புதன், 13 மே, 2009

ஐஸ் அவுஸ் பகுதியில் மனித நேய மக்கள் கட்சி பிரமுகர்கள் 6 பேருக்கு வெட்டு; கார் உடைப்பு-போலீஸ் நிலையம் முற்றுகை

மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி இன்று காலையில் ஓட்டு போட்டு விட்டு மத்திய சென்னை பகுதியில் உள்ள “பூத்”களை நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார். அப்போது ஐஸ் அவுஸ் பகுதியில் ஒரு கும்பல் வாக்குச்சாவடியை கைப்பற்றி கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாக தகவல் கிடைத்தது.உடனே கட்சியின் துணை செயலாளர் ஹைதர் அலியின் காரில் நிர்வாகிகள் விரைந்து சென்றனர். காரை அசன் அலி ஓட்டினார்.

ஐஸ் அவுஸ் போலீஸ் நிலையம் அருகே கார் சென்ற போது ஒரு கும்பல் சுற்றி வளைத்து கடப்பாறையால் காரை உடைத்தனர். இதில் அசன் அலிக்கு கார் கண்ணாடி குத்தியது. காரில் இருந்த வர்களுக்கும் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது.

இதில் மீரான் மொய்தீன், அசன் அலி, சாகிப்பாஷா, பாரூக், வாசிம், ஜலாலுதீன் ஆகிய 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

இதனால் அங்கு பதட்ட நிலை உருவானது. காயம் அடைந்தவர்களை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களை வேட்பாளர் ஹைதர்அலி சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.

6 பேர் வெட்டு பட்டதால் மனித நேய மக்கள் கட்சியினர் ஆவேசம் அடைந்து ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மோதல் குறித்து மனித நேய மக்கள் கட்சி சென்னை மாவட்ட செயலாளர் அப்துல் கூறியதாவது:-

ஐஸ் அவுஸ் பகுதியில் காமராஜ் என்பவர் தலைமையில் தி.மு.க.வினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி கள்ள ஓட்டு போடுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஆனால் அங்கிருந்த சிலர் எங்களை முற்று கையிட்டனர். எனவே பிரச்சினை வேண்டாம் என்று காரில் திரும்ப முயற்சி செய்தோம்.

அப்போது ஒரு கும்பல் எங்களை துரத்தி வந்து, காரை உடைத்து சரமாரியாக வெட்டினார்கள். இதில் 6 பேர் காயம் அடைந்தனர். உடனே ரத்தம் சொட்டச் சொட்ட போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தோம். இதனால் போலீஸ் நிலையம் முழுவதும் ரத்தம் படிந்து கிடந்தது.

ஆனாலும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. நேற்று இரவே இந்த பகுதியில் 400-க்கும் மேற்பட்டவர்கள் லாட்ஜில் தங்கி இருந்தனர்.இதுபற்றி போலீசில் புகார் செய்தோம். உடனடியாக நடவடிக்கை எடுத்து இருந்தால் பிரச்சினை வந்து இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

தகவல் : மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin