செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

In India, Pizza Hut and Domino’s Pizza are NOT HALAL. Their PIZZA contains PORK (Flesh of PIG) and LARD (Fat of PIG)

போர்க் பெப்பெரோனி (Pork Pepperoni) ஹலாலா ஹராமா ?
(அபூ ரிஸ்வான்)



வளர்ந்து வரும் இந்தியாவில் குவியும் வெளிநாட்டுப் பொருட்கள் மற்றும் கலாச்சராத்துடன் இப்பொழுது அதிகமாக வெளிநாட்டு உணவுப் பொருட்கள் அதிகமாகக் கிடைக்கிறது. அதில் முன்னிலையில் இருப்பது ஃபாஸ்ட் ஃபுட் (Fast Food) கலாச்சாரம்.


கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்கள் தாங்கள் வீட்டிற்குச் செல்ல நேரமாகிவிட்டாலும் அல்லது பார்ட்டி (Party) என்றாலும் ஆர்டர் பண்ணுவது ஃபாஸ்ட் ஃபுட் (Fast Food) ஆகத்தான் இருக்கும். அதிலும் முக்கியமாக பிஸ்ஸா (Pizza). பிஸ்ஸாவை நகரத்தில் இருப்பவர்கள் மட்டுமல்லாது கிராமங்களில் உள்ளவர்கள் கூட இப்பொழுது டிவி விளம்பரங்கள் மூலம் தெரிந்து வைத்துள்ளார்கள். அவர்களுடைய ஓரே எண்ணம் ஒரு முறையாது இந்த பிஸ்ஸாவை ருசித்து விடவேண்டும் என்பதுதான்.


பிஸ்ஸாவை (Pizza) இந்தியாவில் PIZZA HUT DOMINO’S PIZZA என்ற இரண்டு கம்பெனிகள் விற்பனை செய்கின்றன. குறிப்பாக, பிஸ்ஸா பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் (Shopping Complex) ளில்தான் கிடைக்கும். பிஸ்ஸா (Pizza) வெவ்வேறு ருசிகளில் கிடைக்கி்ன்றது. எடுத்துக்காட்டாக சைவம், அசைவம் (ஆட்டுக்கறி, மாட்டுக்கறி மற்றும் பன்றிக் கறி).


கடந்த டிசம்பர் விடுமுறையில் குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றிருந்தேன். புதிதாக ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் திறந்திருப்பதாகவும் எல்லாப் பொருட்களும் அங்கே கிடைப்பதாகவும் சொன்னார்கள். நாங்களும் அங்கே சென்றோம். ஒரு தளத்தில் PIZZA HUT கடையைப் பார்த்த என்னுடைய மகன்கள் “பிஸ்ஸா (Pizza) சாப்பிடலாம்“ என்று அடம் பிடித்தனர். நான், “இந்தியாவில் உள்ள PIZZA HUT ஹலாலா என்று தெரியாது. ஆகையால் போக வேண்டாம்“ என்று சொன்னேன்.


நிறைய முஸ்லிம் நபர்களை PIZZA HUT ல் பார்த்த என்னுடைய மகன்கள், “அங்கே பாருஙகள். முஸ்லிம் ஆட்கள் இருக்கிறார்கள்“ என்று சொன்னார்கள். “ஹலாலாக இருப்பதனால்தானே அவர்கள் சாப்பிடுகிறார்கள்“ என்று சொன்னார்கள். நானும் அரை மனதுடன் வெளிநாட்டில் உள்ள பிஸ்ஸாவிற்கும் இந்தியாவில் உள்ள பிஸ்ஸாவிற்கும் எப்படி சுவை வித்தியாசம் இருக்கிறது என்று பார்க்கலாம் என்று அங்கே சென்றேன்.


உணவுப் பட்டியலை (Menu Card) வாங்கி என்ன ஆர்டர் செய்யலாம் என்று பார்த்தேன். வெஜிடேரியன், ஃபியரி சிக்கன்... என்று பார்த்துக் கொண்டு வந்த எனக்கு PEPPERONI (100% Pork Pepperoni) என்று பார்த்தவுடன் தலை சுற்றியது.


உடனே வெளியே வந்து விட்டேன். சாப்பிட்டுக் கொண்டிருந்த முஸ்லிம் குடும்பங்களைப் பார்த்து மனதிற்குக் கஷ்டமாக இருந்தது. Pork Pepperoni தவிர வேறு பிஸ்ஸாவை அவர்கள் சாப்பிடலாம் என்று எண்ணிக்கொண்டேன்.


இருந்தாலும் மனது கேட்கவில்லை. ஆகையால் அங்கே நின்றிருந்த சில முஸ்லிம் நபர்களிடம் “PIZZA HUT ஹலாலா?“ என்று கேட்டேன். சிறிது யோசித்து விட்டு “ஹலால்தான்“ என்றார்கள். “ஆனால் Pork Pepperoni என்று உணவுப் பட்டியலில் போட்டிருக்கிறதே...“ என்று இழுத்தேன். அதைப் பார்த்து விட்டு, “அதனால் ஒன்றுமில்லை“ என்று சொன்னார்கள்.


மற்ற சிலர், “நாங்கள் வெஜிடேரியனைத்தான் வாங்குகிறோம்“ என்று சொன்னார்கள். எனக்கு ஒன்று நன்றாகப் புரிந்தது. நிறைய போ்களுக்கு PORK என்றால் பன்றியின் இறைச்சி என்றே தெரியவில்லை. நான் அவர்களிடம் “PORK என்றால் பன்றியின் இறைச்சி“ என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர்கள் நான் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்று அரை மனதுடன் வெளியே வந்தார்கள்.


இதற்கு முஸ்லிம்களின் அறியாமைதான் காரணம்.

1. “இந்தியாவில் கிடைக்கும் இறைச்சி எல்லாம் நம்மாளுகதானே (முஸ்லிம்கள்) அறுக்கிறார்கள்“ என்று நினைப்பது. தற்பொழுது கிடைக்கும் வெளிநாட்டு உணவுப் பொருட்கள் வெளிநாட்டிலிருந்து வருகின்றன. ஆகையால் ஹலாலாக இல்லாமல் இருக்கலாம்.

2. இந்தியாவில் பன்றி இறைச்சி அதிகம் சாப்பிடுதில்லை. ஆகையால் எல்லா உணவுக் கடைகளிலும், சூப்பர் மார்கெட்டுகளிலும் பன்றிக் கறி விற்க மாட்டார்கள் என்று நினைப்பது தவறு.

3. PIZZA HUT மற்றும் DOMINO’S PIZZA போன்றவை வளைகுடா நாடுகளில் ஹலாலாக இருக்கலாம். ஆனால் அவை இந்தியாவிலும் ஹலாலாக இருக்கும் என்று எண்ணுவது தவறு.

4. LARD எனப்படும் பன்றியின் கொழுப்பை பிஸ்ஸா சுவையாக இருக்க CHEESE ல் பயன்படுத்துகின்றனர். LARDஐ எல்லா பிஸ்ஸாவுக்கும் பயன்படுத்தமாட்டார்கள் என்று எந்த உத்திரவாதமும் இல்லை. நாம் வெஜிடேரியன் பிஸ்ஸாவைத்தானே சாப்பிடுகிறோம் என்று நினைப்பது மிகத் தவறு. பிஸ்ஸாவைச் சுட வைக்க வெஜிடேரியனுக்கும் மற்ற பிஸ்ஸாவிற்க்கும் வெவ்வேறான தட்டுக்களை உபயோகப்படுத்துவதில்லை. PORK மற்றும் LARD மற்ற பிஸ்ஸாவில் கலப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

உங்களுக்கு பிள்ளைகள், தெரிந்தவர்கள் மற்றும் சொந்தங்களுக்கு PIZZA HUT மற்றும் DOMINO’S PIZZA ஹலால் இல்லை என்று எடுத்துச் சொல்லி மிகப் பெரிய தவறிலிருந்து தடுக்க அல்லாஹ் அருள் புரிவானாக. முஸ்லிம் சமூக அமைப்புகள் கூட மக்களிடம் இதனை எடுத்துச் சொல்லலாம்.

உங்களுக்குத் தெரிந்தவர்கள் மற்றும் சொந்தங்களுக்கு SMS மூலம்
“In India, Pizza Hut and Domino’s Pizza are NOT HALAL. Their PIZZA contains PORK (Flesh of PIG) and LARD (Fat of PIG) ” என்று தெரியப்படுத்துங்கள்.


இன்னும் சந்தேகமா? PIZZA HUT மற்றும் DOMINO’S PIZZA பற்றி அவர்களின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

1. http://www.pizzahut.co.in/cheesybites_menu.php OR http://www.pizzahut.co.in/

2. http://www.dominos.co.in/nonvegpizzas.jsp and Click CHEESE AND PEPPERONI menu.


தகவல் : அதிரை போஸ்ட்

தமிழக (இந்திய) மீனவர்களின் தலையெழுத்தை மாற்ற ஒரு கையெழுத்து.

நாம் இணையத்தை பல வழிகளில் உபயோகபடுத்துகிறோம்,அதில் நாம் அணைவரும் சினிமா பார்க்கவும், சினிமா செய்திகள்,உலக நடப்புகள்  சமூக வலைப்பின்னல் தளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர், ஆர்குட் மாதிரியான தளங்களில் அரட்டை அடிக்கவும், வலைப்பதிவுல-கவிதை, கட்டுரை, அரசியல், அறிவியல் எழுத-படிக்கவும், வியாபாரங்கள் செய்யவும் உபயோக படுத்துகிறோம், அதே இணையத்தை பயனுள்ள புரட்சிகரமான வழியிலும் பயன்படுத்த முடியும்.
இதில் இப்பொழுது பெட்டிஷன் ஆன்லைன் அப்படீன்னு ஒரு இணையதளம் உள்ளது.இது இணைய வழி போராட்டங்கள், புரட்சிகளின் வழியாக பொதுமக்களின் பல கோரிக்கைகள் நிறைவேற அரசுக்கு உணர்த்தும் ஒரு தளம்.இதன் மூலம் நீங்கள் செய்யவேண்டியது என்னன்னா, கடிதத்தைபடிச்சிட்டு, Click here to sign the petition அப்படீங்கிற பொத்தானை அழுத்தி, அதுக்கப்புறம் தோன்றுகிற ஒரு சின்ன படிவத்துல, ஒரே ஒரு நிமிஷம் செலவு பண்ணி, நம்ம பேரு, மின்னஞ்சல் முகவரி, சில கருத்துகள் இப்படி மூனே மூனு விஷயங்களப் பூர்த்தி செஞ்சுட்டு, அதுக்கு கீழே இருக்குற இன்னொரு பொத்தானை திரும்பவும் அழுத்தினா போதும்!
கடிதத்தின் தமிழாக்கம் இதோ!
சமீப காலமாக தமிழக மீனவர்கள் இலங்கை சிங்கள கடற்படையினரால் தொடர்ந்து சுட்டு கொல்லப்பட்டும் துன்புறுத்தபட்டும் வருகிறார்கள்,மேலும் அவர்களுடைய படகுகளும் மீன்பிடி சாதனங்களும் சுறையாடபட்டும் வருகிறது. சமீபத்திய கணக்குகளின் படி 539 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.இதில் பெரும்பங்கு நாகப்பட்டினத்தைசேர்ந்த மீனவச் சமுதாயத்தின் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பும் இலங்கை அரசுக்கு எதிரான எதிர்பலைகளை தமிழர்கள் மத்தியில்அதிகபடுத்தயுள்ளது.மேலும்,தமிழகக்கடலோரபகுதியில் வசிக்கும் ஒவ்வொரு
மீனவக்குடும்பங்களில் உயிர்பயமும் அதிகரித்துள்ளது.இதற்குமுன்பு, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடன் ஏற்பட்ட இதுபோன்ற பிரச்சினைகளுக்கு வெற்றிகரமான ஒரு தீர்வைக் கண்டிருக்கும் இந்திய அரசை நாங்கள் நம்புகிறோம்.அதுபோலவே எங்கள் மீனவர்களின் உயிரிழப்புகளை நிறுத்த ஒரு நிரந்தரமான தீர்வை இந்திய அரசிடம் எதிர்பார்க்கிறோம்”

இந்தியாவிலும் இதர உலக நாடுகளிலும் வாழும் இந்தியர்களான நாங்கள் பின்வரும் எங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்:

இந்திய அரசுக்கு....


•இந்திய மீனவர்களை சிங்கள கடற்படை தாக்குவதை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசை எச்சரிக்கவேண்டும்

•தமிழக மீனவர்களின் உயிர் மற்றும் அவர்களது உடமைகள் ஆகியவற்றை பாதுகாக்க போதுமான கடற்படையை ரோந்தில் ஈடுபடுத்த வேண்டும்

•“தமிழக மீனவர்களின் தினசரி செயல்பாடுகளின் வாழ்வாதாரமாக இருக்கும்  கச்சத்தீவை இலங்கை இந்தியாவிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்” என்று இலங்கை அரசிடம் கோர வேண்டும்

•ஒருவேளை, இரு அரசுகளும் கச்சத்தீவை ஒரு பொது உடமையாக கருதுமேயானால், IMLB விதிகளை தளர்த்தி, இரு நாட்டு மீனவர்களும் நிபந்தனை ஏதுமின்றி அங்கு மீன்பிடிக்க வழி செய்ய வேண்டும். இவ்வேண்டுகோளுக்குப்பின்னும், மேலும் ஒரு முறை இலங்கை அரசு ஒப்பந்தத்தை மீறினால், இந்திய அரசுக்கு உண்மையாகவே தன் குடிமக்களின்மீது அக்கரையிருக்குமேயானால், இலங்கையுடனான நல்லுறவை துறந்து, சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும்”
இவ்வாறாக முடிகிறது.
நாமும்  நம்மாளால் முடிந்த இதையாவது  செய்வோம்!
இனைய முகவரி: http://www.petitiononline.com/TNfisher/petition.html

செவ்வாய், 25 ஜனவரி, 2011

உலகின் உயரமான உணவு விடுதி

உலகிலேயே உயரமான கட்டிடமான புர்ஜ்  கலிபாவின் 122வது மாடியில் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து 442 மீ உயரத்தில் இருக்கும் இது தான் உலகின் உயரமான உணவகம் ஆகும்.இந்த உயரமான உணவகத்தின் பெயர் அட்மாஸ்பியர். 828 மீட்டர் உயரம் உள்ள பர்ஜ் கலிபாவின் 122வது மாடியில் அமைந்திருக்கும் இது நேற்று துவங்கப்பட்டது.உயரமான இடத்தில் சாப்பிட விரும்புவோர் இந்த உணவகத்திற்குச் செல்லலாம். ஆனால் உயரத்திற்கேற்ப விலையும் சற்று அதிகம் தான்.

இதில், 442 வது மீ., உயரத்தில் 122 வது மாடியில் நேற்று புதிய உணவு விடுதி ஒன்று திறக்கப்பட்டது. இதன் மூலம் உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த உணவுவிடுதி இது என்ற பெருமையைப் பெற்றுள்ளது. கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள சி.என்.டவர் கட்டடத்தில் அமைந்துள்ள 360 உணவு விடுதிதான் இதுவரை உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த உணவு விடுதி என்ற இடத்தைப் பெற்றிருந்தது.


புர்ஜ் கலிபாவின் உயரமான புதிய உணவு விடுதியில் அடுத்த இரண்டு நாட்களுக்கான பதிவு அனைத்தும் முடிந்து விட்டன. இந்த விடுதியில் இருந்து துபாயின் அனைத்துப் பகுதிகளையும் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உணவகத்திற்கென தனியாக  லிப்ட் உள்ளது. இங்கு ஓரே நேரத்தில் சுமார் 210 பேர் அமர்ந்து உண்ணலாம். இந்த சொகுசு உணவகத்தில் பிரைவேட் டைனிங் பகுதியில் அமர்ந்து உணவருந்த விரும்புபவர்கள் நபர் ஒருவருக்கு ரூ. 8 ஆயிரத்து 62. 65 கொடுக்க வேண்டும். மேலும், மதிய வேளையில் டீ குடிக்க ரூ. 4 ஆயிரத்து 557. 75 பைசா கொடுக்க வேண்டும். இது தவிர பானங்கள் மற்றும் நொறுக்குத் தீனி வேண்டுவோர் தலைக்கு ரூ. 2 ஆயிரத்து 481.69 பைசா கொடுத்தால் போதும்.இந்த உணவகத்தில் இருந்து துபாயை முழுவதுமாக கண்டு ரசிக்கலாம்.

திருச்செந்தூர் - நெல்லை சிறப்பு ரயில் நிரந்தர ரயிலாக இயக்கம்

தூத்துக்குடி : திருச்செந்தூர் - நெல்லையிடையே கடந்த ஓராண்டாக இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில், முதல் நிரந்தர ரயிலாக இயக்கப்படுகிறது.நெல்லையில் இருந்து தினமும் காலை 9.30 மணிக்கு திருச்செந்தூருக்கும், மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து மாலை 4.10 மணிக்கு நெல்லைக்கும் கடந்த ஓராண்டாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலுக்கான எண்களைக் கொடுத்து இவற்றை நிரந்தர ரயிலாக இயக்க, ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது. இதற்கான துவக்க விழா நேற்று மாலை, திருச்செந்தூர் ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது. சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன், அலங்கரிக்கப்பட்ட திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில்(எண்:56764) பயணத்தை, 4.10 மணிக்கு பச்சைகொடியசைத்து துவக்கி வைத்தார். தூத்துக்குடி எம்.பி.,ஜெயதுரை, திருச்செந்தூர் எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஏ.கே.கோயல், கூடுதல் கோட்ட மேலாளர் வெங்கடசுப்பிரமணியன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இது மாலை, நெல்லையிலிருந்து சென்னை செல்லும் நெல்லை, குமரி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு இணைப்பாக உள்ளது. இதுபோல, காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் நெல்லை - திருச்செந்தூர் பயணிகள் ரயிலுக்கு, 56763 என்ற எண் தரப்பட்டுள்ளது. இவற்றையும் சேர்த்து இருமார்க்கத்திலும் தினமும், மொத்தம் நான்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன.


செய்தி:  தினமலர்






வியாழன், 20 ஜனவரி, 2011

சுவிஸ் பாங்கியில் தமிழக அரசியல்வாதிகள் கருப்பு பணம்; “விக்கிலீக்” இணைய தளம் வெளியிட்டது

புதுடெல்லி, ஜன 19-


உலகம் முழுவதும் அரசியல் வாதிகளும், மற்றவர்களும் தாங்கள் சட்ட விரோதமாக சம்பாதித்த பணங்களை சுவிட்சர்லாந்து பாங்கியில் போட்டு வைத்துள்ளனர். இந்த பாங்கிகளில் பணம் போட்டு வைத்து இருப்பவர்கள் பற்றிய தகவலை வெளியிடுவது இல்லை.

எனவே தான் இந்த பாங்கிகளிலேயே பணத்தை போட்டு வைக்கின்றனர். இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளும், தொழில் அதி பர்களும் தங்கள் கறுப்பு பணத்தை சுவிஸ் பாங்கிகளில் டெபாசிட் செய் துள்ளனர்.
இந்த வகையில் இந்தியர்களின் ரூ.72 ஆயிரம் லட்சம் கோடி பணம் சுவிட்சர்லாந்து பாங்கிகளில் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இந்தியர்கள் அதிகம் டெபாசிட் செய்துள்ள பாங்கிகளில் “ஜுலியஸ் போ” என்ற பாங்கியும் ஒன்று.

இந்த பாங்கியின் முன்னாள் ஊழியர் ருடால்எல்மர். அவர் “ஜுலியல் போ” பாங்கியில் ரகசிய கணக்கு வைத்து இருந்த 2 ஆயிரம் பேர் பட்டியலை உலக ரகசியங்களை வெளியிட்டு வரும் விக்கி லீக் இணையதளத்துக்கு வழங்கி உள்ளனர். அதில் ஏராளமான இந்திய அரசியல்வாதிகள் தொழில் அதிபர்கள் பெயர்கள் இடம் பெற்று உள்ளன.
அதில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பணம் போட்டு வைத்து இருக்கும் தகவலும் உள்ளது. அதில் 2 கணக்குகள் தனிப்பட்ட நிறுவனங்கள் பெயரில் உள்ளன. மற்ற 2 கணக்குகள் தனிப்பட்ட 2 நபர்கள் பெயர்களில் உள்ளன.
ஒரு நிறுவனம் ரூ.400 கோடியும், இன்னொரு நிறுவனம் ரூ.45 கோடியும் டெபாசிட் செய்து இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் யாருடையது என்ற தகவல் சரியாக வெளியாகவில்லை. தமிழக அரசியல்வாதிகள் தொழில் நிறுவனங்கள் பெயரில் இந்த பணத்தை டெபாசிட் செய்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

ருடால் எல்மர் கொடுத்துள்ள 2 ஆயிரம் பேர் பட்டியலில் சிலருடைய பெயர் மட்டுமே தற்போது வெளிவந்து உள்ளது. விரைவில் 2 ஆயிரம் பேர் பெயரையும் விக்கி லீக் இணையதளம் வெளியிட முடிவு செய்துள்ளது. அப்போது பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்களும் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நன்றி : மாலைமலர்

மொபைல் போன் பயனாளர்களுக்கு இன்று முதல் Mobile Number Portability

வேறொரு செல்போன் நிறுவனத்தின் சேவைக்கு மாறினாலும் அதே செல்போன் எண்ணை வைத்துக் கொள்ளும் வசதி நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது.
நாடு முழுவதும் உள்ள செல்போன் வாடிக்கையாளர்கள், தங்களுடைய செல்போன் நிறுவன சேவை செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டால் வேறு செல்போன் நிறுவன சேவைக்கு மாறுகின்றனர். அப்படி மாறினால் அவர்களுடைய செல்போன் எண்களையும் மாற்ற வேண்டியது இருக்கிறது. அதனால், சேவை குறைபாட்டை சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், வேறு செல்போன் நிறுவனத்துக்கு மாறினாலும் அதே செல்போன் எண்ணை தொடர்ந்து வைத்துக் கொள்ளும் வசதியை அறிமுகம் செய்வதாக தொலைத்தொடர்பு துறை அறிவித்தது. நீண்ட நாட்களாக இது குறித்த எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்களிடம் நீடித்து வந்தது. இதற்கிடையே, அரியானா மாநிலத்தில் மட்டும் கடந்த நவம்பர் 25-ந் தேதி அன்று இத்தகைய வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த சூழ்நிலையில், இன்று  (வியாழக்கிழமை) முதல் இந்தியா முழுவதும் இந்த வசதி அமலுக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டு இருக்கிறது.

அந்த அறிவிப்பில், `தொலைத்தொடர்பு செல்போன் எண்களை மாற்றாமல் சேவை நிறுவனங்களை மட்டும் மாற்றம் செய்யும் வசதி, நாடு முழுவதும் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு சேவை பகுதிகளிலும் ஜனவரி 20 முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக, தொலைத்தொடர்பு மொபைல் போன் எண்கள் தொடர்பான ஒழுங்குமுறை விதி 2009-ல் உள்ள பிரிவுகள் மாற்றம் செய்யப்படுகிறது' என கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய மாற்றம் காரணமாக, செல்போன் நிறுவனங்களுக்குள் தரமான சேவையை அளிப்பது குறித்த போட்டியும் மேம்பாடும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய முறையை தொடர்ந்து பிரிபெய்டு வாடிக்கையாளர்களில் 17 சதவீதம் பேரும் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களில் 19 சதவீதம் பேரும் தங்களுடைய செல்போன் சேவை நிறுவனங்களை மாற்றிக் கொள்வார்கள் என தொலைத்தொடர்பு வல்லுனர்கள் கருதுகின்றனர்.
நன்றி : மாலைமலர் (சூர்யா கண்ணன்)

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

புது வரவு

அஸ்ஸலாமு அலைக்கும்!
அணைவருக்கும் வணக்கம்,நலம்! நலமறிய ஆவல்,நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,இத்தனை நாட்கள் வேலைப்பளுவினாலும் மற்றும் பல காரணங்களாலும் நம் வலைபதிவில் செய்திகளை பகிர்ந்து கொள்ளமுடியவில்லை.இனிமுதல் நான் என்னுடைய அளவிற்கு
முயற்சி செய்கிறேன்,மேலும் நம் வலைபதிவில் இணைந்தவர்களும் மற்றும் அனைவரும் உங்களுக்கு கிடைக்கும் செய்திகளை mail மூலமாகவோ அல்லது நம் தளத்திலோ பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்.
மீண்டும் நல்ல செய்திகளுடன் ..........
K.ஆசிப் மீரான்

LinkWithin

Blog Widget by LinkWithin