புதன், 13 மே, 2009

தமிழகம், புதுவையில் இன்று வாக்குப்பதிவு


தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மக்களவைக்கான தேர்தல் களத்தில் தமிழக மக்கள் புதன்கிழமை அளிக்கும் தீர்ப்பை எதிர்நோக்கி பிரபல வேட்பாளர்கள் பலர் காத்திருக்கின்றனர்.
யார் யாருடன்... அதில், அதிமுக - காங்கிரஸ் 11 இடங்களிலும், திமுக - அதிமுக 10 இடங்களிலும், திமுக - பாமக 5 தொகுதிகளிலும் நேருக்கு நேர் போட்டியிடுகின்றன.

பாமக - விடுதலைச் சிறுத்தைகள், அதிமுக - விடுதலைச் சிறுத்தைகள், அதிமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் போட்டியிடுகின்றன.

மதிமுக - காங்கிரஸ், திமுக - மதிமுக, திமுக - இந்திய கம்யூனிஸ்ட், திமுக - மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் - காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பாமகவும், காங்கிரஸýம் நேருக்கு நேர் மோதுகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin