சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 390 பயணிகள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள்.
சென்னை விமான நிலையத்தில் நேற்றிரவு 9.30 மணிக்கு துபாய் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அதில் ஏறுவதற்காக 390 பயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
அப்போது அந்த விமானத்தில் கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் உள்ள அறையில் அமர வைக்கப்பட்டனர்.
இரவு 1.30 மணி ஆகியும் கோளாறு சரி செய்யப்படாததால் பயணிகள் கடும் ஆத்திரம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து தனியார் விமான நிறுவனத்திற்கு எதிராக கோஷம் போட்டனர்.
இதையடுத்து விமான நிர்வாகிகள் துபாய் விமானம் இன்று அதிகாலை 2 மணிக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர். இதை தொடர்ந்து 390 பயணிகளும் சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் இன்று இரவு 9.30 மணிக்கு துபாய் விமானத்தில் புறப்பட்டு செல்கிறார்கள் என்று விமான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக