ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தாமிரபரணி குறுகிய ஆற்றுப் பாலத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் எதிர் எதிரே நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டு அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் ஒரு பஸ் செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் பாலத்தின் மறுபுறம் காத்திருக்க வேண்டும்.
இப்போதைய போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ற வகையில் பாலம் இல்லாததால் புதிய ஆற்றுப்பாலம் கட்ட 2008 செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.
2010 ஜூலை மாதமே முடிக்கப்படவேண்டிய பாலப்பணிகள் பல்வேறு காரணங்களால் முடிக்கப்படவில்லை.இதனால் ஸ்ரீவைகுண்டம் பழைய பாலத்தில் போக்குவரத்து நெரிசல் தினமும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை பகல் 12.30 மணியளவில் தனியார் பேருந்தும், அரசுப் பேருந்தும் பாலத்தின் மையப் பகுதியில் எதிர் எதிரே நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல வாகனங்கள் முன்னும் பின்னும் அணிவகுத்து நின்றன .
அரைமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் நீடித்தது. தொடர் கதையாகவே இருந்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய பாலம் கட்டும் பணியை விரைவுபடுத்தி அப்பாலத்தில் வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல்: தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக