ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
சனி, 8 ஆகஸ்ட், 2009
பயணிகளை ஏமாற்றும் குற்றாலம்!
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துவிட்டதால் ஏமாற்றமடைந்துள்ள சுற்றுலா பயணிகள் பல்வேறு பகுதிகளிலுள்ள சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
தென்மேற்கு பருவமழையை மட்டுமே நம்பி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலுள்ள குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளும், குண்டாறு, அடவிநயினார், மோட்ட, ஸ்ரீமூலப்பேரி, கருப்பாநதி உள்ளிட்ட நீர்த் தேக்கங்களும் பல ஆயிரம் விவாசய நிலங்களும் உள்ளன.
இந்தாண்டு தென்மேற்கு பருவமழை மகாராஷ்டிரா, கேரளா, ஒரிஸ்ஸா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் முன்கூட்டியே ஜூன் முதல் வாரத்தில் தொடங்கினாலும் போதிய அளவு பெய்யவில்லை. சுமார் 15 தினங்கள் மட்டுமே இப்பகுதியில் மழை விட்டு விட்டு பெய்தது.
குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் சீசனை அனுபவிக்க வருவது வழக்கம். இந்தாண்டும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஆனால் குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துவிட்டதால் வந்ததுதான் வந்தோம் என்று குண்டாறு நீர்த்தேக்கம், கேரள மாநில ஆரியங்காவு பாலருவி, அச்சன்கோவில் கும்பாஉருட்டி அருவி, புளியங்குடி தலையனை, பாபநாசம், மணிமுத்தாறு என பல பகுதிகளிலுள்ள அருவிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் சாரல் திருவிழாவில் கலந்து கொள்ளும் விஜபிககள் அணைக்க கட்ட முயற்சி எடுக்கப்படும் என்று அறிவித்துவிட்டு போவதோடு சரி. அதன்பின் அடுத்தாண்டும் இதே பேச்சுதான் தொடரும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக