ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

நெல்லை மாவட்ட காங்கிரசார் டில்லியில் முகாம்

நெல்லை, தென்காசி தொகுதிகளை பெற காங்கிரசார் டில்லியில் முட்டிமோதுவதால் நெல்லை மாவட்ட அரசியல்களம் பரபரப்பின்றி உள்ளது. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். நெல்லை, தென்காசிக்கு அ.தி.மு.க., அணி வேட்பாளர்கள் களத்தில் இறங்கிவிட்டனர். வழக்கம்போல காங்கிரசார்தான் பட்டியலை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்படுத்துகின்றனர். நெல்லை, தென்காசி (தனி) ஆகிய இரண்டு தொகுதிகளும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதால் கட்சியினர் சீட் கேட்டு டில்லியில் முகாமிட்டுள்ளனர். வாசன் ஆதரவாளர்கள், தங்கபாலு, சிதம்பரம் ஆதரவாளர்கள் என கோஷ்டி கோஷ்டியாக மனு கொடுத்தம்வண்ணம் உள்ளனர். தென்காசி தொகுதியில் விஸ்வநாதன், சுந்தரராஜபெருமாள், மாதவராவ், அலெக்சாண்டர் என 69 பேரும் தங்கள் அணித்தலைவரின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இதே போல நெல்லை தொகுதியில் தற்போதைய எம்.பி.,தனுஷ்கோடிஆதித்தன், நாங்குநேரி எம்.எல்.ஏ.,வசந்தகுமார், எஸ்.கே.டி.காமராஜ், என்.டி.ஏ.சார்லஸ், ராமசுப்பு என 90 பேர் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். சீட் கேட்பவர்களும் அவர்களது ஆதரவாளர்களும்கூட டில்லியிலேயே காத்திருப்பதால் நெல்லையில் அரசியல் பரபரப்பின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin