தேர்வுகள் துறை இயக்குநரால் வெளியிடப்படும். அதேநேரத்தில், பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலமாக மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
கீழ்கண்ட இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
results.dinamani.com
www.pallikalvi.in
tnresults.nic.in
dge1.tn.nic.in
dge2.tn.nic.in
dge3.tn.nic.in
tngde.in
பிஎஸ்என்எல் லேண்ட்லைன் 1250108,
பிஎஸ்என்எல் எஸ்எம்எஸ்-57777
தகவல் : தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக