வியாழன், 27 அக்டோபர், 2011

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் பதவியேற்பு


ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி மன்ற புதிய தலைவராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த பி.அருணாசலம் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.

பேரூராட்சி மன்ற பதவியேற்பு விழாவையொட்டி பேரூராட்சி அலுவலகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பகல் 12 மணிக்கு மேல் பதிவியேற்ப்பு விழா தொடங்கியது.

மேளதாளங்களுடன், வாண வேடிக்கைகள் முழங்க முதலில் பேரூராட்சி புதிய தலைவர் பி.அருணாசலத்துக்கு பேரூராட்சி நிர்வாக அதிகாரி மணி பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

பின்னர் தொடர்ந்து உறுப்பினர்கள் தே.பெருமாள் (1வது வார்டு), ம.ராமலெட்சுமி (2வது வார்டு), செய்யது காதர் பாத்திமா (3 வது வார்டு), மு.பராசக்தி (4 வது வார்டு), கு.பிச்சை (5 வது வார்டு), பி.ரீனா (6 வது வார்டு), க.பாமா (7 வது வார்டு), சு.பால்ராஜ் (8 வது வார்டு), பெ.தங்கவேல் (9 வது வார்டு), எம்.எஸ்.ராஜா (10 வது வார்டு), கா.தாமோதரன் (11 வது வார்டு), கே.பாலம்மாள் (12 வது வார்டு), சு.பெருமாள் (13 வது வார்டு), எஸ்.நிலமுடையான் (14 வது வார்டு), ஆர்.அமுதா (15 வது வார்டு), ஜி.பெரியார்செல்வம் ( 16 வது வார்டு), எம்.பொன்பாண்டி (17 வது வார்டு), மு.மாரிமுத்து (18 வது வார்டு) ஆகியோருக்கு பேரூராட்சி புதிய தலைவர் பி.அருணாசலம் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு கட்சி பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

முடிவில் புதிய தலைவர் பி.அருணாசலம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

சனி, 22 அக்டோபர், 2011

ஸ்ரீவை, டவுன் பஞ்,தேர்தலில் அதிமுக முதன்முறையாக தலைவர் பதவியை கைப்பற்றியது

ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்சாயத்து தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று சாயர்புரம் போப் கல்லூரியில் நடந்தது.

இதில் அதிமுக வேட்பாளர் அருணாசலம் 3848 வாக்குகள் பெற்று 1959 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்று முதன்முறையாக ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது.


தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் பெற்ற வாக்குகள் விபரம் :

அதிமுக வேட்பாளர் அருணாசலம் 3848 வாக்குகள்.

திமுக வேட்பாளர் பெருமாள் 1890 வாக்குகள்.

காங் வேட்பாளர் ஆறுமுகம் 232 வாக்குகள்.

சி.பி.எம் வேட்பாளர் கந்தசாமி 194 வாக்குகள்.

பாஜக வேட்பாளர் பசும்பொன் ராஜா 123 வாக்குகள்.

பாமக வேட்பாளர் அங்கப்பன் 112 வாக்குகள்.

சுயேட்சை வேட்பாளர் சிவசுப்பு 1099 வாக்குகள்.

சுயேட்சை வேட்பாளர் சக்திவேல் 109 வாக்குகள்.


வார்டு உறுப்பினர்களின் வெற்றி பெற்றவர்கள் விபரம்

1வது வார்டு பெருமாள் (சுயே) 342 வாக்குகள்.

2வது வார்டு ராமலெட்சுமி (திமுக) 237 வாக்குகள்.

3வது வார்டு செய்யது காதர் பாத்திமா (அதிமுக) 174 வாக்குகள்.

4வது வார்டு பராசக்தி (திமுக) 130 வாக்குகள்.

5வது வார்டு பிச்சை (அதிமுக) 294 வாக்குகள்.

6வது வார்டு ரீனா (சுயே) 185 வாக்குகள்.

7வது வார்டு பாமா (சுயே) 139 வாக்குகள்.

8வது வார்டு பால்ராஜ் (திமுக) 290 வாக்குகள்.

9வது வார்டு தங்கவேல் (திமுக) 203 வாக்குகள்.

10வது வார்டு ராஜா (சுயே) 338 வாக்குகள்.

11வது வார்டு தாமோதிரன் (அதிமுக)போட்டியின்றி தேர்வு.

12வது வார்டு உறுப்பினராக பாலம்மாள் (காங்)போட்டியின்றி தேர்வு.

13வது வார்டு பெருமாள் (தேமுதிக) 141 வாக்குகள்.

14வது வார்டு நிலமுடையான் (திமுக) 278 வாக்குகள்.

15வது வார்டு அமுதா (அதிமுக) 247 வாக்குகள்.

16வது வார்டு பெரியார் செல்வம் (தேமுதிக) 268 வாக்குகள்.

17வது வார்டு பொன்பாண்டி (திமுக) 173 வாக்குகள்.

18வது வார்டு மாரிமுத்து (அதிமுக) 219 வாக்குகள்.

ஸ்ரீவை, டவுன் பஞ்சாயத்து தேர்தலில் ஜனாபா செய்யது காதர் பாத்திமா அவர்கள் அமோக வெற்றி

ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்சாயத்து தேர்தலில் 3வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட, நமது தெரு சார்த்த ஜனாப் ஜோய்ஸ் முகைதீன் அவர்களின் தாயார் ஜனாபா செய்யது காதர் பாத்திமா அவர்கள் 174 ஓட்டுகள் பெற்று அமோக வெற்றி பெற்று உள்ளார்.

அவர்களுக்கு ஸ்ரீவை மக்கள் நல வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறது. மேலும் சிறப்புடன் பணியாற்ற எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக ஆமீன்.

வியாழன், 13 அக்டோபர், 2011

ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளக்கால மீட்ப்பு பணி தீயணைப்புத்துறையினர் ஒத்திகை


ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பில் வெள்ளக்கால மீட்ப்பு பணி குறித்து தாமிரபரணி ஆற்றில் ஒத்திகை நடந்தது.

தீயணைப்பு -மீட்பு பணிகள் நிலையம் சார்பில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு முன்னேச்சரிக்கை காரனமாக ஒத்திகை பயிற்ச்சி நடந்தது. பயிற்சிக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் தூத்துக்குடி மாவட்ட அலுவலர் மனோகரன் தலைமைதாங்கினார்.

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனப்படித் துறையில் நடந்த மீட்ப்பு பணி ஒத்திகையில் உதவி மாவட்ட அலுவளர் லோகிதாஸ் தூத்துக்குடி நிலைய அலுவளர் ராஜி மற்று தூத்துக்குடி நிலைய கமோண்டோ வீரர்கள் மற்றும் ஸ்ரீவைகுண்டம் நிலைய பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

ரப்பர்படகு மற்றும் விசை படகு, மண்ணெண்ணை பேரல் படகு தயார் செய்து அதில் பொது மக்களை வெள்ளத்தில் இருந்து மீட்ப்பது எவ்வாறு என்பதை தத்துருவமாக செய்து காண்பித்தனர்.

ஒத்திகையில் குமரகுருபரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தி : தூத்துக்குடி வெப்சைட்

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மாற்றுத் திறனாளி அங்கப்பன் போட்டியிடுகிறார்

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மாற்றுத் திறனாளி அங்கப்பன் போட்டியிடுகிறார். பாமக சார்பில் இவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் மூன்று சக்கர வாகனத்தில் சென்று மக்கள் கூடும் இடங்களில் டீ, வடை விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது மகன், மகள்களை படிக்க வைக்கிறார்.

பாமக நகரத் தலைவரான இவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூறியதாவது:

ஸ்ரீவைகுண்டம் சட்டப் பேரவை இடைத்தேர்தலின்போது சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தேன். மனு முழுவதுமாக பூர்த்தி செய்யப்படவில்லை எனக் கூறி தள்ளுபடி செய்யப்பட்டது.

இப்போது ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு பாமக சார்பில் போட்டியிடுகிறேன். தினமும் காலைமுதல் மாலை வரை நீதிமன்ற வாசலிலும், ஆழ்வார்தோப்பு பகுதிகளிலுள்ள செங்கல் சூளைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் டீ, வடை விற்பனை செய்வேன். மாலையில் இருந்து இரவு வரை வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறேன்.

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடிநீர் வசதி இல்லாமல் மாணவிகள் அவதிப்படுகிறார்கள். நான் வெற்றி பெற்றால் குடிநீர் பிரச்னையை தீர்பேன் என்றார் அவர்.

செய்தி : தினமணி

LinkWithin

Blog Widget by LinkWithin