
கடந்த மாத இறுதியில் சாரல் மழையின் காரணமாக குற்றாலம் ஐந்தருவி, மெயின் அருவியில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்து குற்றாலத்திற்கு வந்தனர். சுற்றுலா பயணிகளின் மகிழ்ச்சி இரண்டு நாட்கள்தான் நீடித்தது. அதன் பின்னர் சாரல் மழை பெய்யாததால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. இன்று வெயில் சுட்டெரித்தது.
இதனால் குற்றாலம், ஐந்தருவி பகுதியில் அதிக வெப்பம் காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். சாரல் மழை இல்லாமல் வெயில் சுட்டெரித்ததால் ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகள் ஐந்தருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் சிறிதளவு விழுந்தது. பெண்கள் பகுதியில் தண்ணீர் விழாததால் போலீசார் ஆண்கள் பகுதியில் பெண்கள் குளிப்பதற்கு வசதியாக இருபிரிவாக குளிப்பதற்கு அனுமதித்தனர்.
தகவல் : அலெக்ஸ், தென்காசி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக