தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் அப்துல் ரகுமான் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
சனிக்கிழமை காலை கன்னியாகுமரி விரைவு ரயில்மூலம் திருநெல்வேலிக்கு வரும் அவர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
மாலை கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் நடைபெறும் வக்ஃபு வாரிய பணி ஆய்வு மற்றும் ஜமா அத்தார் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி பேட்டையில் உள்ள அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். மாலை கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டணம் செல்லும் அவர் வக்ஃபு வாரிய பணிகளை ஆய்வு செய்கிறார். பின்னர் அங்கிருந்து மதுரை செல்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக