தென்காசி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தென்காசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தென்காசி கிளைச் செயலர் அஹமது மைதீன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் அப்துல்லாஹ், துணைத் தலைவர் மைதீன், ஜலாலுதீன், பொருளாளர் மைதீன், வார்டு நிர்வாகிகள் முகம்மது பசீர், அப்துல் அஜீஸ், இஸ்மாயில், சேக், ஷாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலாண்மைக் குழு உறுப்பினரும், கடையநல்லூர் இஸ்லாமிய கல்லூரிப் பேராசிரியருமான அப்துல் நாஸிர், முஹம்மது அலி, சுலைமான் ஆகியோர் பேசினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக