செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

தமிழக (இந்திய) மீனவர்களின் தலையெழுத்தை மாற்ற ஒரு கையெழுத்து.

நாம் இணையத்தை பல வழிகளில் உபயோகபடுத்துகிறோம்,அதில் நாம் அணைவரும் சினிமா பார்க்கவும், சினிமா செய்திகள்,உலக நடப்புகள்  சமூக வலைப்பின்னல் தளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர், ஆர்குட் மாதிரியான தளங்களில் அரட்டை அடிக்கவும், வலைப்பதிவுல-கவிதை, கட்டுரை, அரசியல், அறிவியல் எழுத-படிக்கவும், வியாபாரங்கள் செய்யவும் உபயோக படுத்துகிறோம், அதே இணையத்தை பயனுள்ள புரட்சிகரமான வழியிலும் பயன்படுத்த முடியும்.
இதில் இப்பொழுது பெட்டிஷன் ஆன்லைன் அப்படீன்னு ஒரு இணையதளம் உள்ளது.இது இணைய வழி போராட்டங்கள், புரட்சிகளின் வழியாக பொதுமக்களின் பல கோரிக்கைகள் நிறைவேற அரசுக்கு உணர்த்தும் ஒரு தளம்.இதன் மூலம் நீங்கள் செய்யவேண்டியது என்னன்னா, கடிதத்தைபடிச்சிட்டு, Click here to sign the petition அப்படீங்கிற பொத்தானை அழுத்தி, அதுக்கப்புறம் தோன்றுகிற ஒரு சின்ன படிவத்துல, ஒரே ஒரு நிமிஷம் செலவு பண்ணி, நம்ம பேரு, மின்னஞ்சல் முகவரி, சில கருத்துகள் இப்படி மூனே மூனு விஷயங்களப் பூர்த்தி செஞ்சுட்டு, அதுக்கு கீழே இருக்குற இன்னொரு பொத்தானை திரும்பவும் அழுத்தினா போதும்!
கடிதத்தின் தமிழாக்கம் இதோ!
சமீப காலமாக தமிழக மீனவர்கள் இலங்கை சிங்கள கடற்படையினரால் தொடர்ந்து சுட்டு கொல்லப்பட்டும் துன்புறுத்தபட்டும் வருகிறார்கள்,மேலும் அவர்களுடைய படகுகளும் மீன்பிடி சாதனங்களும் சுறையாடபட்டும் வருகிறது. சமீபத்திய கணக்குகளின் படி 539 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.இதில் பெரும்பங்கு நாகப்பட்டினத்தைசேர்ந்த மீனவச் சமுதாயத்தின் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பும் இலங்கை அரசுக்கு எதிரான எதிர்பலைகளை தமிழர்கள் மத்தியில்அதிகபடுத்தயுள்ளது.மேலும்,தமிழகக்கடலோரபகுதியில் வசிக்கும் ஒவ்வொரு
மீனவக்குடும்பங்களில் உயிர்பயமும் அதிகரித்துள்ளது.இதற்குமுன்பு, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடன் ஏற்பட்ட இதுபோன்ற பிரச்சினைகளுக்கு வெற்றிகரமான ஒரு தீர்வைக் கண்டிருக்கும் இந்திய அரசை நாங்கள் நம்புகிறோம்.அதுபோலவே எங்கள் மீனவர்களின் உயிரிழப்புகளை நிறுத்த ஒரு நிரந்தரமான தீர்வை இந்திய அரசிடம் எதிர்பார்க்கிறோம்”

இந்தியாவிலும் இதர உலக நாடுகளிலும் வாழும் இந்தியர்களான நாங்கள் பின்வரும் எங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்:

இந்திய அரசுக்கு....


•இந்திய மீனவர்களை சிங்கள கடற்படை தாக்குவதை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசை எச்சரிக்கவேண்டும்

•தமிழக மீனவர்களின் உயிர் மற்றும் அவர்களது உடமைகள் ஆகியவற்றை பாதுகாக்க போதுமான கடற்படையை ரோந்தில் ஈடுபடுத்த வேண்டும்

•“தமிழக மீனவர்களின் தினசரி செயல்பாடுகளின் வாழ்வாதாரமாக இருக்கும்  கச்சத்தீவை இலங்கை இந்தியாவிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்” என்று இலங்கை அரசிடம் கோர வேண்டும்

•ஒருவேளை, இரு அரசுகளும் கச்சத்தீவை ஒரு பொது உடமையாக கருதுமேயானால், IMLB விதிகளை தளர்த்தி, இரு நாட்டு மீனவர்களும் நிபந்தனை ஏதுமின்றி அங்கு மீன்பிடிக்க வழி செய்ய வேண்டும். இவ்வேண்டுகோளுக்குப்பின்னும், மேலும் ஒரு முறை இலங்கை அரசு ஒப்பந்தத்தை மீறினால், இந்திய அரசுக்கு உண்மையாகவே தன் குடிமக்களின்மீது அக்கரையிருக்குமேயானால், இலங்கையுடனான நல்லுறவை துறந்து, சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும்”
இவ்வாறாக முடிகிறது.
நாமும்  நம்மாளால் முடிந்த இதையாவது  செய்வோம்!
இனைய முகவரி: http://www.petitiononline.com/TNfisher/petition.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin