குழந்தைகளின் கற்கும் திறன் , வீட்டில் உள்ள பெரியவர்கள் பேசுவதை கேட்பதால் இயல்பாக வளரக்கூடியது. ஆனால் நவீன காலத்தில் பெற்றோர்கள் வீடுகளில் தங்களுடைய குழந்தைகளிடம் சரளமாக பேசி பழகுவதை குறைத்து வருகின்றனர்.
இதற்கு காரணம், அவர்கள் டி.வி.பார்க்க அதிக நேரம் செலவிடுவதுதான். பெற்றோர் மற்றும் பெரியவர்களிடம் பேசுவதற்கும், அவர்களின் பேச்சை கேட்பதற்கும் குறைவான வாய்ப்பே குழந்தைகளுக்கு கிடைக்கிறது. இதனால் குழந்தைகளின் பேச்சுத்திறன் பாதிக்கப்படுகிறது.
டி.வி. பார்க்கும் குழந்தைகளை விட டி.வி.பார்க்காத குழந்தைகளின் கற்கும் திறன்அதிகமாக உள்ளது. 2 மாதம் முதல் 2 வயது வரை உள்ள 329 குழந்தைகளிடம் ஆய்வு நடத்தியதில் குழந்தைகளுக்கு டி.வி.சத்தம்தான் அதிக பரிச்சயமானதாக இருக்கிறது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மாசசூஸெட்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்விலும் , குழந்தைகளிடம் பெற்றோர் பேசி பழகும் நேரத்தை குறைத்து விடுவதால் குழந்தைகளின் கற்கும் திறன் குறைந்து விடுகிறது என தெரியவந்துள்ளது.
2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானோர் ,டி.வி. பார்ப்பதன் மூலமே பேச கற்றுக்கொள்கின்றனர். இது அவர்களுடைய எதிர்கால வளர்ச்சிக்கு ஏற்ற முறை கிடையாது.
எனவே குழந்தைகள் அதிக நேரம் டி.வி.பார்ப்பதை பெற்றோர் தடுத்திட வேண்டும். குழந்தைகளின் 2 வயது முடியும் வரை அவர்களுடன் பேச, பழக பெற்றோர் அதிக நேரம் செலவிட வேண்டும். அதன் மூலம் குழந்தைகளின் கற்கும் திறன் மேம்படும் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக