வியாழன், 13 அக்டோபர், 2011

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மாற்றுத் திறனாளி அங்கப்பன் போட்டியிடுகிறார்

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மாற்றுத் திறனாளி அங்கப்பன் போட்டியிடுகிறார். பாமக சார்பில் இவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் மூன்று சக்கர வாகனத்தில் சென்று மக்கள் கூடும் இடங்களில் டீ, வடை விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது மகன், மகள்களை படிக்க வைக்கிறார்.

பாமக நகரத் தலைவரான இவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூறியதாவது:

ஸ்ரீவைகுண்டம் சட்டப் பேரவை இடைத்தேர்தலின்போது சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தேன். மனு முழுவதுமாக பூர்த்தி செய்யப்படவில்லை எனக் கூறி தள்ளுபடி செய்யப்பட்டது.

இப்போது ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு பாமக சார்பில் போட்டியிடுகிறேன். தினமும் காலைமுதல் மாலை வரை நீதிமன்ற வாசலிலும், ஆழ்வார்தோப்பு பகுதிகளிலுள்ள செங்கல் சூளைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் டீ, வடை விற்பனை செய்வேன். மாலையில் இருந்து இரவு வரை வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறேன்.

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடிநீர் வசதி இல்லாமல் மாணவிகள் அவதிப்படுகிறார்கள். நான் வெற்றி பெற்றால் குடிநீர் பிரச்னையை தீர்பேன் என்றார் அவர்.

செய்தி : தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin